30 Sept 2013

சிறுகதை எழுதுவது எப்படி? - சிறுகதை

"எலேய் மக்கா நீ எழுதின கதை எல்லாத்தையும் இப்ப தான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்... ஆமா ஏன் திடீர்னு கத எழுத ஆரம்பிச்சிட்ட..." முதலியார் தெரு வழியாக பஜாருக்கு நடந்து கொண்டிருந்த பொழுது தான் நான் எழுதிய கதைகளைப் பற்றின பேச்சை ஆரம்பித்தான் குமார்.

அதிலும் என் நண்பனே என்னுடைய திடீர் வாசகனாக மாறியது என்னுள் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் நான் அதனை வெளிபடுத்தவில்லை அல்லது எப்படி வெளிபடுத்த வேண்டும் என்று தெரியவில்லை. 

"பொழுது போகலல.. அதான் எழுத ஆரம்பிச்சிட்டேன்..." 

"சொல்லுல ஏன் எழுத ஆரம்பிச்ச" அவன் விடுவதாயில்லை 

"அதான் சொன்னேம்லால பொழுது போகல, அதான்னு", அதற்கு மேல் என்ன சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை.  

"எனக்கும் பொழுது போக மாட்டேங்குது, எனக்கும் கத எழுத சொல்லித் தா"

"கத எழுதுறதுக்கு எவனாவது கிளாஸ் எடுப்பானா.. அதெல்லாம் சொல்லித் தர முடியாது...போல... சரி வேணும்னா உனக்கு சில டிப்ஸ் தாரேன் அத வச்சி கத எழுது என்ன" 

"ம்ம் சொல்லு சொல்லு" உற்சாகமாக தலையாட்டினான், அவனது திடீர் உற்சாகம் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்திப் போகவில்லை. ஒருவேளை என்னை கிண்டல் செய்கிறானோ என்று பார்த்தால், அப்ப்டியெல்லாம் ஒன்றும் இல்லை அவனிடம் இருந்தது நிஜமான ஆர்வம் தான்.      

"எந்த மாதிரியான கதை எழுதப் போற .. காதல் கதையா இல்லாட்டி காதல் மாதிரியான ஒண்ணா?"

எப்போது தென்காசி சென்றாலும் நானும் குமாரும் பஜார் வரை ஒருநடை போய் வருவது வழக்கம், அன்றும் அப்படி நடந்து செல்கையில் தான் சிறுகதை குறித்த எங்கள் பேச்சு ஆரம்பமாகியது. இடை இடையே தெரிந்த முகங்கள் கண்களில் படும் போதேல்லாம் குசலம் விசாரித்தார்கள்.  இந்த ஊரில் பலருக்கும் என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது, பாவம் எனக்குத் தான் சிலரை மறந்துவிட்டது. 

"மெட்ராஸ்க்கு போயும் ஆள் இன்னும் அப்டியேலாடே இருக்க.. குழந்த கனக்கா...", " உம் மொவம் மாறவே மாறாதா..? அப்டியேலா இருக்கு". என்னைச் சந்தித்த பெரும்பாலனவர்களும் என் மீது வைத்த குற்றச்சாட்டு உம் மொவம் மாறவே இல்லையேடே அப்டியேலா இருக்கு என்பதாகத் தான் இருந்தது. 

சட்டென குமாரிடம் கேட்டேன், "லேய் குமாரு, எம்முகம் என்ன மாறாமாலையா இருக்கு, மீசை தாடி எல்லாம் நிறைய வளந்த்ருக்கு தான.. அப்புறம் என்ன?' 

"எல்லாம் சரி டே ஆனா நீ வளந்தியா" கொஞ்சம் கூட வருத்தப்படமால் மிக அவசரமாக என்னை அசிங்கபடுத்தினான் என் பால்ய சிநேகிதன். அப்படியொரு பதிலைக் கேட்டு நான் கடுப்பாவதை உணர்ந்த மறுகணமே தன் பேச்சை மாத்தினான். " சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, நா ஒரு கத எழுதணும்... முடியுமா?... முடியாதா..? "

