6 Sept 2013

பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன ?

பதிவர் சந்திப்பு மண்டபம் : 

கடந்த பதிவர் சந்திப்பின் பொழுது மண்டபத்திற்கான செலவை முழுவதுமாக மக்கள் சந்தை அமைப்பினர் ஏற்றுக் கொண்டனர், சென்ற ஆண்டு மண்டபத்திற்காக ஆன செலவு முப்பதாயிரம் ரூபாய், ஒட்டு மொத்த செலவுகளில் கணிசமான ஒரு தொகை. 

மேலும் கடந்த வருடம் மண்டபம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மண்டபத்தில் போதிய இடவசதி இல்லை, பயங்கர நெருக்கடியாய் இருந்தது, சின்ன மண்டபம் என்பதால் எதிரொலி படுபயங்கரமாய் இருந்தது, மேடையில் ஏறி பேசிய ஒருவரது பேச்சும் தெளிவாக அதேநேரம் சுத்தமாக கேட்கவில்லை. மண்டபம் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்ததால் கண்டுபிடிக்க சிரமமாய் இருந்தது...

அளவில் சிறிய, கொஞ்சம் உள்ளே தள்ளியிருந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே முப்பதாயிரம் ரூபாய், இதைவிட பெரிய அதே நேரம் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் மண்டபம் பிடிப்பது என்றால் மிகவும் சிரமம், ஒருவேளை அப்படி அமைந்தாலும் சந்திப்புக்காக கிடைக்கும் நிதி அனைத்தும் அதற்கு மட்டுமே செலவாகியிருக்கும். 

சென்னை போன்ற மாநகரம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை நமக்குப் பிடித்த அல்லது நமக்கு ஏற்ற மண்டபம் கிடைப்பதென்பது.  

மேற்கூறிய சவால்களை சமாளித்து ஒரு மண்டபம் தேடிபிடிக்க வேண்டும் அதே நேரத்தில் பட்ஜெட் கையைக் கடிக்கக் கூடாது, தற்செயலாய் திரையிசைக் கலைஞர்கள் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு விழாக்குழுவினர் செல்ல ஏன் இதை விசாரித்துப் பார்க்கக் கூடாது என்று விசாரிக்க, கடந்த முறை நாம் சந்தித்த அத்தனை சவால்களுக்கும் விடை கிடைக்க உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டு அதன் பின் சந்திப்பிற்கான தேதியும் குறிக்கப்பட்டது.

மிக முக்கியமான விஷயம் மண்டபம் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தேதி குறிப்பிடப்படவில்லை என்பது தான். விசாலமான இடம், கடந்த வருடம் போன்ற நெருக்கடியான மேடை இல்லாமல், தாராளமான மேடை அமைப்பு, மாநகரின் முக்கிய பகுதியான வடபழனி பேருந்துநிலையம் அருகில், மண்டப வாடகை பத்தாயிரம் ரூபாய் விசாலமான பார்க்கிங் வசதியுடன். இத்தனை பிளஸ்கள் இருந்ததால் தான் உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டது. 

எல்லாம் இருந்தும் ஒரு குறை மண்டபத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட் ஆகிப்போனது தான். ஆகஸ்டு -  செப்டம்பர் மாதம் என்பதால் ஓரளவேனும் குளிர்ச்சி நிலவும் சமாளித்து விடலாம் என்றொரு நம்பிக்கை இருந்தது, ஆனால் அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. ஒருநாள் முழுவதும் பதிவர்கள் எப்படி அமர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. இந்நேரத்தில் உடனடியாக செயல்பட்டது உண்மைத்தமிழன் தான், தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் உடனடியாக நான்கு பெரிய பெடஸ்ட்ரைல் மின்விசிறி ஏற்பாடு செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தார், இருந்தும் பதிவர்கள் ஒட்டுமொத்தமாக வெக்கையை உணர்ந்தது மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான்.

சற்றும் எதிர்பாராது நேர்ந்த இப்படியொரு அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இனிவரபோகும் பதிவர் சந்திப்பில் மண்டப விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பது நமக்கு விடப்பட்டிருக்கும் முக்கியமான சவால். 

இருந்தும் பெரும்பாலான பதிவர்கள் நிலைமையை உணர்ந்துகொண்டு அல்லது பொறுத்துக்கொண்டு பதிவர் சந்திப்பில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொண்டனர் என்பதை அன்றைய தின நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. 

சந்திப்புக்கு வந்த பதிவர்களிடம் சென்று வெக்கையடித்ததா, புழுங்கியதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்வார்கள், அதே நேரத்தில் இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுங்கள் என்றால் வாழ்நாளில் மறக்க முடியா இனிய நிகழ்வு என்பது தான் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கும். பதிவர்களையும் பதிவர் சந்திப்பையும் பொறுத்தவரையில் குறைகளைத் தாண்டிய சாதனையில் இது ஒன்றுதானே முக்கியமானது.   

பதிவர் சந்திப்பு அறிமுகம் 

விழாவில் மிகமுக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுவது இந்த நிகழ்வுதான், முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் இந்த நிகழ்வுகளை எப்படி நடத்துவது என்பது பற்றிதான் பெரும்பாலும் விவாதித்தோம். அதிகமான திட்டங்கள் வகுத்தோம், பெரும்பாலானவை நடைமுறைக்கு ஒத்துவராமல் போகவே அவற்றைத் தவிர்த்துவிட்டோம்.  

1. பதிவர் விபரங்களை திரட்டி அவற்றை பிரசண்டேஷனாக திரையிடுவது, இதற்காக ஸ்கூல்பையன் பெரும்பாலான விபரங்கள் திரட்டிவிட்டார், இருந்தும் ஒவ்வொரு பதிவர் தனை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவரது தகவலை சரியான நேரத்தில் சரியான சமயத்தில் திரையிட வேண்டும், இதில் ஏதாவது ஒன்றின் கால அளவு மாறினாலும் குழப்பமும் பெருங்குழப்பமும் மிஞ்சும், குழப்பம் வரும் பட்சத்தில் அந்த பதிவர் தகவலை திரையிடாமல் விட்டால் தனிப்பட்ட வன்மம் என்றொரு குற்றச்சாட்டு எழும்.

