6 May 2013

சொல்ல விரும்பாத ரகசியம் - புதிய த்ரில்லர் தொடர் ஆரம்பம்


"வினோத்... எனக்கு ரொம்ப பயமா இருக்குடா, எந்த நிமிசமும் எது வேணா நடக்கலாம். கொஞ்சம் அவசரப்பட்டு காரியத்த கெடுத்துட்டேன்னு நினைக்கிறன். ரொம்ப பயமா இருக்குடா. என்ன சுத்தி இருக்ரவங்கள கூட  நம்ப முடியல."  

"தினமும் அஞ்சு பேருக்காவது என்னோட உயிர் தேவைப்படுது. 'உன்னால ஒரு மயிரையும் புடுங்க
 முடியாது.. முடிஞ்சத பாத்துக்கோன்னு'  போன்ல மிரட்டுரவன்ட்ட தைரியமா சொன்னாலும் உள்ளுக்குள்ள பயந்து சாகுறேன். இதுக்கு மேலயும் உயிரக் கையில பிடிச்சிட்டு இந்த ஊர்ல பயந்து பயந்து சாக முடியாது... பேசாம சென்னைக்கே ட்ரான்ஸ்பர் கேக்கலாமான்னு யோசிக்கிறேன்.. எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கு என்ன வந்தது.."

"ஹேய்...ரிலாக்ஸ், இப்போ என்ன நடந்ததுன்னு இப்டி பயந்து சாகுற, உன்ன என்ன வெட்டியா போட்டுட்டானுங்க... மவன நீ நெல்லை டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் டா, உன் கையில பதவி இருக்கு, நீ சொன்னத கேக்றதுக்கு பட்டாலியன் இருக்கு, ஷூட்டிங் ஆர்டர் கொடுக்ற அளவுக்கு பவர் இருக்கு... இதுக்கு மேலயும் உனக்கு என்ன வேணும்.. தப்பு பண்றான்னு தெரிஞ்சது தட்டி கேட்ட, அப்படிக் கேக்கும் போது நாலு பேரு மிரட்டத் தான் செய்வான் இதுக்கு போய் பயப்படுவியா... லூசாடா நீ" 

"நீ தாண்டா லூசு, உன்
 பேச்ச கேட்டு தான் இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனையில மாட்டிட்டு முழிக்கிறேன். எவனோ மணல் அள்ளிட்டு போறான், கடத்திட்டுப் போறான்னு மத்த கலெக்டர் மாதிரி விட்ருந்தா இப்போ இவ்ளோ பிரச்சன வந்திருக்காது."

"ணல் மட்டுமே கடத்தினா பிரச்சன இல்ல கலெக்டர் சார், கஞ்சாவும் கடத்துறதா நீங்க
 தான சொன்னீங்க, போன வருஷம் ஒரு இன்ஸ்பெக்ட்டரையே போட்டு தள்ளிருக்காங்க "

"ப்ப அதுதான்
 டிடெக்டிவ் சார் எனக்கும் பயமா இருக்கு.இன்ஸ்பெக்ட்டர போட்டவங்களுக்கு, என்னையும் போட்டு தள்ள எவ்ளோ நேரமாகப் போகுது"      

"ப்பு பண்ணுறான்னு தெரிஞ்சும் விடலாம்ன்னு சொல்றியா,
 டேய் பாலாஜி, உன்னால முடியாட்டா, உன் கலெக்டர் பதவியால முடியாட்டா நீ ஒதுங்கிக்கோ, ஆனா அவனுங்க நெட்வொர்க் என்ன, அது எவ்ளோ பெருசுன்னு கண்டுபிடிக்காம விடமாட்டேன், ஒருவேள நான் கண்டுபிடிச்சி கம்ப்ளைன்ட் கொடுத்தா அத வாங்கிப்பீங்களா கலெக்டர் சார்"

"புரியாமா பேசாதடா
 இது உன் வேல இல்ல, அரசாங்கம் இருக்கு, நாங்க இருக்கோம்"

"நீங்க தான் பயபடுரீங்களே சார், ஆனா
 எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இதுலதான் சுவாரசியம் அதிகம், பிரச்னை உன் தலைக்கு வந்தா என்ன, என் தலைக்கு வந்தா என்ன, உன்ன ஒருத்தன் கொலை பண்ற அளவுக்கு துணிஞ்சு இருக்கான், அரசாங்கத்த ஏமாத்துறான். நிச்சயம் சாதாரண விஷயம் இல்ல."     

