25 Dec 2013

சீனு'ஸ் கிச்சன் - சுடுதண்ணீர் சமைப்பது எப்படி?

இணையப் பெருவெளியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஆவி'ஸ் கிச்சன் என்ற பதிவு கண்ணில் பட்டது, 'அட ஆவிகள் கூட கிச்சன் வைத்து நடத்தும் போது, மனிதர்களான நாம் ஏன் முயலக் கூடாது' என்ற பெருத்த வினா மண்டையிலே எழுந்ததன் விளைவே இப்பதிவு மற்றும் நம் மக்களுக்கு என்ன தெரியாது? நாம் என்ன கற்றுக்கொடுக்கலாம் என்று ஆழ்ந்து யோசித்தபோது கிடைத்த பதில் 'சுடுதண்ணீர் செய்வது எப்படி?' 

பெரும்பாலான மனிதர்களுக்கு சுடுதண்ணீர் செய்வது எப்படி? என்பது கூடத்தெரிவதில்லை.ஒன்று முறையான கொதிநிலையை கடப்பதற்கு முன்னரே அடுப்பை அணைத்து கடுப்பை ஏற்றுகிறார்கள் அல்லது பேஸ்புக்கில் லைக்ஸ் போடும் ஆர்வத்தில் தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்து அவதிப்படுகிறார்கள். இதற்கு வழியே கிடையாதா? இந்தத் தொல்லையில் இருந்து விமோசனமே கிடையாதா? என்று எண்ணுபவரா நீங்கள்! உங்களுக்காகவே இந்த பதிவு. ஏனென்றால் சீனு'ஸ் கிச்சனின் கடமை முறையாக வெந்நீர் போடுவது எப்படி? என்று கற்றுக்கொடுப்பதே. தேவையான பொருட்கள் 

அம்மா குடிநீர் - ஒரு புட்டி 

எரிவாயு அடுப்பு - உருளையில் எரிவாயு இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும்

ஒரு பெரிய பாத்திரம் - அண்டா அளவு வேண்டாம், குண்டா அளவு இருந்தால் போதும்

ஒரு பாதரசமானி - ஏன் என்று பின்பு சொல்கிறேன்

முக்கிய குறிப்புமேற்கூறிய பொருட்களில் ஒன்று குறைந்தாலும் வெந்நீர் தயாரிக்கும் முயற்சியை கைவிட்டுவிடுங்கள்.

எரிவிப்பானை எடுத்து அடுப்பைப் பற்ற வைக்கவும்***. குண்டாவை நன்றாக எரியும் அடுப்பின் மீது வைத்து நீரை மெல்ல ஊற்றவும், நீரை ஊற்றும் பொழுது நீர் அங்கும் இங்கும் சிதற வேண்டாம்****. தெளிந்த அந்த நீரை நன்றாக உற்று நோக்கிக் கொண்டே இருங்கள். சிறிது நேரத்தில் நீரினுள் இருந்து சின்னச் சின்ன நீர்க் குமிழிகள் வெளிவரத் தொடங்கும். அப்படியென்றால் நீர் மெல்ல சூடாகிக் கொண்டு உள்ளது என்று அர்த்தம். சிறிது நேரத்தில் நீர் 'ஆவி'யாகும், இதனை நீராவியாதல் என்று அறிவியல் குறிப்பிடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? - அந்தக்காலத்தில் அவ்வளவு பெரிய ரயிலையே நீராவி கொண்டுதான் இயக்கியுள்ளார்கள். அதனால் நம்முடைய கிச்சன் வெறும் கிச்சன் மட்டுமல்ல மாபெரும் பரிசோதனைக்கூடம்.

நீராவி வரத் தொடங்கியதும் உங்களிடம் இருக்கும் பாதரசமாணியை எடுத்து கொதிக்கும் நீரினுள் வையுங்கள். கவனமாக செயல்படுங்கள், நீரின் கொதிநிலை குறித்து சிறுவயதில் உங்கள் அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள், இப்போது மறந்திருக்கலாம். அதனால் நியாபகப்படுத்துகிறோம். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இதுவே காரணம் வெந்நீர் போட முயலும் பலரும் தவறு செய்யும் இடம் இதுதான்

பாதரசமானியில் நூறு டிகிரி செல்சியசை காண்பிக்கும் வரை மிகக் நுட்பமாக கவனிக்க வேண்டும், மற்றொரு விஷயம், கொதிக்க வைத்த குடிநீர் ஒரு சிறந்த மருத்துவ நிவாரணி. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் நுண்ணுயிர்த் தொல்லை அதிகமாகிவிட்ட காரணத்தால், குடிநீரை 100டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டியது அவசியமாகிறது.உங்கள் தோள்களில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுங்கள், நீங்கள் தயாரித்துக் கொண்டிருப்பது ஒரு அருமருந்து.   

