31 May 2013

100வது பதிவு : தமிழ் மீடியம் தேவையா? விடாது கருப்பு

முன் குறிப்பு :

இது என்னுடைய நூறாவது பதிவு, நூறாவது பதிவை பதிவுலகத்திற்கு நன்றி சொல்லி எழுதலாம் என்று நினைத்தால் 25 மற்றும் 50லும் அதைத் தான் செய்துள்ளேன், நான் ஏன் வந்தேன் எதற்கு எழுதுகிறேன் என்றெல்லாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தால் வரும் கொஞ்ச நஞ்ச நண்பர்களும் வரமால் போய் விடும் சாத்தியக்கூறு அதிகம். :-)

உங்கள் அனைவருக்கும் என் நன்றி நன்றி நன்றி...! 

என்றும் என்னை புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...!     தமிழ் மீடியம் விடாது கருப்பு 

சில நாட்களாகவே எழுத நினைத்த பதிவு நேற்று ஜீவன் சுப்புவின் இந்த பதிவை படித்ததும் தான் இதையே நூறாவது பதிவாக எழுதலாம் என்று தோன்றியது. எழுதுகிறேன் என் பார்வையை...   

ந்த அறையில் மிக மெல்லிய அளவில் ஏசி பரவியிருந்தது. மேஜையில் ஐ.டி துறை சம்மந்தமான அத்தனை புத்தகங்களும் மெகா சைஸில் விரவிக் கிடந்தன. என்னை நேர்முகத்தேர்வு காணப் போகும் அந்த ஹெச்.ஆருக்காக காத்துக் கொண்டிருந்தேன். 


ந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி கம்பெனியின் சென்னை கிண்டி கிளையில் எனக்கான ஒரு வேலைக்காக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்த நேரம். காலை எட்டு மணியில் இருந்தே கூட்டம் அள்ளிக் கொண்டிருந்தது. கம்பெனியின் கட்டிடமே மிக கவர்ச்சியாக இருந்தது என்றால் அன்றைய தின பெண்களின் விஷுவல் இன்னும் கவர்ச்சியாக இருந்ததுத் தொலைத்தது என் இளமையை, இந்தக் கம்பெனியை இன்னும் அதிகமாக விரும்பச் செய்தது!    

முதல் ரவுண்ட் ஆப்ஸ் கிளியர், இரண்டாம் ரவுண்ட் டெக்னிகல் கிளியர், வந்திருந்த ஆயிரக் கணக்கானவர்களில் நூற்றுக் கணக்கானவர்களை ஜலித்து நேர்முகத் தேர்வுக்கு அனுப்பினார்கள். ஒவ்வொரு கட்டம் தாண்டும் போதும் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிக் கொண்டே இருந்தேன். 

2008 ரிசஷன் என்ற சொல்லால் ஐ.டி துறை அதால பாதாளத்தில் இருந்த நேரம் தேவை ஒரு வேலை. இளநிலை முடித்தவுடன் சென்னைக்கு வெளியே திருவள்ளூரில் குடியேறி இருந்த நேரம், மிக அவசரத் தேவை ஒரு வேலை. இல்லை என்றால் சமாளிப்பது மிக கஷ்டம். நான் படிப்பு வராத கேஸ் இல்லை,  படிக்கும் நேரமெல்லாம் விளையாட்டுத் தனமாய் இருந்துவிட்டு தேர்வு அன்று காலையில் அவசர அவசரமாக படித்து 75 சதவீதம் வாங்கி பாஸ் ஆகும் கேஸ்.அதனால் என்னுடைய படிப்பை நம்பி முதுநிலை படிக்க வைக்க யோசித்த குடும்பக் கஷ்டம். அதை உணர்ந்து படிக்க விரும்பாத என் மனம்.

மணி மாலை ஐந்து, நேர்முகத் தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பான நிமிடங்களில் நகர்ந்து கொண்டிருந்த நேரம், எனக்கான ஹெச்.ஆருக்காக காத்திருந்தேன். நேர்முகத் தேர்வுகாக என்னுடன் ஒரு குழுவாக பிரிக்கப் பட்டவர்கள் மொத்தம் இருபது பேர், பாதிக்கும் மேல் பெண்கள். பெர்ப்யும் மணம் அனைவரின் உடைகளில் இருந்தும் காற்றில் கலந்து கொண்டிருந்தது. என் சட்டையை மோந்து பார்த்தேன் நல்ல வேலை வியர்வை நாற்றம் இல்லை.

