9 Jul 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 6

அத்தியாயம் 1 | அத்தியாயம் | அத்தியாயம் 3 | அத்தியாயம் | 
அத்தியாயம் 5 

முன்கதை சுருக்கம் 

வினோத் விக்ரம் பாலாஜி மூவரும் ஒரே துப்பறியும் நிறுவனத்தில் வேலை செய்தவர்கள். தற்போது பாலாஜி நெல்லை கலெக்டர். கலெக்டர் பங்களா புகுந்து பாலாஜி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றுள்ளது. கார்த்திக் நெல்லை இன்ஸ்பெக்டர். இந்த கேஸை ஆராய்பவர். ஆஸ்பத்திரியில் அனுமதிகப்பட்ட பாலாஜி காணாமல் போய் பின்பு விக்ரம் மூலம் பாதுகாப்பாக மறைக்கப்பட்ட விஷயம் தெரிகிறது. இந்த இடைப்பட்ட வேளையில் பாலாஜி மீது தாக்குதல் நடத்த ஆஸ்பத்ரியினுள் நுழைந்த மர்ம நபரை போலீசார் தப்ப விட்டுவிட்டனர். அவனது கைரேகை மட்டும் கிடைத்துள்ளது.   

இனி 
"பாஸ் ஹாஸ்பிடல்ல கிடைச்ச கைரேகையும், இங்க கிடைச்ச" என்று ஆரம்பித்த விக்ரமை நிறுத்தி 

"ரெண்டு கைரேகையும் ஒத்துப் போகாம இருந்தா தான் நாம ஆச்சரியப்படனும், இப்ப நம்ம வொர்க் சிம்பிள் அண்ட் ஈசி, ரெண்டு தனித்தனி ஆள தேட வேணாம் பாரு" என்றான் வினோத் 

"ஒரு சின்ன திருத்தம் பாஸ், ஆள் இல்ல ஆவி "

நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பாசனையை ஒரு ஓரமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்கைப் பார்த்து வினோத் கேட்டான் " ஏன் கார்த்திக், இந்த ஆவி, பேய், பூதம் இதெல்லாம் நம்புறீங்களா"

"எனக்கு ஒண்ணும் புரியல வினோத், இறந்து போனவன் கைரகை எப்படி குற்றம் நடந்த இடத்துல பதிவாக முடியும், ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி கைரேகை இருக்க சான்ஸ் இருக்கா?"  விக்ரம் மடியில் இருந்த லேப்டாப்பின் திரையை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டே கேட்டான் கார்த்திக்.

"அண்ட சராசரம் முழுவதும் பல ரகசியங்கள், அதிசியங்கள் நிறைஞ்சிருக்கு கார்த்திக், மறைந்திருக்குற எல்லா ரகசியத்தையும் ஆராய்ச்சியாளர்களால வெளியில கொண்டு வர முடியாது, ஆராய்ச்சி பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது, இந்தக் கைரேகையும் பல ஆச்சரியங்கள தன்னோட கைக்குள்ள வச்சிருக்கு" 

"பாஸ் இப்ப ஏன் சுத்தி வளைக்கிறீங்க" என்றபடி கார்த்திகை நோக்கி, "உலகத்தில ஒரே மாதிரி ஏழு இல்ல எழுபது பேர கூட கண்டுபிடிச்சிரலாம், ஆனா ஒரே மாதிரியான ரெண்டு கைரேகைய, நெவர் யு கேன் பைண்ட். இந்த உலகத்தில எத்தனை கோடி மனுசுங்க பிறந்தாலும் அவங்க எல்லாரோட கைரேகையும் வித்தியாசமாத் தான் இருக்கும் "

"ஒருவேள இறந்து போனவன் கைரேகைய இங்க உபயோகிச்சிருந்தா, கைரேகைய பிரிண்ட் போட எவ்வளவு நேரம் ஆகப்போகுது"