2. மேலும் இந்த திரையிடல் படலத்தை பதிவர்கள் பற்றி அறிந்த பதிவர்களால் தான் செய்ய முடியும் வெளிநபர்களால் செய்ய முடியாது, இதற்கென்று தனியொரு பதிவரை நியமித்தால் பாவம் அவரால் இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது, அவ்வளவு தூரம் பயணித்து வந்த பதிவர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்று அரசன் மீண்டும் மீண்டும் புலம்புகிறாரே அப்படி ஒரு நிலைமை இன்னும் ஒரு பதிவருக்கு ஏற்படும், இதை விழாக்குழு விரும்பவில்லை.

3. கடந்த முறை பதிவர் அறிமுகத்தில் நான்கு பதிவர்களை மேடையேற்றி அவர்கள் மூலம் மற்றபதிவர்களை மேடைக்கு அழைத்தோம். அப்படி அழைக்கப்படும் பொழுது ஆரூர் மூனாவை மேடைக்கு அழைத்த பதிவர் மிக (அ)நாகரிகமாக மேடைக்கு அழைக்க ஆருராருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மேடை ஏறி ஏறிய அடுத்த நொடி கீழே இறங்க, இது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை விழாக்குழு விரும்பியது.

4. ஒவ்வொரு பதிவரும் தங்கள் இடத்தில் இருந்து மேடைக்கு சென்று, மேடையில் ஏறி அறிமுகம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு நிமிடம் என்று கணக்கிட்டால் (சிலர் அதிகமாக பேசுவர், சிலர் பெயர் மட்டும் கூறி விடைபெறுவார் என்பதால் இக்கணக்கு ஒரு நிகழ்தகவைச் சார்ந்தது) நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களை மேடையேற்ற ஆகும் மொத்த நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் ஒவ்வொரு பதிவரையும் அவரது பின்புலத்துடன் மற்றொருவர் அறிமுகம் செய்து மேடை ஏற்றி இறக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த நிகழ்வும் அறிமுகம் என்ற சம்பிரதாயத்தில் கலந்து கரைந்து விடும்.

5. மேற்கூறிய நான்கு பாயிண்டுகளும் சாத்தியப்படுமா என்று உங்கள் எண்ண ஓட்டத்தில் கேள்விகேட்டு விடைதேடுங்கள், இதில் ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்க விழாகுழுவில் இருப்பவர்கள் மேடையேறி அறிமுகம் செய்யக் கூடாது அதன் மூலம் நேரத்தை  மிச்சப் பிடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, அதே நேரம் இக்குழுவில் கவியாழி, ஸ்கூல்பையன், ரூபக்ராம் என்ற மூன்று புதியவர்கள் உள்ளனர், அவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 

அறிமுகம் என்ற சம்பிரதாயத்தை ஒட்டுமொத்தமாக நீக்கும் பொழுது அங்கே பதிவர் சந்திப்பிற்கான அர்த்தம் மறைந்து விடுகிறது, இந்நிகழ்வை கால, சூழ்நிலைகளைப் பொறுத்து மாற மற்றும் மாற்றியமைக்க வேண்டும். அது விழாக்குழு கையில் உள்ளது.

இம்முறை பதிவர் சந்திப்பு அறிமுகம் சம்பிரதாயமாக நடந்ததாதா இல்லை சம்பிரதாயத்திற்கு நடந்ததா என்றால், சென்ற முறையை விட மிக ஒழுங்காக மிக நேர்த்தியாக நடந்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு எவ்வித குழப்பமும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடந்தது, கடந்த  முறையில்;ஏற்பட்ட குழப்பம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது, சென்றாண்டு மேடையில் அறிமுகம் நடந்த பொழுது சக பதிவர்கள்  தங்கள் அருகில் இருந்த பதிவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர் அதனால் அறிமுக படலம் கொஞ்சம் பிசுபிசுத்துப்போனது, இம்முறை பெரும்பாலான பதிவர்கள் அறிமுகத்தை ஈடுபாட்டுடன் கவனித்தனர், பதிவர்கள் தாங்கள் அறிமுகம் செய்யும் பொழுது தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டனர் இவை எல்லாவற்றிக்கும் மேலாக அறிமுகப்படலமானது குறித்த நேரத்தில் நிறைவாக நிறைவடைந்தது.

பதிவர்கள் தனித்திறன் :

அனைவருமே பெரிதும் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு, தயார் செய்வதற்கு போதிய காலஅளவு இல்லாததால் மட்டுமே அறிவித்த இரண்டு நாடகங்கள் நிறுத்தப்பட்டன, மயிலன், தேவாதிராஜன் அவர்களின் கவிதை குடந்தையூர் சரவணனின் பலகுரல், கோவை ஆவியின் பதிவர் சந்திப்புப் பாடல் என இனிதே நிறைவேறியது, இந்நேரத்தில் மதுமதியின் குறும்படத்தைக் கூட தனித்திறன் பகுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.

பத்து நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் பதிவர்களின் குறும்படங்களை சந்திப்பின் இடைவெளியில் அவ்வபோது திரையிடலாம். இது ஒரு நல்ல ரிப்ர்ஷிங்காக இருக்கும். மற்ற பதிவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது போலவும் இருக்கும்.