அருகில் அமர்ந்து இருந்தவர்கள் அனைவரது விரலிலும் உதட்டிலும் ஆங்கிலம் விளையாடிக் கொண்டிருந்தது. அறையின் குளுமை கை நடுக்கத்தை இன்னும் அதிகமாக்கி இருந்தது. சி, சி++ என்று அவர்கள் பேச்சு மொத்தத்மும் ஆங்கிலமாக, அவ்வபோது சன்னமாக சிரித்த சிரிப்பு கூட ஆங்கிலத்தில் ஒலித்தது போன்ற பிரமை. அந்த சூழ்நிலை என் மொத்த தன்னம்பிக்கையையும் கெடுத்திருந்தது. 

படித்த சிலபல இண்டர்வ்யு டிப்ஸ் மற்றும் பிரிபரேசன் கூட மறந்து போயிருந்தது, எனக்கான தருணம் வந்தபொழுது, இதயம் காதுக்கு வெளியில் துடிக்கத் தொடங்கியிருந்தது. வயிறு முழுவதும் பயம், ஏதோ காற்றுப் போய் சப்பிப் போன பலூன் போல என் வயிரை உணர்ந்தேன்.

உள்ளே இறுக்கமான டீ.சர்ட், தொடை பிதுங்கித் தெரியும் ஜீன்ஸ் அணிந்த ஒரு கல்யாணமான மாது (பதிவின் சீரியஸ்னஸ் குறித்து அந்த ஆங்கில வார்த்தையை தவிர்க்கிறேன்!) என் நேர்முகத் தேர்வாளராக. முகத்தில் பெயரளவில் கூட சிரிப்பின் ரேகைகள் இல்லை. இப்போது கூட அவர் என் கண்முன்னே அமர்ந்து என்னை நோக்கி அதே கேள்விகளைக் கேட்பது போன்ற ஒரு பிரமை.

கடமைக்கு ரெஸ்யும். 'வாட்ஸ் யுவர் நேம்', அந்த ஆங்கிலம் புரிவதற்கே எனக்கு அரை நிமிடம் தேவைப்பட்டது, ஸ்ரீநிவாசன், 'அபவுட் யவர் ஸெல்ப்', பி.சி.ஏ, SPKC, +2 தென்காசி கவர்மெண்ட் ஸ்கூல், 'கவர்மெண்ட் ஸ்கூல்' இதை சொல்லும் பொழுது அவரது முக மாற்றத்தை கவனித்தேன், உன்ன நா எப்பவோ ரிஜெக்ட் பண்ணிட்டேன், இதுக்கு மட்டும் எதுக்கு தனி ரியாக்சன் என்பது போல் என்னைப் பார்த்தார்.

'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' என் மனம் துடித்த துடிப்பில் பொருள் சுத்தமாக புரியவில்லை. 'எனக்கு வேல கூட வேணாம், என்ன இந்த இடத்துல இருந்து அப்புறப்படுத்தினா போதும்' என்ற நிலையில் இருந்தேன். முழுதாக மூன்றாம் கேள்வியிலேயே இந்த நிலைக்கு வந்துவிட்டேன்.

'கேன் யு ஜஸ்ட் எலாபரெட் ஆல் திஸ்' மீண்டும் அந்த அம்மா என்னை நோக்கி கேட்டார் இல்லை கத்தினார் என்று கூட பொருள்பட்டுக் கொள்ளலாம், கேவலமான ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்தேன், ஓகே இப் யு ஆர்  செலக்ட்டட், வீ வில் கால் யு' இந்த வார்த்தை ஒரு நிமிடம் என்னுள் 'யு ஆர்  செலக்ட்டட், வீ வில் கால் யு' என்பதாக பதிந்தது, மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன் 'வீ வில் கால் யு, நவ் யு கேன் லீவ் அண்ட் மை அட்வைஸ் இஸ் இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்'.   

'இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்' எத்தனை முறை எத்தனை பேரிடம் கேட்ட அட்வைஸ் சட்டனெ புரிந்து கொண்டது, அந்த இறுக்கமான சூழலிலும் சிரித்துவிட்டு எழுந்தேன், திரும்பிப் பார்க்கவில்லை, இது தான் நடக்கப் போகிறது என்று தெரியும், நிதானமாய் யோசித்துப் பார்த்தால் எல்லாக் கேள்விகளுக்கும் என்னிடம் பதில் இருக்கிறது, இருந்தாக வேண்டும், காரணம் அவர் கேட்பது என்னைப் பற்றி, ஆனால் சொல்லத் தெரியவில்லை, எப்படி சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.       
                    
எப்போதுமே என்னை தமிழ் மீடியத்தில் படிக்க வைத்ததற்காகவோ இல்லை அரசு பள்ளியில் படிக்க வைத்ததற்காகவோ என் பெற்றோர் மீது கோபம் கொண்டதில்லை, காரணம் என் குடும்பம் பற்றிய புரிதல் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது. 

