2 May 2014

இந்து ஒருங்கிணைப்பு - விழலுக்கு இரைத்த நீர்?

வணக்கம் அண்ணா,   

உங்கள் பதிவை படித்தேன். உங்கள் கருத்துகளுடன் நான் உடன்படுகிறேன் என்றாலும் என்னுடைய பார்வை...

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் நான் கண்டவை மூலம் கூறுகிறேன்.  

சமீபகாலமாக சில குழுமங்களாக செயல்படும் இந்துக்கள் இஸ்லாமியர்களை தரக்குறைவாக தாக்குவதும், அதேபோல் இஸ்லாமியர்கள் இந்துக்களை தாக்குவதும் தொடர்கிறது என்பதைவிட அதிகரித்துள்ளது என்பதே உண்மை. பகடி என்ற நிலையையும் தாண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரேவழி சமூகவலை தளங்களை தடை செய்வதுதான், காரணம் மதங்களை தடைசெய்ய இயலாது என்பது ஜீரணிக்க முடியா உண்மை. அதேநேரம் பேஸ்புக்கையும் தடைசெய்ய முடியாது ஏனென்றால் அது மார்க்கின் தொழில்.

எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு அதனால் என் மதம் கூறும் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன் என்பது என் நம்பிக்கை. ஆனால் இங்கே பிரச்சனையானது என் நம்பிக்கை மட்டுமே சிறந்தது உயர்ந்தது மற்றெல்லாம் பற்றி கவலையில்லை என்றால் கூட பரவாயில்லை அவையெல்லாம் பொய் என எவன் ஒருவன் பேசத் தொடங்குகிறானோ அவனிடம் இருந்தே பிரச்சனை தொடங்குகிறது. தற்போதைய நிலையில் பிள்ளையை யார் கிள்ளியது என்பதையும் தாண்டி பிள்ளையை யார் இன்னும் அதிகமாய் கிள்ளுவது என்ற போட்டிக்கு தள்ளியிருக்கிறது இன்றைய சமூக வலைதள கலாச்சாரம். பரிதாபம் தொட்டிலை ஆட்டத்தான் யாரும் இல்லை. அல்லது தொட்டிலை ஆட்ட வேண்டியவர்களும் ஏதாவது ஒரு பக்கத்திற்கு தூபம் வளர்த்து திரியை தூண்டிவிடுகிறார்கள், இதில் முக்கியமானவர்கள் சோ கால்ட் செக்குலரிஸ்ட். 

மேலும் அரசியல்வாதிகள் அனைவரும் ஒட்டுமொத்த இந்துக்களையும் இஸ்லாமியர்களுக்கு எதிரியாய் மாற்றுகின்றனர் என்கிறீர்கள். அப்படியெல்லாம் இந்துக்களை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. காரணம் இன்றளவிலும் அஸ்ஸாலாமு அலைக்கும் என்றால் ஜெய்ஸ்ரீராம் என்றோ பாரத்மாதாகிஜே என்றோ யாரும் கூறவில்லை அலைக்கும் சலாம்தான். 

இந்துக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது அவ்வளவு எளிதில்லை. அவர்களை பல காரணிகள் தடுக்கிறது. அதில் ஒன்று ஜாதி என்றால் மற்றொன்று சகோதரத்துவம். அதேநேரம் திருப்பதியிலும் மற்ற கோவில்களிலும் கூடும் கூட்டமெல்லாம் RSSகாரர்கள் என்றால் இந்நேரம் பாஜக தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அல்லது இஸ்லாமிய துவேசத்தை இந்துக்கள் மனதில் அரசியல்வாதிகள் ஏற்றிவிட்டார்கள் என்பது உண்மை என்றால் பாபர் மசூதி சம்பவத்திற்கு பின் பாஜக மட்டுமே ஆட்சியில் இருந்திருக்க முடியும். மேலும் அப்படி அரசியல்வாதிகளே செய்ய நினைத்தாலும் அதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். 

உங்களுக்கே தெரியும் இந்துக்கள் ஓரிடத்தில் குழுமுகிறார்கள் என்றால் அது கோவில் திருவிழா அல்லது நல்லது கெட்டது அன்றி வேறெங்கும் இல்லை. ஒருவேளை பேஸ்புக்கை கைகாட்டினால் மதத்துவேசத்தை பரப்பும் எத்தனை ஒரிஜினல் ஐடியை உங்களால் காட்டமுடியும். மிஞ்சிப்போனால் சிலஆயிரம் பலலட்சம் பேர் இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. இந்த சில ஆயிரம் பேர்களை கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும் மதத்தையும் மூட வேண்டியதில்லை. பேஸ்புக்கையும் மூட வேண்டியதில்லை    

குண்டு வெடித்தால் இஸ்லாமியர்கள் மீதாக பார்வை பதிவது வருந்த வேண்டிய விஷயம். அதேநேரம் இப்பிரச்சனை சர்வதேச அளவில் இப்படியாகத்தான் இருக்கிறது. ஏதோ ஒரு மாயவலை அவர்களை அப்படி சிக்க வைத்துவிட்டது. அதில் இருந்து அவர்கள் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எங்காவது குண்டுவெடித்தால் எந்த ஒரு இந்துவும் தனது இஸ்லாமிய நண்பனுக்கு போன் போட்டு நீ தான் வைச்சியா என்று விசாரிப்பதில்லை. விசாரணை நடத்துவது போலீஸ் மற்றும் புலனாய்வுத்துறை. இவ்விசாரணையில் பல சந்தர்பங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிக்குவது இஸ்லாமியர்களின் துரதிஷ்டம். இந்த விசயத்தைப் பொறுத்தவரை இந்திய உளவுத்துறை கண்ணை மூடிக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றெல்லாம் மழுப்ப முடியாது. காரணம் எத்தனையோ இடங்களில் உயரதிகாரிகளாக இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு பல சந்தர்பங்களில் எதாவது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிய தீவிரவாதம் அப்படித்தான் ஊடுருவுகிறது. பாகிஸ்தானிய தீவிரவாதம் அல்லது அயல்நாட்டுத் தீவிரவாதம் என்று அடையாளபடுத்த வேண்டிய விசயங்களை இஸ்லாமிய தீவிரவாதமாக மாற்றியதன் பெரும்பங்கு சோ கால்ட் செக்குலர் மீடியாக்களுக்குதான். எந்த ஒரு தனிப்பட்ட இந்துவுக்கும் அல்ல. பண்டத்தை விற்க வேண்டியது மீடியாக்களின் பொறுப்பு. மார்க்கெட்டிங்.  

அதேநேரம் உள்நாட்டுத் தீவிரவாதத்தில் நாகாலந்த்தில் நடைபெறும் நாகலாந் பார் கிறிஸ்ட் movement மற்றும் NLFT movement இன் தீவிரவாதம் பற்றி எத்தனை பேர் அறிந்திருப்பார்கள். அது மறைக்கப்படவில்லை. அதேநேரம் அது மார்கெட்டிங் பொருளும் இல்லை என்பதை அறிந்துள்ளார்கள் மீடியாக்கள். அரசியல்வாதிகள் மீடியாக்கள் மேல் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானது அதேநேரம் ஒட்டுமொத்த இந்துக்களும் அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு துவேஷம் வளர்த்துவிட்டார்கள் என நினைப்பதை நான் மறுக்கிறேன்.     

