22 Aug 2013

பதிவர் சந்திப்பு - 2013 - நீங்கள் அறியாத சில தகவல்கள் & வாங்கண்ணா வணக்கங்கண்ணா

பிள்ளையார் சுழி 

மே மாதம் முடியும் வரையிலும் யாருமே பதிவர் சந்திப்பைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கவில்லை. என்னுள்ளும்  ஒரு சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருந்தது, அது இவ்வருடம் பதிவர் சந்திப்பு நடக்குமா நடக்காதா என்று. 


பதிவர் ராஜ் சென்னை வந்தபோது, புலவர் அய்யா வீட்டில் வைத்து நடந்த ஒரு திடீர் சந்திப்பில் தான் அண்ணன் மெட்ராசும் ஆரூர் மூனாவும் இவ்வருட பதிவர் சந்திப்பிற்கான பிள்ளையார் சுழியைப் போட்டனர். ஆனால் கடந்த வருடம் பதிவர் சந்திப்பை முன்னின்று வழிநடத்திய மூத்த பதிவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை, காரணம் சென்ற வருடம் பதிவர் சந்திப்பு முடிந்த பின் ஏற்பட்ட சில தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களை சோர்வடையச் செய்திருந்தது. இதனால் சென்றமுறை ஆர்வமாய் வழிநடத்திய மூத்த பதிவர்களை இம்முறை இளைய பதிவர்கள் உற்சாகப்படுத்த அவர்களும் பழைய உற்சாகத்துடன் இணைய இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உற்சாகமாக களத்தில் இறங்கியது பதிவர் குழு. 

பதிவர் சந்திப்பு முன்னேற்பாட்டுக் குழு 

ஜூலை முதல் வாரம் கே.கே நகரில் இருக்கும் சிவன் பார்க்கில் தொடங்கிய முதல் முன்ஏற்பாட்டுக் கூட்டமானது எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படாமலேயே கலைய, பின் வந்த வாரங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியது பதிவர்கள் குழு. வரவேற்புக் குழு, நிகழ்ச்சி மற்றும் பதிவர் ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு என்று சில குழுக்கள் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு பதிவர் சந்திப்பு நடத்த தொழிற்களம் நிறுவனம் தாமாக முன்வந்து உதவினர், இம்முறை அதுபோல் ஸ்பான்சர் எதுவும் கிடைக்காததால் விருப்பமுள்ள அனைத்து பதிவர்களிடமும் தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


இதில் நான் அதிசயித்து வியந்த மற்றும் மிக மகிழ்ச்சியான விஷயம் யாதெனில் தம்மால் கலந்து கொள்ள முடியாதென்றாலும் பதிவுலகில் நம்மோடு பயணிக்கும் சக பதிவர்கள் சேர்ந்து நடத்தும் விழா என்ற எண்ணத்தோடு பல வெளிநாட்டுவாழ் பதிவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து மிக சிறப்பாக உதவினர். எவ்வளவு பெரிய விஷயம் இது, பதிவுலகில் நமக்கே தெரியாமல் மறைமுகமாக பொதிந்து கிடக்கும் ஒற்றுமையின் வெளிபாடாகவே இதனைக் கருத முடிகிறது. 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல பதிவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர் பதிவர் குழுவைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் பல குடும்ப மற்றும் அலுவல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விழாவிற்கென தனியாக நேரம் ஒதுக்கி எந்த ஒரு வேலையிலும் குறை ஏற்பட்டு விடாதபடி பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கும் இவர்களது உழைப்பிற்கு முதல் வணக்கங்கள். இதில் குறிபிடப்பட்ட வேண்டிய மிக முக்கியமானவர்கள் மதுமதி, ஆருர்மூனா செந்தில், வாத்தியார் பாலகணேஷ் அரசன் மற்றும் ஸ்கூல் பையன். காரணம் இவர்களுக்கு ஒத்துகப்பட்ட பணிகளின் சுமை சற்றே அதிகம்.

ஒவ்வொரு வார ஞாயிறும் தங்கள் மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து! மீட்டிங்கில் கலந்து கொள்ளவே தனி உற்சாகமும் தெம்பும் வேண்டும். கடந்த பத்து வாரங்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடத்த இடமளித்து உதவி வரும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.

