11 Feb 2014

தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்து

'கார்ல போலாமா?' என்ற ஆவியின் கேள்விக்கு ஒருவேளை ரூபக் 'முடியாது' என்றிருந்தால் இந்நேரம் ரயிலில் பயணித்திருப்போம். நல்லவேளை ரூபக் சம்மதித்துவிட்டான்(ர்). பேருந்தில் ஏறியவுடன் தூங்கிப் போகும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமுறை கூட பகலில் பயணித்ததில்லை. ஆனால் இன்றோ காரில், கூடவே வலையுலக தோழமைகளும். எனது இப்போதைய மனஉணர்வுகளை விவரிக்க இன்னும் சில பல பத்திகள் தேவைபடும் என்றாலும் உங்கள் நலன் கருதி அவற்றைத் தவிர்த்து விடுவதே நலம்.

தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தி ஐந்தின் தேசிய நீரோட்டத்தோடு கலந்திருந்த போது நேரம் - இரண்டு நாற்பத்தி ஐந்து. பெருங்குளத்தூர் கடக்கும் வரையிலும் அடாவடியாக நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் அதன்பின் உல்லாசமாக தங்கள் சிறகுகளை விரிக்கத் தொடங்கியிருந்தன. 

சென்னையில் இருந்து புதுகோட்டை குறைந்தது ஏழு மணி நேரப்பயணம். ஆவியும் ரூபக்கும் மாற்றி மாற்றி வண்டியை ஓட்ட, நான், வாத்தியார் ஸ்கூல்பையன் மூவரும் பின் இருக்கையில் அமர்ந்து நேர்த்தியாக காரை செலுத்துவது எப்படி என வகுப்பெடுத்துக் கொண்டிருந்தோம். ஒருவேளை நாங்கள் மூவரும் கற்றுக் கொடுத்திராவிட்டால், பாவம் ஆவி மற்றும் ரூபக்கின் நிலமையை நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது. நல்லவேளை அப்படியெதுவும் நடந்துவிடவில்லை.  

ஆங்காங்கு தென்படும் சாலையோர மரங்கள். அவ்வபோது வந்து செல்லும் கிராமங்கள் இவை தவிர்த்து இருபுறமும் பரந்து வறண்ட வெட்டவெளி மற்றும் ரியல்எஸ்டேட் வீட்டுமனைகள். என்றாவது ஒருநாள் விலையேறும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் வாங்கப்பட்ட வீட்டுமனைகள் அவை. வானம் பார்த்த புன்செய் நிலங்களில் பெரும்பாலானவற்றை அரசாங்கம் அடிமட்ட விலைக்கு பேரம் பேசி பறித்திருக்க, எஞ்சிய நிலங்கள் வறட்சியாலும், பயிர்செய்ய ஆள் இல்லாத காரணத்தாலும், கோடீஸ்வர  ஆசையாலும் இலவு காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் விவசாய நிலங்கள் மனைகளாக மாறிக்கொண்டே உள்ளன. இப்போதே திண்டிவனம் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிட்ட நிலையில் திண்டுக்கல்லும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை.  

செங்கல்பட்டு கடந்ததும் வரும் அந்த மிகபெரிய ஆறானது பொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கிறது. செங்கல்பட்டு என்றில்லை வழியெங்கும் நாங்கள் பார்த்த அத்தனை ஆறுகளும் குளங்களும் வறண்டு போய்த்தான் கிடக்கின்றன. வறண்டு போன ஆறுகள் மணல் அள்ள வசதியாய் போய்விட்டதால் மணல் வியாபாரம் ஜெகஜோதியாய் நடைபெற்றுக் கொண்டுள்ளது. நீர் மனிதனுக்கு ஆதாரம். மண் நீருக்கு ஆதாராம். இரண்டையுமே மெல்ல மெல்ல சுரண்டிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் கடல்நீரை குடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் வாழ்ந்ததாக வேண்டுமே!   

நெடுஞ்சாலையோர கிராமத்து மக்கள் நிலையை நினைத்தால் நிஜமாகவே பரிதாபமாக இருக்கிறது. கணநேரம் கூட ஓய்வில்லாமல் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு மத்தியில் சாலையை கடத்தல் என்பது பிரம்மபிரயத்தனமாகவே இருக்கிறது. பொறுமை இழந்து சாலையை கடப்பவர்கள், குடித்துவிட்டு சாலையை கடப்பவர்கள், கவனக்குறைவால் சாலையை கடப்பவர்கள் என்று பல விதங்களில் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். பலரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பலரும் தங்களின் பல சவுகரியங்களைத் தியாகம் செய்தாக வேண்டியுள்ளது, அவற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் தவிர்க்க முடியா ஒன்றாகிவிட்டது.