நாஞ்சில் மனோ அவர்களின் பதிவை குறிப்பிட்டதால் அதையும் கூறுகிறேன். நாகர்கோவிலில் பெரும்பான்மை கிறிஸ்தவம். அங்கே அந்த இஸ்லாமிய பெரியவரை ஊரைவிட்டு துரத்தியது இந்து என பொத்தாம்பொதுவாக கூறிவிட முடியாது அவரும் அப்படிக் கூறவில்லை. இந்துவும் கிறிஸ்தவமும் சொக்காரர்கள். அதனால் இந்தமதம்தான் விரட்டியது என கூறமுடியாது. இதை கூற காரணம் உங்கள் பதிவின் முந்தைய பத்தியை படித்துவிட்டு இங்கு வந்தால் அப்படிதான் நினைக்க தோணும். மேலும் வாப்பாக்களும் தாத்தாக்களும் பேரன்களை ஒன்றாக விளையாட பழக்கி இருந்தார்கள் என்று கூறுகிறீர்கள், நாஞ்சில் மனோ கூறுகிறார் வாப்பா ஊரைவிட்டு ஓட காரணமே இந்தக் கிழடுங்க இப்படி கோணகிழி பண்ணிட்டு இருக்கானுக என்பது தான். கிழடுகள் சமூக மூடநம்பிக்கையில் திளைத்தால், இளசுகள் சமூக வலைதள மூடநம்பிக்கையில்...  

அருவா கலாச்சாரம் ஹரியில் விளைந்ததா சீவேலப்பேரி பாண்டியில் விளைந்ததா? இல்லை சாதி கலவரங்களில் விளைந்ததா? ஒட்டுமொத்த தின்னவேலி பயலுவளும் பாசம் வச்சா அல்வா பகைய வளத்தா அருவான்னு தான ஸ்டேட்ஸ் போட்டு திரியறான். இதில் யாரை தப்பு சொல்ல. ஸ்லீப்பர் செல் முருகதாஸ் கூறித்தான் தெரியும், ஆனால் அது சம்மந்தமாக களப்பணி ஆற்றாமல் பொத்தாம் பொதுவாக கூறியிருப்பாரா? தப்பு நடந்த இடத்தில் இருப்பவன் அத்தனை பேரும் போலீஸ் கண்ணுக்கு குற்றவாளியாய் தான் தெரிவான் என்றால் சிலரை சில மாயவலை மேலும் சந்தேகப்பட வைக்கிறது?அந்த மாயவலைகளை கண்டுகொள்ளாமல் விடுவதே அதில் சிக்காமல் இருப்பதற்கு நிகர்.  

இஸ்லாமியரை தீவிரவாதியாக பார்க்கும் அத்தனை பேரையும் சாடுங்கள் உங்களோடு சேர்ந்து கொடிபிடிக்கிறேன், ஆனால் அப்படிப் பார்க்கும் அனைவரும் இந்துக்கள் என்று கூற முனைவது வருத்தமாய் இருக்கிறது. அப்படி நீங்கள் நினைத்தால் நான் மற்றும் என்னைப் போல் பலர் நீங்கள் நினைக்கும் பக்கத்தில் இல்லை என்று கூறவே விழைகிறேன். காரணம் மோசமான அரசியல்வாதிகளின் இந்து ஒருங்கிணைப்பு என்பது விழலுக்கு இரைத்த நீர். விழலைப் பிடுங்குங்கள் பயிரை அல்ல. 

31 comments:

 1. மோசமான அரசியல்வாதி என்று தனியாக வேறு இருக்கிறதா? இஸ்லாமியரைச் சாடுவோருக்கு எதிராகக் கொடி பிடிக்க முன்வருவதும் தீவிரவாதம் தானே? தீவிரவாதம் என்பது மத இன சார்பில் மட்டுமில்லை எதிர்ப்பிலும் தென்படும். இஸ்லாமியரைச் சாடுவோரெல்லாம் இந்துக்கள் என்றால் உங்களுக்கு என்ன வருத்தம் புரியவில்லையே? உங்கள் இந்துத்துவம் சார்பற்றதா? ஹிஹி.. எல்லா இந்துவையும் போல் நானில்லை என்ற நினைப்பே ஒருவகை பிரிவினை தானே?

  ReplyDelete
  Replies

  1. குத்திட்டிங்க்களே அப்பாத்துரை அண்ணாச்சி .....

   Delete
  2. வணக்கம் அப்பா சார்

   //மோசமான அரசியல்வாதி என்று தனியாக வேறு இருக்கிறதா// அரசியல்வாதி என்றாலே மோசமானவர்கள் ஏற்பட்டுவிட்டது, ஏன் நாளைக்கே நீங்களோ நானோ நல்லா அரசியல்வாதியாக உருவெடுக்கக் கூடாதா என்ன...

   மதசாற்பற்றவன் என்றால் என்ன, எந்த மதத்தையும் நம்பிக்கையையும் சார்ந்தவன் அல்ல என்பதா, அல்லது தன் மதம் மீது பற்று கொண்டு பிற மதத்தை வெறுக்காமல் இருப்பதா? முதலாவது எனக்கு பொருந்திப் போகாது காரணம் எனக்கு இறை நம்பிக்கை உண்டு, கோவிலுக்கு செல்கிறேன், அப்படி என்றால் இரண்டாவது தான் பொருந்திப்போகும் இப்போது கூறுங்கள் நான் யார்?

   //இஸ்லாமியரைச் சாடுவோரெல்லாம் இந்துக்கள் என்றால் உங்களுக்கு என்ன வருத்தம் புரியவில்லையே? // நான் ஒரு இந்து என்பதால் ஏற்படும் வருத்தம்... தவறு மொத்தத்தையும் பெரும்பான்மையினர் தான் ஏற்க வேண்டும் என்பதால் ஏற்படும் வருத்தம்.

   //எல்லா இந்துவையும் போல் நானில்லை என்ற நினைப்பே ஒருவகை பிரிவினை தானே?// பார்த்தீர்களா நான் கூற வருவதையே மாற்றிவிட்டீர்கள். எல்லா ஹிந்துவையும் போல் சிலர் இல்லை, விழல் என்கிறேன், நீங்கள் திருப்பிப்போட்டு விட்டீர்கள்.

   Delete
  3. அப்பாதுரை சார்,

   //இஸ்லாமியரைச் சாடுவோரெல்லாம் இந்துக்கள் என்றால் உங்களுக்கு என்ன வருத்தம் புரியவில்லையே? உங்கள் இந்துத்துவம் சார்பற்றதா? ஹிஹி.. எல்லா இந்துவையும் போல் நானில்லை என்ற நினைப்பே ஒருவகை பிரிவினை தானே?//

   இந்தப்பதிவு ஒரு மாதிரி குழப்படியா கருத்தினை சொல்வதாக எனக்குப்பட்டது,எனவே மையக்கருத்தினை அடையாளங்க்காட்டும் "இன்டிகேட்டர்" ஆக ஏதேனும் இழை சிக்குமானு பதிவில் தேடிப்பார்த்தேன் கிடைக்கலை ஆனால் உங்க பின்னூட்டத்தில் கிடைச்சிடுச்சு,நன்றி!