ஸ்போகேன் இங்க்லீஸ் கிளாஸ் அனுப்பினார்கள், ஹிந்து பேப்பர் வங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள் லிப்கோ, பிரிலியண்ட் எக்ஸட்ரா எக்ஸட்ரா டிக்சனரி வாங்கிக் கொடுத்து படிக்க சொன்னார்கள், ஆங்கிலம் கற்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்கள், ஆனால் ஆங்கிலம் மீது எனக்கொரு பயம் வரபோகிறது என்ற புரிதலும் எனக்கு விபரம் தெரியும் முன்பே எப்படியோ என் மனதில் பதிந்துவிட்டது.  

நான் ஐந்தாவது படிக்கும் வரை ABCD சொல்லத் தெரியாது. 
ஏழாவது படிக்கும் வரை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாது. 
பன்னிரெண்டாவது படிக்கும் வரை கிராமர் என்றால் எமக்கு சாலப் பயம்.
இளநிலையில் ஸ்போகேன் இங்கிலீஷ் பயம்.
நேற்று இந்தியன் இங்க்லீஷ். 
இன்று அமெரிக்கன் இங்க்லீஷ். 
நாளை விடாது கருப்பு...! 

இன்று கூட டிவியில் எதாவது ப்ரோக்ராம் முடிவில் எழுத்துகள் போடும் பொழுது அதில் வரும் ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசிக்க சொல்வது என் அம்மாவின் தவிர்க்க முடியா செயலாக உள்ளது. புள்ள மேல அம்புட்டு நம்பிக்க!      

                                                                             விடாது கருப்பு தொடரும்...! 

61 comments:

 1. கிளிக்கு ரெக்க மொளச்சி இத்தன நாள் ஆயிடுத்தே....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா பட் அது பறந்து போயிடாது வோய்

   Delete
 2. சுப்பு அவர்கள் சுருக்கமாக... நீங்கள் சிறிது விரிவாக...

  குடும்பம் பற்றிய புரிதலும், பெற்றோர்களின் புரிதலும் இன்று பல குடும்பங்களில் இல்லை...

  100/100 வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி டிடி... தொங்களது தொடர்ந்த உற்சாகத்திற்கு

   Delete
 3. என்றும் என்னை புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...! //////////////
  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யோவ் யெப்பையா உன்னைய நான் புதுப்பித்தேன்....

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா தல நாம போன மாசம் முட்டு சந்து பக்கம் வச்சி அடி வாங்கிகிணோமே அப்போ தான்

   Delete

 4. நான் ஐந்தாவது படிக்கும் வரை ABCD சொல்லத் தெரியாது.
  ஏழாவது படிக்கும் வரை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாது.
  பன்னிரெண்டாவது படிக்கும் வரை கிராமர் என்றால் எமக்கு சாலப் பயம்.
  இளநிலையில் ஸ்போகேன் இங்கிலீஷ் பயம்.
  நேற்று இந்தியன் இங்க்லீஷ்.
  இன்று அமெரிக்கன் இங்க்லீஷ்.
  நாளை விடாது கருப்பு...!
  ////////////////////////////

  அப்படியே ரஜனி பட பாடல் மாதிரி இருக்குதே ..
  முதல் எட்டில் சாப்பிடாத சாப்படும் இல்லை
  இரண்டாம் எட்டில் சைட் அடிக்காத பெண்களும் இல்லை..
  மூன்றாம் எட்டில் அடிக்காத பீருமில்லை...
  அப்பிடியோ முடிச்சிடுப்பா

  ReplyDelete
  Replies
  1. அடுத்த புரட்சி கவிஞன் இலங்கையில் உதயமாகிறான்

   Delete
 5. உண்மையச் சொல்லப்போனால் நானும் இந்தப் பதிவின் நாயகனும் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேல எங்க எனக்கு கம்பெனி இல்லாம போயிருமோன்னு நினைச்சேன்

   Delete
 6. சென்ஷுரி அடிச்ச உனக்கு னல்வாழ்த்த்த்துகல்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிவாத்தியாரே

   Delete
 7. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  #அப்பாடா,,,,, கடமையை செஞ்சாச்சு... ;)

  ReplyDelete
  Replies
  1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

   #அப்பாடா,,,,, கடமையை செஞ்சாச்சு... ;)

   ஹி ஹி அத அப்படியே காப்பி பண்ணியாச்சு..

   Delete
  2. ஆகசிறந்த வாழ்த்துகளுக்கு மற்றும் பின்னூட்டங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 8. 100 தொட்டதற்கு வாழ்த்துக்கள் தல...கதை தமிழ் மீடியம் பசங்களோட இயலாமைய எதார்த்தமா சொல்லுற மாதிரி இருந்திச்சு...good post ..!!!

