12 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி


பொதுவாகவே எந்த ஒரு ஊர் சுற்றலிலும் முறையான திட்டமிடல் இல்லையெனில் நாம் பார்க்கவேண்டும் என்று நினைக்கும் பகுதிகளில் பாதியைக் கூட சுற்றிப்பார்க்க முடியாது என்பதே உண்மை. நானெல்லாம் ஒரு பகுதிக்குப் போவதாய் இருந்தால் எவ்வளவு அதிகமான பகுதிகளை சுற்றிப்பார்க்க முடியும் என்று யோசிப்பேன். காரணம் பயணதூரம். ஆனால் நம்முடைய ஒத்த அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் நம்முடன் ஒத்துப் போகவில்லையெனில் சிக்கலே. அவ்வகையில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னுடன் பயணிக்க விரும்பும் நண்பர்கள் பல்லைக் கடித்துக் கொண்டேனும் அக்கொடுமையை எல்லாம் சகித்துக்கொள்வார்கள்.   

   

தற்குமுன் எழுதிய எந்தவொரு நாடோடி எக்ஸ்பிரஸிலும் மேற்கூறிய பத்தியை எழுதியதே இல்லை, ஆனால் இங்கு குறிப்பிடுவதன் காரணம் கன்னியாகுமரி அப்படியொரு மாவட்டம். அங்கிருக்கும் ஒவ்வொரு கிராமமுமே ஒரு சுற்றுல்லாத் தளம்தான்.

ன்னியாகுமரி தவிர்த்து, முட்டம் மீன்பிடி துறைமுகம், ராஜாக்கமங்கலம் தேங்காய்ப்பட்டணம் மண்டைக்காடு கடற்கரைகள் என்று கடற்கரைகளுக்குப் பஞ்சமேயில்லாத மாவட்டம் குமரி மாவட்டம். குமரியம்மன், மண்டைக்காடு பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலையப் பெருமான், நாகராஜா கோவில் என்று கோவில்களுக்கும் பஞ்சமில்லை. திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள், பத்மனாதபுரம் அரண்மனை என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் மற்றொரு அடிவாரம் குமரி மாவட்டத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் இடங்கள். இவை எல்லாவற்றையும் நிதானமாகச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று தினங்கள் வேண்டும். 

ல வருடங்களுக்குப் பின் குமரி மாவட்டம் செல்வதால் எந்ததெந்த இடம் எங்குள்ளது என்பதெல்லாம் மறந்துவிட்டது. இணையத்திலும் முறையான சுற்றுல்லா வழிகாட்டி இல்லை . எங்கெல்லாம் செல்ல வேண்டுமென்று முடிவெடுப்பதே மிகவும் சிரமமாயிருந்தது. 

முடிவுவெடுக்க முடியாமல் குழம்பிய மனநிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்த போது, மிகத் தற்செயலாக 'காணமல் போன கனவுகள்' வலைப்பூவில் எழுதிவரும் ராஜி அக்கா பேஸ்புக் சாட்டிங்கில் வந்தார். அவரது சில பதிவுகளில் குமரி மாவட்டம் குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வர அவரிடமே ஐடியா கேட்டேன். நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகப் பொறுமையாக பதில் சொன்ன அவருக்கு முதல் நன்றி. 

ன்னுடைய முதல்கட்ட திட்டமிடலானது நேராக கன்னியாகுமரி செல்ல வேண்டும், சூர்யோதயம், விவேகானந்தர் பாறை, குமரியம்மன் கோவில், காந்திமண்டபம், பின் சுசீந்திரம் கோவில், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், மாத்தூர் தொட்டிப்பாலம் என்பதாகத்தான் இருந்தது. ராஜி அக்காவுடன் பேசிய பின்புதான் ஒரேநாளில் இவ்வளவு பகுதிகளையும் சுற்றுவதென்பது இயலவே இயலாத காரியமெனப் புரிந்தது. 