   எல்லா இந்துவைப்போல நானில்லை என்பது பிரிவினை மட்டுமல்ல ஒரு வகை "உயர்வினை" அவ்வ்!

   மதச்சார்பின்மையை விளங்கிக்காமலே ,நானும் இந்து தான் ஆனால் "நான் ரொம்ப நல்ல இந்து ,தனக்கு மதச்சார்பினை(இவ்வகை மதச்சார்பின்மை எனக்கு இன்னும் விளங்கலை) பொங்கி பிராவகம் எடுக்குது என சுய நம்பிக்கையில் வாழும் "நல்லவங்களை' ஒரு கொட்டு வச்சு காட்டியிருக்கிங்க :-))

   # // இஸ்லாமிய துவேசத்தை இந்துக்கள் மனதில் அரசியல்வாதிகள் ஏற்றிவிட்டார்கள் என்பது உண்மை என்றால் பாபர் மசூதி சம்பவத்திற்கு பின் பாஜக மட்டுமே ஆட்சியில் இருந்திருக்க முடியும். மேலும் அப்படி அரசியல்வாதிகளே செய்ய நினைத்தாலும் அதில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள். //

   நூறுப்பேர் இருக்கும் இடத்தில் அனைவரையும் ஒருங்கிணைக்க ,அமைதியை நிலைநாட்ட ஒருவன் முயன்றால் அவன் அனைவருக்கும் "பிடித்த ஏற்றவனாக" இருக்க வேண்டியது அவசியம், ஆனால் அங்கே சண்டையும் கலகமும் உருவாக்க ஒருவன் முயன்றால் அவன் அனைவருக்கும் பிடித்த, ஏற்ரவன் என்ற தகுதியெல்லாம் தேவையில்லை, ஒரு உண்மையை நம்ப வைக்க வேண்டும் என்றால் சத்தியம் எல்லாம் அடிச்சு ,நான் சொல்றது உண்மை தான் நிறுப்பிக்க ஒருவன் போராட வேண்டும் ஆனால் பொய்யான தகவலை "நீ நம்புனா நம்பு , பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிக்கும் ,பால்காரனுக்கும் தொடுப்பு இருக்கு" என சும்மா கொளுத்திப்போட்டாக்கூட மக்கள் நம்பி அதனை ஊரெல்லாம் பரப்புவாங்க :-))

   அதே கதை தான் மதத்துவேஷம் ,மூடநம்பிக்கையை பரப்ப பெரும்பான்மை ஆதரவெல்லாம் தேவையில்லை, கொஞ்சம் பேரை தூண்டி விட்டாலே 'பத்திக்கும்" அப்புறம் , நூறுப்பேரை கலங்கடிக்க வெறும் நாலுப்பேராலே முடியும்!
   ----------------

   Delete
  4. அப்போ ஒட்டுமொத்த பெருபான்மையினரும் சிறுபான்மையினருக்கு எதிராய் மத துவேசத்தை வளர்த்துவிட்டார்கள் என்று கூறுகிறீர்களா வவ்வால்.. பதிவின் மூலம் நான் கேட்க விளைந்தது இது தான்.. இதில் என்ன, எங்கே குழப்பி இருக்கிறேன் என்று புரியவில்லை... நான் கேட்டதை விடுத்து நீங்கள் என்னவெல்லாமோ கூறுகிறீர்கள்..

   அதேநேரம் நீங்கள் மேலே நீங்கள் கேட்ட கேள்வியில் பிழை இல்லை, காரணம் என் விவாதம் அது சார்ந்தது அல்ல. மேலும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த என் நிலையை கேட்டதால் கூறுகிறேன். அவர்களை ஒடுக்குவது அநீதி அவர்களை ஒடுக்குபவர்களையும் நான் சாடுவேன்...

   //கொஞ்சம் பேரை தூண்டி விட்டாலே 'பத்திக்கும்" அப்புறம் , நூறுப்பேரை கலங்கடிக்க வெறும் நாலுப்பேராலே முடியும்!// இவர்கள் இருபக்கங்களிலும் இருக்கிறார்கள் தயவுசெய்து இரு பக்கத்தையும் சாடுங்கள், ஒரு பக்கத்தை மட்டும் சாடுவது இன்னொரு பக்கத்தை மறைமுகமாக தூண்டுவது போல் ஆகும். அது மேலும் மேலும் பிரச்னையை உண்டு பண்ணும் என்பதை என்னால் கூட கணிக்க முடியும் போது அனுபத்தில் மூத்த உங்களால் கணிக்க முடியாதா என்ன?

   Delete
  5. சீனு,

   //ஒரு பக்கத்தை மட்டும் சாடுவது இன்னொரு பக்கத்தை மறைமுகமாக தூண்டுவது போல் ஆகும். அது மேலும் மேலும் பிரச்னையை உண்டு பண்ணும் என்பதை என்னால் கூட கணிக்க முடியும் போது அனுபத்தில் மூத்த உங்களால் கணிக்க முடியாதா என்ன//

   கணிப்பது வேறு எனது குழப்பம் , எப்படி எனில்,அப்பாதுரை சார் சொல்லியிருப்பது போல்,

   //இஸ்லாமியரைச் சாடுவோரெல்லாம் இந்துக்கள் என்றால் உங்களுக்கு என்ன வருத்தம் புரியவில்லையே? உங்கள் இந்துத்துவம் சார்பற்றதா? ஹிஹி.. எல்லா இந்துவையும் போல் நானில்லை என்ற நினைப்பே ஒருவகை பிரிவினை தானே?//

   உங்களுக்கு ஏன் வருத்தம்?

   உங்கள் இந்துத்துவம் சார்பற்றதா? அது எப்படி சார்பற்ற இந்துத்வம் இருக்க முடியும்?

   லிக்விட் கிரிஸ்டல் போல ஆக்சிமொரான் ஆச்சே :-))

   எனவே நியாயமான கவலையா ,கருத்தா எனப்பார்த்தால் அப்படி தெரியலை,எனவே சுத்தி வளைச்சு ஒரு சார்பின்மை முகமூடியை சுயமாக சுவிகரித்துக்கொண்டு "மதச்சார்பின்மைல் என்னப்போல இருப்பது என நீங்களாகவே சொல்லிக்கொண்டு பேசுவதாகப்பட்டதால் "சொன்னதில் ஒரு தெளிவின்மை தான் காணப்பட்டது.

   //நான் கேட்டதை விடுத்து நீங்கள் என்னவெல்லாமோ கூறுகிறீர்கள்..//

   நீங்களாக ஒரு வரையறை செய்துக்கொண்டு "அதில் இருக்க நியாயம்" மட்டும் பாரு என்றால் ,அதுக்கு முன்னால ,பின்னால எல்லாம் இருப்பதை யாரு சொல்வது?

   இந்துவ எப்படி குறை சொல்லலாம்னு கேட்டால் ,இன்னொரு இந்துவ கொடுமை படுத்துறது மட்டும் சரியானு கேட்கலாம் தானே?