மூத்தபதிவர்கள் கவுரவித்தல், கவியரங்கங்ள் மேலும் மேலும் :

கடந்த பதிவர் சந்திப்பில் மூத்த பதிவர்களை கவுரவம் செய்தாயிற்று இம்முறை என்ன செய்யலாம் என்ற வாதம் எழுந்த போது பதிவுலகில் கதை கவிதை கட்டுரை போன்ற ஏதேனும் போட்டி வைத்து பரிசளிக்கலாம் என்றும் சாதனை புரிந்த பதிவர்களை கவுரவிக்கலாம் என்றும் விவாதிகப்பட்டது போட்டிவைத்து பரிசளிக்க கால அவகாசம் இல்லை, சாதனைப் பதிவர்களை எந்த அளவீட்டில் தேர்ந்தெடுப்பது என்பதில் அளவீட்டை நிர்ணயம் செய்வதில் முரண் ஏற்பட்டது, பின் அதனை பதிவுலகில் சர்வே நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அதற்கும் கால அவகாசம் இல்லை, அரை மனதுடன் இத்திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த சந்திப்பு நடத்தப் போகிறவர்கள் தயவு செய்து இவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.

கவியரங்கம் என்பது தனித்திறன் என்ற ஒட்டுமொத்த வடிவத்திற்குள் அடங்கிவிட்டது. கவிதை எழுதிக் கொண்டுவந்தவர்களிடம் கவியரங்கம் கிடையாது என்றோ பாடப்போகிறேன் என்றவரை கலாய்த்து அனுப்பவோ இல்லை.  

புத்தக வெளியீடும் மாலை நேரமும் :

புத்தக வெளியீடு என்பது பதிவர் என்ற நிலையில் இருந்து தனிப்பட்ட ஒரு பதிவரை முன்னிறுத்துவது என்ற நிலையை நோக்கி நகருகிறது. அதாவது இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் தங்கள் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் என்னும் வட்டத்தையும் உள்ளிழுக்கின்றனர், அவர்கள் வரக் கூடாது என்று சொல்லமுடியாது காராணம் இந்த நிகழ்வு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது அதனால் நண்பர்களை உறவினர்களை அழைத்து வருவதில் தவறில்லை, ஆனால் ஒருவேளை புத்தக வெளியீடானது ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகரிக்கும் போது ஒரு தனிநபர் விழாவாகி பெரும்பான்மை பதிவர்களுக்கு சலிப்பூட்டுவதாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏராளம், முக்கிய பிரச்சனை என்னவெனில் பதிவர் சந்திப்பு நிகழ்வுக்கான காலத்தை அவர்கள் எடுத்துவிடக் கூடாது.

அதனால் சந்திப்பின் கடைசி நிகழ்வாக இதை வைத்தால் ஒருவேளை நேரம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பிழையேதும் இல்லை, என்பது தான். நாங்கள் எதிர்பார்த்தது போலவே 45 நிமிடங்கள் தாமதமாகத் தான் இந்நிகழ்வு முடிந்தது.   

ஒருவேளை புத்தக வெளியீடு காலையில் இருந்திருந்தால் பதிவர்கள் அழைத்து வரும் நண்பர்களுக்கான உணவு ஏற்பாடு? விழாவிற்கு வந்த பதிவர்களின் நண்பர்களை சாப்பிடாக்கூடாது என்று கூறுவது தமிழனின் விருந்தோம்பல் பண்பில்லை. அதே நேரத்தில் சந்திப்புக்காக வரும் பதிவர்களுக்கு திருப்தியாக உணவளிக்க வேண்டியது நம் கடமை.

முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் விவாதம் செய்யப்பட்டு, விவாதம் வளர்ந்து ஒருமனதாக முடிவுசெய்யப்பட்ட ஒன்று தான் புத்தக வெளியீடு என்பது நிகழ்ச்சி நிரலில் மாலை இடம் பெற வேண்டும் என்பது.

அதே நேரத்தில் புத்தகம் வெளியிடும் பதிவர்களிடம் ஐந்தாயிரம் ருபாய் வசூலிகப்பட்டதை அவர்கள் நண்பர்கள் விருந்தோம்பலுடன் யாரும் இணைக்க வேண்டாம், நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க நிதியளித்தல் விதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்ட விதி. தனியொரு நிகழ்வாக புத்தக வெளியீடு நடத்துவதற்கு ஆகும் செலவை விட இது குறைவு தான் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  

உணவு பரிமாறுதல் : 

பப்பே முறையில் பரிமாறப்பட்ட உணவை உண்ண யாரும் பெரிய அளவில் கஷ்டப்டவில்லை என்று நினைக்கிறன், அப்படி ஒருவேளை கஷ்டபட்டிருந்தால் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கிறோம்.

மேலும் பந்தியில் அமர்ந்து இலையில் பரிமாறியிருந்தால் கூட இவ்வளவு கலகலப்பாக பேசிக் கொண்டே உண்டிருபார்களா என்று தெரியவில்லை, இதில் அத்தனை பதிவர்களும் கூட்டமா கூட்டமாக நின்று, சகபதிவர்களுடன் அளவளாவிக் கொண்டே உண்டனர், ஒருவகையில் இது போற்றற்குறியது தானே.   

விழாக்குழுவினர் மேடை ஆக்கிரமிப்பு :

விழாக்குழுவினர் சிறப்பு விருந்தினருக்கு மரியாதை செய்யும் பொழுதும், நினைவுப் பரிசு பெறும்போதும் மட்டுமே மேடையை ஆக்கிரமித்தனர், மேலும் நினைவுப் பரிசு வழங்கும் போது அதனை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம், நேரமின்மையால் அவசர அவசரமாக நடந்து முடிந்த ஒரு நிகழ்வு என்றால் அது விழாக்குழுவினருக்கு நினைவுப் பரிசுவழங்கும் நிகழ்வு தான், எவ்வளவு அவசரம் என்றால் மதுமதிக்கான நினைவுபரிசை தான் நான் கண்மணி குணசேகரன் அய்யா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன், என்னைப் பொறுத்தவரை இது புரிந்துகொள்ளக் கூடிய நிகழ்வு, சுட்டிகாட்டப்பட வேண்டிய தவறு இல்லை. 

மேலும் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தியோ இல்லை மேடையை ஆக்கிரமித்து சுயதம்பட்டம் அடிக்த்தோ ஒரு இடத்திலும் நடந்துகொள்ளவில்லை என்பதை விரைவில் வர இருக்கும் வீடியோ கவரேஜ் கூறும். 