தனால் ராஜி அக்காவிடமே 'ஒரு பிளான் போட்டுக் கொடுங்கள்' என்று கேட்டேன். ஒன்று குமரி மற்றும் குமரி சுற்றிய கடற்கரையோரப் பகுதிகள் அல்லது தக்கலை, தக்கலை சுற்றிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் என்று பிரித்துக்கொண்டு இதில் ஏதாவது ஒன்றை வேண்டுமானால் சுற்றிப் பார்க்கலாம். இரண்டையுமே பார்க்க வேண்டுமென நினைப்பது இயலாத காரியம் என்றார். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் நாங்கள் சுற்றிப் பார்க்க இருப்பது சீருந்தில் அல்ல அரசாங்கப்பேருந்தில். அதனால் நேர மேலாண்மை என்பது இயலாத காரியம். எனக்கோ அனைத்து பகுதிகளையும் சுற்ற வேண்டும் அதுவும் ஒரேநாளில். சரி வாடகைக்குக் கார் எடுத்துக் கொள்ளலாமா என்றால் வெறும் மூன்று பேருக்காக கார் எடுத்தல் என்பது வரவு எட்டணா செலவு பத்தாயிரம் அணா போலாகிவிடும். பேருந்ததைத் தவிர வேறு வழியே இல்லை.

ன் நண்பர்கள் கண்டிப்பாக விவேகானந்தர் பாறைக்குச் சென்றாக வேண்டும் என்றார்கள், நானோ தொட்டிப்பாலம் என்றேன். மாத்தூர் தொட்டிப்பாலம் இரு மலைகளுக்கு இடையே மனிதர்களால் கட்டப்பட்ட மிகபெரிய கற்பாலம், மற்றும் நீர்வளமிக்க ஒரு கிரமாத்தில் இருந்து மற்றொரு கிராமத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட மிகபெரிய, மிக உயரமான பாலம். மேலும் இதன் மீது நின்று பார்த்தால் குமரியின் பச்சைபசேல் இயற்கையை கண்டு ரசிக்கலாம். சிறுவயதில் பார்த்த தொட்டிப்பால நியாபகங்கள் எஞ்சியிருந்ததால் தொட்டிப்பாலம் பார்த்தே ஆக வேண்டும் என்பதில் மிக ஆவலாய் இருந்தேன். ஆனால் குமரியும் மாத்தூரும் எதிரெதிர் திசையில் சுமார் 60கி.மீ தொலைவில்இருந்ததால் தொட்டிப்பாலம் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை. மேலும் தொட்டிப்பாலம் பார்க்கவேண்டிய இடம் என்றாலும் அதனை உங்கள் பயணத்திட்டத்தில் கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள், ஒருவேளை செல்வதாய் இருந்தால் இருட்டும்முன் சென்றுவாருங்கள். 

ந்த இடத்தில் ராஜி அக்கா கூறிய மற்றொரு முக்கியமான விஷயத்தை குறிபிட்டே ஆக வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த பயண திட்டத்தையும் தலைகீழாக்கியது அது ஒன்றுதான். சூர்யோதயத்தை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம், ஆனால் சூர்ய அஸ்தமனத்தை குமரியில் மட்டுமே காண முடியும், அதனால் குமரிக்கு காலையில் செல்வதை விட அஸ்தமனம் பார்க்கும் படி மாலையில் செல்வதே நலம் என்றார். அது உண்மை என்பது சூர்ய அஸ்தமனம் பார்க்கும் போது புரிந்தது.       

காரில் சுற்றுவதாய் இருந்தால் ஒரேநாளில் உங்களால் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும் அல்லது இரண்டு தினங்கள் குமரியில் தங்க முடியுமென்றால் பேருந்தில் கூட சுற்றிப்பார்க்கலாம். எந்த இடங்களெல்லாம் பார்க்க முடியுமோ அதையெல்லாம் பாப்போம், மற்றதை மறந்துவிடுவோம் என்பதை கஷ்டப்பட்டு எனக்குள் கூறிக்கொண்டு குமரி நோக்கிய பயணத்திற்கு என்னை நானே தயார் செய்துகொண்டேன். இந்த இடத்தில் தற்செயலாக நான் செய்த மற்றொரு மிக முக்கியமான விஷயம், மாலை நான்கு மணிக்கே சென்னையில் இருந்து நாகர்கோவிலை நோக்கிக் கிளம்பியதுதான். 