   //அப்போ ஒட்டுமொத்த பெருபான்மையினரும் சிறுபான்மையினருக்கு எதிராய் மத துவேசத்தை வளர்த்துவிட்டார்கள் என்று கூறுகிறீர்களா வவ்வால்..//

   ஒட்டுமொத்தமா பெரும்பான்மை இந்துக்கள் சிறுபான்மையினருக்க்கு எதிரா செயல்ப்படுறாங்கனு சொல்லவில்லையே, இந்துத்வ்வா இயக்கங்கள் என்றப்பெயரில் செய்பவர்களை தான் சொல்கிறார்கள், அவர்கள் இந்துக்கள் தானே?

   இஸ்லாமிய அல்லது மாற்று மத எதிர்ப்பரப்புரை செய்வதெல்லாம் இந்துவில் இருக்கும் உயர்குடி ஆட்கள் தான் , எந்த "ஒடுக்கப்பட்ட மக்கள்" இந்துத்வ தலைவர் ஆக இருக்காங்க காட்டுங்க பார்ப்போம்.

   அதாவது இந்துத்வா இயக்கத்தினரை சொன்னால் அது ஒட்டு மொத்தமாக "இந்துக்களை" சொன்னதா நினைச்சிகிறிங்க, அப்போ இந்துக்கள் என்றால் அது உயர்குடியினை மட்டுமே கொண்டதா?

   இஸ்லாமிய எதிர்ப்புணர்வை இந்துக்கள் வளர்ப்பதாக பொதுவா சொன்னால் கூட ஒடுக்கக்கப்பட்ட இந்துக்கள் அது தங்களை அல்லனு தெளிவா சமூகத்தில் இருப்பதேன்?

   மாற்று மதத்தினரின் குற்றச்சாட்டு இந்துவில்" இருக்கும் யாரை நோக்கி என்பதை கணிக்க உங்களால் முடியாமல் போச்சா?

   #//இவர்கள் இருபக்கங்களிலும் இருக்கிறார்கள் தயவுசெய்து இரு பக்கத்தையும் சாடுங்கள்,//

   என்னைப்பொறுத்த வரையில் எல்லா மதவாதிகளையும் சாடிக்கிட்டு தான் இருக்கேன்.

   என்னைப்போன்ற நாத்திகர்களே உண்மையான
   மதச்சார்பற்றவர்கள், நாராயணா நாரயனா என சொல்லிக்கொண்டு , அடுத்த மதத்தினை குறையே சொன்னதில்லை ,மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறேன் என சொல்வதெல்லாம் "காய்ச்சி வடிக்கட்டிய" பொய் ஆகும்.

   # ஒரு தீவிரவாதி இஸ்லாமியன் என்றால் " எல்லாமே" தீவிரவாதி" தான் என சொன்னால் நம்பும் சமூகம் , ஒரு தீவிரவாதி இந்துவா இருந்தால் , அப்போ மட்டும் "கபாலி" என்ற தீவிரவாதினு சொல்ல சொல்லுதே அவ்வ்!

   இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மோசமானவர்கள் என்றால் இந்து மத அடிப்படைவாதிகள் மட்டும் நல்லவங்கனு சொல்ல முடியுமா? அவங்களும் அதே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!

   #இஸ்லாமிய வெறுப்புணர்வு மட்டுமல்ல, எல்லா மதங்களுக்கும் எதிராக இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டில் இந்து ,மதத்தின் பெயரால் சிலர் செயல்ப்படுவதை அங்கிகரிப்பது பெரும்பான்மை "செலக்டிவ்" அம்னீசியா இந்துக்களே :-))

   கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற கிருத்துவ பாதிரியார் இருமகன்களுடன் ஒடிஷாவில் உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்டது நினைவிருக்குமா " எப்படி' இந்துக்கள் வெறுப்புணர்வை வளர்க்கிறாங்கனு சொல்லலாம்னு கேட்போருக்கு?

   http://en.wikipedia.org/wiki/Graham_Staines

   http://www.ndtv.com/topic/graham-staines-case

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. //சுத்தி வளைச்சு ஒரு சார்பின்மை முகமூடியை சுயமாக சுவிகரித்துக்கொண்டு "மதச்சார்பின்மைல் என்னப்போல இருப்பது என நீங்களாகவே சொல்லிக்கொண்டு பேசுவதாகப்பட்டதால் "சொன்னதில் ஒரு தெளிவின்மை தான் காணப்பட்டது.

   exactly seenu.. நானும் இதைத்தான் சொல்ல வந்தேன். holier than thou?

   sensationalஆகத் தோன்றிவிடக்கூடாதே என்று சிரமப்பட்டு எழுதுவதன் சங்கடம் இது தான் - படிப்பவர் மனதில் எழும் தெளிவின்மை.

   (இந்தியாவில்) இஸ்லாமியரை வெறுப்பவர்கள் இந்துக்கள் தானே? to think of it இந்துக்கள் அந்த விதத்தில் சார்பற்று இருப்பதாகவே நினைக்கிறேன். எல்லா பிற மதத்தினரையும் வெறுக்கிறார்கள் - பட்சமின்றி. மதம் மாற்றுகிறார்கள் என்று கிறுஸ்தவரை.. மசூதி கட்டுகிறார்கள் என்று இஸ்லாமியரை.. பொழுது போகவில்லை என்று பௌத்தர்களை.. இந்துக்கள் இன மத வெறியர்கள் என்பது எத்தனையோ காலமாக இருந்து வந்த நிலை - இன்னும் அப்படியே இருப்பது தான் வருத்தம்.. ராமன் கோவில் கட்டுகிறேன் என்று தேர்தல் அறிக்கையில் பிரகடனப்படுத்தும் அளவுக்கு - எல்லையில்லா முட்டாள்தனம் இந்து என்ற மதச் சட்டையை அணிந்ததும் அத்தனை otherwise normal humanஆக நடக்கும் இந்துக்களுக்கும் வந்துவிடுகிறதே - பெரிய வருத்தம்.

   //ஒரு பக்கத்தை மட்டும் சாடுவது இன்னொரு பக்கத்தை மறைமுகமாக தூண்டுவது போல் ஆகும்.. சற்றுக் குறையறிவு வாதமோ சீனு? 'நான் சிவப்பு இந்து' எனும் வாதம் ஒரு பக்கத்துள்ளேயே மறைமுகமாக இன்னொரு பக்கத்தைக் காட்டுவது போல் அல்லவா இருக்கிறது?

   நீங்கள் இறை நம்பிக்கை உள்ளவரா.. think again.. 'இந்து இறை' நம்பிக்கை உள்ளவரெனச் சொல்கிறீர்களோ? ஒரு ரகசியம் சொல்லட்டுமா? பிற மதக் கடவுள் என வருகையில் அத்தனை ஆத்திகரும் நாத்திகரே. இதில் இறை நம்பிக்கை உள்ளதாகச் சொல்லிக் கொள்வதெல்லாம் கண்மூடித்தனம் என்றே நினைக்கிறேன். இந்த வகையில் கண்மூடிகளுக்கு இலவசமாக நாத்திக அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைப்பது - மாபெரும் வருத்தம் :).

   ஹிஹி.. நீங்களோ நானோ நல்ல அரசியல்வாதியாக வாய்ப்பே இல்லை சீனு.. why bother? நான் இந்திய அரசியலுக்கு வந்து நல்லவனாக நடக்க முயன்றால் முட்டாளாக வெளியே வருவேன்.. முட்டாளாக எனக்கு விருப்பம் இல்லை, கெட்டவனாக இருப்பது எவ்வளவோ மேல் :-).