"அதனாலா..."
    

"உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக விக்ரம்
 இன்னிக்கு கிளம்பறான், நைட் நெல்லை எக்ஸ்பிரஸ், டுமாரோ ஹி வில் பி தேர்" 

"என்னையே காப்பாத்திக்க தெரியாம திண்டாடுறேன், இப்போ
 அவன் இங்க அவசியம் வரணுமா, சின்ன பையன் டா, நா கேட்ட ஹெல்ப்ப எங்க இருந்து வேணும்னாலும் பண்ணலாம், அவன அங்கயே இருக்க சொல்லு"

"நோ, வீ ஹவ் டிசைடட்.
 நைட் நெல்லைல நெல்லைக்கு கிளம்பறான், உன்ன பத்தி, அவன பத்தி வருதப்படுறதுக்கு நான் இருக்கேன், லெட் இட் பீ மேன்..கூல்"     

"இதுக்கு மேலயும் அவனுங்க கூட முட்டிகனுமா?, என்னவோ பண்ணிட்டு போறானுங்கன்னு
 விட்ருவோமே, போன வருஷம் இன்ஸ்பெக்டரயே போட்ருக்காங்க, போலிஸ் டிபார்ட்மெண்டால கூட ஒரு ஆணியவும் கழட்ட முடியல, நம்மாளையும் ஒன்னும் பண்ண முடியாது டா, விட்றலாம்"          

"இவ்ளோ பெரிய பதவிய வச்சிட்டு நீ பேசுற பேச்சு காமெடியா இருக்கு... இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாக்கலாம், இப்ப தான
 நாங்களும் பிக்ச்சர் உள்ள வந்த்ருக்கோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்துருவோமே"

"ம்ம்ம்ம் பார்க்கலாம்.. உன்கிட்ட பேசினதும்
 கொஞ்சம் தைரியம் வந்த மாதிரி இருக்கு, ஒரு ஆட்டம் ஆடிப் பாத்ரலாம்.. ஒன்னு அந்த கேசவ பெருமாள் அவன் கூட்டத்தோட சாகனும் இல்ல இந்த பாலாஜி சாகுறதுக்கு முன்னாடி நெல்லைல இருந்து ட்ரான்ஸ்பர் ஆகணும்."  

"டேய் இப்ப தான் தைரியம் வந்தவன் மாதிரி பேசுன, அதுக்குள்ளே சாகுறத
 பத்தி பேசுறியே... உன்னையெல்லாம் திருத்தவே முடியாது."


ன்று காலையில் பாலாஜியுடன் பேசிய ரெகார்டட் வாய்சை மூன்றாவது முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான்
 வினோத். பாலாஜியின் நிலைமையை, அவனுக்கு வந்த பிரச்சனையை நினைக்க நினைக்க  வினோத் சற்றே விநோதமாகவும் அயர்ச்சியாகவும் உணர்ந்தான். இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை தூக்கம் இமைகளின் மேல் உட்கார அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது, மனதில் என்னென்னவோ எண்ண ஓட்டங்களுடன் சேர்ந்து அவனும் ஓடத் தொடங்கினான்.  