பதிவர் சந்திப்பு நேரலை :

பெரியார்தளம் திரு அகரன் அவர்கள் நேரலை விசயத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டார், அவரை கவுரவிக்காதது சிறு குறையே, சந்திபிற்கு முந்தின தினம் இரவில் இருந்து நடந்த ஒரு பெரும்போராட்டதிற்கு பின்தான் அவரால் நேரலையை செயல்பட முடிந்தது. 

வாடகைக்கு எடுத்த மடிக்கணிகள் ஒழுங்காக ஒத்துழைக்காதது முதல் காரணம், எதிர்பாராத விதமாக தோழர் அகரனிடம் இருந்த ஆடியோ இன்புட் பழுதடைந்தது மற்றொரு காரணம், அதை சரி செய்ய அவர் எவ்வளவோ முயன்றார் இருந்தும் முடியவில்லை. பாவம் அவராலும் என்ன செய்துவிட முடியும், விரைவில் சந்திப்பு வீடியோ கவரேஜ் பதிவேற்றப்படும், எதிர்பாரா விதமாக ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். அகரனின் சேவைக்கு தலை வணங்குகிறோம். நன்றி அகரன்.            

தொகுப்பாளர்கள் :

ரெயின்போ பண்பலையில் தொகுப்பாளர் என்ற முகத்தில் தொடங்கி பன்முக சாதனையாளராக வலம் வரும் சுரேகா, இவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோவை அகிலா மற்றும் கோவை எழில் ஆகியோர் தொகுப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்பது கூட்டங்களில் கலந்தாலோசித்து சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்பட முடிவு.

ஒருவேளை யாருக்கேனும் ஆர்வம் இருந்து, நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கருத வாய்ப்பு இருக்குமானால் இனி வரபோகும் பதிவர் சந்திப்பு நடத்த இருப்பவர்களுக்கு கூற விரும்புவது "பதிவர் சந்திப்பை தொகுத்து வழங்க ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்" என்று பதிவுபோட்டு தகவல்களை பெற முயற்சிக்கவும். ஆனால் ஆர்வமிருப்பவர்களிடம் தொகுத்து வழங்குவதற்கான குறைந்தபட்ச திறமை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது விழாக்குழுவினருக்கு விடப்படும் மற்றொரு சவால்.  மேலும் நேரத்தை கச்சிதமாக கையாள வேண்டிய பெரும்பொறுப்பு தொகுப்பாளர்கள் கையில் தான் உள்ளது.

உ.ம் : இந்த சந்திப்பில் பதிவரே அல்லாத ஒருவர் பேருரை ஒன்று கொடுக்கத் தொடங்க அவரை மிகத் திறமையாக சமாதனம் செய்து அந்த பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தார் சுரேகா, அந்த திறமை மிக முக்கியமானது அவசியமானது.    

இந்தப் பதிவில் சந்திப்பானது எப்படி நடந்தது என்பது பற்றி மட்டும் தான் எழுதியுள்ளேன், விழாக்குழு எப்படி உழைத்தது என்பதை இன்னும் எழுதவில்லை. விழாக்குழுவின் உழைப்பை தனியொரு பதிவில் பகிர்கிறேன். (ஏற்கனவே நான் பெருசா எழுதுகிறேன் என்று ஓட்டுராயிங்க, இந்தப் பதிவின் அவசியம் கருதி தான் எசமான் பதிவு பெருசாச்சு :-)  

ஒவ்வொரு வாரமும் முன்னேற்பாட்டுக் கூட்டம் என்றபெயரில் நாங்கள் கூடி விவாதித்து செயல்படுத்திய விசயங்களை தான் மேலே முடிந்தளவில் தொகுத்துள்ளேன், இந்த விஷயங்கள் எதிர்கருத்து கூறுவோறுக்காக எழுதப்பட்டவை அல்ல.

நாலு பதிவர் ஒண்ணா சேர்ந்து சந்திப்பு நடந்துறாங்க நாம பக்க பலமா இருப்போம் என்றளவில் சக பதிவர்களை மதித்து எல்லாவகையிலும் உறுதுணையாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறார்களே பெரும்பாலான பதிவர்கள்,அவர்கள் விழாக்குழுவினரை பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், இது போன்ற சந்திப்புகள் சிற்சிறு சலசலப்புகளால் நடைபெறாமல் நின்றுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே எழுதினேன்.    

இப்போதும் சொல்கிறேன் இப்படி ஒரு விளக்கபதிவு எழுதியதற்காக நான் வருத்தபடுகிறேன். அரசனும் ரூபக்கும் ஆரூரும் மெட்ராசும் மதுமதியும் உழைத்த உழைப்பை பெரும்பதிவாக எழுதுவதையே நான் விரும்புகிறேன். 

ராஜபாட்டை ராஜா, சிவாகாசிகாரன், அப்துல்பாசித், பிரபு, சதீஷ் அண்ணா, சங்கரலிங்கம் அய்யா, ஆவி இவர்களுடனான நினைவுகளை எழுதவே விரும்புகிறேன்.    

குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள்  நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள்.     

இறுதியாக குறைகள் இல்லா மனிதனும், குறைகள் இல்லா நிகழ்ச்சியும் இல்லை, சிறு குறையோ பெருங்குறையோ அவை உங்களை வருத்தப்படுத்தி இருக்கும் என்றால் விழாக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் விளக்கம் தேவை என்றாலும் எழுதத் தயார், சட்டியில் இருக்கிறது அகப்பையில் வரும். 

நன்றி 
விழாக்குழு சார்பாக 
 சீனு

48 comments:

 1. சீனு,
  ரொம்பவே தெளிவா எழுதி இருக்கீங்க. இதுக்கு மேல விளக்கம் குடுக்க ஒன்றுமில்லை.

  ReplyDelete
 2. இது புரிந்துகொள்ளக் கூடிய நிகழ்வு, சுட்டிகாட்டப்பட வேண்டிய தவறு இல்லை. //உண்மைதான் இதற்காக குழுவின் சார்பாக மன்னிப்பு கேட்க அவசியமில்லை

  ReplyDelete
 3. அருமையாகத்தான் நடந்திருக்கிறது.
  வருந்த வேண்டாம்.எந்த ஒரு பெரிய நிகழ்வும் சுலபமாக நடந்துவிடாது.

  பிள்ளைகள் திருமணம் நடத்தி அனுபவப்பட்டவர்களைக் கேளுங்கள்.
  அக்கறை எடுத்து இவ்வளவு பெரிய நிகழ்வைநடத்தியது மிகப் பெரிய விஷயம். மனமார்ந்த பாராட்டுகள்.

  ReplyDelete
 4. நானும் சில சமுக இயக்கங்களில்
  பொறுப்பில் இருந்து இது போன்ற
  நிகழ்வுகளை நடத்தியவன் என்கிற முறையில்
  இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது
  என்கிற ஆணித்தரமான முடிவில்தான் இருக்கிறேன்

  சிலர் மட்டும் சொல்லும் சிறு சிறு குறைகளை
  நாமே இத்தனை பெரிதாக்க வேண்டுமா
  எனத் தோன்றுகிறது எனக்கு

  நிச்சயம் இந்தக் குறைகளை விழாக்குழுவினரே
  தங்களது அடுத்த கூட்டத்தில் நிச்சயம்
  விமர்சித்தும் அதற்கான தீர்வுகளையும்
  முடிவு செய்துவிடுவர்

  விழாக் குழுவினருக்கும் பொறுப்பான
  பதிவுக்காக தங்களுக்கும் எனது மனமார்ந்த
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. // நீங்கள் நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள்.// அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டீர்கள், சீனு. இனி விளக்கத்திற்கு ஒன்றுமில்லை. வருத்தம் தேவையில்லை.
  நம்மைத் தெரிந்தவர்களுக்கு நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. தெரியாதவர்களுக்கு விளக்கம் தேவையில்லை.

  சென்னை வெயிலுக்கு நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
  இனி புதிய பதிவர்களை மட்டும் - அல்லது முதல் முறை வருபவர்களை மட்டும் அறிமுகம் செய்து கொள்ளச் சொல்லலாம்.

  எல்லோரும் எல்லோருடனும் கலந்து பேசி ஒருவரையொருவர் அறிந்து கொள்ள போதுமான நேரம் கொடுக்கலாம்.

  மிகவும் சிறப்பாக திட்டமிட்டு இந்த பதிவர் திருவிழாவை செவ்வனே செய்து முடித்திருக்கும், விழாக் குழுவினர் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. குறைகள் இல்லா மனிதனும் குறைகள் இல்லா நிகழ்ச்சிகளும் இருந்ததில்லை என்பது முழு உண்மை.

  மிகக் கடுமையாக உழைத்த விழாக் குழுவினருக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 7. தெளிவான மற்றும் நாகரீகமான விளக்கம்...

  குறைகள் தவிர்க்க முடியாததுதான்... அதை சுட்டிக்காட்டியது எனக்கு தவறாகப்படவில்லை....

  தாங்கள் குறிப்பிட்ட விளக்கங்கள் அடுத்தபதிவர்சந்திப்பில் கவனத்தில் கொள்ளவேண்டும்... என்பதே என்னுடைய விருப்பமும்...

  நன்றி..!

  ReplyDelete
  Replies
  1. தனிப்பட்ட முறையிலும் குழு உறுப்பினர் என்ற முறையிலும் தாங்கள் செய்தது தங்கள் பதிவுகளைப் போல் இல்லாததை இருப்பது போல் காட்டும் குயுக்தி வேலை தான். இல்லாததை இருப்பது போல் காட்டுவதில் தாங்கள் அசகாய வீரர்

   Delete
  2. நான் குயுக்தி அசகாய போன்ற வார்த்தைகளை எழுதியதேயில்லை. என்னை இது போல் எழுத வைத்து பின்நவீனத்துவ எலக்கியவாதி ஆக்கிய தங்களுக்கு நன்றிகள்.

   ஜெய்போலோநாத், அரே ஓ சாம்பா

   Delete
  3. வீதி அவர்களுக்கு : //// தெளிவான மற்றும் நாகரீகமான விளக்கம்...///

   உங்களால் இது போல் எழுத தெரியாதா..?

   /// அடுத்த பதிவர் சந்திப்பில் கவனத்தில் கொள்ளவேண்டும்... ///

   ஈரோடோ... மதுரையோ... நீங்கள் தான் முன்னிலை... அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்...

   ///குறைகள் தவிர்க்க முடியாததுதான்...///

   அப்படியா... புரிந்து விட்டதா...? தெளிவு வந்து விட்டதா...?

   Delete
 8. //குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள் நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள். //

  நச் வரிகள்... பதிவர் சந்திப்புக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத இவர்களுக்கு எல்லாம் இப்படித்தான் தெரியும்...

  ReplyDelete
 9. உங்களையே பொங்க வச்சுடாங்களே சீனு......

  ReplyDelete
  Replies
  1. இதுக்காக பொங்கல் வைக்க தனியா இரண்டு ஆயாக்களை கூட்டி வரனுமா என்ன

   Delete
 10. நீ இந்த பதிவில் வெளியிட்டுள்ள கருத்துக்களைப் பற்றி வெளியில் இருப்பவர்கள் விமர்சனம் செய்து கொள்ளட்டும். எழுத்து நடையில் பெரிய ஆள் தான். நான் கூட இப்படி எல்லாம் எழுதனும் என்று நினைக்கிறேன், ஆனால் வரமாட்டேங்குது. எனக்கும் கொஞ்சம் கிளாஸ் எடுப்பா.