" கார்த்திக், இதுதான் உங்களோட பர்ஸ்ட் இன்வெஸ்டிகேசனா, ரொம்ப குழந்தைதனமா இன்வெஸ்டிகேட் பண்றீங்க, கைரேகை பதிவு பண்றதுக்கு  விரல் நுனியில இருக்குற வியர்வைச் சுரப்பிகள் தேவை, உடம்புல உயிர் தேவை இதெல்லாம் இல்லாம கைரேகைய பதிவு பண்ணவே முடியாது"

"அது எனக்கு தெரியும் விக்ரம், இருந்தாலும் வேற எதாவது வழியில கைரேகைய பதிவு பண்ண முடியுமா, இப்ப தான் டெக்னாலஜியால முடியாதது எதுவுமே இல்லையே, வேணும்னே இறந்து போனவன் கைரேகைய பயன்படுத்தி நம்ம திசை திருப்ப வாய்ப்பிருக்கே "       

"இட் இஸ் எ வேலிட் பாயிண்ட் கார்த்திக், ஆனா அப்படியொரு டெக்னாலஜி இது வரைக்கும் வரல, வர வாய்ப்பும் இல்ல", வினோத்.

"அதனால தான் சொல்றேன், பாஸ் சொன்ன மாதிரி நிருபிக்கப்படா ரகசியங்கள்ல ஆவி பேய் மாதிரியான அமானுஷ்யங்களும் அடக்கம், இந்தக் கைரேகை ஏன் பேயோடதா இருக்கக் கூடாது"

"விக்ரம் பீ சீரியஸ் "

"ஐ'ம் ஆல்வேஸ் சீரியஸ் பாஸ்" விக்ரமின் முகத்தில் இருந்த புன்னகை இன்னும் கொஞ்சம் அதிகமாகியிருந்தது.

" ஆவி, பேய் இதெல்லாத்தையும் கொஞ்ச நேரத்துக்கு மறந்துரு, நீ போய்  வீட்டுக்கு வெளியில ஏதாவது  தடயம் சிக்குமா பாரு, நானும் கார்த்திக்கும் வீட்டு உள்ள தேடுறோம், நாம ரொம்ப ஸ்லோவா மூவ் பண்றோம் விக்ரம்"

" ஓகே பாஸ் " என்று சொல்லிவிட்டு கலெக்டர் தங்கியிருந்த அறையைப் மீண்டும் ஒருமுறைப் பார்த்தான், அந்த அறையே அலங்கோலமாய் இருந்தது, ஜன்னல் கண்ணாடிகள் சிதறியிருந்தன, பாத்ரூம் கதவு உடைபட்டிருந்தது, தரையில் ஆங்காங்கே ரத்தத் துளிகள், போர்முடிந்த பின்னும் அதன் சாட்சியாக நிற்குமே போர்க்களம் அப்படித்தான் இருந்தது கலெக்டர் தங்கியிருந்த அறையும். 

விசிலடித்துக் கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான். பாளையங்கோட்டை சாலையில் இருந்து விலகி  தனிமைப்படுத்தப்பட்ட ஆளரவம் இல்லாத இடத்தில் அமைந்திருந்தது கலெக்டர் பங்களா. யாரேனும் பதுங்கி இருந்து தான் தாக்க வேண்டும் என்று அவசியமில்லை, பங்களாவே பதுங்கிப் போய் தான் இருந்தது.  பங்களாவை சுற்றிலும் முற்செடிகள், தூரத்தில் ஒரு சாரைப்பாம்பு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.

விரோதிகளால் எளிதாக தாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தனிமைப் படுத்தப்பட்ட இடத்தில் கட்டியிருப்பார்களோ என்று அந்த இடத்தைப் பார்த்து வியந்த விக்ரம், பங்களா கட்டுவதற்காக இடம் தேர்ந்தேடுத்தவனை முதலில் விசாரிக்க வேண்டும் என்று எண்ணி மெல்லச் சிரித்தான்.

சுறுசுறுப்பான அந்தப் பகலிலும் கலெக்டர் பங்களா மட்டும் மவுனத்தின் சாட்சியாக சோம்பேறியாய் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதிகளை தீவிரமாக நோட்டம் விட்டான். சமீபத்திய மழையின் ஈரம் மணலில் மிச்சமிருந்தது, ஆட்கள் நடந்த தடங்களும், சமீபத்தில் நான்கு சக்கர வாகனம் உருண்டதற்கான தடயங்களையும் அந்த மழை மிக எளிதாக சேமித்து வைத்திருந்தது.