  ReplyDelete
 9. 100 க்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்கூல் பையன் சார்

   Delete
 10. Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 11. இதுல மத்த பதிவர்களை கலாய்ச்சு எழுதிய பதிவுகள் எத்தனை?

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி வாங்கினதையும் கொடுத்ததையும் என்னிக்குமே நியாபகம் வச்சிகிட்டது இல்ல

   Delete
 12. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடர் சுவையாக உள்ளது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி புலவர் அய்யா

   Delete
 13. பரீட்சை விடயத்தில் என்னை மாதிரியே இருக்கிறீங்க.என்ர ஆங்கில அறிவு பற்றி சத்தியமா எனக்கே தெரியல அதால எதுவும் சொல்ல விரும்பல.நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றி டினேஷ்

   Delete
 14. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள். நூறிலிருந்தே தெரிகிறதே?

  ஆங்கில அறிவு அவசியம் என்று நினைப்பவன் நான். அதற்குக் காரணம் ஆங்கிலம் அற்புதமான மொழி என்பதால். உலக வணிக நிலவரத்தில் இன்றைக்கு ஆங்கிலம் முக்கிய மொழியாகப் புழங்குவது ஒரு பக்கவாட்டுக் காரணம். தமிழோ ஆங்கிலமோ ப்ரெஞ்சோ மேன்டரினோ.. மொழி வழிக் கல்வியினால் எதுவும் கெடாது என்றும் தீர்மானமாக நம்புகிறேன்.

  இருபது வருடங்களுக்கு முன் ஜெர்மனி ஜப்பானிலும், இப்போது சைனாவிலும் கிடந்து வியக்கிறேன் - தாய்மொழிக் கல்வியினால் அவர்கள் கொஞ்சம் கூடக் குறைந்துவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது.

  எனினும் தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆங்கிலக் கல்வி அவசியம் என்று நான் எண்ணுவதே, கொஞ்சம் குற்றமாகத் தோன்றினாலும், அவசியமாகவும் தோன்றுகிறது.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் மாணவர்களின் தன்னம்பிக்கை ("கம்யூனிகேசன்" என்ற பெயரில் மெழுகப்படும் திறன்) ஆங்கிலம் என்றவுடன் குறைவதாக இருந்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்வதில் காட்டிய தயக்கமும் முனைப்புக்குறையுமே காரணம். தமிழில் பேசியிருந்தால் அந்தப் பெண்மணி கம்யூனிகேசனை இம்ப்ரூவ் பண்ணச் சொல்லியிருப்பாங்களா? அந்தப் பெண்மணிக்கு இன்டர்வ்யூ ஸ்கில்ஸ் பத்தாது என்றே நினைக்கிறேன். பிலிபின்ஸ் சைனா ஜப்பானில் இன்றைக்கும் அவர்கள் மொழியில் தான் வேலைக்குத் தேர்வு செய்கிறார்கள். வேலை தேடி வருவோரின் முனைப்பும் தன்னம்பிக்கையும் கவனிக்கிறார்கள். ஆங்கிலம் அந்த வேலைக்குத் தேவைப்பட்டால் ஒரு வருட immersion பயிற்சி தருகிறார்கள். அதைவிட்டு நாம் வாலைப் பிடித்து அலைவதால் சற்றுப் பின்தங்கியே இருக்கிறோமோ?

  1870-1920 கட்டத்தில் ஜெர்மன் தெரியாவிட்டால் "கம்யூனிகேசன் குறைவு" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள் :-) 2050 கட்டத்தில் மேன்டரின் தெரியாவிட்டால் தன்னம்பிக்கை குறைந்து வியர்த்துக் கொண்டிருப்பார்கள். மேண்டரினில் கம்யூனிகேசனுக்கு என்னவென்று தெரியவில்லையே?!


  ReplyDelete
  Replies
  1. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...சுவாரஸ்யம்...தொடருங்கள்...

   அப்பாஜி...

   நலமா?

   --அந்தப் பெண்மணிக்கு இன்டர்வ்யூ ஸ்கில்ஸ் பத்தாது என்றே நினைக்கிறேன்.--

   பாதி நேரம் PRODUCTION SUPPORT...CUSTOMER SUPPORT... ன்னு BUTLER ENGLISH பேசும் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்ய அடிப்படை ஆங்கிலம் தேவை தான்னு அந்தம்மா நினைக்கலாமில்லையா ?

   தெரியாம நம்மாளு வளர்ந்து ஒரு நாள் ஏழெட்டு நாடுகளுக்கு தலைமைப்பொறுப்பு எடுக்கலாம்னு அந்தம்மா நினைக்கலாமில்லையா ?