"ஹேய் ரம்யா... இன்னிக்கு என் நினைப்பெல்லாம் நீ தான், மார்னிங் ப்ளு கலர் ஜீனும், ப்ளாக்
 கலர் ஷர்ட்டும் போட்டு இருந்தியே சோ க்யூட் ரம்யா'

"வழிஞ்சது போதும் நிறுத்து டா, எதுக்கு போன் பண்ணின... வினோத் எதுவும் கேக்க சொன்னானா"

"மரியாத ரொம்ப குறைதே, என்ன மட்டும் தான் அப்படிப் பேசணும், வினோத் நம்ம
 பாஸ், நம்ம எல்லாருக்கும் பாஸ்"

"அவன் உனக்கு மட்டும் தான் பாஸ், எனக்கு இல்ல.... பர்சேஸ்ல இருக்கிறேன்...வாட் யு வாண்ட்"
        

"நாளைக்கு உனக்கு
 பர்த்டே, பட் நான் ஊர்ல இருக்க மாட்டேன்.. உன்னோட சேர்ந்து செலிப்ரேட் பண்ண முடியாது, அதான் இன்னைக்கே எங்கயாது போகலாமான்னு..."

"போயிட்டுவா..அதுக்கு ஏன் என்ன கூப்பிடுற... வினோத் தெண்டத்துக்கு தூங்கிட்டு தான் இருப்பான்..அவனையும் வேணா
 சேர்த்து இழுத்துட்டுப் போ.. ஆள விடுடா சாமி, போன வை"

"த்தா என்ன அவ்ளோ திமிரா.. போன்
 பண்ணினா பேச மாட்டியா...  மவன கையில சிக்குன சாவடிச்சிருவேன்..."

"போன்ல
 உதார் விட்ரது, சீன் காட்றது, இந்த படமெல்லாம் இங்க ஓடாது மோனே.... தில் இருந்தா நேர்ல வந்து இந்த விக்ரம் கூட மோது பாக்கலாம்..."

"த்தா யாரு போன்ல உதார் வுட்றது.
  நா எவ கூடவும் படுப்பேன், எவளையும் கல்யாணம் பண்ணிப்பேன்...  உனக் இன்னா வந்தது... உன் பொ...... கூடவா படுத்தேன்... பெருசா கேரக்டர் ரிபோர்ட் கொடுத்ருக்க. என் கல்யாணத்த தடுத்து நிறுத்திட்டா எனக்கு வேற எவனுமே பொண்ணு குடுக்க மாட்டானா... "

"அப்டி பொண்ணு கொடுக்றவன்
 எவனும் இந்த விக்ரம் கிட்ட வந்தா... ஷோபா அப்பன்கிட்ட கொடுத்த அதே சர்டிபிகேட்ட தூக்கி உன் புது மாமன் கையிலையும் கொடுப்பேன்... முடிஞ்சா நீ நேர்ல வந்து பிலிம் காட்டு மாமே"

"என்னென்ன பண்றேன்னு என்
 பின்னாடியே நாய் மாதிரி சுத்தி, நோட்டம் விட்ருக்கியே வெக்கமா இல்ல உனக்கு"

"நாய் மாதிரி தெருவெல்லாம் பொறுக்குற
 உனக்கே கொஞ்சங்கூட வெக்கம் இல்லாதப்ப...... "

"த்தா பாடு.....!@#$%^&**......... "

"!@#$%^&**..........."

ரமாரியாக வந்த கெட்ட வார்த்தைகள்,
 இதற்கு முன் கேட்டு பழகிய, பிரயோகித்துப் பழகிய கெட்ட வார்த்தைகள் என்றாலும் சம்மந்தமே இல்லாத நேரத்தில் வந்து விழுந்த கெட்ட வார்த்தைகள். ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது துர்சொப்பனமாய் வந்து விழுந்த வார்த்தைகள். நிஜத்தில் இவற்றை எல்லாம் சகித்துக் கொள்ளலாம், பொறுத்துக் கொள்ளலாம்.. பதிலுக்குப் பதில் பேசிவிடலாம்...இதற்கு மேலும் கெட்ட வார்த்தை பேசி எதிராளியை நிலைகுலையச் செய்து விடலாம்... ஆனால் இப்போது முடியவில்லை, அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்க கேட்க கோபம் தலைகேறிக் கொண்டிருந்தது. காரணம் அவன் துகிலுரித்துக் கொண்டிருப்பது நான் செய்யும் தொழிலை. 