அந்தக் கணத்தில் இருந்து குமார் பேசிய எதுவுமே எனது காதில் விழவில்லை, எனது மொத்த கவனத்தையும் அந்த கருப்பு நிற பர்தா அணிந்த பெண் தன்னுடன் கடத்திச் சென்று கொண்டிருந்தாள், அவளையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன், எங்கோ எப்போதோ நன்றாக பழகியவள் என்று உள்ளுணர்வு கூறியது, அவளின் பெயர் பாத்திமாவாக் கூட இருக்கலாம், காரணம் இதோ என்னைக் கடந்து போகிறாளே இந்தப் பெண் இவள் மிகச் சத்தியமாக பாத்திமாவைத் தான் நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று பேசலாம் தான், இருந்தாலும் அவளுடைய முகம் கறுப்புத் துணியால் மறைக்கப்பட்டிருந்ததது. என்னுடைய உள்ளுணர்வை நம்பி முகம் தெரியாத ஒரு பெண்ணிடம் அடி வாங்குவதற்கு நான் தயாராயில்லை. அந்த அழகிய பர்தா ஒரு சிறுவனின் கரங்களைப் பற்றிக் கொண்டு பூமி அதிரா வண்ணம் நடை பழகிக் கொண்டிருந்தாள், யாருக்குத் தெரியும் அது அவளுடைய குழந்தையாகக் கூட இருக்கலாம். அவளது குழந்தை என்ற நினைவு வந்ததுமே என் சிந்தனை முழுவதையும் கலைத்திருந்தேன். அதே நேரம் பாத்திமாவிற்கு கல்யாணம் முடிந்திருக்கும் என்ற எண்ணத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  

"எலேய் கல்யாணமான புள்ளையப் போய் சைட் அடிக்கியே உனக்கு வெக்கமா இல்லையால லூசுப்பயல?" 

"நான் எங்க சைட் அடிச்சேன், யாரோ தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கேன்னு பார்த்துட்டு இருந்தேன்" என் முகத்தில் நிச்சயம் அசடு வழிந்திருக்க வேண்டும். 

"ஹெக்ஹே உங்கதைய இந்த ஊரு வேணா நம்பும் டே, ஆனா நான் நம்ப மாட்டேன்..சரி அத விடு.. இப்ப நம்ம கதைக்கு வா"

"கத எழுதுறது ஒன்னும் கஷ்டமான விஷயம் இல்லல, ஒரு கதைக்கான ஆரம்பம் அல்லது முடிவு எந்த நிமிஷம் வேணும்னாலும் கிடைக்கலாம். இத பத்தி பேமஸான ஒரு QUOTE உண்டு. 'ஒரு சிறுகதை தன்னுடைய முடிவில் இருந்தே ஆரம்பத்தை நோக்கி நகருகிறது'. பெரும்பாலான கதாசிரியர்கள் 'இது தான் முடிவா இருக்கணும்'னு முடிவு பண்ணிட்டுத் தான் கத எழுத ஆரம்பிக்கிறாங்க. அதுக்காக எல்லாருமே அப்படிதான்னும் சொல்ல முடியாது, நான்லா ஒரு கதைக்கு ரெண்டு மூணு முடிவு யோசிப்பேன், எது புடிச்சிருக்கோ அத தான் வைப்பேன்.. இதோ இப்ப எழுதிட்டு இருக்கனே இந்த கத மொதக் கொண்டு... ஆனா உனக்கு நான் சொல்லப் போற மொத டிப்ஸ் கதையோட கிளைமாக்ஸ மொதல்ல திங்க் பண்ணு கரு ஆட்டோமேட்டிக்கா கிடைக்கும்"

"இன்னும் கொஞ்சம்  புரியிற மாதிரி சொல்லேன்"

"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பர்தா போட்ருந்த பொண்ணு நம்மள கிராஸ் பண்ணிப் போச்சு பாத்தியா..."

"பார்த்தேன்...பார்த்தேன்..அதையும் பார்த்தேன்.. நீ அத சைட் அடிச்சதையும் பார்த்தேன்"

"கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு போதும் "

"ஆமா பார்த்தேன்"

"அந்த புள்ள நம்ம கூட படிச்ச பார்த்திமா மாதிரியே இல்ல"

"இல்ல"      

"உனக்கு அடையாளம் தெரியலன்னு சொல்லு அதுக்காக இல்லன்னு சொல்லாத"

"அவளே மொகத்த மூடி இருந்தா... அப்புறம் எப்டி அடையாளம் தெரியும்"

"சரி அந்த பொண்ணு உனக்கு யாருன்னே தெரிய வேணாம், நம்மோளட கதைய பாத்திமாட்ட இருந்து ஆரம்பிப்போம்"

"சரி சொல்லு"

"நம்ம கூட படிச்சதுலையே பாத்திமா தான் சூப்பர் பிகர், அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போது நீ அவளோட அழகுல மயங்குற லவ் பண்ற   "

"என்னது அஞ்சாப்புளையே லவ்வா, அதுவும் ஒரு முஸ்லீம் பொண்ண..."