  ReplyDelete
 11. போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மொழிக்கேற்ப...
  குற்றங்களையே பெரியதாக பார்க்கும் புறை ஏறிய கண்களைக்கொண்டவர்க்கு...
  நம் மௌனத்தையே பதிலாக கூறிவிட்டாலே போதுமானது.
  ரஞ்சனி அம்மா கூறுவது போல "நம்மைத் தெரிந்தவர்களுக்கு நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. தெரியாதவர்களுக்கு விளக்கம் தேவையில்லை" என்பதை புரிந்துகொண்டால் சிந்திய வியர்வை அர்த்தமுள்ளதாகும். இல்லையேல் வீண் மன அழுத்தம்தான் சீனு.
  மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துக்கள், திருவிழாவை அமர்க்களப்படுத்தியதற்கு.

  ReplyDelete
 12. தெளிவான விளக்கப் பகிர்வுகள்..!

  ReplyDelete
 13. //ஏற்கனவே நான் பெருசா எழுதுகிறேன் என்று ஓட்டுராயிங்க, //

  யாருப்பா அது, யாரு?? அவ்வ்வ்வ்(கொட்டாவி), தம்பி எழுதறத பெருசா எழுதறேன்னு சொல்றவங்க எல்லாம் தங்கள் பிளாக்கில் பான்ட் (font) சைஸ் குறைத்துக் கொள்ளத் தயாரா??

  ReplyDelete
 14. ஆனா சீனு, இந்த மாதிரி ஒரு பதிவை தான் நான் எதிர்பார்த்தேன். வீதிகளில் கிடைக்கும் கவிதை போன்றதோ, நோக்கும் இடமெல்லாம் கிடைக்கும் நோக்கியா போன்றோ அல்லாமல் திடம்கொண்டு இருந்தது.

  ReplyDelete
 15. கூட இருந்து கொண்டு கல் எறியும் நபர்கள் இனி இது போல் விழாவிற்கு வராமல் இருப்பது நலம்...

  நன்றி...

  ReplyDelete
 16. சைதை அஜீஸ் அவர்களின் கருத்துரையும் ரஞ்சனி அம்மா அவர்களின் கருத்துரையும் வரவேற்கிறேன்... நன்றிகள்...

  ReplyDelete
 17. //அரசனும் ரூபக்கும் ஆரூரும் மெட்ராசும் உழைத்த உழைப்பை பெரும்பதிவாக எழுதுவதையே நான் விரும்புகிறேன். //

  அப்ப புக்கு பிரிண்டுக்கு சொல்லிரலாமின்னு நினைக்கிறேன்.. ;-)

  ReplyDelete
 18. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை....

  பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து, அதற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுகள்..!

  எந்த ஒரு செயலையும் (நிகழ்ச்சியை) முன்னின்று செய்து பார்த்தால்தான் அதில் உள்ள பிரச்னைகள் தெரியும்.

  ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்றுத் தரும்..

  உற்சாகமாக அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்....!!!

  பதிவர் விழாவிற்கு ஏற்பாடு செய்து நடத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!!!

  ReplyDelete
  Replies
  1. நான் சொல்ல நினைத்ததை தங்கம் பழனி சொல்லிவிட்டார்...


   குற்றம் பார்க்கின் சுற்றமில்லை...

   Delete
 19. அந்த இடத்தில் இது இல்லாததால் எது அது என்று உணர இதுவரை காத்திருந்தேன். இதற்குத்தான் இது என்று தெரிந்திருந்தால் அதை செய்திருக்க மாட்டேன். எது எப்படியோ அது அதுவாக இருந்தவரை இது இதுவாக இருக்கப்போவதில்லை. முதுகில் குத்தும் துரோகிகளுக்கு அது பெரிதாக இருக்கலாம்.

  இப்படி பதிவு எழுதியே காலத்தை ஓட்டலாம் என்று அதுவரை யோசித்தான். எது நடக்குமோ எவருக்கு தெரியும். ஆனா ஒண்ணு...

  மழை நிக்கறதுக்குள்ள....அது!!!

  ReplyDelete
 20. சீனு... விளக்க பதிவு அவசியமாகிவிட்டது!!!! என்ன செய்ய?

  சில சமயம் இப்படி விளக்கினால் தான், புரியும் போல....

  உங்களின் உழைப்பை முதல்நாள் அருகில் இருந்து பார்த்தவன் நான்...

  ரூபக், ஸ்கூல்பையன், மதுமதி, அரசன், என உழைத்த உழைப்பு குறைகளில் வந்து நிற்பதால், பதிவு அவசியமாயிற்று...

  பந்தியில சோத்துல கொஞ்சம் உப்பு அதிகமா இருந்துச்சுன்னு, காதுல சொல்லிட்டு போயிருக்கலாம்.... ம்ம்ம்... என்ன செய்ய???? (இது உதாரணத்திற்கு சொல்லப்பட்டது)


  நடந்ததும் நன்மைக்கே, நடக்க இருப்பதும் நன்மைக்கே...

  ReplyDelete
 21. பெண் பதிவர்கள் முதல் நாளே வந்ததால் அவர்களுக்கு தங்கும் இடம் ஏற்பாடு செய்து, அவர்களுடனே கூடவே இருந்த (வீடு சென்னையில் இருந்தும்) சசிகலா அக்கா போன்றோரின் பணி பாராட்டத்தக்கது...

  ReplyDelete
  Replies
  1. சென்ற ஆண்டைப்போல இந்த ஆண்டும் வாரக்கூட்டங்களில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தும்... என் மகனின் உடல் நிலை அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனை அலைந்தது.. இப்படி காரணங்களால் என்னால் வர இயலவிலலை. எனினும் குரூப் மெயில் கட்டாயம் பார்ததும் கணேஷ் மதுமதியிடம் அவ்வவ்போது என்ன நிகழ்கிறது என்பதையும் கேட்டு தெரிந்துகொண்டேன்.
   விழாக்குழுவில் மிக நேர்த்தியாகவே அவரவர் தமக்கென ஒதுக்கிய பணிகளை சிறப்பாகவும் செம்மையாகவும் செய்து முடித்து விழா சிறப்பாக நடக்க உதவினார்கள் என்றே சொல்ல முடியும்.

   வீட்டு விழாக்கள் என்றாலே ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். இது பொது விழா நம் இல்ல விழா என்ற ஆவலோடு பணி செய்தவர்களை பாராட்டுவதை விடுத்து குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை . என்பது என் கருத்து.

   Delete
 22. அன்பின் சீனு - அருமையான பதிவு - பதிவர் சந்திப்பு - திருவிழா பற்றி அலசி ஆராய்ந்து நீண்டதொரு பதிவிட்டமை நன்று. ஒவ்வொரு நிகழ்வினையும் எடுத்துக் கூறி விளக்கமளித்தது நன்று - ஒரு பெரிய திருவிழா என்றால் அங்குமிங்கும் குறைகள் இருக்கத்தான் செய்யும். தவிர்க்க இயலாத குறைகள் - எந்த ஒரு விழாவாக இருப்பினும் கலந்து கொள்பவர்கள் சிறு சிறு சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

  மொத்தத்தில் பதிவர் சந்திப்பு திருவிழா நல்ல முறையில் நடந்த்தௌ - ஐயமே இல்லை. கலந்து கொள்ள இயல வில்லை எனினும் அனைவரின் திருவிழா பற்றிய பதிவினையும் படித்ததன் பயன் இம்மறுமொழி.

  விழாக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள் - நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 23. பதிவர் விழாவிற்கு ஏற்பாடு செய்து நடத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!!

  ReplyDelete
 24. விம், சபீனா, எக்சோ போட்டு நல்லா விளக்கி சொன்னீங்க சீனு. இந்த பதிவு அவசியமே! அப்போதான் அடுத்த சந்திப்பு நடத்துறவங்களுக்கு ஒரு வழிக்காட்டியா இருக்கும். மண்டப வெக்கையை தவிர வேற எந்த குறையும் சொல்ல தெரியல(அதுகூட சொந்தங்களை பார்த்த பின் தெரியலை). கண்டிப்பாய் அரசன், ரூபக்லாம் பற்றி ஒரு பதிவு போடுங்க. இல்லாட்டி செய் நன்றி மறந்தவங்களா ஆகிடுவோம் நாம்!!

  ReplyDelete
 25. வெயிலின் கொடுமையை தவிர மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுடன் நடந்தது.

  ReplyDelete
 26. சின்ன வயதில் எங்கள் சங்க விழாக்களுக்கு உழைத்து விட்டு இது போல கூட இருந்தவர்களிடம் குட்டுப் பட்டதுண்டு! அதுபோலவே இதுவும்! எந்த ஒரு மனிதனிடமும் குறை இல்லாமல் இருக்காது.திடமுடன் குறை கூறியோருக்கு தெளிவாக விளக்கம் தருவது நமது கடமையும் கூட! அதை செவ்வனே செய்தது உங்கள் பதிவு. உங்களின் உழைப்புக்கள் குறித்த பதிவுகளை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்! நன்றி!

  ReplyDelete
 27. சூப்பரா எழுதியிருக்கிறீங்க பாஸ்....
  மிகச் சிறந்த திட்டமிடலாகவும் தோன்றுகிறது எனக்கு

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete

 29. குறை பற்றிய வாதங்கள் இதனால் முற்றுப் பெறட்டும். சீரான விளக்கம். தேவை என்றாகிவிட்டதே.

  ReplyDelete
 30. தெளிவான விளக்கம். கடந்த பதிவர் சந்திப்பின் குறைகள் விவாதிக்கப் பட்டே இந்த பதிவர் சந்திப்பு திட்டமிடப்பட்டது. அடுத்த முறை இந்த விழாவின் குறைகள் நிச்சயம் விவாதிக்கப் பட்டு மேம்படுத்தப்பட்ட விழாவாகவே நடைபெறும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete
 31. சலாம் சகோஸ்,

  பொறுப்புணர்வு அறிந்த காந்திரமான பதிவு சீனு. ஒரு திரைப்படம் பெரும் ஹிட்டானால் அந்த இயக்குனரிடம் இருந்து வரும் அடுத்த படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். வந்த படம் சற்றே ஏமாற்றத்துடன் இருந்தால் "முந்தைய படம் போல இல்லை" என்று எளிதாக சொல்லிவிடுவார்கள். இது மனிதர்களின் இயல்பான குணாதிசயமாக உள்ளது. இது தான் இங்கேயும் நடந்துள்ளது.

  ஐம்பது பதிவர்களை ஒன்றாக சந்திக்க வைத்தாலே அது மிகப்பெரிய விஷயம் தான். இதில் வெற்றி தோல்வி என்ற வரையறைக்கு இடமில்லை. குறைகள் இல்லாத ஒன்றுக்கூடல் இல்லை, குறைகள் இருந்தன, அவை சரி செய்யப்படும், அவ்வளவு தான், விஷயம் முடிந்துவிட்டது.

  நான் ஏற்கனவே சொன்னது போன்று உங்களின் இந்த பதிவும், சகோ சவுந்தரின் பதிவில் பிரபா எழுதிய பல பின்னூட்டங்களும் பொறுப்புணர்வு மிகுந்தவை. இதற்காக என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

  அதே நேரம், பதிவர் சந்திப்பிற்கு முந்தைய நாளில் மது அருந்திய நிகழ்வுகள் குறித்தெல்லாம் பதிவுகள் வருவது, அதிலும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களே இப்படி செயல்படுதெல்லாம் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உதவாது என்பதையும், மற்றவர்களின் மனதில் கசப்பையே இது ஏற்படுத்தும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து இவற்றை தவிர்க்க வேண்டும்.

  தமிழ் பதிவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க கல்வி ஞானத்தையும், உடல் வலிமையையும் தந்தருள இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  டிஸ்கி: என்னிடம் ஒரு கேள்வி, நா.முத்துக்குமார் வருவதாக கூறப்பட்டது. அவர் ஏன் வரவில்லை? காரணங்களை தெரியப்படுத்தினாரா?

  நன்றி.

  ReplyDelete
 32. வெளங்காத வீணாப்போன முண்டங்களுக்கு விளக்கம் தரத்தேவையில்லை.

  ReplyDelete
 33. விடுங்க கண்ணாடி. மாமா குரைக்கிற நாய் குரைச்சி கிட்டுதான் இருக்கும். நாய்கள எப்படி கையாளனும்னு உங்களுக்கு சொல்லி கொடுக்கணுமா என்ன???

  ReplyDelete
 34. சீனுகுரு,

  நல்ல ஒரு விளக்கமான பதிவு, மேலும் பிரபாவும் விளக்கமாக பின்னூட்டங்களில் பதில் அளித்துள்ளார், இதுவே பொறுப்பாளர்கள் செயல்பட வேண்டிய முறை. உழைத்தவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.

  எத்தனையோ கடின உழைப்பிற்கிடையே ,அடுத்தவர் கேள்வி கேட்காத வண்ணம் ,உடனே விரிவான ஒரு "கவரேஜ்" பதிவை வெளியிட்டிருந்தால் பல குழப்பங்கள் தவிர்க்க பட்டிக்கும்.
  ------------

  இப்போ கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்கு பேசும் சிலருக்கு மட்டும் ,

  சென்னை பித்தன் அவர்களின் பதிவை இன்று தான் படித்தேன், அவரும் தான் இப்படி நடந்திருக்கலாம் என சொல்லி பதிவு போட்டிருக்கிறார், அவர் தலைமை ஏற்றவர், அவர் தனிப்பட்ட முறையில் சொல்லி இருக்கலாம்,ஆனால் பதிவு போட்டு தான் சொல்லி இருக்கிறார்,ஆனால் அந்த பக்கம் இந்த அஞ்சா நெஞ்சன்கள் தலை வச்சுக்கூட படுக்கலையே அவ்வ், என்னய்யா இது ஆளுக்கு ஒரு நியாயமா அவ்வ்!

  என்னுடைய கருத்து என்னவெனில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், சந்திப்பில் கலந்துக்கொள்ளாதவர்கள் கூட செய்யலாம் ஏன் எனில் "தமிழ்பதிவர்" என்ற பெயரில் தான் நடக்குது இன்னிக்கு நாலு பேர் கூடி பேர கெடுத்து வச்சா அதன் பலன் கலந்து கொள்ளாதவர்களுக்குமே சென்று சேரும், நாளைக்கு தமிழ் பதிவர்னு சொன்னா , ஹெ..ஹெ உங்க லட்சணம் தெரியாதானு சொல்ல கூடிய நிலை உருவாகக்கூடாது, கலந்துக்கொண்ட நூத்து சொச்சம் பேரு மட்டுமே பதிவுலகம் இல்லை, எனவே நீ எப்படி கருத்து சொல்லலாம்னு சும்மா நாலு பேரு கூட்டமா இருக்கோம்னு பாயும் வேலை இனியும் வேண்டாம் நண்பர்களே!

  ஐ அம் ஒன்லி வழிப்போக்கன், பட் நானும் ஒரு பதிவந்தேன் :-))

  ReplyDelete
 35. //கடந்த பதிவர் சந்திப்பில் மூத்த பதிவர்களை கவுரவம் செய்தாயிற்று //

  தமிழ் பதிவுலகில் மூத்தப்பதிவர்களின் எண்ணிக்கை அவ்ளோ தானா? இந்தாண்டு கூட எத்தனையோ மூத்தப்பதிவர்கள் வந்தார்கள், பாவம் அவங்களாம் யூத்துனு நீங்களாம் நினைச்சா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்!

  ஹி..ஹி எனக்கு ஷார்ப் ஐ சைட் என்பதால் மட்டுமே இதை பார்த்து சொன்னேன்(கொஞ்சம் லேட்டா),மற்றபடி என் மீது யாரும் பாய வேண்டாம்,அடியேன் ஒரு வெள்ளந்தி!!!

  ReplyDelete
 36. //குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள் நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள். //

  இது எப்பவுமே எங்கயுமே சரியான போதனை

  ReplyDelete
 37. சந்திப்புக்கு வந்திருந்த அனைத்துப் பதிவர்களின் போட்டோக்களையும் வெளியிட்டால் அடையாளம் கண்டுகொள்ள உதவியாக இருக்கும். முடியுமா?

  ReplyDelete
 38. குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள் நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள்.

  good one seenu

  ReplyDelete
 39. பதிவர் சந்திப்பு என்னை பொறுத்தவரை முழு திருப்தியாகவே இருந்தது..

  பதிவர்கள் நம்மிடம் காட்டிய அன்புக்கு முன்னால்...
  இந்த மண்டபம் சிறியது, வெயில், புழுக்கம்,
  இதுமாதிரியான விஷயங்கள் ஒரு பொருட்டாகவே
  தெரியவில்லை....

  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுரேகா நன்றாக தொகுத்து வழங்கினார்..

  விழாக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் , நன்றிகளும்.!

  ReplyDelete
 40. தெளிவான விளக்கம் நல்ல திட்டமிடல் என்பது மட்டும் நன்றாக விளங்குகின்றது பாஸ்.

  ReplyDelete
 41. வெற்றி! தோல்வி பார்ப்பதற்கு இது திரைப்படம் அல்ல ! சந்திப்பு மன நிறைவாய் அமைந்தது !இதன் பின்புலத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் !
  டென்ஷன் ஆகாதிங்க நண்பரே! நடப்பதெல்லாம் நன்மைக்கே !

  ReplyDelete
 42. இவ்வளவு குறை இருந்ததா என்ன.,..... எனக்கு ஒன்றுமே தெரியவில்லை சீனு !! எவ்வளவு நேர்த்தியாக நடந்தது என்றுதான் இன்று வரை எண்ணி இருந்தேன்...... இனிமேலும் எண்ண போகிறேன்.


  நீங்கள் கொடுத்த உழைப்பும், வேர்வையும் இந்த பதிவர் சந்திப்பை மகத்தான வெற்றி பெற செய்தது என்றால் அது மிகை ஆகாது. நன்றி சீனு !

  ReplyDelete