எங்கும் மவுனம் மவுனம் மவுனம். காதுகளை இன்னும் கொஞ்சம் கூர்தீட்டினால் பங்களாவின் உள்ளே வினோத்தும் கார்த்திக்கும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட எளிதில் கேட்டுவிடலாம், அத்தனை மவுனம்.

இன்று சம்பவம் நடந்து முடிந்த இரண்டாம் நாள் காலை, முதல் நாள் காலையில் வந்த பொழுது அவனால் பெரிதாக எதையும் ஆராய முடியவில்லை, போலீஸ், எல்லாவற்றிக்கும் மேல் கார்த்திக், இவனை சுதந்திரமாக செயல்படவிடவில்லை. இருந்த போதும் சில விசயங்களை கவனித்திருந்தான். முதல் நாள் கவனித்த விசயங்களில் இருந்து ஏதேனும் மாற்றம் தெரிகிறதா என்று கவனித்துக் கொண்டே ஒவ்வொரு அடியாக மெல்ல நகர்ந்து கொண்டிருந்தான்.

கலெக்டர் வீட்டைச் சுற்றிலும் எழுப்பட்டிருந்த  சுற்றுச்சுவர் மிகப்பெரியது, மிக உயரமானது, எவ்வித உதவியும் இல்லாமல் யாராலும் உள்ளே நுழைய முடியாது, அப்படிப்பட்ட சுவரை குண்டு வைத்து தகர்த்து தான் உள்ளே சென்றிருந்தார்கள். இதை முதல் நாளே விக்ரம் கண்டு பிடித்துவிட்டான், ஆனால் போலீஸ் தரப்பில் யாரும் நம்புவதாய் இல்லை. இதை தெளிவுபடுத்த தேவையான ஆதாரமும் அவனிடம் இல்லை.

அருகில் இருந்த கருவேலங் காட்டுக்குள் கூட தகர்க்கப்பட்ட சுவற்றில் இருந்து விடுபட்ட செங்கல்கள் சிதறியிருந்தன. இந்நேரம் அந்த முள்ளுக் காட்டுக்குள் யாரோ ஓடுவது போன்ற சலலப்பு கேட்டு காதுகளை கூர்தீட்டினான், தூரத்தில் இரண்டு நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. சூரியனின் வெளிச்சம்கருவேல மரங்களின் சின்ன இலைகளை ஊடுருவிக் கொண்டு மஞ்சளாய் இறங்கிக் கொண்டிருந்தன. பார்வையை மெல்ல படரவிட்டான், யாரும் இல்லை, ஆனால் யாரோ ஒருவன் அவனை கவனிப்பது  போலவே உணர்ந்தான்.

நின்ற இடத்தில் இருந்து அடுத்த அடியை எடுத்து வைக்கும் போது தான்  அவன் காலில் தட்டுப்பட்டது அது , அதன் மேல் இருந்த சிவப்பு நிற தாளில் எழுத்துக்கள் அழிந்தும் அழியாமலும் கோலமிடபட்டிருந்தன. அதைக் கையில் எடுத்தான்.

"வினோத், இதப் பார்த்தீங்களா, இப்ப தான் கீழே கிடந்து எடுத்தேன்" என்றபடி தன கையில் இருந்ததை வினோத் கைக்கு மாற்றினான் கார்த்திக்.

கார்த்திக் கொடுத்த டைரியை ஆர்வமுடன்  வாங்கினான் வினோத், மிகப் புதிதாய் இருந்தது, பல தேதிகளில் எதுவும் எழுதப் பட்டிருக்கவில்லை.

