23 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - அத்தியாயம் 4


அத்தியாயம் 1 | அத்தியாயம் | அத்தியாயம் 3 

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தத இரவு எட்டு மணி . காற்றில் குளுமையும் கருமையும் முழுவதுமாய் படிந்து விட்ட போதும் 108ன் அவசர அலறல் சப்தம் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது. நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கிடைத்த மிக முக்கியமான மருத்துவத்தோழன். தனியார் மருத்துவ தெய்வங்கள் கைவிரிக்கையில் அரவணைத்து மருத்துவமளிக்கும் ஆபத்பாந்தவன்.

தற்போது கலெக்டர் பாலாஜியை தொலைத்துவிட்ட தவிப்பிலும், கைக்கு சிக்கிய மர்ப நபரை தப்பிக்கவிட்ட பரிதவிப்பிலும் காவல்துறையுடன் சேர்ந்து கையைப் பிசைந்து கொண்டிருந்தது.  "கார்த்திக், பாலாஜி கடத்தப்பட்ட விஷயம், கடத்தப்பட்டதாவே இருக்கட்டும், நம்பிக்கையான பெரிய தெய்வத்துட்ட மட்டும் பாலாஜி பற்றிய தகவல் சொல்லுங்க", வினோத்.

"பாஸ், இந்நேரம் கேசவ பெருமாள் கூட்டத்துக்கு தகவல் கிடைச்சு தீவிரமா தேடத் தொடங்கி இருப்பாங்க,அதனால போலீஸ் கிட்ட பாலாஜி கடத்தப்படலைன்ற உண்மைய சொல்றதுல தப்பு இல்ல" 

"இல்ல விக்ரம், போலீஸ்க்கு தகவல் தெரிஞ்சா அது மீடியாவுக்கும் தெரிஞ்ச மாதிரி, மீடியா எல்லாருக்கும் நண்பன், அதனால இந்த விசயத்த இப்போதைக்கு எஸ்.பி கிட்ட மட்டும் சொல்லுவோம், எஸ்.பி ரொம்ப இண்டெலிஜெண்ட் அவர் அண்டர்ஸ்டான்ட் பண்ணிப்பாரு அண்ட் கேசவ பெருமாள் கூட்டம் கொஞ்சம் தலைய பிய்ச்சுகட்டுமே" கார்த்திக் அமைதியாக சிரித்துக் கொண்டே ஜீப்பை மருத்துவமனை பார்கிங்கினுள் செலுத்திக் கொண்டிருந்தான்.

'போலீஸ்க்கு தகவல் தெரிய வேண்டாம்ன்ற நம்ம பிளான்ல நீங்க எதிர்பார்த்த மாதிரியே கார்த்திக் விழுந்துட்டாரு. சந்தோசம் தான பாஸ்' என்ற தொனியில் விக்ரம் வினோத்தைப் பார்த்த பொழுது வினோத் மையமாய் தலையாட்டினான்.

மீடியாவின் கேமராக் கண்கள், மைக் மற்றும் கேள்விகள் அனைத்தையும் தவிர்த்து மூன்று பேரும் வேகவேகமாக மருத்துவமனையினுள் நுழைந்தார்கள். 

"வினோத் இன்னும் ரெண்டு நாளைக்கு வேணா மீடியாட்ட இருந்து உண்மைய மறைக்க முடியும், அதுக்கு முன்னாடி சம்திங் வீ நீட் டு டூ, இல்லாட்டா காவல்துறை மானம் கப்பலேரிரும், உயரதிகாரிகளக் கூட சமாளிச்சிரலாம் ஆனா இந்த மீடியா, அப்புறம் இவங்க கூட புதுசா சேர்ந்திருக்க பிளாக், எப்.பி, ட்விட்டர் நினச்சி பார்த்தாலே பயமா இருக்கு" மூச்சை பெரிதாக இழுத்துவிட்டான் கார்த்திக். 

கார்த்திக்கின் பேச்சிலும் உண்மை இல்லாமல் இல்லை, இருந்தாலும் அரசாங்கத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகள்; பாலாஜி கடத்தப்பட்டது பற்றிய உண்மையை மறைக்க வேண்டும் என்று வினோத்தை கட்டாயப்படுத்தியது.