"அது அதுங்க ஒண்ணாப்புலையே லவ் பண்ணுதுங்க, அஞ்சாப்பு தான... பிராப்ளம் இல்ல..  பண்ணு, அப்புறம் நீ ஒரு இந்து, நீ லவ் பண்ற பொண்ணும் இந்துனா அதுல சுவாரசியம் இருக்காது. அதுநாள உன் லவ்வர் ஒரு முஸ்லீம்"

"எலேய் அரஞ்சம்ணா.. இந்த கத ஏற்கனவே பம்பாய் படத்துல வந்துருச்சு, குமாருக்கு காது குத்தலன்னு நினச்சியா..."

"அப்போ பம்பாய்க்கு முன்னாடியும் பின்னாடியும் ஒருத்தனும் முஸ்லீம் பொண்ண காதலிக்கல கல்யாணம் பண்ணல அப்படித் தான"

"அப்டி இல்ல 

"அப்போ ஒழுங்கா மரியாதையா பாத்திமாவ லவ் பண்ணித்தொல"

"தொலைக்கிறேன் மேல சொல்லு" "கொஞ்சம் கொஞ்சமா பாத்திமாவ லவ் பண்ண ஆரம்பிக்கிற, கிளாஸ்ல அவ பண்ற குறும்புத்தனம், வால்த்தனம் சேட்டை எல்லாமே உன்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுது, அவ கூட பேசுறதுக்கு நூல் விடுறதுக்கு நீ எவ்ளவோ ட்ரை பண்ற ஆனா அவ உன்ன கண்டுக்கதே இல்ல... அப்றமா தான் தெரியுது அவ சும்மா உன்னைய கண்டுக்காத மாதிரி நடிக்கிறா அவளுக்கும் உன் மேல லவ் இருக்குன்னு . இப்போ அவள நினைச்சு நீ எழுதுற ஒரு காதல் கவித உன் கதைல வரணும்.. அதுதான் ஹைலைட்டா இருக்கணும். 

பருவமடையும் முன்னமே 
காதல் பருவத்திற்குள் தள்ளியவளே  
அன்பே பாத்திமா
பர்தா அணிந்தாலும் 
நீதாணடி என் அமராவதிகூரிய விழிகளால் 
காதல் கூறியவளே 
அன்பே பாத்திமா 
உனக்ககாகத் துடிக்கும் இதயத்தைக் 
கொஞ்சம் எனக்காகவும் துடிக்கச் சொல் 

"எலேய் எலேய் நிறுத்து நிறுத்து... இத நீ இந்தக் கதைக்காக எழுதின மாதிரி தெரியலையே.. அல்ரெடி பாத்திமாக்காக எழுதிவச்ச மாதிரிலா இருக்கு" 

ஏனோ தெரியவில்லை அந்த வார்த்தை என்னை அதிகமாக கோபப்படுத்தியது, "இப்ப உனக்கு டிப்ஸ் வேணுமா வேணாமா?"  கோபத்தில் கத்தினேன். 

"ஏ... ஏ... ஏ... கோவப்படாத மக்கா... சொல்லு சொல்லு"

"நம்ம கதப்படி இப்ப பாத்திமாவும் உன்ன சைட் அடிக்க ஆரம்பிக்கிறா... நீ போம்போதும் வரும்போதும் ஓரக்கண்ணாலையே லுக் விடுறா. இந்த இடத்துல ஒரு டயலாக் எழுதுற, அத படிச்சிட்டு பார்த்திமா சொக்குறாலோ இல்லையோ நம்ம கதைய படிக்கிறவங்க அத்தன பேரும் சொக்கிரணும்"

"ம்ம்ம்ம் அது என்ன டயலாக் சொல்லு "  