பகலில்கூட பரவாயில்லை, வாகன ஒட்டிகளால் கிராமத்தார்களையும், கிராமத்தார்களால் வாகன ஓட்டிகளையும் தெளிவாக கவனிக்க முடியும். ஆனால் இரவிலோ நிலைமை கொஞ்சம் சிக்கல் தான். அதிலும் இந்த ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை அதிக கவனத்துடனேயே வாகனம் ஓட்ட வேண்டியுள்ளது. கிராமத்தார்கள் சாலையை கடக்கிறார்களா? இல்லை கடப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதை அந்த இருளில் கணிக்கவே முடிவதில்லை. பல சந்தர்பங்களில் சிலரின் உயிர் மயிரிழையில் காப்பற்றபட்டது. 

உயிர்காக்கும் வாசகங்கள், பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய டிஜிட்டல் பதாகைகள் என்று ஆங்காங்கு நட்டுவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நெடுஞ்சாலைத்துறை. இருந்தும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வழிசொல்லும் வழிகாட்டிப் பலகைகள் எங்குமே இல்லை. எங்கெல்லாமோ சுற்றி பலரிடமும் வழிகேட்டு ஒருவழியாய் வழியைக் கண்டுபிடித்தோம். ஆனால் மதுரையில் இருந்து புதுகோட்டை வருபவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை, சரியான இடத்தில் வழிகாட்டிப் பலகைகள் இருக்கின்றன. ஒருவேளை சென்னையில் இருந்து வருபவர்கள் அனைவரும் புத்திசாலிகள் எப்படியாவது கண்டுபிடித்து வந்து விடுவார்களென அரசாங்கம் நினைத்திருக்கக் கூடும் போல ஆச்சரியக்குறி.

ரூபக்ராம் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் என நினைக்கிறன். அவன் எம்.ஜி.ஆர் பட்டு போட வாத்தியார் பாட பாடியே படுத்தியெடுத்து   விட்டார்கள். இதையாவது பொறுத்துக் கொள்ளலாம், நல்ல பாட்டு போடுகிறேன் பேர்வழி என்று தனக்கு மட்டுமே பிடித்த தமிழ்மொழி தவிர்த்த பிறமொழி பாடல்களாக போட்டு படுத்தியெடுத்துவிட்டார் ஆவி.  என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை நினைத்து பார்த்துக்கொண்டேன். ஆனாலும் வாத்தியார் கூறிய சில சினிமா குறித்த அரிய தகவல்கள் ஆச்சரியம். 

ரஜினி குறித்து பேசத் தொடங்கிய போது ஒருகட்டத்தில் சிவகாசிக்காரன் ராம்குமாருக்கும் வாத்தியாருக்கும் இடையே கைகலப்பு வந்துவிடுமோ என நினைத்தேன் இறுதியில் அதையே கலகலப்பாக்கி காமெடி செய்துவிட்டார்கள் அவர்கள் இருவரும். மீண்டுமொருமுறை என்ன மாதிரியான காரில் பயணித்துக் கொண்டுள்ளோம் என்பதை காரின் விட்டத்தை நோக்கி தலையை உயர்த்தி, இடமும் வலமும் சிலுப்பி நினைத்து பார்த்துக்கொண்டேன்.   

நெடுஞ்சாலையோரக் கடைகளைப் பற்றி குறிபிட்டே ஆக வேண்டும். கூடுவாஞ்சேரி அருகில் 'காரைகுடில்' என்ற உணவகத்தில் மதிய உணவருந்தினோம். பெயருக்கு ஏற்ப குடில் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட உணவகம், சுவை சொல்லிக்'கொல்லும்' படியாக இருந்தது. அடுத்ததாக விழுப்புரம் அருகே ஒரு சாலையோர சாயா கடையில் நிறுத்தினோம். அரை கப் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள் கொஞ்சம் ஜீனி போட வேண்டிய இடத்தில், கொஞ்சம் பால், கொஞ்சம் காப்பி/டீ தூள், அரை கப் ஜீனி போட்டதால் ஏற்பட்ட விளைவு மூன்று காப்பி ஒரு டீ கேட்ட எங்களுக்கு நான்கு கப் பாயாசம் கிடைத்தது. இதில் வாத்தியாருக்கு சுகர் கம்மியாம்...ப்ப்ப்பூப்பூ ஒருவேளை மின்னல் வரிகளின் தொடர் வாசகனாய் இருந்திருப்பான் போல. பழிவாங்கிவிட்டான். இடைப்பட்ட நேரத்தில் அனைவருக்கும் காப்பி வந்து சேர எனக்கு மட்டும் டீ வராத நிலையில் 'தம்பி டீ இன்னும் வரல' என்று ஸ்கூல்பையன் பஞ்ச் அடிக்க, அதைகேட்டு அவன் எங்களை அடிக்கும் முன் எஸ்சானோம்.

விரைவில் 
குடுமியான் மலை, சித்தனவாசல், நார்த்தா மலை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்...   

27 comments:

 1. இந்த மாதிரிதான் உங்களோடு எல்லாம் ஒரு பயணம் செல்லவேண்டும் என்று ஆசை, அடுத்த தடவை கூபிடுங்களேன் !

  ReplyDelete
 2. பதிவுலகம் பயணவுலகமாக மாறுகிறது...
  நட்புக்கு மேலும் வலுசேருங்கள்
  வாழ்த்துக்கள்
  (இது சீரியஸ் கமெண்டு)

  ReplyDelete
 3. பயணங்கள் பற்றிய போட்டோக்கள் வரவேற்க்கப்படுகின்றன...

  ReplyDelete
 4. //சீக்கிரம் கடல்நீரை குடிக்கப் பழகிக்கொள்ளுங்கள். என்ன ஆனாலும் வாழ்ந்ததாக வேண்டுமே! //

  நகைச் சுவை இழையோட எழுதியிருந்தாலும் இடையே இது போன்ற கசப்பான உண்மைகள்/அவலத்தை அழகாக செருகி உள்ளீர்கள்!

  அருமையான பகிர்வு!

  உங்கள் நட்பு பற்றி நன்றாகவே தெரியும்! இன்னும் வளர வாழ்த்துக்கள்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. வாத்தியாருக்கும், அண்ணாக்களுக்கும் மட்டும்தான் உங்க கார்ல இடமிருந்ததா!? அக்காவை கார்ல ஏத்துறதா(நல்லா கவனமா படிக்கவும்...,காரால ஏத்துறது இல்ல) ஐடியாவே இல்லியா!?

  ReplyDelete
  Replies
  1. காலம் நேரம் கூடி வருைகயில் உங்கள் ரதசாரதியாக காத்திருக்கும் அன்புத் தம்பி

   Delete
 6. மின்னல் வரிகள் வாத்தியார் பக்கத்தில் உட்கார்ந்தால், ரூபக்ராம் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன் ஆகா விட்டால் எப்படி...? (பட்டு-->பாட்டு)

  பயணத்தில் சிவகாசிக்காரன் எப்போது எப்படி வந்தார்...?

  ReplyDelete
  Replies
  1. அப்படி நல்லா கேளுங்கண்ணே.. சம்பந்தமே இல்லாம என்ன கோர்த்து விட பாக்குறாங்க..

   Delete
 7. மணல் திருட்டு பற்றி எழுதி இருப்பது வேதனையைத் தருகிறது. எல்லா நீர் நிலைகளும் வரண்டிருப்பதும்!

  ReplyDelete
 8. சாலைகளை விவரித்த விதம் அழகு! காரைக்குடில் உணவகத்தின் சுவை கொல்லும்படி இருந்தது என்றவரிகளும் மணல் கொள்ளையை பற்றிய வரிகளும் சிறப்பாக அமைந்தன! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நீர் மனிதனுக்கு ஆதாரம். மண் நீருக்கு ஆதாராம்.... சூப்பர்...

  தொடர்ந்து படங்களோடு எழுதுங்கள் அண்ணா... நேற்றே எதிர்பார்த்தேன், உங்கள் பதிவை....

  ReplyDelete
 10. N H 45 பயணம் பற்றிய சுவையான தகவல்கள். வீதியிலே வேலையற்றதுகள்! அவர்கள் மனதிலே ... ... ஒரு படம் கூடவா எடுக்கவில்லை?

  ReplyDelete
 11. //விரைவில்
  குடுமியான் மலை, சித்தனவாசல், நார்த்தா மலை மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்... // பயண அனுபவங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 12. எல்லாத்தையும் சொன்னீங்க ரூபக்கின் கார் கண்ணாடி உடைந்த விசயத்தை ஏன் சொல்லவில்லை? அவர் ஒரு டெரர் என்னும் ரகசியம் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்கா? எத்தனை நாள் தான் அவர் ரொமான்டிக் ஹீரோவாகவே இருப்பது? மேடியே ஆக்‌ஷனுக்கு வந்துட்டார்.. ரூபக்கையும் ஆக்‌ஷன் ப்ளாக்குக்கு கொண்டு வாங்க.. சீக்கிரம் அடுத்த பாகத்தை ஆரம்பிங்க நண்பா...

  ReplyDelete
 13. எப்போது தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தாலும் ஏற்படும் வேதனையை சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். தண்ணீரும் போய் வயல்வெளியும் போய் எதை உண்டு குடித்து வாழ்வோமோ.

  ReplyDelete
 14. மக்களே... மக்களுக்கு மக்களே...! ‘கொடைக்கானல் டூர் போனப்ப பாடுனதா எழுதினீங்களே... எங்களுக்கு பாடிக் காட்டக் கூடாதான்னு’ எங்னையெல்லாம் பாடச் சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்திய ரணகளமாக்கிட்டு பச்சப்புள்ள போல போஸ் குடுக்குது பாருங்க இந்தத் தம்பி...! இவனு(ரு)க்கு என்ன தண்டனை தரலாம்? சொல்லுங்க நியாயமாரேஏஏஏஏ....

  ReplyDelete
 15. ச்ச்சீனு...! G.K.C.புரம் பத்தி எழுதலாமான்னு நான் யோசிச்சுட்டு இருக்கறதுக்குள்ள இங்க அனுபவப் பகிர்வை அதிவேகமா ஆரம்பிச்சுட்டே...! ரைட்டு...! தொடர்ந்து படிக்க வந்துர்றேன்!

  ReplyDelete
 16. மாடு எதுவும் குருக்கிடலை? அப்ப நீங்க அதிர்ஷடசாலி தான்.

  ReplyDelete
 17. //திண்டுக்கல்லும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை//

  ReplyDelete
  Replies
  1. தஞ்சாவூரைத் தூக்கி டெல்லியில வைக்கிறோம் - கல்கத்தாவைத் தூக்கி தஞ்சாவூர்ல வைக்கிறோம் -- அப்படின்னு வடிவேல் செய்யும் காமெடி ஒரு படத்துல (படம் பேரு?) வருமே... அது ஞாபகம் வந்துடுச்சி!!!

   Delete
  2. குடந்தை சரவணன் சாருக்கு, சென்ற 09/02/2014 ஞாயிறன்று நான் ஃபோன் செய்தபோது அவர், நீங்களெல்லோரும் கங்கைகொண்டசோழபுரத்தில் இருப்பதாகக் கூறினார். அந்தப் பயணக் கட்டுரைதானே? தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். (இறை நாட்டம்)

   Delete
 18. //எஞ்சிய நிலங்கள் வறட்சியாலும், பயிர்செய்ய ஆள் இல்லாத காரணத்தாலும், கோடீஸ்வர ஆசையாலும் இலவு காத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் மேலும் விவசாய நிலங்கள் மனைகளாக மாறிக்கொண்டே உள்ளன//

  பிற்காலத்தில் விவசாயத்துக்கும் தண்ணீருக்கும் என்ன செய்வார்கள் என்று நினைக்கையில் பயமாக இருக்கிறது...

  ReplyDelete
 19. டீக்கடை பஞ்ச் திடீர்னு வந்தது....

  ReplyDelete
 20. அந்த ஆத்துலேயே இறங்கி நடந்து வந்தா அருகிலேயே எனது பண்ணைத் தோட்டம் உள்ளது வாருங்கள்

  ReplyDelete
 21. சுகமான ஆரம்பம். இதே சாலையில் சென்ற வாரம் திருச்சி-விழுப்புரம் வரை காரில் பயணித்தபோது எனக்குள்ளும் அதே எண்ண ஓட்டம் - பல இடங்களில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக!

  தொடர்கிறேன்.

  ReplyDelete