பேசிக் கொண்டே ஐ.ஸி.யு வார்டை அடைந்தபோது, தகவல் தெரிவித்த எஸ்.ஐ, "இன்னிக்கு ஐ.ஸி.யு வார்ட்பாய் ட்யுட்டியில ஆறு பேரு இருந்தாங்க சார், இந்த ஹாஸ்பிடல்ல இருக்குற எல்லா வார்ட்பாய்க்கும் எல்லாரையும் தெரியும், புதுசா யாராவது வந்தாக் கூட ஈஸியா கண்டு பிடிச்சிருவாங்க, அப்படி புதுசா வந்தவன் கூட பேசிட்டு இருக்கும் போது அவங்களுக்குள்ள வாக்குவாதம் ஆகியிருக்கு, அந்நேரம் வார்ட்ல இருந்த நம்மாளுங்க என்னன்னு விசாரிக்கும் போது தப்பிச்சி ஓட பாத்ருக்கான்."

"துரத்தி போய் சட்டைய புடிச்சிருக்காங்க இருந்தாலும் சட்டைய கழட்டி எறிஞ்சிட்டு ஓடியிருக்கான், வெளியில இருந்த ப்ளு கலர் மாருதி ஆம்னியில ஏறி தப்பிசிருக்கான், துரத்துன ரெண்டு போலீசுமே கான்ஸ்டபில்ஸ். அவங்ககிட்ட கன் இல்ல, அதான் சூட் பண்ண முடியல" தேவையான தகவல் அனைத்தையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறி முடித்தார் எஸ்.ஐ. இருந்தாலும் அவர் முகத்தில் தப்பவிட்ட பரிதவிப்பு முகத்தை பதட்டமாய்க் காட்டியது.      

மருத்துவமனை டீன் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்.  கார்த்திக் அவரது தலைக்கு மேலிருந்த  சீசீடிவியைப் பார்த்துக் கொண்டே டீனிடம் "சார், இந்த சீசீடிவி மானிடர் ரூம் எங்க இருக்கு தெரியுமா?"

டீன் அருகில் இருந்த மருத்துவமனை நிர்வாகி, "சார் நேத்து நைட்ல இருந்து எந்த சீசீடிவியும் வொர்க் ஆகல, கேபிள் எல்லாம் எலி கடிச்சி போட்ட மாதிரி கட் ஆகியிருக்கு, சரி பண்றதுக்கு சென்னையில இருந்து தான் ஆள் வரணும்".

"லாஸ்ட் ஹோப், கை ரேகை எதாவது இருக்கா, அந்த ஆள் கிளவுஸ் எதுவும் போட்ருந்தானா" கார்த்திக் குரலில் சலிப்பு மட்டும் மிஞ்சி இருந்தது.

"கிளவுஸ் போட்ட மாதிரி தெரியல ஸார், அவன் தள்ளிட்டு வந்த வீல் சேர் அந்த இடத்துல அப்டியே இருக்கு, நிச்சயம் அதுல பிரிண்ட்ஸ் இருக்க சான்ஸ் இருக்கு"

"பாஸ் கேன் யு பீலீவ் திஸ்"

"அதான் எனக்கும் தெரியல விக்ரம், சீசீடிவிய அவுட் பண்ற அளவுக்கு பிளான் பண்ணினவன், கிளவுஸ் போடாமலா நடமாடியிருப்பான், சம் திங் டிபரண்ட்", வினோத் கூறிவிட்டு மேலும் தொடர்ந்தான். "கார்த்திக் பாரன்சிக் ஆளுங்க வந்தாங்களா"  

"கலெக்டர் பங்களால பிரின்ட்ஸ் எடுக்றதுக்காக என்கொயர் பண்ணினோம்,  பாரன்சிக் டீம்ல ரெண்டு பேரு லீவ்ல போயிருக்காங்க, இன்னொருத்தரு புதுசு, மதுரைக்கு மார்னிங்கே தகவல் சொல்லிட்டோம், இந்நேரம் வந்த்ருபாங்க" 

கைரகை நிபுணர்கள் வருவதற்குள் விக்ரமும் வினோத்தும் ஹாஸ்பிடலை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டனர்.

"என்னதான் நம்மாளுங்க அரசாங்க ஆஸ்பத்திரின்னு ஒதுக்கினாலும் எமெர்ஜென்சி ட்ரீட்மெண்ட் கொடுக்கறதுல இவங்கள மிஞ்ச வேற ஆளு கிடையாது, ரொம்ப ஸ்பீடா வேல பார்பாங்க " வினோத் 

"எவ்வளவு காஸ்ட்லியான மருந்தா இருந்தாலும் ப்ரீ தான் பாஸ், எத்தனையோ உயிர காப்பாத்தின டாக்டர்ஸ் இங்க சர்வ சாதாரணமா நடமாடுறாங்க, பலரோட சுயமும் சேவையும் ஒருசிலரோட சுயநலத்தால ஈசியா மறஞ்சு போயிருது , இங்க இருக்க வார்ட் பாய்ல இருந்து ஆயா மொத்தக் கொண்டு எல்லாரையும் பணத்தால வாங்கிரலாம் பாஸ்"

"சம்பவ இடத்துல இருந்த வார்டுபாய விசாரிக்கணும்,ஏன் அவங்களுக்குள்ள வாக்குவாதம் வந்தது, வார்டுபாய் யாரையும் பணம் கொடுத்து வளைச்சு போட்ருக்காங்களா, எல்லா விசயத்தையும் விசாரிக்கணும்" , வினோத்.  

"குற்றம் செஞ்சா தப்பி ஓடுறதுக்கு இந்த ஆஸ்பத்திரியில பல வழி இருக்குது பாஸ், ரொம்ப பெரிய ஹாஸ்பிட்டல், ரொம்ப சுதந்திரமான ஹாஸ்பிடல், மார்னிங் வந்தப்பவே இந்த இடம் சரி இல்லைன்னு தோணினது. இந்த இடத்துல க்ளு கிடைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்" விக்ரம்.

"ஆனாலும் பாஸ் இவ்ளோ பெரிய உலகத்துல ஏதோ ஒரு மூலையில நமக்கான  ஒரு தடயத்த விட்டுட்டுப் போகாமலா இருப்பான்." விக்ரம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கார்த்திக் அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"வினோத், டிபார்ட்மெண்ட் ஆளுங்க பிரிண்ட்ஸ் எடுத்து இருக்காங்க, அதுல நிறைய கைரேகை இருக்கு, இந்த ஹாஸ்பிடலோட மத்த வார்ட்பாய்ஸ் ரேகையோட மேட்ச் பண்ணி பார்த்தோம், ரெண்டு ரேகை மட்டும் மேட்ச் ஆகல, இன்னும் டூ டேஸ்ல ரிசல்ட் சொல்றதா சொல்லிருக்காங்க"

"பரவாயில்ல கார்த்திக் ஸார்...ரொம்ப ஸ்பீடாவே இருக்கீங்க", என்று சொல்லிய விக்ரமை நோக்கி தீவிரமாய் பார்த்தான் கார்த்திக். 

"கார்த்திக், அந்த பிங்கர் பிரிண்ட்ஸ் போட்டோகாபி எங்களுக்கு கிடைக்குமா,எங்க எம்.டி வரதராஜன் கேட்டார்"

"இத வச்சி அவரு என்ன பண்ணப் போறாரு, ப்ரைவேட் பாரன்சிக் வேணாம் வினோத், நாங்க டீல் பண்ணிக்கிறோம்"

விக்ரம் கொஞ்சம் நக்கலாய் சிரித்துவிட்டு, "கார்த்திக் சார், வரதராஜன் பாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இன்ஸ்பெக்ட்டரா இருந்து வீ.ஆர்.எஸ் வாங்கினவரு, 25 வருஷ சர்வீஸ், ரேகையே பார்த்தே குற்றவாளி பேரு சொல்ற அளவுக்கு தமிழ்நாட்டு குற்ற ரேகைகளுக்கும் அவருக்கும் ரொம்பப் பரிச்சியம்"

"ஓ ஓகே. ஐ வில் அரேஞ் பார் தி சாம்ப்ள்ஸ், கொஞ்சம் வொர்க் இருக்கு, நீங்க கிளம்பறதா இருந்தா கிளம்புங்க" வினோத்தின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான் கார்த்திக்.

"பாஸ் ஜென்ரல் சைக்காலஜி, இந்த கேஸ்ல நாம தலையிடறது கார்த்திக்குப் பிடிக்கல"

"யுவர் சைக்காலஜி இஸ் ராங், நீ தலையிடறது அவருக்கு பிடிக்கல"

"ஓகே அப்போ நா சென்னைக்கே கிளம்புறேன், ரம்யா என்ன பார்க்காம வாடிப் போயிருப்பா, ரம்யா... ஓ... மை ஸ்வீட் ஹார்ட்..."

"ரம்யா த்ரீ டைம்ஸ் போன் பண்ணி பாலாஜிய தான் கேட்டாலே தவிர உன்னப்பத்தி ஒரு வார்த்த கேட்கல"

"என் மொபைல் ஸ்விட்ச் ஆப் பாஸ், இல்லாட்டா எனக்கு தான் போன் பண்ணிருப்பா... சிரிக்காதீங்க பாஸ்... கமான். லீவ் மீ அலோன்"

"பாரன்சிக் சாம்ப்ள்ஸ எம்.டிக்கு நான் மெயில் பண்றேன், வார்ட் பாய், சிசிடிவிரூம் இங்க எதாவது க்ளு கிடைக்குமா பாரு அன்ட் சீக்கிரம் ரூம் வந்து சேரு, ஐ'ம் சோ டயர்ட்"

"ஐ'ம் சோ அப்சர்ட். மொக்க வேலையெல்லாம் என் தலையில தள்ளுங்க, கலெக்டர் பங்ளால நாளைக்கு தான் சாம்ப்ள்ஸ் எடுபாங்கலாம் எஸ்.ஐ பேசிட்டு இருந்தாரு"

"பாலாஜிய இப்போ பார்க்க முடியுமா விக்ரம்"

"இல்ல பாஸ் இப்ப வேணாம், இந்த இருட்டுல நம்ம பின்னாடி எவன் பாலோ பண்ணினாலும் கண்டுபிடிக்க முடியாது, மார்னிங் கூட்டிட்டுப் போறேன், இப்ப ரெஸ்ட் எடுங்க, வீ ல் மீட் லேட்டர்", சொல்லிவிட்டு சிசிடிவி ரூம் செல்லும் பாதையில் இருந்த இருளில் கலந்து மறைந்தான் விக்ரம்.   

விக்ரமின் நண்பன். அவன் வீட்டின் மாடியில் ஒரு அறை ஒதுக்கிக் கொடுத்திருந்தான், நெல்லை ஜன்க்ஷன் அருகிலேயே வீடு, ரயில் தடதடக்கும் இரவுகளில் தான் இந்த ஏரியா மக்களின் உறக்கமும் கிறக்கமும் இருந்தாக வேண்டிய கட்டாயம். 

இருள் இருள் இருள் மட்டும் நிறைந்திருந்த நெல்லை வீதி, பெயர் தெரியவில்லை, எங்கிருந்தோ கேட்கும் நாய்களின் மிரட்டலான ஊளை, சின்ன சின்ன வண்டுகளின் ரீங்கராம், யாருமற்று அனாதையாய் கிடக்கும் அமைதியான வீதி, அருகில் விக்ரம், திடிரென்று அமைதியை கிழித்து எதிர்பாராத விதமாய் முன்னாள் குதித்த முரட்டு உருவம், நேராய் விக்ரமை குறிபார்த்து குத்த வந்து அருகில் இருந்த வினோத்தைப் பார்த்ததும் அவனை விடுத்து இவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்து, பாய்ந்து அருகில் வந்த கத்தி, எதிர்பாராத விதமாக இவனது முகத்தின் அருகில் மிக அருகில், டக்கென்று எழுந்து விட்டான். சொப்பனம், மிக கெட்ட சொப்பனம். மூச்சை வேகவேகமாக இழுத்தான் விட்டான்.மீண்டும் இழுத்தான்.  

எப்போது அறைக்கு வந்து எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை, பயணித்த களைப்பில் அயர்ந்து தூங்கிவிட்டான், அருகில் விக்ரமும் தூங்கிக் கொண்டிருந்தான், அவன் வந்தது பற்றிய உணர்வும் வினோத்திற்கு இல்லை. கடந்த நாட்களின் ஒவ்வொரு சம்பவமும் மனதினுள் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருந்தது, தூங்குவான் திடிரென்று விழிப்பான் பின் தூங்குவான். ஒரு கட்டத்தில் முழுவதுமாய் தூங்கிவிட்டான். 

மீண்டும் உடலை யாரோ வேகமாக உலுக்குவது போன்ற உணர்வு, போர்வையை விலக்கி டக்கென்று கண் திறந்தவனை நோக்கி வேகமாய் மிக வேகமாய் நகர்ந்த ஒரு கத்தி. மிக அருகில் கண்ணை நோக்கிக் மிதந்து கொண்டிருந்தது. நேற்றைய கனவில் கண்டது போலவே இருந்த கத்தி, ஆனால் இது நிஜக் கத்தி, கனவில் கண்டது போலவே முகத்தின் அருகில் மிக அருகில் வந்த பொழுது நிலைமையை முழுவதுமாய் உணர்ந்திருந்தான்.

"என்ன பாஸ் நைட் செம ட்ரீமா, ஒரு சின்ன கத்திக்கே இப்படி பேயறஞ்ச மாதிரி பயபடுறீங்களே" ஒரு கையில் ஆப்பிலும், மறு கையில் கத்தியுமாக வினோத்தை எழுப்பிக் கொண்டிருந்தான் விக்ரம்.

"உங்க ஊர்ல இதுக்கு பேரு சின்ன கத்தியாடா... டைம் என்ன விக்ரம்" தூக்கம் வழிந்த முகத்தைத் துடைத்துக் கொண்ட கையால் விக்ரமுக்கான குட்மார்னிங்கும் சேர்த்துக் கொண்டான்.

"டைம் இஸ் டென், எம்.டி டூ டைம்ஸ் போன் பண்ணிருந்தாரு, உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொன்னாரு, பட் உடனே கால் பண்ண சொன்னாரு" 

"சம் திங் வெரி இன்ட்ரெஸ்டிங் பாஸ். கதையில ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கும் போல" காதின் மிக அருகில் வந்து சரசம் பேசுவது போல் சொல்லிவிட்டு சட்டென நகர்ந்து சிரித்தான்.

என்ன இன்ட்ரெஸ்டிங் என்பது போல பார்த்த வினோத்தை நோக்கி, 

"மொதல்ல ரிபிரஷ் பண்ணிட்டு வாங்க, வீ ஹவ் லாட் ஆப் வொர்க்"   
                                                                                                       உன்னைத் தொடர்கிறேன் 

10 comments:

 1. kathayil egappatta twist than irukku..very intresting and thrilling

  ReplyDelete
 2. ராஜேஷ் குமாரை மிஞ்சிட்டீங்க! அருமையாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 3. விறுவிறுப்பான கதை..!

  ReplyDelete
 4. கதை களத்தையும் , கதையின் பாத்திரங்களையும் நல்லா ரசிக்குற மாதிரி எழுதுற சீனு ....!

  என் பார்வையில், ஒரு நல்ல கதை, விறுவிறுப்பான கதை என்பது , ஒரு வரியை படிக்கும் போது அது அப்படியே என் கண் முன்னால் காட்சிகளாக விரியவேண்டும் . அந்தவகையில் இந்த தொடர்கதை பெரும்பாலான இடங்களில் காட்சிகளாக விரிகின்றது

  ஒண்ணே ஒண்ணுதான் , விட்டு விட்டு படிக்கும்பொழுது தொடர்ச்சி இல்லாத மாதிரி இருக்கு , நிறைய மறந்துடுது ...சோ....ஊருக்கே தெரிஞ்ச பின்னாடி நான் ரகசியத்த தெரிஞ்சுக்குறேன் ....! மொத்தமா எழுதி முடிச்சொன்ன சொல்லுப்பா சீனு ...!


  ReplyDelete
 5. ஓ... மை ஸ்வீட் ஹார்ட்...! இன்னும் விறுவிறுப்பு கூட்ட வேண்டாமோ...?

  ReplyDelete
 6. கார்த்திக்கே வில்லன் கூட்டமோ...!

  ReplyDelete
 7. ஒரு அத்தியாயத்துல ஒரு ரகசியமாச்சு சொல்லலாம் இல்ல

  ReplyDelete
 8. இரண்டு மூன்று அத்தியாயங்களுக்கு ஒரு முறை பத்து வரி கதைச்சுருக்கம் சேர்த்தால் புதிதாக வருகிறவர்களுக்கு (பழசுகளுக்கும் :) உதவியாக இருக்கும்.

  சுரேஷ் சொன்னது போல்.. இந்த வார சஸ்பென்சு ராஜேஷ்குமாரை நினைவுபடுத்துவது உண்மையே.

  ReplyDelete
 9. யார் அந்த உருவம் ??ம்ம்ம் தொடருங்கள் தொடர்கின்றேன் காட்சியில் வர்ணிப்புக்கள் மிக இயல்பாக இருக்கின்றது உங்கள் எழுத்துநடை சீனு!

  ReplyDelete
 10. சஸ்பென்ஸ் மேல சஸ்பென்ஸ்,கலக்குறீங்க சீனு

  ReplyDelete