டிஸ்கவரி புக்பேலஸ் :  

டிஸ்கவரி புக் பேலஸின் புத்தக விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நடைபெறும் அரங்கில் இயங்க இருக்கிறது. இந்த விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் அனைத்து புத்தகங்களும் பதிவர்களுக்கான சிறப்பு சலுகையாக பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்பதை வேடியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், மேலும் அணைத்து முன்னனி பதிப்பகங்களின் புத்தகங்களும் விற்பனை இங்கே ஆக இருக்கிறது.


உங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை டிஸ்கவரி புக்பேலசின் ஆன்லைன் மூலமாக முடிவுசெய்து டிஸ்கவரியின் என்ற 044-6515 7525 எண்ணுக்கு கால் செய்து கூறினால் பதிவர் சந்திப்பு அன்று  புத்தகங்களை உங்களுக்காக எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். பதிவர்களுக்காக பல சலுகைகள் செய்து தரும் வேடியப்பன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.

புத்தக வெளியீடுகள் 

பதிவர் சந்திப்பின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுவது நாம் எழுதிய புத்தகங்களின் வெளியீடுகள். இம்முறை நான்கு பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அவர்களுக்கு உற்சாகமான வாழ்த்துக்கள் 


பதிவர்கள் தங்களின் அடுத்த படிநிலையாகக் கருதும் தாங்கள் எழுதிய புத்தகங்களை பதிவர் சந்திப்பின் மூலம் வெளியிடுவது நமக்கும் பெருமையே. ஆனால் இதில் நாம் சந்திக்கும் சவால் ஒன்றே ஒன்று, அது நேரமின்மை. அதனால் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் நேரத்தைக் கணக்கில் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் புத்தக வெளியீட்டை முடித்துக் கொண்டால் காலதாமதத்தை தவிர்க்க முடியும்.

மவுன அஞ்சலி 

கடந்த வருடம் மறைந்த மூன்று பதிவர்களான ஆயிரத்தில் ஒருவன் மணி, டோட்ன்டு ராகவன் மற்றும் பட்டாப்பட்டி ஆகியோருக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.

சிறப்பு அழைப்பாளர் :


எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளரான எழுத்தாளர் உயர்திரு பாமரன் அவர்களின் சிறப்புரை நிகழ இருக்கிறது. பதிவர்களுக்கு மற்றும் எழுத்துச் செழுமைக்கு தேவையான விசயங்களைக் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.       

பதிவர் தனித்திறன் நிகழ்வுகள் 

நம்முள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர இது ஒரு சிறிய சந்தர்ப்பம், ஆர்வமுள்ள பதிவர்கள் முன்னேரே ஆருர்மூனா செந்திலையோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரையோ தொடர்பு கொண்டால் நலம்.
 • மெட்ராஸ், ஆரூறார், செல்வின் மற்றும் பிலாசபி இணைந்து ஒரு மேடை நாடகத்திற்கு தயாராகி வருகின்றனர்.
 • சங்கத்து தீவிரவாதி (சதீஷ்) ஒரு மாறுவேடப் போட்டிக்கு தயாராகி வருகிறார் அது சஸ்பென்ஸ்.
 • திண்டுக்கல் தனபாலன் (டி.டி) ஒரு மேடை நாடக ஸ்க்ரிப்ட்டுடன் தயாராக உள்ளார், நடிப்பதற்கு மூன்று பேர் தேவை. உங்களில் யார் அந்த மூன்று பேர். ஆர்வமாய் உள்ளவர்கள் என்னையா அல்லது டிடியையோ தொடர்பு கொள்ளுங்கள்.           

பதிவர் சந்திப்புக் கீதம் 

பதிவுலகில் நமது நண்பர்கள் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. இவ்விசயத்தில் என்னை வெகுவாய்க் கவர்ந்தவர் கோவை ஆவி. பதிவுலகில் மிக ஈடுபாட்டுடன் வலம் வரும் ஆவி பதிவர்களுக்காக ஒரு பாடலை எழுதி தானே மெட்டமைத்துப் பாடியுமுள்ளார்.  ஆவிக்கு பதிவுலகம் மீது இருக்கும் ஆர்வம் அளப்பரியது என்று எப்படி சொல்கிறேன் என்றால் கடந்த மாதம் ஆவிக்கு ஒரு மிகப் பெரிய விபத்து நேர்ந்து தனது இருகைகளிலும் முறிவு ஏற்பட்டு கட்டுண்டார், அந்த நிலையிலும் உற்சாகமாக எழுதிய பாடல் தான் இந்த பதிவர் ஆந்த்தம்.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள் 
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை 
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை 

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம் 
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

மிக்க நன்றி ஆவி.

உணவுக் குழு 

ஆருர்மூனா, ராஜீ அக்கா மற்றும் சிராஜுதீன் தலைமையில் சூடானா சுவையான வெஜ் மற்றும் நான் வெஜ் நமக்காக காத்துள்ளது, வாருங்கள் அவற்றையும் ஒரு பிடிபிடிப்போம்.      

குட்டனுக்கு ஒரு வேண்டுகோள் 

குசும்பு குட்டன் அவர்கள் தினமும் அவரது பதிவில் பதிவர் சந்திப்புக் குறித்து மிக உற்சாகமாக எழுதி வருகிறார். முகம் தெரியாத குட்டனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குட்டன் அவர்களே தங்களது தரிசனம் கிடைக்குமா? உங்களை எதிர்பார்த்து உங்கள் வாசகன் :-)))))


பதிவர் சந்திப்பிற்கான பணஉதவி 

பதிவர் சந்திப்பிற்காக உங்கள் பங்களிப்பைத் தர விரும்பினீர்கள் என்றால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு மூலம் செலுத்துங்கள்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
 
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093

Contact :

044- 24849775 

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
   

வாங்கண்ணா வணக்கங்கண்ணா 


இதுவரை நாம் படித்து ரசித்த எழுத்துக்களின் சொந்தக்காரர்களையும், புதிய அறிமுகங்களையும் தர இருக்கும் பதிவர் சந்திப்பை நிகழ்த்த தலைநகரம் உற்சாகமாக தயாராகி வருகிறது. நீங்கள் தயாராகி விட்டீர்களா...! உங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்த்து... 

உங்கள் நண்பன் 
சீனு

26 comments:

 1. பாடல் எல்லாம் வேறயா? ம்... கலக்குங்க...

  ReplyDelete
 2. நானும் வரேன், நானும் வரேன்! :)

  ReplyDelete
 3. சீனு பதிவர் தனித்திறன் நிகழ்ச்சியில் பங்கேற்க மதுமதி சாரிடம் பேர் கொடுத்துள்ளேன்

  ReplyDelete
 4. கடந்த ஆண்டு பதிவர் சந்திப்பில் கல்ந்துகொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். குளறுபடியில்லாத நிகழ்ச்சி அமைப்பு. யாரும் பின்னால் இயக்குகிறார்களோ என்ற ஐயம் ஏற்படாத கேஷுவலான நிகழ்ச்சிகள். மிகவும் சிறப்பாக அமைந்த மிகச் சில நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. பல இடங்கச்ளிலும் இதை நான் சொல்லி வருகிறேன். இந்த ஆண்டும் சிறப்பாக அமைய எனது இதய்ம் கனிந்த் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. என் ஐயங்களை நீக்கும் அழகான பதிவு...

  ReplyDelete
 6. பாராட்டுகளுக்கு நன்றி சீனு..

  //நாடக ஸ்க்ரிப்ட்டுடன் தயாராக உள்ளார், நடிப்பதற்கு மூன்று பேர் தேவை. //

  மொட்டைத் தலையோட சார் போஸ்ட்ன்னு சொல்ற கேரக்டரோ, இல்ல "நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு" ன்னு சொல்ற கேரக்டரோ இருந்தா நான் ரெடி.. சின்ன வயசுல பாரதியார், திருப்பூர் குமரன் வேஷம் போட்டது. அரிதாரம் பூசி ரொம்ப நாள் ஆச்சி (ஓவர் பில்ட் அப் பா போச்சோ??

  ReplyDelete
 7. நான் வேனா ஞாயிற்று கிழமை இரவு மண்டபத்தில் பாடடும்மா??

  ReplyDelete
 8. சீனுனு ஒருத்தர் வயலின் வாசிக்கபோறாராமே??

  ReplyDelete
 9. Discovery must offer a bigger discount. You are bringing the entire crowd to them. They can also sponsor some of your expenses. I am surprised at the ordinary 10% discount that they are offering.

  ReplyDelete
 10. அருமையான பதிவு, இது தான் நான் கேட்டது. மற்றவர்கள் இது போலவே தொடருங்கள்.

  ReplyDelete
 11. சூப்பர் சூப்பர் சூப்பர் சீனு..... ராஜ்ல ஆரம்பிச்சு என் பழைய நினைவுகளை கிளறியதுக்கு.... நாம் கிட்டத்தட்ட எல்லா வேலைகளையும் முடிக்கும் தருவாயில் உள்ளோம்... அனைவரையையும் வருக வருக என்று வரவேற்கிறேன்....

  ReplyDelete
 12. Excellent post about bloggers meet. Seenu .. you deserve a hug from each one of us ; As usual matured writing.

  ReplyDelete
 13. பலருக்கும் ஆர்வத்தை எகிற வைக்கும் பகிர்வு... வாழ்த்துக்கள் சீனு... அசத்திடுவோம்...

  ReplyDelete
 14. மிக்க மகிழ்ச்சி !! நீங்க எதுவும் தனித்திறமை காட்டலயா ?? :)

  ReplyDelete
 15. ஆவியின் பாட்டு அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி மணிமாறன்

   Delete
 16. சிறப்பு தம்பி பெண்களும் தங்கள் திறமைகளை காட்டுவோம் .. வருவோம்ல..

  ReplyDelete
  Replies
  1. சபாஷ்.. சரியான போட்டி..

   Delete
 17. பதிவர் திருவிழா பற்றிய மிக சிறப்பான பதிவு இதுவே!

  ReplyDelete
 18. சங்கத்துத் தீவிரவாதி சதீஷ் போல குட்டனும் மாறு வேடத்தில் வரலாம்!

  ReplyDelete
 19. சென்னையில் சந்திக்கலாமுங்க

  ReplyDelete
 20. நானும் வருகிறேன் - கொஞ்சம் தாமதமாக. எல்லோரையும் சந்திக்க, அவர்களது திறமையைக் கண்டு மகிழ, பாராட்ட!

  ReplyDelete
 21. ஊர்கூடி தேரிழுப்போம் ஒற்றுமையாய் கொண்டாடுவோம்

  ReplyDelete
 22. போன வருட பதிவர் சந்திப்பு நேரில் பங்கேற்கவில்லை என்றாலும் மனம் முழுக்க சந்தோஷப்பூக்கள்... பங்கேற்றது போல நிறைவான மகிழ்வு... அத்தனை சந்தோஷம்... நம் வீட்டில் கல்யாணம் போல் அத்தனை சந்தோஷம்... இந்த முறை இந்தியா வந்தபோது புலவர் அப்பாவிடம் பேசும்போது அறியப்பெற்றேன்.. அத்தனை அமோகமாக விழா நடந்தப்பின் ஒரு சில பிரச்சனைகள் கருத்து வேறுபாடு ஒருசிலருக்கு இருந்தது என்று.... எல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அன்றே சொன்னேன்...

  இதோ இந்த வருடம் பதிவர் சந்திப்பு விழா போன வருடத்தை விட இன்னும் பிரம்மாண்டமாக.... பதிவர்களின் ஒருங்கிணைப்பும், உழைப்பும், வேலைப்பளுவுக்கிடையே வந்து பதிவர் சந்திப்பு விழாவுக்கான வேலைகளில் ஈடுப்பட்டு...

  எல்லோரும் ஒற்றுமையுடன் பாடுபடுவது இதோ இதில் தெரிகிறது...

  ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் பதிவர் சந்திப்பு விழாவை, பங்கேற்கும் அனைவரையும்...

  தனபாலன் சார் நாடக தயாரிப்பு ஸ்க்ரிப்ட் ரெடியா?

  ஆனந்த் பாடினதை கேட்டேன்.. ரொம்ப அருமையான குரல் வளம்..

  இது நம்ம வீட்டு விழா என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருப்பதால் கண்ணதாசன் சொல்வது போல ஒன்றுகூடி தேரிழுப்போம்... ஒற்றுமையாய் செயல்படுவோம்...

  சந்தோஷமாக இருக்கு...

  ஒவ்வொரு வருடமும் இது தொடரவேண்டும்...

  விழாவுக்காக உழைக்கும் அத்தனைப்பேருக்கும் நன்றியுடனான அன்பு வணக்கங்கள்...

  எப்ப செப்டம்பர் 1 வரும்?

  நானும் காத்திருக்கிறேன்பா...

  பதிவர் விழா சிறப்பாக நடைபெற இறைவனிடம் பிரார்த்திக்கொள்கிறேன்.. மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அனைவருக்கும்...

  ReplyDelete