எனக்கு விபரம் தெரியும் முன்பிருந்தே என்னுடன் பயணிக்கத் தொடங்கிய என் சகாக்கள் 

பயணிப்போம்... 

மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் : இது என்னுடைய நூற்றிஐம்பதாவது பதிவு. தொடர்ந்து என்னை உற்சாகமாக எழுத வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

என்றும் நட்புடன் 
சீனு 

18 comments:

 1. நூற்றிஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா

   Delete
 2. கன்னியாகுமரி அருகில் இருக்கும் வட்டக்கோட்டையை மிஸ் பண்ணிட்டீங்களே நண்பா ? கே ஆர் விஜயனிடம் சொல்லி இருந்தால் அவரே உங்களை எல்லாம் எல்லா இடத்திற்கும் கூட்டி சென்று கைடிங் பண்ணி இருப்பாரே, இனி கன்னியாகுமரி சுற்றுலா போனால் கன்னியாகுமரி நண்பர்களிடம் ஆலோசனைகள் கேளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வட்டக் கோட்டை பற்றிய அடுத்த பதிவில் (ஆனால் நான் செல்லவில்லை அது வேறு விஷயம்).. பேஸ்புக்கில் ஒரு நிலைதகவல் கூட போட்டிருந்தேன் யாரும் பதில் அளிக்கவில்லை.. இனி போவதென்றால் உங்களைக் கேட்காமல் போக மாட்டேன் சரிதானா :-)))))

   Delete
 3. பதிவுகள் ஆயிரம் பத்தாயிரம் என தொடர வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மனோ அண்ணா

   Delete
 4. Replies
  1. வணக்கம்
   உலகம் சுற்றும் வாலிபனாகிற்றிங்கள்.. போல..... தங்களின் சுற்றுலாப் பயணம் இனிதாக அமையட்டும்.. தங்களின் வலைப்பூவில் பல பல ஆயிரம் பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்..

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   Delete
 5. sugar pongal
  வாழ்த்துக்கள்...
  subbu thatha
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
 6. வரப்போகும் 1500க்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. கன்னியாகுமாரி பயணம் தொடரட்டும் 150 இன்னும் பலகோடிதாண்ட என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. 150 வது பதிவுக்கு வாழ்த்துகள் சீனு.

  ReplyDelete
 9. 150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்... வழி காட்டிய சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி...

  ReplyDelete
 10. திருச்சியைத் தாண்டி தென்மாவட்டங்களுக்கு நான் இதுவரை சென்றதில்லை..இப்பதிவு உடனே போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது...நூற்றைம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா..

  ReplyDelete
 11. இந்த இடத்தில் ராஜி அக்கா கூறிய மற்றொரு முக்கியமான விஷயத்தை குறிபிட்டே ஆக வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த பயண திட்டத்தையும் தலைகீழாக்கியது அது ஒன்றுதான்
  >>
  பயணம் நல்லப்படியாய் அமைந்ததா!? இல்ல சொதப்பலா!!?? அக்காக்கு மாலையா? இல்ல கல்லெறியா!?

  ReplyDelete
 12. 150க்கு வாழ்த்துகள் சீனு.

  ReplyDelete
 13. வெற்றிகரமான 150க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. 150-வது பதிவிற்கு வாழ்த்துகள்....

  உங்களுடன் குமரியைக் காண நானும் வந்து கொண்டிருக்கிறேன். ராஜாக்கமங்கலம் தான் எனது பதிவில் ஈஸ்வரன் எனும் பெயரில் கருத்துகள் எழுதும் நண்பர் பத்மநாபன் உடைய ஊர்.

  ReplyDelete