சரி தட்டியது போதும், தெர்மா மீட்டரில் கவனம் கொள்ளுங்கள், கொதிநிலை நூறைத் தாண்டி விடப்போகிறது. நூறைத் தொட்டதும் உடனடியாக அடுப்பை அணைத்துவிட்டு, அருகில் கரித்துணி எதுவும் இருந்தால் அதுகொண்டு மெல்ல இறக்கி வைக்கவும், வெந்நீர் எப்படி தயாராகியிருக்கிறது என்று பதம் பார்க்கும் ஆர்வம் உங்களுக்கு எழலாம்  இருந்தும் நீரின் சூடு உங்கள் நாக்கை பதம் பார்த்துவிடாது இருக்க சூடு தணியும் வரை பொறுமையாக இருங்கள். 

சுடு தண்ணீரில் வைத்த பாதரசமாணியை வெளியில் எடுங்கள் என்று கிளிபிள்ளைக்குச் சொல்லித்தருவது போல் சொல்லிதரவெல்லாம் முடியாது. புரிகிறதா?

ம்ம்ம் இப்போது சூடான சுவையான வெந்நீர் தயார். நீங்க சாதிச்சிட்டீங்க, எஸ் யு டிட் எ கிரேட் ஜாப்.  

"நீரின்றி அமையாது உலகு' என்பது அய்யன் வள்ளுவன் மொழி  
"வெந்நீரின்றி அமையாது உணவு' என்பது அடியேன் சீனுவின் புதுமொழி . 

***உருளை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எரிவிப்பானை உபயோகம் செய்யுங்கள், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். பொதுநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன். 

****குடிநீர் சிக்கனம் தேவை இக்கணம். சமூகநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன்.  

சீனு'ஸ் கிச்சனில் அடுத்து வருவது 

பார்டரில் தீவிரவாதி சப்பாத்தி கூட சுடத்தெரியாமல் கஷ்டபடுவதால் அவருக்காக சப்பாத்தி சுடுவது எப்படி? காத்திருங்கள்... விரைவில்... 

படித்து விட்டீர்களா... 

49 comments:

 1. மிக மிக உபயோகமான தகவல். . .

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி, தங்கள் கருதுரையால் யாம் பெரிதும் உவகை அடைந்தோம் ...

   த.ம போடவில்லையே.... மறந்து விட்டீரோ :-)

   Delete
 2. அருமை அருமை பல புதிய விஷயங்கள் கற்றேன்,

  ReplyDelete
  Replies
  1. இது என்னங்க பெரிய விஷயம்... நாம கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.. இது ஆரம்பம் தானே.. makes it simple :-)

   Delete
 3. மிக மிக உபயோகமான தகவல். . .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆர்வம் புரிகிறது தோழர் :-) ஒருமுறை சொன்னாலே எனக்குப் புரியும் :-)))))))

   Delete
 4. அப்படியே இதை வீடியோ பதிவாக வெளியிட்டால் துப்ப சாரி கற்க வசதியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சிறந்த ஐடியா.. பரிசீலனையில் உள்ளது... சங்கம் இதனை கவனத்தில் கொல்லும்

   Delete
 5. த.ம என்றால் தலையில் மண்ணா??

  ஓகே. .ஓகே. .போட்டாச்சு

  ReplyDelete
  Replies
  1. //தலையில் மண்ணா??// அதைத் தான் தினமும் செய்கிறீரே..

   நல்ல வோட்டு வந்துவிட்டது.. கள்ள வோட்டை எல்லாம் அள்ளி வீசும்.. இப்பதிவு மகுடம் சூட வேண்டாமா ?

