29 Jun 2013

காதல் கடிதம் பரிசுப் போட்டி - மூன்றாம் வார தகவல்கள்



திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டிக்கு சற்றும் எதிர்பாராத வகையில் நீங்கள் அளித்த உற்சாகம் மிக சந்தோசமாய் உள்ளது. அவ்வபோது உங்களுக்கு நியாபகப் படுத்தவும் உற்சாகப்படுத்தவும் வாரம் ஒருமுறை போட்டி குறித்த தகவல் அடங்கிய இந்த பதிவு வெளியாகும்.

ஒவ்வொரு வாரமும் இந்தப் பதிவு புதுப்பதிவாக வெளிவராது, புதுப்பிக்கப்பட்ட பதிவாக வெளிவரும்.

இப்பதிவில் போட்டியில் கலந்து கொள்வோர்களின் விபரம், அவர்கள் எழுதிய பதிவுகளின் லிங்குகள் போன்றவை புதுபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

போட்டி குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட அத்தனை நண்பர்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி. 

போட்டியில் கலந்துகொள்ள சம்மதித்தவர்களின் பெயர் பட்டியல்.

பதிவர்களின் பெயர்களின் மீது கிளிக்கினால் அவர்களது தளம் திறக்கும்...

போட்டியில் பங்கு கொள்வோர் அனைவருக்கும் உற்சாகமான வாழ்த்துக்கள். 

***********************

முதல் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

நண்பர்கள் கே.எஸ்.எஸ்.ராஜ் - நான் எழுத நினைத்த காதல் கடிதம் 





இரண்டாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

வெற்றிவேல் - காதல் கடிதம் திடங்கொண்டு போராடு பரிசுப் போட்டி 

ஜே தா - காதல் கடிதம் 

சிவநேசன் - காதல் கடிதம் பரிசுப் போட்டி - திடம்கொண்டு போராடு 

அகில் குமார் - திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி 

மாலதி - திடங்கொண்டு போராடு காதல் கடிதம் 

மூன்றாம் வாரம் காதல் கடிதம் எழுதியவர்கள் 

தென்றல் சசிகலா - எழுத நினைத்த காதல் கடிதம் 

ஜீவன் சுப்பு - கலவரகாரனின் காதல் கடிதம் 

கிரேஸ் -  எழுத மறந்த காதல் கடிதம் 

கோவை ஆவி - உறக்கம் பறித்த சிநேகிதியே 
***********************

இப்போட்டியில் பங்கு கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம். உற்சாகத்துடன் பங்கு கொள்ளுங்கள். பதிவுலகம் மறக்க முடியாத ஒரு காதல் கடிதம் படைப்போம்.

பின்வரும் படத்தினை உங்களது தளத்தில் இப்போட்டி பலரையும் சென்று சேர உதவுங்கள்.



Layout -> ADD Gadjet -> HTML/JAVA Script  

<a href="http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html" target="_blank"><img src="http://3.bp.blogspot.com/-Kaccb-igmGc/UbIbCtrQWkI/AAAAAAAACP4/lVw_Gl2IKfg/s1600/seenuguru.gif"/></a>



நன்றி 
சீனு  

24 comments:

  1. இன்று காலை நான் எழுதிய பதிவு போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டதும் மீண்டும் பதிப்பிக்கிறேன்... சிரமத்திற்கு வருந்துகிறேன்

    ReplyDelete
  2. நல்ல முடிவு... உங்களின் கடிதமும் மேலும் சிறப்புடன் வரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ம்ஹூம் இது போங்காட்டம் ...இப்பவே சீனு கடுதாசிய படிக்கோணும்...

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //அகில் - ஆசையில் ஓர் கடிதம் //பிரேம்குமார் அன்பரே மாற்றவும்

    ReplyDelete
  6. உங்க போட்டி தயவில் நிறைய பதிவர்களின் தளங்களுக்கு செல்ல முடிகிறது - பெயர்/சுட்டிகளுக்கு நன்றி சீனு. நிறைய அட்டகாசமான எழுத்துக்களை மிஸ் செய்திருக்கிறேனே!?

    ReplyDelete
  7. அருமையான பதிவு.... ஒரு தளத்தில் இருந்து எல்லா கவிதைகளையும் படித்துவிடலாம்

    ReplyDelete
  8. /// அப்போது ஒருவர், சராசரி இந்திய உயரத்தில், என்னை விட அழகான கண்ணாடி அணிந்து கொண்டு, என்னை போல் ரெண்டு நாள் வளரவிட்ட தாடி மீசையோடு வந்து பேசினார்...///

    Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_8499.html

    வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தாடி மீசையா? யாருக்கு?

      Delete
  9. யோவ் இதுல பாசித் பேர எங்க காணம்ய்யா, அவரையும் சேத்துக்கோங்கையா, நல்லா எளுதுவாப்ள.!

    ReplyDelete
  10. அட பெரிய லிஸ்டாக இருக்கிறதே!