   -:)

   பின்குறிப்பு...அந்தம்மா எனக்கு சொந்தமில்லை.

   Delete
  2. interesting point ரெ வெரி.

   support வேலைக்குத் தேவையானது ஆங்கிலமா, அல்லது supportக்கான நுட்பமும், மனநிலையுமா?

   தொழிலுக்குத் தேவையான அடிப்படைகளை அந்தப் பெண் கணித்தாரா என்பது சீனுவின் கட்டுரையிலிருந்து என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்கில அறிவை மட்டும் வைத்து கம்யூனிகேசன் குறை என்று கணித்திருந்தால் அந்தம்மாவுக்கு ஸ்கில்ஸ் பத்தாது என்றே நம்புகிறேன்.

   ஜெர்மன் அல்லது ஜேபனீஸ் வாடிக்கைக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால்? ஒரே நபர் அல்லது ஒரு குழு, ஒரே நுட்பத்தில் வெவ்வேறு மொழி வாடிக்கைக்குச் சேவை செய்வதென்றால்?

   semiconductor industryல் பாதிக்கு மேல் கொரியாவுக்கும் சைனாவுக்கும் வெளிச்சேவைக்காக அனுப்பப்படுகின்றன - complex manufacturing எத்தனையோ சைனாவில் செய்யப்படுகிறது - மிகக் கடினமான ஆட்டோ டிசைன் பெயின்ட் பார்முலேசன் என்று எக்கச்சக்கமாக சைனாவில் செய்கிறார்கள் - இவற்றுக்கான தினசரி பேச்சுவார்த்தைளும் தகவல் தொடர்பும் திக்கித் திணறி ஆங்கிலம் பேசும் தென் கொரிய சைனீஸ் திறமைசாலிகளுடன் வெற்றிகரமாக நடக்கிறது. இவர்களை வேலைக்கு எடுத்தவர்கள் ஆங்கிலத்தில் பேசத்தெரிந்தவர்களா என்று கேட்கவில்லை என்ற பெரும் சாத்தியம் இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்ததும் ஒவ்வொருவருக்கும் 1000 மணி நேர intensive ஆங்கிலப் பயிற்சி வழங்கப்படுகிறது. மொழி இரண்டாம் பட்சம் என்றே நினைக்கிறேன்.

   having said all that, இந்தியாவில் ஆங்கிலம் பேசுவது ஒரு fashion, status symbolஆகவே இருந்து வந்தது - இன்றைக்கும் அப்படியே. ஜீவன்சுப்பு சொல்வது போல் பழம்பெருமைக்காக ஆங்கிலத்தை தழுவி நிற்பவர்கள் தமிழர்களும் பம்பாய்க்காரர்களும் மட்டும் தானோ என்று அடிக்கடி தோன்றும். சென்னை மட்டுமில்லாமல், தமிழ் நாட்டில் தெருவுக்குத் தெரு ஆங்கிலம் பேசினால் நல்லது தான். நகரங்களில் மாத்திரம் ஆங்கில வழி முன்னேற்றம் பரவுவானேன்? இந்தச் சிக்கல் சென்னை என்றில்லை, பம்பாய், தில்லி போன்ற நகர புறநகர் என்று நாடு தழுவிய சிக்கலாக இருக்குமென்று தோன்றுகிறது.

   சைனாவுக்கு விட்டுக் கொடுத்த தொழில்நுட்ப வணிக வாய்ப்புக்களைப் பிடிக்க ஆங்கிலம் ஏதோ ஒரு வகையில் உதவினால் உதவட்டும். ஆனால் ஆங்கிலத்தில் பேசத் தேவையில்லாமல் பயந்து சாகும் எத்தனையோ திறமைசாலிகளை 'கம்யூனிகேசன்' பத்தாது என்று பொய் முத்திரை குத்துவது தவறென்று நினைக்கிறேன்.

   Delete
  3. மிக்க நன்றி அப்பாதுரை சார்

   அப்பாதுரை சார் நூறாவது பதிவு என்று போடுவதால் இருக்கு அபாயங்கள் எனக்கு தெரியும் அதான்..அதான் நன்றாக வளர்ந்த பதிவை பாதியிலேயே வெட்டிவிட்டேன்.. அடுத்த பதிவில் இன்னும் சில விசயங்களைக் கூறுகிறேன், உங்கள் அனுபவம் அதனை இன்னும் சீர்தூக்கிப் பார்க்கட்டும்

   //விடாமுயற்சிக்கு வாழ்த்துக்கள். நூறிலிருந்தே தெரிகிறதே?// அது ஏன் சார் பக்கத்துல ஒரு கேள்விக் குறி !