   மதவெறியைத் தூண்டுவது அரசியல்வாதிகளல்ல என்று நினைக்கிறேன்.. அரசியல்வாதிகளுக்கு அத்தனை அறிவு கிடையாது.. ஓட்டு கிடைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் கூட்டம். அரசியல்வாதிகளுக்கு மதம் ஒட்டு வங்கிக்கான ஒரு திறவுகோல்.

   மதவெறியைத் தூண்டும் அளவுக்கு அறிவு படைத்தவர்கள் - துன்மதி அதாவது cunning அறிவு படைத்தவர்கள் சங்கராச்சாரிகளும் சுவாமிஜிகளும் (இந்தியா வந்தா அடி வாங்கப் போகிறேன் :-)

   Delete
  8. வவ்வால் "என்னைப்போன்ற நாத்திகர்களே உண்மையான
   மதச்சார்பற்றவர்கள்,"
   மத சார்பற்றவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் யாரேனும் தங்கள் சான்றிதழில் அதை பதிவு செய்ய முன்வந்திருக்கிறார்களா?அல்லது தங்கள் வாரிசுகளுக்காவது அப்படி செய்திருக்கிறார்களா?

   Delete
  9. செய்திருக்கிறார்கள்.

   Delete
  10. அப்பாதுரை சார்,

   //exactly seenu.. நானும் இதைத்தான் சொல்ல வந்தேன். holier than thou?

   sensationalஆகத் தோன்றிவிடக்கூடாதே என்று சிரமப்பட்டு எழுதுவதன் சங்கடம் இது தான் - படிப்பவர் மனதில் எழும் தெளிவின்மை. //

   எனக்கு மட்டும் தான் தெளிவில்லாமல் போச்சுனு நினைச்சேன் ,உங்களுக்கும் அப்படியான தோற்றம் தெரிகிறது என்பதை அறிவதில் மகிழ்ச்சி :-))

   ஹி...ஹி நம்மளப்போல இன்னொருத்தரும் நினைச்சா ஒரு அல்ப சந்தோஷம் வந்துடுது அவ்வ்!

   #//to think of it இந்துக்கள் அந்த விதத்தில் சார்பற்று இருப்பதாகவே நினைக்கிறேன். எல்லா பிற மதத்தினரையும் வெறுக்கிறார்கள் - பட்சமின்றி. மதம் மாற்றுகிறார்கள் என்று கிறுஸ்தவரை.. மசூதி கட்டுகிறார்கள் என்று இஸ்லாமியரை.. பொழுது போகவில்லை என்று பௌத்தர்களை.. இந்துக்கள் இன மத வெறியர்கள் என்பது எத்தனையோ காலமாக இருந்து வந்த நிலை - இன்னும் அப்படியே இருப்பது தான் வருத்தம்..//

   இதான் அடியேனது கருத்தும், அதனால் தான் கிரகாம் ஸ்டெயின்ஸ்ஸ் எரிப்பு சம்பவத்தினையும் சுட்டிக்காட்டினேன்.

   # நிறையப்பேரு இந்த மதவேற்றுமை சச்சரவுகள் எல்லாம் ஏதோ இப்ப புதுசா கிளம்பிடுச்சு ,அதுக்கெல்லாம் காரணம் "சமூக வலைத்தளங்கள்" எனக்கற்பிதம் கூட செய்கிறார்கள்,

   திருஞானசம்பந்தர் பாடியப்பாடல் இது,

   "மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்
   திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள்
   பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்-
   தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே? "

   சமண/பவுத்த பெண்களின் கற்பினை அழிக்க வேண்டும்னு பாடி இருக்கிறார், நம்ம பண்டிதர்கள் 'கற்பு" என அவர் சொன்னது கல்வி அல்லது அறிவு ஆகும்னு சப்பக்கட்டு தான் கட்டுறாங்க.

   "கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
   அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
   தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
   மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!"

   மீன் பிடிக்கிறாப்போல மதமாற்றம் செய்றாங்க எனவே அழிக்கணும்னு பாடியுள்ளார்.

   இறுதியில் அனல் வாதம்,புனல் வாதம்னு ஏதோ செஞ்சு பல்லாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றியசாதனையத்தான் 'அன்பே சிவம்" என கூவும் சைவ சமயம் செய்தது அவ்வ்!

   இதெல்லாம் 7 ஆம் நூற்றாண்டு கதை ,அப்போ எந்த சமூகவலைதளங்கள் காரணமாக இருந்திருக்கும் அவ்வ்!

   மத உணர்வுக்கு ஆட்பட்டுவிட்டால் தன்னால 'நம்ம மதம்" தான் சரினு ஒரு உயர்வு எண்ணம் தலைதூக்கி விடும் ,அப்புறம் எங்கே இருந்து "மதநேசம்" உள்ள மதச்சார்பற்றவாதியாக :-))

   Delete
 2. சீனு,பல இடங்களில் ஒத்துப் போனாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது அல்லவா? இந்த சமூகத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகத்தான் வாழ்கிறோம்.அவ்வளவு வெறி பிடிக்கவில்லை என்பதில் அபாயம் வந்துள்ளது என்பதுதான் உண்மை.வடக்கிந்தியர்களின் மனநிலை மிக மோசமான சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளது.புதிய தலைமுறை வெகு எளிதாக சூழ்ச்சியில் விழுகின்றனர்.புதுமையாக மாற்று கருத்து என்ற பெயரிலோ இல்லை வித்தியாசமாக சிந்திக்கிறேன் மன நிலையிலோ பழைய காலத்துக்கு திருப்பி செல்லுதல் நலமல்ல.
  மெஜாரிட்டி நினைத்தால் மைனாரிடியை துவம்சம் செய்து விடலாம்.நீங்க சொன்னிங்க.ஆனால் சிலர் மிரட்டுகின்றனர்.அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுதான் வேதனையை தருகிறது.அதன் அடிப்படையில்தான் மைனாரிட்டிக்கு சில சலுகைகளும் பாதுகாப்பு உணர்வும் அழிக்கப்படுகிறது.
  பிராக் என்ற நந்திதா தாஸின் படம் பார்க்க வாய்ப்பிருந்தால் பாருங்கள்.
  அரசியல்வாதிகள்தான் தூண்டுகிறார்கள் என்று தெரிந்தும் புரிந்தும் அவர்களுக்கு கொடி பிடிப்பது ஏன்?
  விரிவான பதிவாக கொடுக்க விரும்புகிறேன்.3நாட்கள் DG வந்துள்ளதால் இயலாத நிலை.நேற்றைய பதிவே முழுமையாக எழுதப்பட்டதல்ல.இன்னும் அதில் பல சம்பவங்களை குறிப்பிட நினைத்திருந்து காலம் இல்லாததால் விட்டுவிட்டேன்.மீண்டும் பேசலாம் ......

  ReplyDelete
  Replies
  1. //வடக்கிந்தியர்களின் மனநிலை மிக மோசமான சூழலுக்கு மாற்றப்பட்டுள்ளது.// வடக்கிந்தியர்களின் மனநிலை ஏதோ நேற்றைக்கு மாற்றப்பட்டது போல் பேசுகிறீர்கள். இசலாமிய படையெடுப்பில் அதிகம் பாதிக்கபட்டவர்கள் அவர்கள். அப்போதிருந்தே பாதிக்கபட்டு தானே இருக்கிறார்கள்.