ஓரக்கண்பார்வை என் மீது படும்போதெல்லாம் ஒரு தேவகுமாரனைப் போல் உணர்கிறேன். அன்பே என்னுடைய மனம் உன்னிடத்தில் நிலைக்கொள்ளாமல் அவசரஅவசரமாக ஒரு நிலைக்கண்ணாடியைத் தேடித் தவிக்கின்றன... காதலியே உன் ஓரக்கண்கள் ரசித்த என்னழகை நானும் ரசிக்க வேண்டுமென்று"

"செம டயலாக்ல அப்புறம்"

"இப்டி பார்வையாலையே காதல் பரிமாறுற நேரத்துல தான் வைக்கணும் ஒரு ட்விஸ்ட்"

"என்னது ட்விஸ்ட்டா"

"ஆமா பின்ன ட்விஸ்ட் இல்லாம ஒரு கதையா"

"என்ன ட்விஸ்ட்"

பஜாரில் வாங்க வேண்டிய பொருட்களைக் வாங்கிமுடித்து வந்தவழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை மெதுவாக மயங்கிக் கொண்டிருந்தது. 

"என்ன ட்விஸ்ட்டு டே சீக்கிரம் சொல்லு"

"நம்ம ஸ்கூல்ல இருந்து பாத்திமாவ மிக்கேல்-ஸ்கூலுக்கு மாத்திருதாங்க"

"ஏம்ல தேவையே இல்லாம அவள ஸ்கூல் மாத்தணும்"

"ஏன்னா நம்ம ஸ்கூல்ல அஞ்சாப்பு வர தான் பொண்ணுங்களுக்கு, அதுனால அவள மாத்திட்டாங்க"

"சோ எங்களைப் பிரிக்கப் போற "

" அதான மக்கா ட்விஸ்ட்டே"

"சரி மேல சொல்லு "

"வேற ஸ்கூல்க்கு மாறினதும், உன்னால அவள அடிக்கடி பார்க்க முடியல, அப்டியே அவளப் பார்த்தாலும் பேச முடியல, கொஞ்ச நாள்ல நீ யாருன்னே தெரியாத அளவுக்கு அவ உன்ன மறந்துருத்தா..."

"கதையில லாஜிக்கே இல்லையே, அவ ஏண்டே என்ன மறக்கணும்"

"ஏன்னா அவ பெரிய பொண்ணாயிட்டா"

"அதெப்படி பெரிய பொண்ணாணா"

"தம்பி இது காதல் கதை. 18+ கதை கிடையாது அதுனால அவ எப்படி பெரியவளானான்னுலா விளக்க முடியாது.. "

"போல சுத்தமா புரியல"

"பெரியவளாகுறதுனா ஏஜ் அட்டென் பண்றதுன்னு அர்த்தம்.. இப்பயாது புரிஞ்சதா.. அவ பெரியவளானது மெச்சுரிட்டி வந்த்ருச்சு..அதுனால உன்ன மறந்துட்டா "

"ம்ம்ம்ம் புரிஞ்சது புரிஞ்சது.. ஆனா காதலுக்கு ஏதுடே மெச்சுரிட்டி .. மேல சொல்லு அப்புறம் என்ன..."

"அப்புறம் படிப்பு காலேஜ் சென்னை வேலைன்னு நீ பிஸியாயிட்ட.. "

"அதாது அவள நானும் மறந்துட்டேன்னு எழுத சொல்ற... இதெல்லாம் ஒரு கத த்தூ.. சரி கிளைமேக்ஸ சொல்லு.. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆச்சா ஆவலையா?"

"கிளைமேக்ஸ் இப்படி எழுது... ரொம்பநாள் கழிச்சு ஊருக்கு வந்த நீ, என்கூட மொக்க போட்டுட்டே பஜாருக்கு நடந்து போற, அந்தநேரம் கையில ஒரு சின்ன பையன புடிச்சிட்டு நடந்துபோற ஒரு பர்தா உன்ன கிராஸ் பண்ணுது, ஒருவேள அவ பாத்திமாவா இருக்குமோன்னு நீ யோசிக்கும் போதே அவ கூட இருக்க அந்த பையன் உன்ன அண்ணான்னு கூப்பிடுறான் அவன் ஏன் உன்ன கூப்பிடறான்னு உனக்கு ஒரு குழப்பம். தயகத்தோட அவன் பக்கத்துல போற, அந்த பொண்ண பாக்குறே.. உன் மனசுக்குள்ள ஆயிரம் மின்னல் வெட்டுது, கூடவே ஆயிரம் கேள்விகளும், அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்கக் கூடாதுன்னு உன் இதயம் தவியா தவிக்குது, உன் மீதான காதல் அவளுக்கு இன்னும் இருக்கணும்ன்னு திங் பண்ணுது.. ஆனா அந்தப் பொண்ண பக்கதுல போய் பாக்கும் போது தான் தெரியுது அது பாத்திமாவே இல்ல வேற எவளோன்னு.சோ நீ சோகமா சோலோவா நடக்க ஆரம்பிக்கிற.. இது தான் நம்ம லாஸ்ட் டயலாக்  மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக..." குமாரிடம் கதையைச் சொல்லிக் கொண்டே முதலியார்த் தெருவினுள் நுழையத் தொடங்கிருந்தோம். 

"அண்ணா..." நிஜமாகவே ஒரு சிறுவனின் குரல், குமாருக்கு நான் கூறிய பாத்திமா கதையில் வந்த சிறுவனின் குரல் அல்ல இது, என் எதிரில் நின்று கொண்டிருந்த நிஜ சிறுவனின் நிஜக்குரல், அந்த சிறுவனின் இடது கையை ஒரு பர்தாவின் வலது கை பற்றியிருந்ததையும் கவனிக்கத் தவறவில்லை.

"நல்லா இருக்கியா டே"

"நல்ல இனிமையான குரல், ஆனால் பழக்கமில்லாத புது குரல்.. ஒரு பெண்ணின் குரல்", குமாரைக் கவனித்தேன் அவனும் தனக்குத் தெரியாது என்பது போல் சைகை செய்தான்.

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. முகத்தின் மீது அவளணிந்திருந்த முகமூடியைத் தாண்டி அவளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாயிருந்தது... 

"நல்லா இருக்கியா டே" மீண்டும் அதே இனிமையான குரல் என் மவுனத்தைக் கலைத்தது 

"ஹி ஹி ஹி நல்லா இருக்கேன் நீங்க" அவளை அடையாளம் காணத்தெரியாமல் வழிந்து கொண்டுள்ளேன் என்பது மட்டும் புரிந்தது.

"இப்ப எங்க இருக்க, என்ன பண்ற, ஆனா நல்லா வளந்துட்ட" என்னிடமிருந்து பதில் எதையும் எதிர்பாராமல் தன்னிடமிருந்த கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள்.  

"நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், என்னைய மறந்துட்டியோடே...ஆமா உனக்கு கல்யாணம் ஆயிட்டா"

"சென்னையில இருக்கேன், இல்ல இன்னும் ஆவல, இது யாரு உன் மகனா, அழகா இருக்கான்...என்ன பேரு" கோர்வையில்லாமல் வந்து விழுந்த  வார்த்தைகள் அவளது அன்யோன்யத்தை என் மனம் வெறுக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது, அங்கிருந்து அவசரமாக மிக அவசரமாக நழுவ முயன்றேன்.

"என்ன பார்த்தா கல்யாணம் ஆன பொம்பள மாதிரியா இருக்கு, இது எங்கக்கா மவனாக்கும்.." என்றபடி தன் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த தனது பர்தாவின் முகமூடியை முதல்முறையாக விலக்கினாள், அதே கூரிய கரிய விழிகள், கார்மேகம் மறைத்திருந்த வட்ட நிலா போல் இத்தனை நேரம் மறைந்திருந்து ஒளி வீசிகொண்டிருந்த முகம், அந்தத் துணி விலகியதும் இன்னும் பிரகாசமாய் முழு நிலவாய் ஒளி வீசத்தொடங்கியது. அவள் தான் அவளே தான், என்னையும் அறியாமல் என்னுள் அமிழ்ந்திருந்த நினைவலைகள் பொங்கிப் பிரவாகம் எடுத்துக் கொண்டிருந்தன...