   // அந்தப் பெண்மணிக்கு இன்டர்வ்யூ ஸ்கில்ஸ் பத்தாது என்றே நினைக்கிறேன்.//

   எனது அடுத்த இண்டர்வியு மற்றும் மற்ற இண்டர்வியு அனுபவங்களுடன் ஒப்பிட்டால் நிச்சயம் அந்த அம்மாவுக்கு ஸ்கில்ஸ் குறைவு தான். காரணம் மணி மாலை ஐந்தைத் தாண்டி இருந்தது, எனக்கு பின்னும் பலரை இண்டர்வியு செய்ய வேண்டிய கட்டாயம், ஏனோ தானோ என்ற ஒரு நிலை தான் அவரிடம் இருந்தது.

   ஒருவனை நேர்முகத் தேர்வு செய்யும் பொழுது அவனை அந்த சூழலுக்கு பழக்கப் படுத்த வேண்டியது அந்த HRஇன் மிக முக்கியமான வேலை, அவன் டென்சனாக இருந்தால் அவனை கூல் செய்வது, பின் அவன் தகுதியானவனா என்று கேள்வி கேட்பது, இதில் ஒன்று கூட அந்த அம்மாவிடம் இன்டர்வ்யூ பொழுது கவனிக்கவில்லை.

   //பிலிபின்ஸ் சைனா ஜப்பானில் இன்றைக்கும் அவர்கள் மொழியில் தான் வேலைக்குத் தேர்வு செய்கிறார்கள். வேலை தேடி வருவோரின் முனைப்பும் தன்னம்பிக்கையும் கவனிக்கிறார்கள். // இந்த நிலைமை ஏன் இந்தியாவில் இல்லை... என் ஆதங்கம்

   Delete
  4. மிக்க நன்றி ரெவரி...

   தமிழ் மீடியம் மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு கொஞ்சமே கொஞ்சமேனும் உள்ளது, ஆனால் தன்னை வெளிபடுத்துதல் என்ற நிலையில் பின்தங்குகிறார்கள்...

   //தெரியாம நம்மாளு வளர்ந்து ஒரு நாள் ஏழெட்டு நாடுகளுக்கு தலைமைப்பொறுப்பு எடுக்கலாம்னு அந்தம்மா நினைக்கலாமில்லையா ?//

   இந்த இடங்களில் நான் உங்களுடன் அல்லது அந்த அம்மாவுடன் முற்றிலும் முரண்படுகிறேன், காரணம் என்னை கண்டறிய வேண்டியது அந்த அம்மாவின் வேலை அதாவது HRன் வேலை, ஒரு வேளை நம்மாளு தெரியாமல் வளரும் பொழுது அவனுக்கு தேவையான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ளுவானா கண்டறிய வேண்டியது தான் HR தந்திரம் என்றால் என்னிடம் முறைப்பாக போலீஸ் போல் நடந்து கொண்ட அந்த அம்மாவிடம் என்னுள் புகுந்து என்னை அறிதல் என்ற தகுதி கொஞ்சம் கூட இல்லை .

   சாமுதிரிகா லட்சணத்தில் அந்த அம்மாவின் முகத்தில் சிரிப்பின் ரேகைகள் கொஞ்சம் கூட இல்லை எண்டு சொல்லி இருக்கிறேனே.

   அடுத்த பதிவில் இன்னும் தெளிவாய் தொடர்வதற்கு என்னை உற்சாகபடுத்திய உங்களுக்கு மிக்க நன்றிகள் ரெவரி

   Delete
  5. அப்பாதுரை சார்

   //support வேலைக்குத் தேவையானது ஆங்கிலமா, அல்லது supportக்கான நுட்பமும், மனநிலையுமா//

   நான் இருப்பது PROD SUPPORT என்பதால் தொழிநுட்பம் மிக அதிகமாகவும் ஆங்கில அறிவு சமாளிக்கும் அளவிற்கு தெரிந்தாலும் போதும், ஆனால் பழக பழக இன்று அவர்களுடன் பேசுவதில் தடையேதும் இல்லை.

   பல இடங்களில் என் தமிழ் மீடியம் என்னை விடாது கருப்பாய் தொடர்கிறது, அதற்காக நான் கவலை கொள்ள வில்லை, அடுத்த பதிவில் அது பற்றி குறிபிடுகிறேன்

   //ஆங்கிலத்தில் பேசத் தேவையில்லாமல் பயந்து சாகும் எத்தனையோ திறமைசாலிகளை 'கம்யூனிகேசன்' பத்தாது என்று பொய் முத்திரை குத்துவது தவறென்று நினைக்கிறேன்.//

   மிக சரியாக நான் சொல்ல விரும்பியதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்...