ண்டவளுடன் சுற்றிக் கொண்டு தெருப்பொறுக்கும் இவனைப் போன்ற
 பன்னாடப் பரதேசிகளைப் பொருத்தவரையில் நான் ஒரு நாய் தான். இவனது அந்தரங்கத்தை இவன் படுக்கையறையினுள் நுழையாமலேயே மோப்பம் பிடிக்கத் தெரிந்த புத்திசாலி நாய். தேவைபட்டால் கடித்துக் குதறத் தெரிந்த ரௌத்திரம் பழகத் தெரிந்த நாய்.  

னால் பெண்களை போகமாக்கும், போதையாக்கும் காம வெறி பிடித்த இந்த நாய் திட்டுவதை எல்லாம் பொறுத்துக்கொள்ளக் கூடிய ரோசம் அற்ற நாய் இல்லை. 

வேவு பார்ப்பது தான் எமது தொழில். நல்லதை விட கெட்டது கொஞ்சம் அதிகம் கலந்து இருக்கும் உலகத்தில் நல்லது எது, கெட்டது எது என்று தரம்பிரித்து நல்லவனிடம் நல்லவனகாவும் கெட்டவனிடம் சாணக்கியனாகவும் நடந்து கொள்ள வேண்டிய தொழில். எல்லோரையும் சந்தேகிக்க வேண்டும், அதே நேரம் எல்லோரிடமும் நட்பு பாராட்ட வேண்டும். மனித மனதை சற்றே அதிகமாய் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனின் பலவீனங்களையும் பலமாக, வேவு பார்பதற்கு ஏற்ற பாலமாக மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.         

ப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த தொழிலில் இது போன்ற மிரட்டல்கள் கெட்டவார்த்தைகள் அனைத்தும் பழகிப் போன ஒன்று
 தான், ஆனால் உண்டு உறங்கி தின்று கழிக்கும் மனித வாழ்வில், துப்பறியும் தொழில் புரிபவர்களிடம் இருப்பதும் சராசரி மனித மனம் தானே. சிரித்தால் சிரிக்கும், அழுதால் அழும், கண்ட கண்ட நாய்கள் எல்லை மீறி பேசினால் திருப்பிக் கோபப்படும். என்னவொன்று, எவ்வித உணர்ச்சியையும் எல்லையை மீறி வெளிபடுத்திவிடக் கூடாது என்கிற ஒரு சாணக்கியன் எம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.  

கெட்டவார்த்தைகளால் எழுந்த மனபோராட்டத்தினை உதறி  சட்டென முழித்துக் கொண்டான் வினோத்.வியர்வையால் நனைந்த, முதுகுடன் ஒட்டிக்கொண்ட சட்டையை வேகமாய்க் கழற்றி சோபா மேல் எரியும் பொழுது தான் உணர்ந்தான் எங்கும் பரவியிருக்கும் இருளை. எப்போது மின்சாரம் தடைபட்டது என்று தெரியவில்லை. சிவந்து போன கண்களில் இருளின் வெளிச்சப்புள்ளிகள் நடனம் ஆடிக் கொண்டிருந்தன.

தோ
 துர்சொப்பனம் போல் தோன்றினாலும் எளிதில் அந்த சொப்பனத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.  காதுகள் இன்னும் அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே இருந்தன. விக்ரம் முன்பை விட உக்கிரமாக அந்த ஆண் வேசியை நிர்வாணப்படுத்திக் கொண்டிருந்தான்.  


தூக்கம் முற்றிலும் கலைந்து சட்டென நினைவுக்கு வந்தவனாய் தன்
 காதில் மாட்டியிருந்த ஹெட்செட்டை கழற்றி சோபாவில் எறிந்தான் வினோத். இவ்வளவு நேரம் கேட்ட உரையாடல்கள் எதுவுமே கனவோ கற்பனையோ இல்லை. நிஜம். விக்ரம் ரம்யாவுக்கு நூல் விடுவது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம் இந்த கெட்ட வார்த்தைச் சண்டை.