    காதல் கடிதம் எழுதுவதற்கு எத்தனை போட்டி! :)))

    தொடர்கிறேன்.....

    ReplyDelete
  11. இந்த
    மீசைக்கார
    தம்பிதொலலைதாங்கலியே

    ReplyDelete
  12. நல்ல முயற்சி.

    ReplyDelete
  13. நாங்க எழுதி தந்தா அதைவச்சி நீங்க உங்க காதலியிடம் கொடுத்து நீங்க எழுதியதாய் காதலை ஆரம்பிக்கப் போறிங்களா?

    ReplyDelete
  14. போட்டியில் எல்லோரும் சாதனை படைக்க வேண்டும் சீனுவின் உந்துதலில்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  15. இன்னும் 34 காதல் கடிதங்கள் வர வேண்டும்...!

    ReplyDelete
  16. நானும் எழுதுகிறேன்

    ReplyDelete
  17. காதல் கடிதம் ! கவிஞர் இரா .இரவி
    என்னவளே .நான் நலம் என்று எழுத மாட்டேன் .உன் நினைவால் நான் நலமாக இல்லை .உன்னுடன் பேசுவதாக நினைத்து எனக்கு நானே தனியாக பேசுகிறேன் .என்னைப்
    பார்ப்பவர்கள் பைத்தியம் என்று நினைக்கின்றனர் .ஆம் உன் மீது எனக்கு பைத்தியம்தான் .செய்தித்தாள் ,வார இதழ் ,அலுவலக கோப்பு எதை திறந்து பார்த்தாலும் உன் முகமே தெரிகின்றது .மறக்க நினைக்கின்றேன் முடியவில்லை .மலரும் நினைவுகளாய் உன் நினைவுகள் மலர்ந்துகொண்டே இருக்கின்றன .இங்கு நானும் அங்கு நீயும் ஒரே நேரத்தில் ஒரே நிகழ்வை நினைத்துப் பார்க்கிறோம் .நமக்குள் காதல் அலைவரிசை ஒன்றாக உள்ளது .எனக்குள் உள்ள காதல் நோயிக்கான மருந்து உன் இதழ்களில் உள்ளது .நான் இங்கு .நீ அங்கு .என் மனதில் காதல் கங்கு .கடிதம் கண்டவுடன் மின்னல் என உடன் வா .இந்த காதல் நோயாளியை உடன் வந்து காப்பாற்று .சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் உன் முகமே தெரிகின்றது .விபத்து நடக்கும் முன் வந்து என்னை காப்பாற்று .

    ReplyDelete
  18. நானும் ஒரு கடிதம் எழுதலாம்னு இருக்கேன், ஆனா அதை என் ப்ளாக்கில் போட விரும்பலை, என்ன பண்ணலாம்?

    ReplyDelete
    Replies
    1. பாஸ் இதுக்கொரு பதிலை சொல்லி இருக்கலாம்ல.....

      Delete
    2. வணக்கம் பன்னிகுட்டி அண்ணே,

      காதல் கடிதம் போட்டி குறித்து உங்களுக்கு பதில் அளிக்காததற்கு மிகவும் வருந்துகிறேன்... ஏதேதோ காரணம் சொல்லி மழுப்ப மனம் வரவில்லை.. தவறு தான்....

      எனது மின்னஞ்சலுக்கு வந்த மெயில்களுக்கு கவனமாக பதில் அனுப்ப முடிந்த என்னால் வலைபூவிற்கு வந்து கருத்திட்ட உங்கள் கருத்துக்கு பதில் அளிக்க முடியாமல் போய் விட்டது....

      அண்ணன் மெட்ராஸ் மூலமும் சக பதிவர்கள் மூலமும் உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் நான் மிகவும் மதிக்கும் ஒரு பதிவருக்கு பதில் அனுப்பாமல் இருந்தது தவறு தான்...

      உங்கள் ஆர்வம் பெரிது... இவ்வளவு ஆர்வமாக மீண்டும் வந்து கேட்பீர்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.. இனி ஒரு தருணத்தில் இது போல் ஒரு பிழை நேராமல் பார்த்துக் கொள்கிறேன் (காலம் கடந்த பதில் என்ற உணர்வும் என்னுள் இருக்கிறது)

      Delete
  19. //பன்னிக்குட்டி ராம்சாமி17 July 2013 13:09

    நானும் ஒரு கடிதம் எழுதலாம்னு இருக்கேன், ஆனா அதை என் ப்ளாக்கில் போட விரும்பலை, என்ன பண்ணலாம்?//

    நீங்க மொட்டையா 'கடிதம்' என்று சொன்னது தான் கொஞ்சம் உதைக்குது...!

    காதல் கடிதமா? ஆப்ப தாரளாமா அனுப்புங்கள் எனக்கு! என் ப்ளாக்கில் போடுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. அது காதல் கடிதம் தான் பாஸ், உங்க ப்ளாக்ல போட்டா போட்டிக்கு ஒத்துக்குவாங்களா? இதுல வில்லங்கம் எதுவும் இல்லியே?

      Delete