   Delete
 16. நானும் இப்படித்தான் ஒரு தொடர் துவக்கினேன் பாதியில் நிக்குது,மறுபடி எழுதணும்

  ReplyDelete
  Replies
  1. அது ஒரு நல்ல தொடர்..சீக்கிரம் தொடங்குங்க

   Delete
 17. வாழ்த்துக்கள் சதத்திற்கு ...! கட்டுரையாக இல்லாமல் காட்சிகளாக கொட்டியிருந்த எழுத்துகள் எல்லாமே எதார்த்தம் .

  @ அப்பாத்துரை ஐயா ...

  //இருபது வருடங்களுக்கு முன் ஜெர்மனி ஜப்பானிலும், இப்போது சைனாவிலும் கிடந்து வியக்கிறேன் - தாய்மொழிக் கல்வியினால் அவர்கள் கொஞ்சம் கூடக் குறைந்துவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. //

  ஒரு புதிரும் இல்லை ஐயா ... அவர்கள் கண்டுபிடிக்கின்றார்கள் , ஆராய்ச்சி செய்கின்றார்கள். அவர்கள் உற்பத்தியாளர்கள் . நாமோ நுகர்வோராக ,சேவகராக மட்டுமே காலந்தள்ளிக்கொண்டிருக்கிறோம் . போதாதுக்கு பழம் பெருமை வேறு .


  @ சீனு ...

  //என்றும் என்னை புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும்//

  பழையதாக புதுப்பித்தல் என்று ஏதேனும் இருக்கின்றதா என்ன ...? புதுப்பித்தல் என்றாலே புதிதாக்குவது தானே ....! நக்கல் இல்லப்பா சீரியஸா தான் கேக்குறேன் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜீவன் சுப்பு

   //பழையதாக புதுப்பித்தல் என்று ஏதேனும் இருக்கின்றதா என்ன ...? புதுப்பித்தல் என்றாலே புதிதாக்குவது தானே ....! நக்கல் இல்லப்பா சீரியஸா தான் கேக்குறேன் .//

   தமிழில் உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு தெரியும் தானே.. அதாவது ஒன்றை உயர்த்திக் கூறும் பொழுது அதனை எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்திக் கூறுவது அதைத் தான் கூற முயன்றிருகிறேன்.

   //உயர்வு நவிற்சி அணி// இந்த அணியின் பெயர் உயர்வு நவிற்சி அணி தானா என்று யாராவது உர்து படுத்தினால் யான் பாக்கியவான் ஆவேன், வேறேதும் என்றால் திருத்தினால் மகிழ்வேன்

   Delete
  2. //தமிழில் உயர்வு நவிற்சி அணி என்று ஒன்று உண்டு தெரியும் தானே.. //

   இன்று தான் தெரிந்து கொண்டேன் .நன்றி நண்பா .


   உயர்வு நவிற்சி அணிக்கு அதிசய அணி என்றும் பெயர் உண்டு என விக்கி பீடியாவில படித்தேன் .அது அப்படியே கீழே ...

   குதிரை வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது தன்மை நவிற்சி அணி
   குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது உயர்வு நவிற்சி அணி
   காற்று மிகவும் வேகமானதொன்று. அதையும் விட வேகமாகப் பறப்பதென்பது மிகைப்படுத்திய கூற்று.//

   ஆனால் உமது வாக்கியத்தில் முடியாத ஒன்று (அதிசயம் ) எதுவும் இருப்பதாக எமக்கு தெரியவில்லையே நண்பா . இதே சந்தேகத்தை கட்டுரையாளர் என்.சொக்கன் அவர்களிடம் மின்னஞ்சல் வழியாக கேட்டேன் அவர் கொடுத்த பதில்...

   //என்னை தினந்தோறும் புதியவனாகப் பிறக்கவைத்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி... இப்படி இருந்தால் சரியாக இருக்குமென்று சொல்கிறார் //

   வேறு யாரேனும் இது தொடர்பாக விம் போடவும் ...!


   Delete
  3. என்னை புதிதினும் புதிதாக புதுப்பித்துக் கொண்டிருக்கும் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதை இப்போது தான் உணர்ந்தேன்... இதை எழுத நினைத்து அதை தொங்கலில் விட்டுவிட்டேனா என்றும் தெரியவில்லை...

   உங்கள் ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது

   //இன்று தான் தெரிந்து கொண்டேன் .நன்றி நண்பா .// என்ன ஓட்டலையே காமெடி இல்ல சீரியஸ்

   Delete
 18. 100வது பதிவுக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா

   Delete
 19. 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்.

  அப்பாதுரை தன்னுடைய நல்லதொரு பின்னூட்டத்தில் ஒரு இடத்தில் ஆறுதலளித்தார். சீனு... தொடருங்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்.. அப்பாதுரை கொடுத்த கருத்துகள் அனைத்தும் உலக ஞானம்..