கூரிய விழிகளால் 
காதல் கூறியவளே 
அன்பே பாத்திமா 
உனக்ககாகத் துடிக்கும் இதயத்தைக் 
கொஞ்சும் எனக்காகவும் துடிக்கச் சொல் 

மவுனம் மவுனம்.. என்னை மட்டும் சூழ்ந்திருந்த திடீர் மவுனம்.. பார்த்திமாவைப் பார்த்த மகிழ்ச்சியில் இந்தச் சிறிய உலகமும் என் பெரிய இதயத்துடன் சேர்ந்து துள்ளுவது போன்ற பிரமை... மீண்டும் என் மவுனத்தைக் கலைத்தாள் பார்த்திமா 

"யே முஸ்தபா  என்னைய மறந்துட்டியோடே ... நான்தான் உன்கூடப் படிச்ச பாத்திமா.." எங்கள் கண்களின் அருகில் நீர்த்துளிகள் காதலாகி கசிந்துருகக் காத்துக்கொண்டிருந்தன... 

மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக...   

52 comments:

 1. சிறுகதை எழுதுவது எப்படி? இந்தத் தலைப்பை எழுத்தாளர் சுஜாதாவும் தனது சிறுகதைக்கு தலைப்பாக வைத்துள்ளார் என்று தெரியும்... இருந்தாலும் இந்தக் கதைக்கு இதைத்தவிர வேறு எந்தத் தலைப்பையும் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் 'சிறுகதை எழுதுவது எப்படி' தலைப்பாக வைத்துவிட்டேன் ...

  ReplyDelete
  Replies

  1. அன்பே பாத்திமா .. சுமார் மூஞ்சி குமாரு.. வீதியில் பார்த்த வெண்ணிலா.. சிறுகதை சீரான கதை இப்படி ஏதாவது ஒரு டைட்டில் வைத்திருக்கலாமே..

   Delete
  2. அன்பே பாத்திமா கூட திங் பண்ணினேன்... பட் இருந்தாலும் இந்தக் கதைக்கு இதைத்தவிர வேறு எந்தத் தலைப்பையும் என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் 'சிறுகதை எழுதுவது எப்படி' தலைப்பாக வைத்துவிட்டேன் ... :-)

   Delete
  3. //சிறுகதை எழுதுவது எப்படி? //

   அட ... சமீபத்தில்தான் சுஜாதாவின் அந்தச் சிறுகதை படிச்சேன்.

   Delete
 2. காதலில் கசிந்துருகும் பாத்திமா பாடல்கள் மலையாளத்தில் கேட்பதுண்டு, அது இங்கே கவிதையாக....

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு மிக்க நன்றி மனோ அண்ணா

   Delete
 3. பர்தா அணிந்தாலும் நீதான்டி அம்பிகாபதி(?) எலேய் சீனு... அது அமராவதி லேய்! சைட் அடிச்ச 'மப்பு'ல மாத்தி எழுதிட்டியோ?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. வாத்தியாரே, நானும் அதை கண்டிபிடுச்சு கொட்டிபிட்டேன் தலையிலே..

   Delete
  2. ஹா ஹா ஹா நமக்கு கவிதையே எழுத வராது வாத்தியாரே.. கதைய கூட சீக்கிரம் எழுதிட்டேன் இந்தக் கவிதைய எழுத தான் ரொம்ப நேரம் யோசிச்சேன், நல்ல தூக்கம் கொடுத்த போதையில எழுதின 'வஸ்து' அது

   Delete
 4. முடிவு சூப்பர்! நிஜம் சார்ந்தாற்போல நிழற்கதை எழுதும் போது இப்படி கச்சிதமாக முடிக்கிறது பெரிய ப்ளஸ்! அசத்திட்டே சீனு!

  ReplyDelete
  Replies
  1. "நீ கவிஞன் டா" ன்னு கட்டியணைத்துக் கொள்ள விரும்பினேன்.. (Courtesy: ஜீவன் சுப்பு)

   Delete
  2. மிக்க நன்றி வாத்தியாரே.. முடிவுல வரவேண்டிய பெயர் சீனுவ முஸ்தபாவா நடைபெற்ற போராட்டத்துல முஸ்தபாக்கு அந்த வாய்ப்ப விட்டுகொடுத்துட்டேன் :-)

   Delete
  3. @ ஆவி - ஜீவன்சுப்பு கட்டிபிடி வைத்தியம் பத்தி என்கிட்டே ஒன்னு சொன்னாரு.. ஆனா அத ஆவிகள் கிட்ட சொல்லகூடாதுன்னு மிரட்டியும் இருக்காரு

   Delete
 5. நல்ல கதை. ரசித்தேன் சீனு....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட் ஸார்

   Delete
 6. //காதல் கதையா இல்லாட்டி காதல் மாதிரியான ஒண்ணா?"//

  இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கொஞ்சம் விம் போட்டு விளக்கவும்..