"உங்க கலெக்டர் பாலஜியோட டைரி கார்த்திக், விக்ரம்ட்ட இருந்து பாலாஜி கத்துகிட்ட பழக்கம், டைரி எழுதறது கூட ஒரு கலை . அத விக்ரம்ட்ட இருந்து ஈசியா கத்துகலாம்" என்று கூறிக்கொண்டே கார்த்திக்கை நோக்கி "இத எங்க இருந்து எடுத்தீங்க கார்த்திக்" என்றான்.

"கலெக்டரோட மெத்தைக்கு அடியில இருந்தது, தற்செயலாமெத்தைய நகர்த்தினப்போ கண்ணுல சிக்கினது, எதாவது தகவல் கிடைக்குமா பாருங்க " என்றான்.

"டைரிய எழுதினவங்களே அத படிக்கிறத விட, இந்த மாதிரி திருட்டுத் தனமா படிக்கிறதுல இருக்குற சுகமே தனி, பட் இதுல பெரும்பாலான பக்கங்கள் காலியா இருக்கு, சமீபத்தில ஏதாவது எழுதி இருக்கானா பார்க்கலாம்" என்று கூறிக் கொண்டே டைரியைப் புரட்டியவன் அந்த எழுத்துகளைப் பார்த்ததும் நிறுத்தினான். கார்த்திக்கிற்கு மட்டும் கேட்கும் படி வாசிக்கத் தொடங்கினான்.

'வெகுநாட்களுக்குப் பின் இன்று தான் உன் நினைவு வந்துள்ளது, அதனால் தான் உன்னுடலில் கிறுக்கத் தொடங்கிவிட்டேன். வினோத்திற்கு அப்புறமாய் என்னால் ஒருவருடன் சகஜமாய் பேச முடியும் என்றால் என் இனிய டைரியே அது நீ மட்டும் தான். முக்கியமான ஒருவனைப் பற்றி, என் வாழ்வில் திடிரென்று தோன்றி தொல்லை கொடுக்க ஆரபித்தவனைப் பற்றி உன்னிடம் சொல்லப் போகிறேன், வேறு யாருமில்லை, இவ்வுலக வாழ்வில் பாவங்களை மட்டுமே  செய்து கொண்டு வாழ்க்கையைக் கடத்தி விட முடியும் என்று நினைகிறானே கேசவ பெருமாள் அவனைப் பற்றி எழுத எவ்வளவோ விஷயங்கள் உள்ளது என்னிடம்.

ஊரைப் பொறுத்தவரை அவன் வெறும் மணல் கொள்ளையன், ஆனால் யாருக்கும் தெரியாது அவன் ஒரு தேசத் துரோகி என்று, அவனைப் பற்றிய விசயங்களை உன்னிடம் சொல்வதற்குக் கூட சிறிது தயக்கமாய் உள்ளது, எங்கே நானறிந்த ரகசியங்களை சத்தமாய் அந்த கேசவ பெருமாளிடம் சொல்லிவிடுவாயோ என்று பயமாய் உள்ளது.

காரணம் அவனது அடாவடித்தனத்தை அத்தனை எளிதாய் முடிவுக்குக் கொண்டுவந்துவிட முடியாது, நிதானமாய், புத்திசாலிதனமாய் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே உள்ளது. அதனால்தான் சொல்கிறேன் நானறிந்த ரகசியங்களை உன்னிடம் சொல்வதற்குக் கூட சிறிது தயக்கமாய் உள்ளது. 

ஏற்கனவே என்னை மிரட்டத் தொடங்கிவிட்டான், என் உயிருக்கு பொறி வைத்துவிட்டான், அவனைப் பற்றி எனக்குத் தெரியக் கூடாத அத்தனை ரகசியங்களையும் நான் தெரிந்து கொண்டேன், அதையும் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான், இருந்தும் எல்லாவற்றையும் மீறி கேசவ பெருமாள் நான் உன்னிடம் சொல்ல விரும்பாத ரகசியம் ஒன்று உள்ளது.... அது.... 
உன்னைத் தொடர்கிறேன்...' 

27 comments:

 1. இந்தத் தொடர் எழுதுவதில் இடையிடையே ஏற்பட்ட தடங்கலுக்கு மிகவும் வருந்துகிறேன், இனி இந்தத் தொடர் எவ்வித தடங்கலும் இல்லாமல் வாரம் இருமுறை வெளிவரும் என்று உறுதி கூறுகிறேன்.