பாலாஜியுடன் பேசிய ரெக்கார்டட்
 வாய்சை கேட்டுக் கொண்டிருந்தவன் அவனை அறியாமலேயே தூங்கத் தொடங்கி இருக்கிறான், விக்ரம் ரம்யாவுடன் பேசியதும் எவனோ ஒருவனுடன் போட்ட சண்டையும் கனவு போல் தோன்றி உண்மையாகியுள்ளது. 

டைபட்ட மின்சாரம் காப்பரைத் தொட்ட பொழுது அறை
 முழுவதும் வெளிச்சமும் குளுமையும் பரவத் தொடங்கி இருந்தது.  மணியைப் பார்த்தான். ஒன்றைக் கடந்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்கவில்லை. கணினியைத் விரித்து பேஸ்புக்கைத் திறந்தான். உலகம் முழுவதும் விரவியிருந்த தமிழர்களால் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருந்தது பேஸ்புக் உலகம்.

துப்பறிவதற்கு என்று வைத்திருந்த
 பல போலி பேஸ்புக் கணக்குகளில் ஒன்றான சினேகாவை எழுப்பி அவள் தூக்கத்தையும் கெடுத்தான். மற்ற போலி அக்கவுன்ட்டுகளைக் காட்டிலும் சினேகாவுக்குத்  தான் நல்ல ரெஸ்பான்ஸ். சினேகாவின் ப்ரோபைல் பிக்சரை மாற்றிய அடுத்த நிமிடம் பிரசன்னாவிடம் இருந்து கமன்ட் வந்து விழுந்தது, "டார்லிங்...திஸ் ஒன் இஸ் அவ்சம்".

தைப் பார்த்து பிரகாசமாய் புன்முறுவல் பூத்த வினோத் அடுத்த கனமே பிரசன்னாவிற்கு போன் செய்து
 

"என்ன பிரசன்னா சார் தூக்கம் வரலையா, இந்த நேரத்துல பேஸ்புக்ல என்ன பண்றீங்க"

"அது இருகட்டும் மணி ஒண்ணாகுது,
 நீங்க இன்னும் தூங்காம என்ன பண்றீங்க, திஸ் ஜர்னி இஸ் வெரி போர் பாஸ், டுடே ரம்யாக்கு பர்த்டே, அவள நேர்ல பார்த்து ஒரு விஷ் கூட பண்ண விடாம பண்ணிடீங்களே. ஒரு நாள் லேட்டா போனா கலெக்ட்டர என்ன கொலையா பன்னிறப் போறாங்க" 

"அத விடு...
 ரம்யா கூட கடல போட்ட அந்த ரெக்கார்டட் வாய்ச டெலிட் பண்ணனும்ன்னு தெரியாதா உனக்கு, இவ்ளோ நேரம் அத தான் கேட்டுட்டு இருந்தேன்"

"ஓ மை காட், உங்க மொபைல்ல ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கார்டர் ஆப்ப இன்ஸ்டால் பண்ணினத
 மறந்துட்டேன் பாஸ்"

"இப்ப அதுவே உனக்கு ஆப்பா வந்து அமைஞ்சிருச்சு பாத்தியா.. ஹா ஹா ஹா"
  

"
ஒட்டுகேட்டதும் இல்லாம, பெருமையா வேற சிரிச்சுக்குங்க, மொதல்ல அந்தக் கருமத்த எல்லாம் டெலிட் பண்ணித் தொலைங்க."

"ஒட்டுகேக்கறது தான் நம்ம பொழப்பொட முதபாடம், அத தெரிஞ்சவந்தான நீ"

"இருபத்திநாலு மணிநேரத்துல இருபத்திநாலு நேரமும் எனக்கு அட்வைஸ் மட்டுமே
 பண்ணாதீங்க.. போங்க போய் படுத்து தூங்குங்க, மார்னிங் ஐ ல் கால் யு" சொல்லிவிட்டு போனைக் கட் செய்தான் விக்ரம்.

சிறிது நேரம் பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தவன், சோபாவில் தலைவைத்து சுகமாய்த் தூங்கத் தொடங்கிய
 பொழுது பாலாஜியின் அத்தனை பிரச்சனைகளையும் மறக்கத் தொடங்கியிருந்தான். 

அந்நேரம்
 அனைத்து தினசரிகளிலும் தலைப்புச் செய்தி அச்சாகத் தொடங்கியிருந்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் பாலாஜி மீது கொலைவெறித் தாக்குதல். மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியதில் அவரது நிலைமை
 கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.  

உன்னைத் தொடர்கிறேன் 

பின் குறிப்பு:

வாத்தியார் பால கணேஷ் பல மாதமாய் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் "எதாவது ஒரு தொடர் எழுது, ஒரு தொடர் எழுது" என்பது. சொல்லிச் சொல்லி சலித்து தற்போதெல்லாம் அவர் அதைப் பற்றி மூச்சு கூட விடுவதில்லை. இருந்தாலும் மறைமுகமாக என்னுள் அவர் ஏற்படுத்திய ஆர்வம் இதோ நானும் தொடர் எழுதத் தொடங்கிவிட்டேன்.

இத்தனை நாள் என் பதிவுகளை என்னை உற்சாகபடுத்திய அனைத்து நண்பர்களும், இப்பயணத்திலும் உடன்வந்து உற்சாகபடுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

நட்புடன் - சீனு    

29 comments:

 1. கிரைம் நல்ல துவக்கம்....

  சீனு சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. முதல் நபரை வருகை தந்து உற்சாகபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றிண்ணே...

   Delete
 2. கதாபாத்திரங்களை உரையாடல் வழியாக அறிமுகம் செய்தது அருமை...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றிண்ணே

   Delete
 3. வாழ்த்துக்கள் சீனு.

  அருமையான ஆரம்பம்.

  பிரபல வார மாத இதழ்களிலே வரவேண்டிய தொடர் போல கச்சிதமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள்.

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. எனது வலைபக்கதிற்கு தங்களது முதல் வருகைக்கும், மிக உற்சாகமான கருத்துரைக்கும் மிக்க நன்றி விஸ்வா

   Delete
 4. நல்ல துவக்கம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அப்பாதுரை சார்.. அது இறுதி வர தொடர வேண்டும் என்பது தான் எனது தற்போதைய எண்ணம் (கவலை என்று கூட சொல்லலாம் !)

   Delete
 5. ஓ.. சொல்ல மறந்துட்டேன்.. நாய்க்கு ரோசம் கிடையாது.. மனுசனுக்குத்தான் :)

  ReplyDelete
  Replies
  1. பஞ்ச் டயலாக் சொல்லும் போது டிஞ்ச் வைக்கக் கூடாது ஹா ஹா ஹா

   Delete
 6. நல்ல தொடக்கம். தொடருங்கள். அது சரி, 'சொல்ல விரும்பாத ரகசியம்' என்று சொல்லி கிளைமேக்ஸ் சொல்லாம விட்டுட மாட்டீங்க இல்லே?!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நிச்சயம் சொல்லி விடுகிறேன் ஸார்

   ஒன்றைக் கவனித்தீர்களா ?

   இல்லை வேண்டாம் அதை நானே சொன்னால் சுவாரசியம் இருக்காது... பின்பு ஒருநாள் சொல்கிறேன்

   Delete
 7. நல்ல துவக்கம்... வாழ்த்துக்கள் வாத்தியாருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டிடி ஸார் :-)

   Delete
 8. கலக்கல் ஆரம்பம் சீனுனடைஎல்லாம் வித்தியாசமா இருக்கு.
  //தடைபட்ட மின்சாரம் காப்பரைத் தொட்ட பொழுது அறை முழுவதும் வெளிச்சமும் குளுமையும் பரவத் தொடங்கி இருந்தது.//
  வர்ணனை சுஜாதா டச் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி முரளி ஸார்...