   Delete
 20. 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சீனு.

  நேர்காணல் நாட்கள் நினைவில் வந்தன.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபக் :-)

   //நேர்காணல் நாட்கள் நினைவில் வந்தன.// ha ha ha

   Delete
 21. 100 வது பதிவையும் படித்த பின் உங்களின் எழுத்து திறமைக்கு மார்க் போட்டு பார்த்தேன் நீங்கள் 100 க்கு 100 வாங்கி பாஸாகிவிட்டீர்கள்

  ReplyDelete
  Replies
  1. //100 வது பதிவையும் படித்த பின் உங்களின் எழுத்து திறமைக்கு மார்க் போட்டு பார்த்தேன் நீங்கள் 100 க்கு 100 வாங்கி பாஸாகிவிட்டீர்கள்// மிக உற்சாகமான கருத்துரைக்கு மிக்க நன்றி மதுரைதமிழன்...

   Delete
 22. சீனு இந்த பதிவில் நீங்கள் உங்களைபற்றி எழுதி இருக்கிறீர்களா அல்லது என்னைப்பற்றி எழுதி இருக்கிறீர்களா சந்தேகமாக இருக்கிறது. காரணம் எனது முதல் இண்டர்வியூவிலும் 'இம்ப்ரூவ் யுவர் கம்யுனிகேசன்' என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்


  இந்தியாவில் ஆங்கிலம் பேசும் போது சிறிது தவறாக பேசிவிட்டால் நம்மை ஏதோ ஒரு கேவலமான பிறவி போல ஒரு ஏளனப்பார்வை பார்ப்பார்கள். ஆனால் இங்கு அப்படி யாரும் நினைக்க மாட்டார்கள். இங்கு நாம் தவறுதலாக பேசினாலும் நாம் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு மேலே தொடர்ந்து பேச்சை தொடர்வார்கள்.

  நான் இங்கிலீஸில் பேச ஆரம்பித்ததே அமெரிக்கா வந்துதாங்க். நானும் தென்காசிப் பக்கம் உள்ள செங்கோட்டையில் பபிறந்து மதுரையில் உள்ள கவர்மெண்ட் ஸ்கூலில் அல்ல கார்போரேஷன் ஸ்கூலில்தான் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. // இங்கு நாம் தவறுதலாக பேசினாலும் நாம் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டு மேலே தொடர்ந்து பேச்சை தொடர்வார்கள்.// மிக சரி சார், சில நேரம் கிண்டல் செய்வார்கள் இருந்தாலும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்கள், அவர்களிடம் பிடித்த ஒரு முக்கியமான விஷயம்.

   //நானும் தென்காசிப் பக்கம் உள்ள செங்கோட்டையில் பிறந்து மதுரையில் உள்ள கவர்மெண்ட் ஸ்கூலில் அல்ல கார்போரேஷன் ஸ்கூலில்தான் படித்தேன்.// நீங்க செங்கோட்டையில் பிறந்தவர் என்பதை அறிவேன் ஸார்...

   Delete
 23. நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள் சீனு. மேலும் பல பதிவுகள் எழுதவும் தான்.

  விடாது கருப்பு..... நல்லதோர் விவாதம்..... தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட் ஸார்

   Delete
 24. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சீனு ஆயிரத்திற்கு அச்சாரமிட இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சரவணன் சார்.. என்னது ஆயிரமா.. ஹா ஹா ஹா ஓடுகிறேன்...

   Delete
 25. சீனு, உங்க பதிவ படிச்ச போது இரண்டாயிரத்தி ஒன்றில் நான் சந்தித்த அதே சிச்சுவேஷனை நீங்களும் சந்திசுருகீங்க.. இத பத்தி ஒரு பதிவு போடறேன்..

  ReplyDelete
 26. செஞ்சுரிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 27. நூறாவது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள்...

  மும்மொழித்திட்டம் கடைப்பிடித்திருந்தால்
  ஒரு தலைமுறையே உயர்ந்திருக்கும் ...

  ReplyDelete
 28. sirippilum kooda aangilam therinthathu..nalla rasanai..nan pala murai avamanapattirukkiren aangilam theriyamal..10m vaguppil school second(tamil medium)..aanal 12m vaguppil english medium ..romba kashta pattirukkiren..athai oru pathivil solgiren..eppadiyo oru pathivu thettiyachu..

  ReplyDelete
 29. வாழ்த்துகள் சீனு...மிக திறமையான நூறாவது பதிவு....முதல்முதலில் படித்தபோது பின்னூட்டம் இட முடியாத சூழ்நிலை. விரைவில் செஞ்சுரிக்கு மேல் செஞ்சுரி அடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்....

  ReplyDelete