  ReplyDelete
  Replies
  1. //காதல் கதையா இல்லாட்டி காதல் மாதிரியான ஒண்ணா?"//

   இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு கொஞ்சம் விம் போட்டு விளக்கவும்..

   ஹா ஹா ஹா நிஜ உலகில் தான் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை நிழல் உலகில் ஆயிரம் வித்தியாசம்... :-) காதல் மாதிரியான ஒன்று சைட் அடிப்பதன் அடுத்த நிலை ஒருதலைக் காதல் மற்றும் காதலின் முந்தைய நிலை...

   விம் இல்லை சபீனாவும் போட்டுள்ளேன் விளங்காட்டா தேங்கா நார் போட்டு தான் அந்த மண்டைய தேய்க்கணும் :-)

   Delete
 7. ///கொஞ்சம் கூட வருத்தப்படமால் மிக அவசரமாக என்னை அசிங்கபடுத்தினான் என் பால்ய சிநேகிதன்//

  ஹஹஹா.. நண்பேண்டா..

  ReplyDelete
 8. // யாரோ தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கேன்னு பார்த்துட்டு இருந்தேன்"//

  சும்மா பேசிகிட்டு இருந்தேன் மாமா ங்கிற மாதிரியே சொல்றீங்க..

  ReplyDelete
  Replies
  1. முக்காலமும் அறிந்த திரிகால ஆவி அய்யா நீர்

   Delete
 9. //"அந்த புள்ள நம்ம கூட படிச்ச பாத்திமா மாதிரியே இல்ல"/

  எப்படி கேட்டாலும் பயபுள்ள சொல்ல மாட்டீங்கறானே

  ReplyDelete
 10. //பர்தா அணிந்தாலும்
  நீதாணடி என் அம்பிகாபதி//

  அம்பிகாபதி ஆண் ஆச்சே?? பாடலில் பொருட்பிழை உள்ளது..செல்லாது செல்லாது.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ... விட மாட்டிங்களே !

   Delete
 11. //ஆனா நல்லா வளந்துட்ட//

  ஒரு காதலிக்கு தான் தெரியும் மீசை தாடி வளர்ச்சியில் சேர்ந்ததென்று..

  ReplyDelete
 12. //மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக... //

  ஹஹஹா.. இப்போ இது போருத்தமாயிட்டு..

  ReplyDelete
  Replies
  1. //மவுனத்தின் சாட்சியான குமார் தனது வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தான் தனியாக... // மொதல்லையும் பொருத்தமா தான் இருந்தது

   காரணம் அது பாத்திமா இல்லன்னு தெரிஞ்சதும் ஒருவித சோகத்துல தனிமையில குமார் நடந்து போற மாதிரி எழுதினேன், கதையின் நீளம் பொருத்து நிறைய எடிட் பண்ணினதுல அது எல்லாம் ஸ்வாக ஆயிருச்சு..

   இதெல்லாம் ஒரு குறியீடு அய்யா இதுக்காக நான் கோனார் நோட்ஸ்லாம் எழுத முடியாது

   Delete
 13. "அவ மறந்துட்டாடே.." ன்னு குமார் சொல்லிட்டு தெருவுல கதறி கதறி அழற மாதிரி முடிச்சிருக்கலாம். நம்ம விழுந்தா சர்ட் கசங்கிடுமில்லே..

  ReplyDelete
 14. கதை சொல்வது போல் சொல்லி அதை நிஜமாக கொண்டு சென்று... அசத்தல்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 15. சுறுகதை எழுதுவதென்பது தனிக்கலை, நன்றாகவே வருகிறது... இதை இரண்டாவது மூண்றாவது முறை படிக்கும்போது இன்னும் சுவாரஸ்யம்... வாழ்த்துக்கள் சீனு...

  ReplyDelete
  Replies

  1. //சுறுகதை// மீண்டும் ஸ்.பை. ... சங்கம் கவனிக்க ...

   Delete
  2. ஸ்பை தமிழுக்கு ஆயிரம் வார்த்தைகள் பெற்றுத் தருவதில் சுறுசுறுப்பாய் இருக்கும் இஸ்கூலே நீர் வாழ்க உம் குலம் வாழ்க :-))))))

   Delete
 16. கதை எழுத கற்றுக்கொடுக்கும் கதை..!

  ReplyDelete
 17. சுவாரசியமா இருக்கு சிறுகதை. ஆனா, உள்குத்து ஏதும் இதுல இல்லியே!!

  ReplyDelete
  Replies
  1. சந்த்தியமா எந்த உள்குத்தும் இலீங்கக்கா... இப்படி ஒரு சந்தேகம் வரக் கூடாதுன்னு முஸ்தபவா வாண்டடா கோர்த்துவிட்டேன் :-))))))))

   Delete
 18. //நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன், என்னைய மறந்துட்டியோடே...ஆமா உனக்கு கல்யாணம் ஆயிட்டா"

  "சென்னையில இருக்கேன், இல்ல இன்னும் ஆவல,//

  இந்த வரிகளில், யாருக்கோ சீனு குறிப்பால் ஏதோ சொல்ல வருவது போல் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நேரா உணர்த்தியே கண்டுகலையாம் இதுல குறியீடு வேறவா... ஹெக்கே நாங்கலாம் படு உசாராக்கும் :-)))))))

   Delete
 19. கதையும் சூப்பர்! கவிதையும் சூப்பர்! கடைசியில் ட்விஸ்ட் ரொம்பவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. எப்படி எழுதுவது என்று இப்படியும் எழுதலாமோ.? வித்தியாசமாக.. சூப்பர்! ஆனா குமாரு பாவம்...

  ReplyDelete
 21. முஸ்தபா வேலையில் இல்லாம வெட்டிப்பயலா சுத்திக்கிட்டு இருந்தாருன்னா,பாத்திமா பாத்து பேசுமா?? ஆசிரியரே!!!

  ReplyDelete
 22. பொறுமையா இப்பத்தான் படிச்சேன்....செமையா புகுந்து விளையாடியிருக்கீங்க சீனு... சினிமாவில திரைக்கதையில டிவிஸ்ட் வைக்கிற மாதிரி விறுவிறுப்பா இருக்கு .. அதிலும் நெல்லைத் தமிழ் செம

  ReplyDelete
 23. சுஜாதா ஒரு தடவை சொல்லியிருந்தார் . முதல் வரியிலேயே மொத்தமா போட்டு உடைச்சிரனும் .... பொழுது பொல பொலவென விடிந்தது போன்ற தேவையில்லாத வர்ணனைக் கூடாது ...இதெல்லாம் இப்போ ஞாபகம் வருது ..

  பெரிய பதிவு என்றாலும் படிக்க ஆர்வமா இருந்தது.

  ReplyDelete
 24. பயபுள்ள தென்காசிக்கு போய்ருக்கான்னு தெரிஞ்சதுமே கொஞ்சம் கலவரமாத்தான் இருந்துச்சு .... ! நல்ல வேளை , ஒரே நாள்ல திரும்பிட்ட.... நீ ரெம்ப ரெம்ப நல்லவேன்ப்பா ....!

  ReplyDelete
 25. திருவள(ர்)ராத செல்வன் தி.கொ.போ.சீ க்கு ஓர் அன்பான வேண்டுகோள் ....! சிறுகதை எழுதுவது எப்படிங்குற மாதிரியே ... சிறுகதை வாசிப்பது எப்படி , புரிந்து கொள்வது எப்படின்னும் ஒரு சிறு கதை எழுதப்பா ...! என்ன மாதிரி ஆள்களுக்கு உதவியா இருக்கும் ....!

  ReplyDelete
 26. ஜீவன்சுப்பு சொல்வது..:)

  ReplyDelete
 27. கடைசி ட்விஸ்ட் எதிர்பார்க்கவே இல்லை.கலக்கீட்டீங்க பாஸ்

  ReplyDelete
 28. சிறுகதை எப்படி எழுதுவது என்று சொல்ல ஆரம்பித்து, நிஜமான கதையாக முடித்து, உண்மை எது, நிஜம் எது என்று தெரியாமல் குழம்ப வைத்துவிட்டீர்களே!
  கதைக்குள் கதையாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள், சீனு!
  ஆவி வரிக்கு வரி படித்து விமரிசித்திருப்பது நன்றாக இருக்கிறது.

  ReplyDelete