   Delete
  2. "நீர்-ஆவி " க்கு மகுடம் சூட்டாமல் விடமாட்டீர் போலிருக்கு?? ;-)

   Delete
 6. குளுருக்கு ஏத்த பதிவு, அப்படியே ஹாம்லெட் ...சாரி ஆம்லெட் போடுவது எப்படி ன்னு தெரிஞ்சிக்க ஆ. .வலா இருக்கோம்

  ReplyDelete
  Replies
  1. அது மிகவும் கஷ்டமான விஷயம் சார்.. ஆம்லெட்டை முறையான பயிற்சி இல்லாமல் கற்றுத் தர முடியாது.. எனவே கட்டணம் வசூலிக்கப்படும் :-)

   Delete
  2. கட்டணம் வசூலிக்கப்படும்....ஏற்கனவே சுடு தண்ணியா நா வெச்சு தர்ரேன்னு வீட்டமினிக்கு கிட்ட சொன்னது தப்பாயிட்டு... குண்டாவுக்கு பதில் அண்டா குடுத்திட்டாங்க... அதவே கொதிக்க வெச்சு முடியலா அடுத்தது இதா ? ஏன்னா அண்டான்னா இந்தீல முட்ட தானே !!

   Delete
 7. // உருளை அடுப்பை பற்ற வைக்கும்
  பொழுது //

  உருளை அடுப்புதான் வேனுமா? இந்த வெறகு அடுப்பு, கல்லு அடுப்பேல்லாம் கூடாதா??

  ReplyDelete
  Replies
  1. முக்கிய குறிப்பை போய் படியும்... நீர் எல்லாம் ஒரு வாத்தி.. வெட்கம் வேதனை அவமானம்

   Delete
 8. // உங்களுக்குத் தெரியுமா - அந்தக்காலத்தில்
  அவ்வளவு பெரிய
  ரயிலையே நீராவி கொண்டுதான்
  இயக்கியுள்ளார்கள்.///

  இதை ஒரு கல்வெட்டில் செதுக்கி உங்க ஆபிஸ் வாசலில் வச்சுட்டு பக்கத்துல உட்காந்துக்குங்க. உங்களுக்கு பின்பு வரும் சந்ததிகள் தெரிந்துகொல்லட்டும்.

  ReplyDelete
  Replies
  1. அடடே நான் எழுதிய வரிகளை என்டர் கவிதை ஆக்கிவிட்டீரே நீர் கவிஞரையா :-)

   Delete
 9. // இணையப் பெருவெளியில்
  மேய்ந்து கொண்டிருந்த போது. .//

  நீங்க வழக்கமா ஊர்தானே மேய்விங்க. . .????

  ReplyDelete
 10. வணக்கம்
  பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  ReplyDelete
 11. இவ்வளவு நாட்களாக வெந்நீர் வைப்பது எப்படி என்று மிகுந்த குழப்பத்தில் இருந்த என் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள். இதை நானும் முயற்சி செய்தேன். மிகுந்த சுவையாகவும் அற்புதமாகவும் இருந்தது. என் குடும்பத்தினரும் நண்பர்களும் சாப்பிட்டு பார்த்துவிட்டு இது புது வித டிஷ் ஆக இருக்கிறதே... இதை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என பாராட்டினர்...

  அடுத்ததாக அவிச்ச முட்டை செய்வது எப்படி என்று விரிவான பதிவிட்டு என் போன்றோரின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள் என நினைக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. இவரும் சேர்ந்து கலாய்க்கறாராமாம்!

   Delete
 12. எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லியிருக்கீங்க...

  ReplyDelete
 13. நல்ல வேளை போட்டிக்கு ஆண்ட்ரியா தண்ணி கொதிக்க வைக்கிற மாதிரி போடலையே.. அந்த விஷயத்துல கோட்டை விட்டுட்டே தம்பி.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ;-)

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. தங்கள் செய் முறை குறிப்புகள் ‘அராத்து கதை’ மாதிரியே ‘அட்டகாசமா’ இருக்கு!

  ReplyDelete
 16. எனக்கு ஒரு சந்தேகமுங்க...
  // குண்டாவை நன்றாக எரியும் அடுப்பின் மீது வைத்து...//
  இத எப்படிங்க கண்டுபிடிக்கிறது?
  உடனடியாக நீர்த்து... அட ச்சீ... தீர்த்து வைங்கப்பு.

  ReplyDelete
 17. அருமையான பதிவு! சீனு! இதுவரை எவரும் எழுதாத நிலையில் நீங்கள் முதலிடம் பெற்றுவிட்டீர்கள்! எனவே மதிப்பெண் போடாமல் போகலாமா! த ம 4

  ReplyDelete
 18. அருகில் கரித்துணி எதுவும் இருந்தால்
  >>
  எங்க வீட்டுல கரியில்லாம தான் துணி இருக்கு. என்ன செய்யலாம் சீனு!? சீக்கிரம் சொல்லுங்க அடுப்புல தண்ணி வச்சிருக்கேன்.

  ReplyDelete
 19. ஓட்டு போட்டாச்சு!

  ReplyDelete
 20. "ஆ.வி"க்க்கு போட்டியாக ஆவி (நீராவி) தயாரிக்கும் செயல்முறை விளக்கத்தை பதிவிட்டு விட்டீர்களே !.நல்லதொரு சமையல் + அறிவியல் + பொது அறிவுப் பதிவு :).

  ReplyDelete
 21. //***உருளை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எரிவிப்பானை உபயோகம் செய்யுங்கள், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.//
  :D
  //அம்மா குடிநீர் - ஒரு புட்டி //
  இந்த டிகிரி நீரை அரசு குடிநீர் புட்டியில் தான் அவசியம் செய்ய வேண்டுமோ !! :( எங்க ஊர்ல அது கிட்டவில்லை சகோ

  ReplyDelete
 22. தம்பி நீங்க நேரில் இந்நேரம் இருந்திருந்தால் கட்டி பிடித்து பாராட்ட வேண்டுமென்று பெருத்த அவா ... என்ன செய்ய ?

  ReplyDelete
 23. மாபெரும் பரிசோதனைக்கூடம்.// உண்மைதான் , இதில் சிக்கி இருக்கும் எலிகளாக நாங்கள் ... எங்களுக்கும் ஒரு காலம் வரும் பிரதர் ...

  ReplyDelete
 24. அம்மா குடிநீர் எங்கே கிடைக்கும்? டாஸ்மாக்கிலா?

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா.. அப்பா சார் இது தமிழகத்தில் தொடங்கபட்டிருக்கும் புதிய திட்டம்.. அம்மா குடிநீர், அனைத்து பேருந்து நிலையகள் மற்றும் நகரின் முக்கிய இடங்களிலும் கிடைக்கும். RS.10/-

   Delete
 25. அப்பாதுரை தெளிவாக இருக்கிறார்! :))))))))))

  ReplyDelete
 26. தில்லியில் அம்மா குடிநீர் கிடைக்காது சீனு.. சீக்கிரமாக இரண்டு பெட்டி அம்மா குடிநீர் தில்லிக்குப் பார்சல் ப்ளீஸ்.....

  முன்பு சேட்டை அண்ணா, சுடு தண்ணீர் வைப்பது எப்படின்னு ஒரு பதிவு எழுதியதாக நினைவு.......

  கலக்கல்!

  ReplyDelete
 27. என்னமோ கெமிஸ்ட்ரி லேபுக்குள்ள போயிட்டு வந்த மாதிரியே ஒரு ஃபீலிங்....

  ReplyDelete
 28. இந்த சுடுதண்ணீர் சமையல் குறிப்பை அனைவருக்கும் பதிவின் வழியே கற்றுக்கொடுத்ததால், உங்களுக்கு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்ப்பாக, "வாழ்நாள் சுடுதண்ணீர் சமையலாளர்" பட்டம் கொடுக்கிறோம்...வாழ்க..உமது பணி...வளர்க உமது தொண்டு..!

  ReplyDelete
 29. எங்கூட்டுல பாதரசமானி,கண்ணாடி பாத்திரம் இல்லைங்கோ....

  ReplyDelete
 30. வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி..

  மச்சி நீ கெளப்பி விட்ட புயல் ஓயாம அடிச்சு கிட்டு இருக்கு..

  ReplyDelete
 31. ஒரே நொடியில் சுடுதண்ணீர் சமைப்பது எப்படி?!

  தேவையான பொருட்கள்:
  ஒரு குண்டா சுடுதண்ணீர் (சூடாக)

  இப்போது சூடான சுவையான சுடுதண்ணீர் ரெடி! :)

  எமது அடுத்த பதிவு:
  சுடுதண்ணீரை குடிப்பது எப்படி?

  பதிவின் ட்ரைலர்:
  //குழாய் நீரை கையில் ஏந்தி குடிப்பது போல சுடுதண்ணீரை குடிக்க முயற்சிக்க வேண்டாம்!//

  ReplyDelete
 32. anna yaruney ithey motha motha kandu pudichithu

  ReplyDelete
 33. ஹாஹா ராஜி புண்ணியத்தில் இந்தப் பதிவைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..
  அடுப்பில் வைக்கக்கூடிய கண்ணாடிப் பாத்திரம் என்பதையும் பொதுநலன் கருதி சொல்லிவிடுங்கள் :)

  ReplyDelete