   // மெஜாரிட்டி நினைத்தால் மைனாரிடியை துவம்சம் செய்து விடலாம்.நீங்க சொன்னிங்க.// இது வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது. விம், நான் அப்படி சொல்லவில்லை.

   //ஆனால் சிலர் மிரட்டுகின்றனர்.அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதுதான் வேதனையை தருகிறது.// இப்போதும் கூறுகிறேன் இப்படியொரு அச்சறுத்தல் வளர்ந்துள்ளது அதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இந்துவில் மட்டும் வளரவில்லை இருபக்கமும் வளர்ந்துள்ளது அதை உரக்கச் சொல்லி இருபக்கத்தையும் சரி செய்யுங்கள்... சும்மா ஒரு பக்கத்தையே சாடினால் அது அவனை செய் செய் என தூண்டிவிடுவது போல் ஆகிவிடும்?

   //அதன் அடிப்படையில்தான் மைனாரிட்டிக்கு சில சலுகைகளும் பாதுகாப்பு உணர்வும் அழிக்கப்படுகிறது.// மைனாரிட்டிகளால் மேஜாரிட்டிகளுக்கு ஏற்படும் சில பாதிப்புகளும் உள்ளன, அந்த பாதுகாப்பை யார் தருவது?

   //பிராக் என்ற நந்திதா தாஸின் படம் பார்க்க வாய்ப்பிருந்தால் பாருங்கள்.// தமிழில் கிடைக்குமா? அல்லது இங்கிலீஷ், எனக்கு ஹிந்தி புரியாதே...

   Delete
  2. சீனு,

   //மைனாரிட்டிகளால் மேஜாரிட்டிகளுக்கு ஏற்படும் சில பாதிப்புகளும் உள்ளன, அந்த பாதுகாப்பை யார் தருவது?//

   ஹி...ஹி மெஜாரிட்டிகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து யார் பாதுகாப்பை தருவார்கள் என கொஞ்சம் மாத்திக்கேட்டால் என்ன பதில் இருக்கு?

   இந்து மதம் விட்டு வெளியேறி மாற்று மதம் புகுபவர்களில் பெரும்பான்மை "ஒடுக்கப்பட்ட" மக்களாக இருக்கக்காரணம் என்ன?

   இந்த மெஜாரிட்டி மதத்தினர் ,அதே மதநம்பிக்கைக்கொண்ட சகமக்களையே "மனிதர்களாக" பார்க்கமாட்டேங்கிறார்கள் ,அதை பற்றி "ஒரு இந்துவாக" வருத்தப்பட்டுத்தான் பாருங்களேன் :-))

   # கோயில் திருவிழாவில் கூடி மகிழ்கிறார்கள் வேறென்ன செய்கிறார்கள் என்பதாக சிலாகிச்சு இருக்கீங்க, இதைக்கொஞ்சம் பாருங்க,

   //“They ripped his clothes off, tied him up to a pole and beat him up severely. They also threatened to harm our two school-going daughters if he refused to obey their orders,” Ms. Gowramma told The Hindu here on Thursday.

   All this began after he refused to go around the village beating a drum to inform the residents about a village festival scheduled for next week. A few people came to our home in an autorickshaw around 10.30 a.m. on December 17 and took him away. I ran behind the auto only to find my husband being beaten up,” she said.//

   http://www.thehindu.com/news/national/karnataka/dalit-man-beaten-up-for-refusing-to-beat-drum/article4222672.ece

   தி இந்துவே சொல்வதால் 'நீங்களும் ஒரு இந்துவாக" நம்புவீங்கனு நினைக்கிறேன் :-))

   கோயில் திருவிழாவில் கூடிமகிழ "ஒரு இந்துவை" போட்டு அடிக்கணுமா அவ்வ்!
   ----------------------

   Delete
  3. இந்த மெஜாரிட்டி மதத்தினர் ,அதே மதநம்பிக்கைக்கொண்ட சகமக்களையே "மனிதர்களாக" பார்க்கமாட்டேங்கிறார்கள் ,அதை பற்றி "ஒரு இந்துவாக" வருத்தப்பட்டுத்தான் பாருங்களேன் :-))
   ## வருத்தப்படுவதில்லை...ஆனால் நிறைய அட்வைஸ் செய்றாங்க..நல்லா படிங்க முன்னேறுங்க..எப்படியோ இருந்த நிலையிலிருந்து நெறைய மாறியாச்சு ...
   கட்ட கடைசியா ...இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறான்னும் சொல்வாங்க.

   Delete
  4. சதீஷ்,

   //வருத்தப்படுவதில்லை...ஆனால் நிறைய அட்வைஸ் செய்றாங்க..நல்லா படிங்க முன்னேறுங்க..எப்படியோ இருந்த நிலையிலிருந்து நெறைய மாறியாச்சு ...
   கட்ட கடைசியா ...இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறான்னும் சொல்வாங்க.//

   தெளிவாக புரிஞ்சு வச்சிருக்கீங்க!!!

   ஒரு வீடு வாடகைக்கு கொடுக்க கூட சுத்தி வளைச்சு ஜாதியக்கேட்காம கொடுக்கமாட்டாங்க, எல்லாம் இந்து தானேனு சும்மா இருக்கிறது அவ்வ்.

   இந்துமதத்துக்குள்ளவே இவ்ளோ வெறுப்ப காட்டுறவங்க ,முஸ்லீம்,கிருத்துவர்கள் என மற்றமதத்தினர் மேல பாச மழையா பொழிவாங்க?

   Delete
  5. நன்றி வவ்வால் அண்ணே ,அப்பாத்துரை அண்ணே ..உங்களின் பின்னூட்டங்கள் இன்னும் பல புதிய பார்வைகளை தருகிறது.முக்கியமா ஒரு வீடு வாடகைக்கு கொடுக்க கூட சுத்தி வளைச்சு ஜாதியக்கேட்காம கொடுக்கமாட்டாங்க, எல்லாம் இந்து தானேனு சும்மா இருக்கிறது அவ்வ்.

   ####இந்துமதத்துக்குள்ளவே இவ்ளோ வெறுப்ப காட்டுறவங்க ,முஸ்லீம்,கிருத்துவர்கள் என மற்றமதத்தினர் மேல பாச மழையா பொழிவாங்க?####

   இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை.நன்றி அண்ணா .

   Delete
 3. விழலுக்கு இறைக்கப்பட்ட நீர்தான் ....ஏனெனில் அதன் விவாதம் வேறு திசைக்கு இழுத்து செல்லும்.ஏன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்? அதில் உள்ள நியாயம் என்ன? காந்தி என்பவரை இஸ்லாமிய பெயரில் கொன்றதை நியாயப்படுத்துவீர்கள் ?
  பெரும்பான்மையான இந்துக்கள் இன்னும் அன்பாக பழகி வருகின்றனர்.ஆனால் அனைத்து இஸ்லாமியர்களும் பயப்பட ஆரம்பித்துள்ளனர் என்பது வேதனையான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. //இஸ்லாமியர்களும் பயப்பட ஆரம்பித்துள்ளனர் என்பது வேதனையான உண்மை.// தயவுசெய்து மனதைத் தொட்டு சொல்லுங்கள் அதற்கு பெரும்பான்மையினர் மட்டும்தான் காரணமா என்று... ஒரு பக்கத்தில் ஆரம்பிக்கப்படும் வேலை பதிலடி கொடுக்கிறேன் பேர்வழியில் வளர்ந்து கொண்டே இருக்கிறது அதை தடுக்க ஏன் எந்த செக்குலரும் வரவில்லை. சும்மா ஏதேனும் ஒரு சாரரை மட்டும் பேச வேண்டாம்... அது இந்துவை மட்டுமே பேசுவதாய் இருந்தாலும் சரி.. இஸ்லாமியரை மட்டுமே பேசுவதாய் இருந்தாலும் சரி தவறுதான்.

   Delete
 4. சென்னை குண்டு வெடிப்பு: பின்னணியில் முன்னணியா? –

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று (01/05/2014) காலை 7.25 மணியளவில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சக்திவாய்ந்த இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் சுவாதி என்ற பெண் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.இந்தியாவில் அவ்வப்போது மனித குல விரோதிகளால் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட போதும், 1998 – ன் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில், இத்தகைய கோர நிகழ்வுகள் ஏதும் நடந்திராதது நமக்கு ஆறுதலை அளித்தது. ஆனால் இன்றைய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அரசியல் இலாபம்

  கடந்த காலங்களில் நடந்த குண்டு வெடிப்புகள், கலவரங்கள், போலி என்கவுண்டர்கள் ஆகிய அசம்பாவிதங்கள் அனைத்தின் பின்னணியிலும், சங்க பரிவார சக்திகள் மூளையாக செயல்பட்டன என்பதனை ஆர்எஸ்எஸ் அசிமானந்தாவின் வாக்கு மூலமும், பிரக்யா சிங், கர்னல் புரோகித் ஆகியோரின் கைதுகளும் வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

  ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு பின்னாலும், பாஜகவினரோ அல்லது அதன் பரிவாரங்களோ இலாபம் அடைந்துள்ளனர் என்பதனை இந்திய அரசியலை நன்கு அறிந்த எவரும் மறுக்க இயலாது.

  அரசியல் இலாபத்திற்காக மக்களை பலி கொள்ளும் கோர அரசியல், இந்துத்துவ சக்திகளுக்கு சாதாரண விஷயமாய் ஆனது இந்தியாவின் சாபக்கேடே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

  மோடிVs லேடி

  தேசிய அரசியல் களம் சூடு பிடித்து, அடுத்த பிரதமர் தான்தான் என்ற கனவில் மிதக்கும் நரேந்திர மோடிக்கு, கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் அவரது நம்பிக்கைக்குரிய சகோதரி ஜெயலலிதா, “வளர்ச்சியின் நாயகர் மோடியா இந்த லேடியா?” எனக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

  இதன் பின்னணியில் மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க தயார் நிலையில் உள்ளதும், அதன் மூலம் “ஜெ”வை பிரதமராக தேர்வு செய்து பாஜகவின் கனவை தகர்ப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், “அதிமுக ஆதரவு தங்களுக்கு தேவைப்படாது” என்ற மோடியின் பதிலடி கூறப்பட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

  பின்னணியில் முன்னணியா?

  தேசிய ஜனநாயக கூட்டணியில் நெடுங்காலம் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தளம், அக்கூட்டணியை விட்டு வெளியேறிய போது, 27 அக்டோபர் 2013 அன்று பீகாரில் குண்டு வெடித்தது நினைவிருக்கலாம். பிஹாரின் சட்ட ஒழுங்குகளை குறை கூற இந்த குண்டு வெடிப்பை பாஜகவினர் பயன்படுத்தினர்.

  ஆனால் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.

  அதே போன்றதொரு சூழ்நிலை தற்போதும் நிலவுவதால், கூட்டணிக்கு போகாமலேயே எட்டி உதைத்த அதிமுகவிற்கு பாடம் கற்பிக்க இரயில் நிலைய குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்குமா என்ற சந்தேகம் இயல்பாய் எழுகிறது.

  ஊடகத்திலுள்ள பாசிச சக்திகளின் துணையுடன் வழக்கம் போல் இந்த குண்டுவெடிப்புகளில் முஸ்லிம்கள் மேல் பழியைப் பரப்பி, ஜெயாவிடம் முஸ்லிம் எதிர்ப்பை ஏற்படுத்தி பாஜக பரிவாரங்கள் அதிமுக ஆதரவைப் பெற முயற்சி செய்கிறார்களா என்றும் ஆராய வேண்டும்.

  நேர்மையான விசாரணை நடந்து, குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? அமைதி தவழும் பூங்காவாய் தமிழகம் நிலை நிற்குமா?

  அமைதி தவழும் பூமியை அனைவருக்கும் கேட்போம்!

  முஹம்மது ஷாஃபிஈ

  - See more at: http://www.thoothuonline.com/archives/65451#sthash.LkkhZFHZ.dpuf

  ReplyDelete
 5. சீனு தலைப்பில் உள்ள விழலுக்கு இரைத்த நீர் என்ற தட்டச்சு பிழையை "இறைத்த"
  என்று மாற்றவும். கூகுள் இன்புட் டூல்ஸ் பயன்படுத்துகிறீர்கள் என்றுநினைக்கிறேன்.

  ReplyDelete
 6. முதலில் குண்டு வெடிப்பு நடைபெற்றால் போலீஸ், மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள்,நிபுணர்கள் அங்கே சென்று விசாரணை செய்வதை இந்தியாவில் தடை விதிக்கணும்.
  குண்டு வெடிப்பு நடைபெற்றால் சும்மா ஒரு குலுக்கல் முறையில் இந்து கிறிஸ்தவன் சீக்கியன் என்று கொஞ்ச பேரை கைது செய்து உள்ளே போடணும். அப்போ மத நல்லிணக்கம் தழைத்தோங்கும்.
  சதீஷ் செல்லதுரை போன்ற உங்க இஸ்லாமிய அண்ணன்கமாரும் அமைதியடைவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புரிதலுக்கு நன்றி வேக நரி......

   Delete
 7. நம் நாட்டில் சுதந்திரத்திற்கு பின் எத்தனை குண்டு வெடிப்புகள் நடந்திருக்கின்றன, அதில் எத்தனை பேர் ராம்சாமி, ஹரிஹரன், சிவக்குமார் என்று பிடிபட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.. பிடிபடுபவர்கள் 99% இஸ்லாமியர்கள் தானே? இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் குண்டு வெடிப்பு, தீவிரவாத நடவடிக்கைகளில் மைனாரிட்டிகள் தான் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.. பின் எப்படி குண்டு வெடிப்பு நடந்தால் அவர்களை சந்தேகப்படாமல் இருக்க முடியும்? இந்த மாதிரி சூழலில் எத்தனை இஸ்லாமியர்கள் அத்தகைய தீவிரவாதிகளை, அவர்கள் இயக்கத்தை எதிர்த்திருக்கிறார்கள்? முகுந்த் இறந்து போனால் பார்ப்பான் என்கிறார்கள்.. அவர் எல்லையில் கொன்ற தீவிரவாதிகளை புரட்சியாளன் என்கிறார்கள்..

  secularism என்கிற பெயரில் தீவிரவாதத்திற்கு கொடி பிடிக்கும் செயல் தான் நடக்கிறது இங்கு.. தீவிரவாதம், குண்டு வெடிப்பு என்றாலே இஸ்லாமியர்களை சந்தேகப்பட வைத்ததும் கூட பிடிபட்ட அந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பதை நாம் உணர வேண்டும்.. ஒரு தீவிரவாதி என்றால் அவனை தீவிரவாதி என்று மட்டும் தான் அணுக வேண்டும்.. மைனாரிட்டி, ஒடுக்கப்பட்டவன் என்றெல்லாம் பார்த்தால் குண்டு வெடித்துக்கொண்டே தான் இருக்கும்..

  ReplyDelete
 8. ஏனோ தெரியவில்லை. குண்டு வெடிப்பு இந்தியாவாக இருந்தாலும், அம்ரிக்காவாக இருந்தாலும், ஏன் லண்டனிலும் பிடிபட்டவர்கள் மற்றும் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் தானே. ஏன், சிரியா, ஆப்கானிஸ்தான், எகிப்து, ஈராக், ஆகிய நாடுகளிலும் இஸ்லாமியர் தான் ஈடுபடுவதாக படிக்கிறோம். இது குறித்து, இஸ்லாமிய அறிஞர்கள் கூடி, ஆராய்ந்து, இளைய தலைமுறைகளை நல்வழிப்படுத்த முனைய வேண்டும். மற்றபடி, தங்கள் கடிதம் மிக நன்றாக இருந்தது.

  ReplyDelete
 9. அவையெல்லாம் பொய் என எவன் ஒருவன் பேசத் தொடங்குகிறானோ அவனிடம் இருந்தே பிரச்சனை தொடங்குகிறது.// பகுத்து அறியும் அறிவு இருப்பவன் எவனோ அவனுக்கு கேள்வி தொடங்குகிறது .அவன் அவன் கருத்தை சொல்வது எப்படி பிரச்னை ஆகும் .அவளவு நல்ல விடயமா இங்கு மதம் ,எல்லா மதத்திலும் ரத்த வாடை தாங்க முடியவில்லை அது ஏன் அவ்வாறு செய்தது அது நடப்பதை எல்லாம் பார்த்து கொண்டு இருக்கும் கடவுள் என்று உலகின் பல மக்கள் நம்புபவன் எப்படி கடவுள் ஆவான் என்று கேள்வி கேட்பது எப்படி தவறு ஆகும்,நியாபடி பார்த்தல் நம்பிக்கை ஆளர்கள் அவர் அவர் கடவுளை நோக்கி கேட்டு இருக்க வேண்டும் ,தான் நலம் வாழும் வரை மதத்தால் தான் நல்வாழ்வு கெடும் வரை எல்லாம் மதமும் சிறப்பே இங்கு

  ReplyDelete
 10. முஸ்லீம் மதம் ஆரம்பம் முதலே கொலை..கொள்ளை..கற்பழிப்பு தான்...இன்னும் அவர்கள் மாறவில்லை...ஆனால் இப்போ முழுஉலகுமே அவர்களை ஒரு ஒட்டுண்ணிகள் போல் பார்ப்பதால்...கூடிய சீக்கிரம் அழிவார்கள்....
  படிக்கப் போகும் பெண் பிள்ளைகளையே கடத்தி போய் பாலியல் தொழிழுக்கு விக்கும் மாமா பசங்கள் அவங்க...

  ReplyDelete
 11. ///"கழிக் கரைப் படு மீன் கவர்வார் அமண்-
  அழிப்பரை அழிக்கத் திரு உள்ளமே?
  தெழிக்கும் ம்புனல் சூழ் திரு ஆலவாய்
  மழுப்படை உடை மைந்தனே! நல்கிடே!"

  மீன் பிடிக்கிறாப்போல மதமாற்றம் செய்றாங்க எனவே அழிக்கணும்னு பாடியுள்ளார்.///


  இந்த தேவாரத்தின் கருத்து “மீன் பிடிக்கிறாப்போல மதமாற்றம் செய்றாங்க” என்பதல்ல. :-)

  நீர்நிலைகளிலுள்ள மீன்களைக் கவர்ந்து உண்ணும் புத்தர்களையும், நன்மார்க்கங்களை அழித்த வரும் சமணர்களையும் அடக்க எண்ணுகிறேன். ஒலிக்கும் அழகிய ஆறு சூழ்ந்த திருவாலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே! மழுப்படையை உடைய மைந்தரே! உமது திருவுள்ளம் யாது?

  மீன் கவர்வார் – புத்தர் (மீன், இறைச்சி உண்பது பெளத்தத்தில் அனுமதிக்கப்பட்டது).
  அழிப்பவர் – நன்மார்க்கங்களை யெல்லாம் அழிப்பவர்கள்.
  தெழிக்கும் - ஒலிக்கின்ற.
  பூம்புனல் - மெல்லியநீர்.
  நல்கிடே - தெரிவித்தருள்வீராயின்.


  ReplyDelete
  Replies
  1. //மீன் கவர்வார் – புத்தர் (மீன், இறைச்சி உண்பது பெளத்தத்தில் அனுமதிக்கப்பட்டது).//

   ஆன்மீக கொழுந்தா இருக்காரே அவ்வ்!

   மீன் கவர்வார் என்பது மதத்தினை குறிக்கவில்லை , அமண் என்பதே ,அது சமணர்களை குறிப்பது புத்த மதத்தினை அல்ல.

   திருஞான சம்பந்தர் ,சமணர்களுடன் தான் வாதிட்டார் ,புத்த மதத்தினருடன் அல்ல.

   அப்புறம் கற்பு அழிக்க வேண்டும் என சொன்னது ,"கல்வியத்தானா" ,அதுக்கு ஒன்னும் சொல்லக்காணோம். ஒருத்தங்க கற்ற கல்வியை எதனாலும் அழிக்கவே முடியாது , எப்பொழுதும் உடன் வரும் என வள்ளுவர் எல்லாம் தெரியாம எழுதிட்டாரே அவ்வ்!

   Delete
 12. //// ஏனோ தெரியவில்லை. குண்டு வெடிப்பு இந்தியாவாக இருந்தாலும், அம்ரிக்காவாக இருந்தாலும், ஏன் லண்டனிலும் பிடிபட்டவர்கள் மற்றும் குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் இஸ்லாமியர்கள் தானே.///

  Thats called Peace Movement.. Please understand Musilms can do anything but not Hindus.

  ReplyDelete
 13. //அப்புறம் கற்பு அழிக்க வேண்டும் என சொன்னது ,"கல்வியத்தானா" ,அதுக்கு ஒன்னும் சொல்லக்காணோம். ஒருத்தங்க கற்ற கல்வியை எதனாலும் அழிக்கவே முடியாது , எப்பொழுதும் உடன் வரும் என வள்ளுவர் எல்லாம் தெரியாம எழுதிட்டாரே அவ்வ்!//


  சம்பந்தரின் தேவாரரங்களில் பெளத்தர்களையும் அவர் எதிர்த்திருக்கிறார். உங்களின் கேள்விக்குப் பதிலை இங்கே பார்க்கலாம்.

  பெரியாரின் கையில் தேவாரம்??

  http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_12.html

  :-)

  ReplyDelete