   //வர்ணனை சுஜாதா டச் சூப்பர்// சுஜாதா கிட்ட கூட என்னால நெருங்க முடியாது ஸார்.. அவர் இமயம் இல்லையா :-)

   Delete
 9. பிரச்சனை என்ன, எப்படித் துவங்கியிருக்கிறது என்பதையும், கதாபாத்திர அறிமுகங்களையும் என் சீனியர் பி.கே.பி. ஸ்டைல்ல வசனங்களா‌லயே கொடுத்தாச்சு. வர்ணனைகள் எல்லாம் கிடையாதா தம்பி? தொடரை நிறுத்துமிடத்தில் சுவாரஸ்ய கொக்கி போடும் வித்தை கைவரப் பெற்றிருக்கிறாய். இதே சுவாரஸ்யத்துடன் தொடர்ந்து தூள்கிளப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. //வர்ணனைகள் எல்லாம் கிடையாதா தம்பி? // தொடர்கதை கொஞ்சம் பெரிய களம், அதுவும் போக இந்த பகுதியில வர்ணனை எதுவும் வேண்டாம்ன்னு தான் கொடுக்கலா சார்... நீங்க சொல்லிக் கொடுத்த முக்கியமான பாடம் மறந்துருவனா என்ன :-)

   //இதே சுவாரஸ்யத்துடன் தொடர்ந்து தூள்கிளப்பு! வாழ்த்துக்கள்!// நிச்சயமா வாத்தியாரே

   Delete
 10. கடைசியில் 'விக்ரம்' :) , சுஜாதா தான் நினைவுக்கு வருகிறார்.
  மூன்று காட்சிகள், மூன்று கதாபாத்திரங்கள், அருமை. தொடர வாழ்த்துக்கள்.

  ரசித்த வரிகள் :
  //இரவு மணி பன்னிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை தூக்கம் இமைகளின் மேல் உட்கார அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது,//

  //தடைபட்ட மின்சாரம் காப்பரைத் தொட்ட பொழுது அறை முழுவதும் வெளிச்சமும் குளுமையும் பரவத் தொடங்கி இருந்தது.//

  ReplyDelete
 11. தொடர் ஆரம்பம்மே அருமை. கலக்குங்க. . . .அடுத்த ராஜேஷ்குமார் நீங்கதான் பாஸ்.

  ReplyDelete
 12. நல்ல துவக்கம். தூள் கிளப்ப! வாழ்த்துக்கள்! சீனு

  ReplyDelete
 13. கலக்கல் தொடர், வாழ்த்துக்கள்.. கதையில் முழுமையாக பயணிக்க முடிகிறது அருமை

  ReplyDelete
 14. சுவாரஸ்யமான தொடக்கம்! தடைபட்ட மின்சாரம் காப்பரை தொட்டபோது! ரசானையான வரிகள்! கதாபாத்திர அறிமுகமும் இறுதியில் தொடரும் போட்டு சுவாரஸ்யம் அதிகப்படுத்தியதும் அருமை! வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்!

  ReplyDelete
 15. சீனு, சொல்ல விரும்பாத ரகசியத்த சொல்ல ஆரம்பிச்சதுக்காக வாழ்த்துகள்.. நல்ல துவக்கம். அந்த உரையாடல் எதார்த்தமா இருந்தாலும் கொஞ்சம் எல்லை மீறியதா எனக்கு பட்டது.

  எழுதப் பணித்த பாலகணேஷ் சாருக்கு ஒரு "ஓ"..

  ReplyDelete
 16. //வியர்வையால் நனைந்த, முதுகுடன் ஒட்டிக்கொண்ட சட்டையை// - Nice Timing and Super Creativity in using the Words. I am experiencing that situation everyday in Office Bus.

  ReplyDelete
 17. நாம் காட்ட விரும்பும் குறிப்பிட்ட வர்ணனம் என்பது ஒரு கதைக்கு பொருந்திப் போகும் வார்த்தைகள். கைகூடி வருகின்றது.

  ReplyDelete
 18. த்ரில்லர் தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பா..

  ReplyDelete
 19. ஆஹா துவக்கம் ஜோர் சீனு தொடரட்டும்.

  ReplyDelete
 20. அன்பின் சீனு - தொடர் நன்கு துவங்கி இருக்கிறது - முதல் பகுதி நன்று - மற்ற பகுதிகளையும் பார்க்கிறேன் - இங்கு வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - http://blogintamil.blogspot.co.uk/2013/09/2.html.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete