15 Apr 2013

அப்பாவிப் பதிவர் 'ஸ்கூல் பையனை' பற்றிய உண்மை செய்தி

நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியிலிருந்து மாற்றி என்னை ஆறாம் வகுப்பில் சேர்த்தபோது தான் அவன் அறிமுகமானான், எனக்கு நண்பனும் ஆனான். இப்பவும் அவன் என் நெருங்கிய நண்பன் என்பதால் அவன் பேரைச் சொல்ல என் விருப்பம் இடம் கொடுக்கவில்லை.

நாங்க அறிமுகமானப்ப நாங்க ரெண்டு பேருமே ஸ்கூல் பையன்கள்ங்கறதால அவனை ஸ்கூல் பையன்னே கூப்பிட்டேன். அவன ஸ்கூல்பையன்னு கூப்பிட்ட மொதோப் பையனும் நான்தான்

ஸ்கூல்பையனுக்கும் ஸ்கூல்பையன்ற பேரு ரொம்பப் பிடிச்சிப் போச்சு, யாரு அவன "ஸ்கூல் பையா"ன்னு கூப்பிட்டாலும் சந்தோசத்துல துள்ளி குதிக்க ஆரம்பிச்சிருவான். ஆனா அவனுக்கு நான் சூட்டிய பேரே கொஞ்சம் விவகாரமா மாறும்ன்னு யாருமே எதிர்பார்க்கல. யாருமே எதிர்பார்க்காதத நானும் எதிர்பார்க்காதது என்னோட தப்பு இல்லையே மை லார்ட்.           

நம்ம ஸ்கூல் பையன் இருக்கானே... அவனுக்கு பால் வடியற முகம்...! (எத்தனை டம்ளர்ல பிடிச்சேன்னுல்லாம் வெவகாரக் கேள்வி கூடாது). ரொம்பவே அப்ப்ப்பாவிப் பையன். போர்டுல வாத்தியார் 'குருவே துணை'ன்னு எழுதி ''இதை நோட்ல எழுதுங்கடா''ன்னா இவன் நோட்டுல 'குரு வேதனை'ன்னு எழுதற பயல்! அவன். வாத்தியார் ஒண்ணு சொன்னா, இவ்ன வேறொண்ணு சொல்லி அவரை டென்ஷனாக்கறதே எங்களுக்கெல்லாம் பெரிய டமாஸு!

அன்னிக்கு அப்படித்தான். க்ளாஸ் லீடரை செலக்ட் பண்ணப் போறேன்னு முதல்லயே அனவுன்ஸ் பண்ணியிருந்த எங்க வாத்தியார் வகுப்புக்குள்ள வந்ததும் வராததுமா,''க்ளாஸ்லயே நல்லாப் படிக்கறது யாருடா?''ன்னு கேட்டார்

நம்ம ஸ்.பை. எழுந்திருச்சு படுவேகமா, ''நீங்கதான் சார்! எங்களுக்கு பாடத்தல்லாம் சரியா புரிஞ்சுக்கற மாதிரி நடத்தணுமேன்னு திரும்பத்திரும்ப புத்தகத்தை நீங்கதானே படிக்கறீங்க?''ன்னு சொல்ல, அவர் கையால கொட்டு வங்கி வலி தாங்காம ஸ்கூல்பையன் கத்தினான்

" சாரி ஸார் தெரியாம சொல்லிட்டேன், நீங்க நடத்துறது எதுவுமே எங்களுக்கு ஒழுங்காப் புரியல, அதுநாள நீங்க நல்லா படிக்கிற, பையன் இல்ல, மன்னிச்சு"ன்னு. இத கேட்ட வாத்தி  இன்னும் கடுப்பாக, கூட நாலு குட்டு குட்டிட்டு இடத்த காலி பண்ணினாரு

இப்டியே ஸ்கூல் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா பாப்புலர் ஆக ஆரம்பிச்சான் நம்ம ஸ்கூல்பையன். இப்ப கொஞ்ச நாளாவே அவன்கிட்ட வினோதமான ஒரு பழக்கம் உருவாக ஆரம்பிச்சிருந்தது. அதாவது அவன யார் ஸ்கூல்பையன்ன்னு கூப்பிட்டாலும் அவன் கிட்ட வித்தியாசமான மாற்றங்கள் வர ஆரம்பிச்சது

முகம் ரொம்ப சந்தோஸமா மாறும்.  ண்ணு நல்ல அகல விரியும்வார்த்தைகள் தடுமாறும்வார்த்தையில உள்ள எழுத்தையோ அல்லது வாக்கியத்துல உள்ள வார்த்தைகளையோ மாத்தி மாத்தி பேசுவான். இப்படியெல்லாம் ஆச்சுனா அவன் முழுசா ஸ்கூல்பையன் ஆகுற நேரம்ன்னு நாம தெரிஞ்சிக்கலாம்

அவன் அப்டி பேசும் போதெல்லாம் என்ன பேசுறான்னு புரிஞ்சிக்கது ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனாலும் அவன் கூட பழகி பழகி ஸ்கூல்பையன் பாஷை புரிய ஆரம்பிச்சிருச்சு. புதுசா அவன் கிட்ட யாரது பேசுனா நாங்க தான் மொழிபெயர்த்து சொல்ல வேண்டி வரும்.   

வார்த்தைகளை மாத்திப் பேசறதுக்கு ஒரு உதாரணம் சொன்னா எங்க கஷ்டம் ஈஸியாப் புரியும் உங்களுக்கு, ஒரு லீவு நாள்ல அவன் வீட்ல கேரம்விளையாடிட்டிருந்தப்ப, அவங்கப்பா அவனைக் கூப்பிட்டு, ''டேய், கடைக்குப் போயி நாலு சாந்தி பாக்கு வாங்கிட்டு வா. டேய் குட்டன், நீயும் அவன்கூடப் போயிட்டு வா...'' என்றார்.

கடைக்கு நாங்க போனதும் "என்னடா ஸ்கூல் பையா, இன்னிக்கு பள்ளிக்கூடம் லீவா, உங்கப்பன் என்ன பண்றான்" என்றார் கடைக்கார அண்ணாச்சி.  

"ஆமா அண்ணாச்சி லீவு தான்எங்கப்பாவ ஆடு சாப்டிருச்சு, பாக்கு போட்டா தூக்கம் வரும்ன்னு சொல்லிச்சுநாலு பூந்தி சாக்கு கொடுங்க...!விளையாட போவனும்''

கடைக்கார அண்ணாச்சி மண்டையப் பிச்சுக்கிட்டு, " டேய் உங்கப்பன் ஆட்ட தின்னானா, இல்ல ஆடு உங்கப்பன தின்னுச்சா"

"அதெல்லாம் எனக்கு தெரியாதுநாலு பூந்தி சாக்கு கொடுங்க...! சீக்கிரம் போவனும்''.       

"பூந்தில்லாம் சாக்குல போட்டு யாராவது விப்பாங்களா? என்ன வேண்டும்ன்னு சரியா கேளுடா' என்று அவர் மண்டையைப் பிய்க்க , உடன் சென்றிருந்த நான் சரியாகச் சொல்லி வாங்கி வந்தேன்.

என் கிளாஸ்ல படிச்ச பொண்ணு பேரு தாரா. அவ அப்போ கொஞ்சம் சுமாரான பிகர் தான்தாராக்கு ஸ்கூல் பையன்னா ரொம்பப் பிடிக்கும். குண்டா இருக்க அவன் கன்னத்த புடிச்சி செல்லமா கிள்ளிட்டே இருப்பா. ஆனா ஸ்கூல் பையனுக்கோ அவளப் பிடிக்காதுராட்சின்னு தான் கூப்பிடுவான்

ஒம்போதாங் கிளாஸ் படிக்கும் போது ஒருநாள் தாரா அவளோட லவ்வ நம்ம ஸ்கூல் பையன் கிட்ட சொல்லிட்டா. இதக் கேட்ட நம்ம ஸ்கூல் பையனுக்கு பயங்கரக் கோவம். வேக வேகமா மிஸ் கிட்ட போனான். அந்த மிஸ் அப்போ தான் ஸ்கூல்ல புதுசா ஜாயின் பண்ணிருந்தாங்க. நம்ம ஸ்கூல் பையனப் பத்தி அவங்களுக்குத் தெரியாது.   

"மிஸ்.... ம்ம்ம்ம்ம்ம்ம்மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... மிஸ் என்ன லவ் பண்றான்னு தாரா சொல்றாங்க மிஸ், எனக்கும் மிஸ்ஸுக்கும் இடையில எந்த லவ்வும் இல்ல... இத  நீங்க தான் தாராகிட்ட சொல்லி புரிய வைக்கணும்....."    

மிஸ்ஸும், ஸ்கூல்பையனும் லவ் பண்றதா' தாரா புரளி கிளப்பி விட்ரான்னு தப்பா புரிஞ்சிக்கிட்ட நம்ம மிஸ்க்கு தாரா மேல பயங்கரக் கோவம். தாராவ ஸ்கூல்ல இருந்தே அடிச்சி விரட்டிட்டாங்க.அவ ஸ்கூல் விட்டும் போகும் போது "உனக்கு ஜென்ம விரோதி நான்தாண்டா"ன்னு சாபம் எல்லாம் விட்டுட்டுப் போயிட்டாஎது எப்டியோ ராட்சஸி ஒழிஞ்சதுல நம்ம ஸ்கூல் பையனுக்கு ரொம்ப சந்தோசம் தான்

தாராவின் அறிய புகைப்படம் 
என் நேரம், காலேஜும் அவன்கூட சேர்ந்து படிக்க வேண்டியதாப் போச்சு.     நாங்க படிச்ச அதே காலேஜ்ல தான் தாராவும் வந்து சேர்ந்தா சூப்பர் பிகரா. நச்சு பிகரா, செம பிகராசொல்லபோனா அந்த காலேஜ்லையே அவ தான் செம பிகர்

ச்ச..இவளப் போயி மிஸ் பண்ணிட்டோமேன்னு ஸ்கூல் பையன் வருத்தப்பட ஆரம்பிச்சான். எப்டியாது அவல கரெக்ட் பண்ணும்ன்னு ஏகப்பட்ட சித்து வேல பார்த்தான், இவன வெறுத்து ஒத்துகிட்டா.

"அட்லீஸ்ட் நீ விட்ட சாபத்தையாது திரும்ப வாங்கிக்கோன்னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டான். சதிகாரி மறுத்துட்டா.  

பைனல் எக்ஸாம். அரை மணி நேரத்துல பரீட்சை பேப்பரைக் குடுத்துட்டு வெளில நின்னு ஜன்னல் வழியா தாராவ சைட்டடிச்சுட்டிருந்தான் நம்ம ஸ்கூல் பையன்

"என்னடா ஸ்கூல் பையா தாராவ சைட் அடிக்கிற நேரத்துல ஒழுங்கா உக்காந்து எக்ஸாம் எழுதி இருகலாமேடான்னு கேட்டா அவன் சொன்னான்... ''கெலபஸ்லருந்து ஒரு சீள்வியும் வரல மச்சி, நா என்ன பண்றது''ன்னான். (சிலபஸ்லருந்து கேள்வி என்று திருத்தி வாசிக்க). 

''இல்லயே... எந்தக் கேள்வியும் அவுட் ஆஃப் சிலபஸ் கிடையாதேடா... நான் சரியாத்தான பாத்தேன்...'' என்றேன்.

"நா கொண்டு போன கொஸ்டின் பேப்பர்ல இருந்து ஒரு பிட்டுமே வரலைடா, அதான் கொஸ்டின் பேப்பர அப்டியே மடிச்சு கொடுத்துட்டு ஆன்செர் பேப்பர மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்", என்றான் சைட் அடிப்பதில் முழுக்கவனம் செலுத்திய ஸ்கூல் பையன்

இப்படியே விட்டா சரிப்பட்டுவராது இவன குணப்படுத்தியே ஆகணும்னு, அவனுக்கு தனியா ஒரு ஸ்பீச் தெரபி க்ளாஸ்ல சேர்த்துவிட்டோம்.... கொஞ்சம் சரியாப் பேச ஆரம்பிச்சான். ஆனாலும் அப்பப் அவனயறியாம இந்த பழைய 'கொனஷ்டை'வந்துடும் ...!

இந்த நேரத்துல தாராக்குக் கூட இவன் மேல் கொஞ்சம் லவ்வு வந்து இருந்தது

ஒருநாள் தாராகிட்ட கிட்ட போய், ''ஹலோ... தாரா நான் தினம் மறந்து பேச வந்திருக்கேன்'' என்றான். '

'என்னது....? தினம் மறக்கறியா? அப்ப என் மூஞ்சிலயே முழிக்காதே...சத்தியமா என் சாபம் பலிகும்டா''ன்னுகோவிச்சுக்கிட்டுப் போயிட்டா. அன்னிக்கு போனவ தான் திரும்ப வரவே இல்ல.  

லவ் பெய்லியர்! சரின்னு ஒழுங்கா ஸ்டடீஸை முடிச்சுட்டு, ஒரு நல்ல வேலைல செட்டிலாகினான், இவனோட வியாதி, தாராவோட லவ் பெயிலியர் எல்லாம் சொல்லிஒரு வழியா அவன் மாமா பொண்ணோட கல்யாணமாகி, குழந்தை பிறந்துட்ட நிகழ்காலச் சதுரத்தில் (எங்க வாழ்க்கை எல்லாம் வட்டமில்லீங்க)  அவனைப் பார்க்க ஒரு நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். தாடையில கைய வெச்சுக்கிட்டு சோகமா மோட்டு வளையப்பாத்துட்டு உக்காந்திருந்தான்.

உண்மையான ஸ்கூல் பையன் 
 ''என்னடா ஸ்கூல் பையா... எதுக்கு இத்தனை சோகம்?''னு கேட்டேன்.

''அத ஏண்டா கேக்கறே? நான் நிதானமா யோசிச்சு வார்த்தைய மாத்தாம சரியாப் பேசினாலும்கூட தூக்கத்துல பேசறப்பயும், சில சமயம் என்னை மறந்தும் பழைய மாதிரி பேசிடறேன்டா. அதான் பிரச்சனைக்கே காரணம்'' என்றான்.

''என்னாச்சுன்னு சொல்லாம நீ பாட்டுக்குப் புலம்பினா எப்படிரா?'' என்றேன்.

''முந்தாநாள் ராத்திரி தூக்கத்துல ஒரு நல்ல கனவு கண்டு நான் 'தாரா லவ் யூ, தாரா லவ் யூ'ன்னு புலம்பியிருக்கேன். என்னோடவொய்ஃப் என் மூஞ்சில உண்ணியத் தூத்தி எழுப்பி, 'நான் கிட்ட இருக்கறப்பவே தாரா கூட லவ்வா?'ன்னுட்டுகோவிச்சுக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டாடா...'' என்றான்.

"அடப் படுபாவி...! கல்யாணமாகி குழந்தையும் பிறந்ததுக்கப்புறம் நம்ம கூட  படிச்ச தாராவ நினைச்சு உருகினேன்னா, அவங்களுக்குக் கோபம் வராம எப்படிறா இருககும்?'' என்றேன்.

''அட, நீ வேறடா! என் மனைவி பேரை மறந்துட்டியாடா? அவளோட பேர் ராதாடா! தூக்கத்துல ராதா தான் தாராவா மாறிட்டாடா. அதப் புரிஞ்சிக்காத இவ, "நீங்க எப்ப தாராவ மறக்குரீங்களோ அப்பா தான் வருவேன்னு சொல்லிட்டுப் போயிட்டா' டா."  

"டேய் குட்டா இப்ப உனக்குப் புரிஞ்சிருக்குமே என்னோட பிரச்னை! அவபாட்டுக்கு கோவிச்சுட்டு என் பிள்ளையவும் கூட்டிட்டுப் போயிட்டாடா.... என்னத்தச் சொல்ல... டேய், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றா... அவளோட என்ன சேர்த்து வைக்க கூட வேணாம் டா, இந்த தாராவக் கண்டுபிடிச்சி அவ விட்ட சாபத்த மட்டும் திருப்பி வாங்கிக்க சொல்லுடா.. அது போதும் எனக்கு.." கண்ணீர் மல்க என் கையை கையாய் நினைத்தான் என் ஆருயித் தோழன் ஸ்கூல் பையன்.   

"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல பாஸு. சொல்லப் போனா. எனக்கு ஸ்கூல் பையன்னு கூட யாரையுமே தெரியாது... நான் இதுக்கு முன்னபின்ன அவனைப் பாத்ததும் இல்ல, பேசினதும இல்ல... ஆள விடுறா சாமி...!''ன்னுட்டு அவன் வீட்லருந்து தெரிச்சு ஓடியாந்துட்டேன்!

டியர் ஃப்ரெண்ட்ஸ்...! உங்கள்ல யாருக்காவது டைமும், மனசும் இருந்தா தாராவ கண்டுபிடிச்சி, அவள கரெக்ட் பண்ணி நம்ம ஸ்கூல் பையனா காப்பாதுவீங்களா... ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன் இந்தப் அப்பாவி ஸ்கூல் பையனுக்கு...!

ப்ளீஸ் மக்கா 
பின் குறிப்பு : இந்தக் கதைக்கும் நம்ம பதிவர் ஸ்கூல் பையனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

பின் குறிப்பில் முக்கிய குறிப்புஇந்தக் கதைக்கு அடித்தளம் அமைத்துக்  கோடு போட்டவர் வாத்தியார் பால கணேஷ் இல்லை.

கடைசிக் குறிப்பு : வாத்தியார் போட்ட கோட்டில் ரோடு போட்டது நான் இல்லை


25 comments:

 1. 'குருவே துணை'ன்னு எழுதி ''இதை நோட்ல எழுதுங்கடா''ன்னா இவன் நோட்டுல 'குரு வேதனை'ன்னு எழுதற பயல்!

  ரசிக்கவைக்கும் அருமையான கதை ...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றி

   Delete
 2. அடப்பாவி... பத்து ரூபா டிக்கட் வாங்கிக் குடுக்கலன்றதுக்காக இப்படியா கலாய்க்கிறது? வாத்தியார் உன்ன கலாச்சு பதிவுபோ ட்ட ப்ப முதல்ல பாத்து போன் பண்ணினதுக்கு தண்டனையா? இருக்கட்டும்.. ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம்வரும்... அப்ப பாத்துக்கறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இதுவெல்லாம் கூட நடந்திருக்கா...?

   Delete
  2. யப்பா சீனு . நீர் ந.சி.ரா பேரனான்னு கேட்டதுக்கே பயபுள்ள எங்க ஏரியா பக்கமே வர்றது இல்ல . நீ புல்லா கலாய்ச்சிட்டு கடசில இவன் அவன் இல்லங்குற . அனேகமா அன்பாலாவ்வோ தான் இருக்கும் .

   அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....!

   பவர் ஸ்டார் மாதிரி கலாய்ச்சுகிட்டு இருந்த நான் இந்த புத்தாண்டு முதல் சூப்பர் ஸ்டாராக மாற இருக்கும் காரணத்தால் இனி கலாய்த்து பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் .

   நண்பரே தங்களது இந்த பதிவு மிகவும் அருமையாகவும் , ரசனையாகவும் உள்ளது .தொடருங்கள்.. தொடர்கிறேன் .!

   Delete
  3. @ மிஸ்டர் ஸ்கூல் பையன்

   ஸார் எந்த முட்டு சந்துக்கு வரணும்ன்னு சொல்லுங்க... மூத்திர சந்து மட்டும் வேணாம்.. கப்பு தாங்காது.... கொஞ்சம் பதமா இதமா அடிக்கிற ஆளா அனுப்புங்க...

   Delete
  4. @மிஸ்டர் திண்டுக்கல் தனபாலன் சார்

   //ஆஹா... இதுவெல்லாம் கூட நடந்திருக்கா...?//   உங்களுகென்று ஒரு தனி இடம் காத்துக்கொண்டுள்ளது.. விரைவில் ஜமாய்சிரலாம்

   Delete
  5. மிஸ்டர் ஜீவன்சுப்பு

   //யப்பா சீனு . நீர் ந.சி.ரா பேரனான்னு கேட்டதுக்கே பயபுள்ள எங்க ஏரியா பக்கமே வர்றது இல்ல . நீ புல்லா கலாய்ச்சிட்டு கடசில இவன் அவன் இல்லங்குற . அனேகமா அன்பாலாவ்வோ தான் இருக்கும். //

   யோவ் பகுமானம் போறாதுயா... வெளியில அன்டீசண்ட்டா கலாய்ச்சிட்டு... அப்றமா டீசண்டா போன் போட்டு கால்ல விழுந்துருவோம் வோய்.... அதுநாள அவர் அன்பாலாவ் லா பண்ண மாட்டாரு... ஸ்டெய்ட்டா கொலை முயற்சி தான்....

   //பவர் ஸ்டார் மாதிரி கலாய்ச்சுகிட்டு இருந்த நான் இந்த புத்தாண்டு முதல் சூப்பர் ஸ்டாராக மாற இருக்கும் காரணத்தால் இனி கலாய்த்து பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன் .

   நண்பரே தங்களது இந்த பதிவு மிகவும் அருமையாகவும் , ரசனையாகவும் உள்ளது .தொடருங்கள்.. தொடர்கிறேன் .!//

   அடிங் கொய்யால அப்போ இத்தன நாளு புகழ்ந்தது எல்லாம் கேலியும் கிண்டலுமா... அப்போ நாந்தேன் நம்பி எமாந்துட்டானா

   Delete
 3. ஹா... ஹா... ரசித்தேன்...

  பிகு பிகுமுகு ககு : நம்பலே...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹாஹா

   //பிகு பிகுமுகு ககு : நம்பலே...// நம்புற மாதிரி ஒன்னு ரெடி பண்ணிருவோம்

   Delete
 4. என்னங்க சீனு உங்க பதிவு வாத்தியார் பதிவு போல 100 % இருக்குன்னு சொல்ல முடியாது ஆனால் 50 க்கும் மேல இருந்துச்சுன்னு சொல்லலாம். அதுனால நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னன்னா நீங்க அவர் தோள் மேல் எப்போதும் ஏறி உட்கார்ந்து உலகத்தை சுற்றி பாருங்க.....

  ReplyDelete
  Replies
  1. //ஆனால் 50 க்கும் மேல இருந்துச்சுன்னு சொல்லலாம். // அட்லீஸ்ட் பாஸ் ஆனேனே அதுவரைக்கும் சந்தோசம் சார்... என்னை பெயில் ஆக்காமல் பாஸ் ஆக்கிய நீங்க நல்லவரு சார் நல்லவரு

   Delete
 5. இப்டியெல்லாம் எழுதறதுனாலதான் facebookல காண்டு னு காட்டுது போல.,

  ReplyDelete
  Replies
  1. //இப்டியெல்லாம் எழுதறதுனாலதான் facebookல காண்டு னு காட்டுது போல.,// அண்ணே கொஞ்சம் புரியறா மாதிரி திட்டுனா சந்தோசமா அழுதுருவேன்.. இப்போ நா அழவா சிரிக்கவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)

   Delete
 6. அதிர்வு...ச்சீ...பதிவு ரொம்ப பெருமை...ச்சே...அருமை. இப்படித்தான் எப்படியெல்லாம் பேசிக்கிறீங்களோ...வுடகளே.... ச்சீ..கடவுளே...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ!

  ReplyDelete
  Replies
  1. //அதிர்வு...ச்சீ...பதிவு ரொம்ப பெருமை...ச்சே...அருமை. இப்படித்தான் எப்படியெல்லாம் பேசிக்கிறீங்களோ...வுடகளே.... ச்சீ..கடவுளே...எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ!//

   மிக்க கன்றி.. ச்ச நன்றி சார்.... வுடகள்.. சாரி கடவுள் உங்களை ஆசீர்வதிபாராக....

   Delete
 7. நல்லாத்தான் கலாய்க்கிறீங்க! இந்த லிஸ்டுல இன்னும் எத்தனை பேரு மாட்டறாங்களோ?

  ReplyDelete
  Replies
  1. இதுகெல்லாம் லிஸ்ட் இல்ல சார் அப்பப்ப யாரவது வருவாயிங்க.... இல்ல யாராவது சொல்லுவாங்க... :-)

   Delete
 8. எலேய் கு.மி.சி... விட்டா பின்குறிப்புல நான் சீனுவே இல்லன்னு சொல்லிருவ போலருக்கே.. கொஞ்சம் அடக்கி வாசிய்யா! ஸ்கூ்ல் பையனோட அடுத்த பதிவை உன்னையோ என்னையோ தலைய உருட்டுவாருன்னு நெனக்கிறேன். ஆவலோட வெயிட்டிங்! அதுக்குள்ள மூத்திர சந்து, முட்டு சந்துன்னு சரண்டராகி காரியத்தக் கெடுத்திடாத...!

  ReplyDelete
  Replies
  1. // ஸ்கூ்ல் பையனோட அடுத்த பதிவை உன்னையோ என்னையோ தலைய உருட்டுவாருன்னு நெனக்கிறேன்.// அப்போ ஒரு சந்து அவரு எரியாலையே ரெடி பன்றார்ன்னு சொல்லுங்க.... நல்ல வேள அடிவாங்கினாலும் கூட்டத்துல அடி வாங்குனா வலி கொஞ்சம் கம்மியாத் தான் விழும்...

   // மூத்திர சந்து, முட்டு சந்துன்னு சரண்டராகி காரியத்தக் கெடுத்திடாத...!//

   இப்ப சரண்டர் ஆகுற மாதிரி ஆவோம் அப்பாநா தான் நாளைக்கு வேற யாரையாது கலாய்க்கும் போது கல்லடி கொஞ்சம் கம்மியா கிடைக்கும்.

   Delete
  2. ஹாஹாஹா.. கலாய்க்கறதுக்கு ஒரு அளவே இல்லையா.. ஆனா ரசிக்கும்படி இருந்தது..

   Delete
 9. கலக்கல் சீனு....

  ரசித்தேன். சிரித்தேன். கலாய்க்கறத்துக்கு பெரிய லிஸ்டே இருக்கு போல! :)

  ReplyDelete
 10. //'கெலபஸ்லருந்து ஒரு சீள்வியும் வரல மச்சி, நா என்ன பண்றது''ன்னான். (சிலபஸ்லருந்து கேள்வி என்று திருத்தி வாசிக்க). //

  நல்ல கலகலப்பான பதிவு :)

  ReplyDelete
 11. '//'டேய், கடைக்குப் போயி நாலு சாந்தி பாக்கு வாங்கிட்டு வா. டேய் குட்டன், நீயும் அவன்கூடப் போயிட்டு வா...'' என்றார்.//
  யாரப்பா அந்த குட்டன்?!

  ReplyDelete
 12. கலாய்த்தல் மன்னன் சீனுவுக்கு ஒரு ஓ....ஹோ....!
  பாவம் குட்டன் அடுத்த டார்கெட் அவரா?

  ReplyDelete