  இந்தத் தொடர் எழுத தொடர்ந்து ஊக்கமளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...

  ReplyDelete
 2. டைரி கிடைத்தது புதையல் போல் நிறைய
  ரகசிங்களை தந்திருக்கிறது ..!

  ReplyDelete
 3. //சின்ன திருத்தம் பாஸ், ஆள் இல்ல ஆவி...//

  எல்லாப் பழியையும் என் மேலேயே போட்டா எப்படி.. மேலே இருக்கிரவனுக்கும் கொஞ்சம் குடுங்க.. ;-)

  பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் சீனு ஆயிட்டீங்க!! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா யாரு பாஸ் அந்த மேல இருக்குறவன்... மேல இருக்கவன் ரொம்ப அப்பாவி பாஸ் :-)

   //பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் சீனு ஆயிட்டீங்க!! வாழ்த்துகள்!//

   இத எதிர்கட்சிக்க்காரன் பார்த்தா என் கதி என்னவாகுறது :-)

   Delete
  2. அ(ப்பா)வி ஆவி கொலையும் பண்ணுமா !

   Delete
 4. திடிரென்று தோன்றி தொல்லை கொடுக்க ஆரபித்தவனைப் பற்றி உன்னிடம் சொல்லப் போகிறேன்///கதையில் விறுவிறுப்பு இருக்குது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கவியாழி :-)

   Delete
 5. என்னடா காணோமேனு பார்த்தேன் :)
  சுவாரசியம் குறையாமல் தொடர்வதற்குப் பாராட்டுக்கள்.
  கைரேகை நுட்பத்தை இன்னும் கொஞ்சம் இழுத்துப் பார்த்திருக்கலாமோ?

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அப்பாதுரை சார், எப்பாடு பட்டாவது இந்த தொடரை முடித்துவிட வேண்டும் :-)

   //கைரேகை நுட்பத்தை இன்னும் கொஞ்சம் இழுத்துப் பார்த்திருக்கலாமோ?// வேறுறொரு பகுதியில் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பேசி விடுவோம்

   Delete
 6. அமானுஷ்ய தொடர்போல விறுவிறுப்பாக இருக்கிறது சீனு..தொடர்ந்து எழுதுங்கள். FONT மட்டும் கொஞ்சம் சிறியதாக மாற்றிவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மணிமாறன், எழுத்துரு பிளாக்கர் தருவதை தான் உபயோகிக்கிறேன், MS WORD உபயோகித்தால் பிரச்னை வருகிறது... ஏதாவது மாற்றுவழி உள்ளதா ?

   Delete
 7. சென்ற இரண்டு பாகங்களையும் இப்போது படித்துவிட்டு இதைப் படித்தேன். சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறாய் சீனு. தொழில்நுட்ப விவரங்களோடு கதையை நகர்த்துவது ரசனை! இறந்தவனின் கைரேகை எப்படி அந்த இடங்களில் வர முடியும் என்பதற்கான பதிலை நான் யூகித்து வைத்திருக்கிறேன். அந்தப் புதிரை நீ அவிழ்க்கும் போது சரிபார்த்துக் கொள்ள ஆவலுடன் காத்திருப்பு! அதென்ன... தொடரும் போடறதுக்கு முன்னால கதையோட டைட்டில் வரணும்னே அழுத்திச் சொன்ன மாதிரி தெரியுதே... டைட்டிலுக்கும் கதைக்கும் என்னய்யா சம்பந்தம்னு யாரும் கேட்றப் போறாங்கன்னு பயமா? ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. கடைசி ரெண்டு பாகத்துக்கு ஆளக் காணோமேன்னு தேடினேன், சேர்த்தாப்ல படிச்சி நல்லாவும் இருக்குன்னு சொன்னீங்களே நன்றி சார் :-)

   //அந்தப் புதிரை நீ அவிழ்க்கும் போது சரிபார்த்துக் கொள்ள ஆவலுடன் காத்திருப்பு// அது அவ்ளோ பெரிய ட்விஸ்ட் இல்ல சார், நீங்க என்ன யூகிச்சீங்கன்னு சொல்லுங்க, நல்லா இருந்தா நான் அதையே யுஸ் பண்ணிக்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

   //டைட்டிலுக்கும் கதைக்கும் என்னய்யா சம்பந்தம்னு யாரும் கேட்றப் போறாங்கன்னு பயமா// ஹா ஹா ஹா அப்படில்லாம் இல்ல சார் , அங்க தான் ஒரு ட்விஸ்ட் இருக்கு

   Delete
 8. விக்ரம் தோட்டத்தில் தேடிக் கொண்டிருக்க, காட்சி எப்போது பங்களா உள்ளே மாறியது என்று தெரியாமல் வினோத் கையில் டைரியைத் தரும் கார்த்திக்! விக்ரம் கொ.கா. வசந்த் மாதிரி அடிபட்டு விடுவானோ! ம்... தொடருங்கள் சீனு!

  ReplyDelete
  Replies
  1. சும்மா காட்சிய அப்படி பார்த்தேன் சார்.. சுஜாதாவின் கொலையுதிர்காலம் அளவுக்கு எதிர்பாக்ரீங்களே அவரு லெஜன்ட்.. :-)

   Delete
 9. சுவாரஸ்யமாக செல்கிறது... பாராட்டுக்கள்... நடுவில் காதல் கடிதங்கள் பகிர்ந்து கொண்டதால் கதை சிறிது மறந்து விட்டதும் உண்மை...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இனியும் உங்களை மறந்து போடா விட மாட்டேன் டி.டி

   Delete
 10. பொதுவாக நான் கதைகள் எதுவும் படிப்பதில்லை! அட! நம்ம சீனு கதையா ? என்றுதான் படித்தேன் ! அருமை! சுவை பட சொல்கிறீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி புலவர் அய்யா.. என் எழுத்துக்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு

   Delete
 11. துப்பறியும் நாவல்களை படிக்கும் போது எனக்குள் பெரும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அப்படி ஒரு உற்சாகத்தையும் விறுவிறுப்பையும் உங்கள் எழுத்தில் பார்கிறேன் தொடருங்கள் விரைவில் முழு நாவலை புத்தக வடிவில் பார்க்கலாம் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ... உங்கள் உற்சாகம் குலையாமல் தொடர முயல்கிறேன் :-)

   // விரைவில் முழு நாவலை புத்தக வடிவில் பார்க்கலாம் வாழ்த்துக்கள்// இதுவரை அப்படி ஒரு எண்ணமில்லை... என்றாவது ஒருநாள் நடப்பின் மகிழ்ச்சியே

   Delete
 12. நல்ல விறு விறுப்பாக போகிறது...

  ReplyDelete
 13. காதல் கடிதம் போட்டியினால் தடங்கல் ஏற்பட்டு விட்டதோ என நினைத்தேன்.... சீக்கிரமா முடிச்சுடுப்பா! புதுசா படிக்கும்போது பழைய பகுதிகளோடு கனெக்ட் பண்ண கஷ்டமா இருக்கு!

  ReplyDelete
 14. என்னடா இது சுவாரஸ்யமான தொடர் வரலையேன்னு பார்த்தேன்! இன்னிக்கு படிச்சதும்தான் நிம்மதியாச்சு மனசு! நேத்தே அப்டேட் பார்த்தாலும் இன்னிக்குத்தான் படிக்க முடிஞ்சது! நல்ல ட்விஸ்டுடன் விறுவிறுப்பாய் செல்கிறது தொடர்! தொடர்கிறேன்!

  ReplyDelete
 15. // பங்களா கட்டுவதற்காக இடம் தேர்ந்தேடுத்தவனை முதலில் விசாரிக்க வேண்டும் என்று எண்ணி மெல்லச் சிரித்தான். // ரசித்தேன்

  ReplyDelete
 16. வணக்கம்
  இன்று வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/2.html?showComment=1379461793265#c1036978093212335884

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete