11 Jan 2014

வீரம் - தல புராணம்

ரம்பம் படத்திற்கு விமர்சனம் எழுதாத போதே தல என் மீது மானசீகமாக கோபம் கொண்டிருக்கவேண்டும், ஆகையினால் தலயிடம் அதற்கொரு மானசீக மன்னிப்பு கேட்டுவிட்டு விமர்சனம் என்ற பெயரில் நான் எழுத இருக்கும் விமர்சனம் அல்லாத ஒன்றினுள் நுழைவோம்.

பில்லா படம் வந்தாலும் வந்தது அதன்பின் வெளிவந்த எல்லா படங்களிலும் அஜீத்தை கோட்சூட்டுடன் நடக்க விட்டுவிட்டனர். மாஸ்தான், ஸ்டைலிஷ்தான், ஹாண்ட்சம்தான். அதற்காக எவ்வளவு காலத்திற்குத்தான் அதையே பார்த்துக்கொண்டிருப்பது. நமக்கும் போரடிக்காதா? சரியான நேரத்தில் சரியான கெட்டபில் அஜீத் நடித்திருக்கும் மிக சரியான மசாலா படம் ஆனால் படம் வெற்றி பெற்றதா என்றால்? பயபடாதீர்கள் படத்தின் கதையை எல்லாம் சொல்லபோவதில்லை. சொல்லப்போனால் படத்தில் அப்படி ஒரு வஸ்து இல்லவும் இல்லை 


திரையரங்கினுள் நுழையும் பொழுது கிட்டத்தட்ட தலயின் இன்ட்ரோ சீன் முடிந்து கொண்டிருந்தது. நாவலூர் ஏ.ஜி.எஸ் முதலாளிகள் அநியாயத்திற்கு அநியாயக்காரர்களாக இருக்கிறார்கள். 9.20க்கு ஆரம்பிக்க வேண்டிய படத்தை 9.15க்கே ஆரம்பித்துத் தொலைத்தால் தலயின் இன்ட்ரோ சீன் தவற விட்ட பாவி ஆகிவிட்டேனம்மா பாவி ஆகிவிட்டேன். இருந்தும் இன்ட்ரோ சீனில் விருந்துக்கு வந்திருப்பவர்களை உட்காரச்சொல்லி கையசைக்கிறார் தல. அப்போது தலயின் ரியாக்சன் ஆனது - வெகுநாளுக்குப் பின் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் தன்னைக் கண்டதும் துள்ளிக்குதித்து, அலறி, கத்தி ஆர்ப்பறித்து விசிலடித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை சீட்டில் உட்காரச் சொல்வது போலவே இருந்தது எனக்கு. சரியாக சொல்வதென்றால் எங்கள் அரங்கமும் அப்படித்தான் இருந்தது. படம் பார்க்க வந்திருந்த பெரும்பாலான ரசிகர்கள் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் வந்திருந்தது சூப்பராக இருந்தது. தமிழக இளைஞர்கள் வேஷ்டி சட்டையில் கூட அழகாகத்தான் இருக்கிறார்கள் 

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, பெரிதாக சொல்லிக்கொள்ளும் படியான எவ்வித ஒப்பனைகளும் இல்லமால் பக்கா காஸுவலாக வலம் வருகிறார் தல. பார்த்ததும் பிடித்துப்போகிறது. இப்படத்தில் அதிகமாக நடக்கவில்லை ஆனால் நடக்கிறார். அதிகமாக முறைக்கவில்லை ஆனால் முறைக்கிறார். அம்பாசிட்டர் ஓட்டுகிறார், மாட்டுவண்டி ஓட்டுகிறார். கூலர்ஸ் இல்லாதபோதும் அழகாகத் தெரிகிறார். வகைவகையான ரகம்ரகமான துப்பாக்கியைப் பிடித்த கைகளில் அருவா கத்தி வேல்கம்பு ஈட்டி என்றுமானாவாரியாக பிடித்து வெட்டிசாய்த்து அதகளம் செய்கிறார். அதிகமாக வசனம் பேசியுள்ளார். என்ன ஒன்று டூயடிற்கு நடனம் வேறு ஆடியுள்ளார். (தல தயவுசெஞ்சு டூயட் எல்லாம் நமக்கு வேணாம், இந்த எதிரிங்க தொல்ல தாங்க முடியல :-) )     

யிலில் நடக்கும் சண்டையின் போது கத்தியை எதிராளியின் வயிற்றினுள் குத்தி குத்திட்டு நிற்கச் செய்யும் காட்சியாகட்டும், அவ்வபோது பேசும் பஞ்ச் டயலாக் ஆகட்டும், திருவிழா சமயத்தில் எதிரிகளை தொம்சம் செய்யும் காட்சிகளாகட்டும் சந்தோசமாக காலரை தூக்கிவிட்டுக் கொள்வேன் தல ரசிகன் என்று.     

முதல்பாதி முழுவதும் தாடி மீசையுடன் அட்டகாசமாக இருக்கும் தல, பின்பாதியில் திருந்துகிறேன் பேர்வழி என்றபெயரில் முகத்தில் இருக்கும் தாடியை மழித்து வெறும் மீசையுடன் வருகிறார். அந்த காட்சியில் இருந்தே அஜீத்தை அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் அதகளம் புரியும் என் தலைக்கு அந்த சால்ட் அன்ட் பெப்பர் மீசை தாடி தான் கொள்ளை அழகு. கிளைமேக்சிலாவது மீண்டும் மீசை தாடியுடன் வருவார் என்று எதிர்பார்த்தால் ம்ம்ம்கும் ஏமாற்றிவிட்டார்.       

ல்லாம் நன்றாக இருந்தும், படத்தில் ஏதோ ஒரு சொதப்பல் இருப்பது போலவே தோன்றியது. அது, சிறுத்தை சிவா! அவர் இன்னமும் சிறுத்தை எபெக்டில் இருந்தே வெளிவரவில்லை போலும், வீரம் படம் பார்க்கும் போது சிறுத்தை பார்ட் டூவில் அமர்ந்திருப்பது போலவே ஒரு மாயை. அழுக்குஉடை அடியாட்கள். ஜடாமுடி அடியாட்கள், தலைவாராத அடியாட்கள், ஆந்திர கத்திகள். படத்துடன் ஒன்றவே முடியவில்லை சிவா. தமிழக அடியாட்கள் அடியாட்களே என்றபோதும் தினமும் குளித்துவிடுவார்கள். நெற்றியில் விபுதியோ, தலையில் குல்லாவோ, மாரில் சிலுவையோ அணிந்திருப்பார்கள். சீனுக்கு சீன்  கத்த மாட்டார்கள். நீட்டாக உடை அணிந்திருப்பார்கள். தேவைபட்டால் டக்கின் கூட செய்வார்கள். இன்னும் சொல்லபோனால் ஒழுங்காக பல் விளக்குவார்கள். இவ்வளவு நல்ல வில்லன்களை விட்டுவிட்டு ஏன்லு ஆந்திராலு அடியாளு. 

டத்தின் முதல் காட்சியில் தல வீட்டினுள் தம்பிகளுடன் பேசிக் கொண்டிருப்பார். அடுத்ததாக ஒரு பாடல். அடுத்து ஒரு சந்தானம் காமடி. வில்லன் என்ட்ரி. அடுத்த காட்சியில் என் 'தம்பிக்காக எப்படி கஷ்டப்பட்டேன் தெரியுமா' என்ற செண்டிமெண்ட் சீன். அடுத்த காட்சியில் நாயகி. ஒரு பாடல். ஒரு வசனம். ஒரு சண்டை. ஒரு செண்டிமெண்ட். இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்துப் பார்த்து பழகியிராத புதுயுக்தியை ஹரி பாணியில் திரைக்கதையெழுத முயன்று, பேரரசு பாணியில் இயக்க முயற்சித்து சிவா பணியில் இரண்டுகெட்டானாக்கி இருதாலும் அஜீத் என்ற பிம்பம் அத்தனையையும் அதகளம் செய்துவிடுவதால் இவன் மதபுஜம் இரண்டும் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் வீரம்.

டத்தின் வசனங்கள் சூப்பர் என்றெல்லாம் சொல்ல முடியாது ஆனால் அஜீத் பேசும் ஒவ்வொன்று அட்டகாசம். அதே நேரம் ஒவ்வொருவரும் வசனம் பேசும் பொழுது BASE VALUE வை அளவுக்கு அதிகமாக வைத்து இம்சிப்பதால் காதுக்குள் எக்கோவாவதை தவிர்க்க பெரும் பிரயத்தனப்படவேண்டியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையைப் பற்றி சொல்வதென்றால் சும்மா கிழி கிழி கிழி டாட். 


க்காவான ஒன்லைனர், படு ஸ்மார்ட்டான ஹீரோ. நான்கு தம்பிகள், ஒரு காதலி, இரண்டு வில்லன்கள், ஒருகிராமம், லட்சக்கனாகன ரசிகர்கள் இவர்களுக்காக சிறுத்தை சிவா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அட்லீஸ்ட் தெலுங்கு வாடையையாவது குறைத்திருக்கலாம். இருந்தும் வீரம்; அஜீத்தின் திரையுலக வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் வாழ்வா சாவா படமெல்லாம் கிடையாது. அந்த நிலைகலையெல்லாம் கடந்து செத்துசெத்து பிழைத்தபோதும் கெத்தாக மீண்டு வரச்செய்த தனது ரசிகர்களுக்கான தலப்பொங்கல்.

A MASS OPENER'S MASS MOVIE FOR THE MASS AUDIENCE. 

18 comments:

 1. //தமிழக அடியாட்கள் அடியாட்களே என்றபோதும் தினமும் குளித்துவிடுவார்கள். நெற்றியில் விபுதியோ, தலையில் குல்லாவோ, மாரில் சிலுவையோ அணிந்திருப்பார்கள். சீனுக்கு சீன் கத்த மாட்டார்கள். நீட்டாக உடை அணிந்திருப்பார்கள். தேவைபட்டால் டக்கின் கூட செய்வார்கள். இன்னும் சொல்லபோனால் ஒழுங்காக பல் விளக்குவார்கள்.//

  ஹா..ஹா..நல்ல அவதானிப்பு..தெலுங்கு தாதாக்கள் சம்பளம் ஒழுங்கா கொடுக்கறதில்லையோ, என்னவோ!

  ReplyDelete
 2. வணக்கம்
  தங்களின் பார்வையில் கருத்தாடல் நன்றாக உள்ளது... மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  http://2008rupan.wordpress.com(புதிய பதிவாக... என்னுடைய வலைப்பக்கம் கட்டுரைப்போட்டிக்கான காலம் நீடிப்பு)
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. எப்படி இந்த ஆளை ஜனங்க ரசிக்கிறாங்க புரியலியே!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. சும்மா தான் அப்பா சார் !

   Delete
 4. ஜனவரியில் ஏது சுதந்திர தினம்?

  ReplyDelete
 5. சிறப்பான விமர்சனம்!!

  ReplyDelete
 6. வேட்டி தினத்திற்கு 'தல'யை தலைவராகி விடலாம் போல...!

  ReplyDelete
 7. ஒ வித்தியாசமான கெட்டப்பில் தல, விமர்சனம் அருமை...!

  ReplyDelete
 8. உண்மையிலே தலைப் பொங்கல்தான் .. ஜில்லாவை மிஞ்சிய வீரம்

  ReplyDelete
 9. திரு சகாயத்தின் 'வேட்டி கட்டுங்க தமிழர்களே' க்கு விளம்பரமா 'தல' படம் போடலாம்னு சொல்லுங்க!


  ReplyDelete
 10. சீனு ஹாப்பி....அது போதும்.... பாடல்கள் தவிர எனக்கும் ரொம்பவே பிடிச்சு இருந்தது..

  ReplyDelete
 11. நண்பா நீங்க குதர்க்கமா யோசிக்கிற அளவுக்கு பாமர ரசிகன் யோசிக்க மாட்டான்.. ரவுடி, அடியாள் என்பதை காட்ட, அழுக்கு சட்டையும், ஜடா முடியும், ஓஓஓஓஓய் என்கிற சவுண்டும், ஹெவி பாடியும் இருக்கும் ஆளைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.. இல்லையென்றால் ரௌத்திரம் என்றொரு படம் வந்ததே அப்படி ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.. படம் மாஸாக இருக்கிறது.. இந்த லாஜிக் ஓட்டை கண்டுபிடிக்கும் குரூப் மக்களுக்கு மட்டும் பிடிக்காமல் போகலாம். ஒரு சாதாரண சினிமா ரசிகனை கொடுத்த காசுக்கு குதூகலப்படுத்தும் படம் இது...

  ReplyDelete
 12. kuppura vilunthaalum meesaila man ottalanu soldra hmmm...?

  ReplyDelete
 13. AndhraBoxOffice.Com Via Twitter : ‪#‎Jilla‬ took a record opening in Kerala and has huge lead in 'India Nett' on Day1. India Total Nett (Nett Figures) Jilla - 7.5 Cr http://andhraboxoffice.com/info.aspx?id=516&cid=6&fid=714 Veeram - 5.85 Cr http://andhraboxoffice.com/info.aspx?id=517&cid=6&fid=741 JILLA LEADS

  ReplyDelete

 14. செம...

  //ஒவ்வொருவரும் வசனம் பேசும் பொழுது BASE VALUE வை அளவுக்கு அதிகமாக வைத்து இம்சிப்பதால் காதுக்குள் எக்கோவாவதை தவிர்க்க பெரும் பிரயத்தனப்படவேண்டியுள்ளது.//

  நீங்க வேற ... தியேட்டர்ல அஜித் பேசுற எல்லா வசனத்துக்கும் ரசிகக் குஞ்சுகள் விசிலடிச்சி என்ன பேசுராருனே விளங்காம போயிடுச்சி

  ReplyDelete
 15. //தமிழக இளைஞர்கள் வேஷ்டி சட்டையில் கூட அழகாகத்தான் இருக்கிறார்கள் //

  அட..... :)

  ரசித்தேன் சீனு!

  ReplyDelete
 16. எனக்கும் தாடி இல்லாத அஜித்தைப் பிடிக்கவே இல்லை. சிக்ஸ் பாக்ஸ் இருக்கும் சூர்யாவுக்கு மட்டும் தான் வேஷ்டி நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். சிங்கம் 1 அன்ட் 2 பார்த்த எபெக்ட்ப்பா. கண்டுக்காதீங்க. ஆனா அஜித்தைப் பார்த்தப்புறம், சூர்யாக்கு செக்கென்டு ப்ளேஸ் கொடுத்துட்டேன். கொஞ்சம் டை அடிச்சிருக்கலாம்ல. தமனா செம அழகு.

  மலரினி

  ReplyDelete