9 Apr 2013

எங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும்துர பக்கம் ஒரு குக்கிராமத்தில பொறந்த நம்ம ஸ்ரீராம் சாருக்கு  சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட்னா  உசுரு. ஆனா பாருங்க அவரோட கெட்ட நேரம், கிரிக்கெட்ட ரசிச்சு பாக்கத் தெரிஞ்ச அவருக்கு சுத்தமா விளையாடத் வராது. இதனால அவரு ஏரியா பசங்க பந்து பொறுக்கிப் போடக் கூட நம்ம சார  ஆட்டத்துல சேத்துக்க மாட்டாங்க. இருந்தாலும் தனியாவே பால் போட்டு, தனியாவே பாட்டிங் பிடிச்சு கற்பனையாவே விளையாண்டுட்டு இருப்பாரு 

அந்தக் காலத்துல ரவி சாஸ்திரி மட்டையப் பிடிச்சு ஆடும்போது, ஸ்ரீராம் சாருக்கு அவங்க வீட்டு வெளக்கமாத்து மட்டையப் பிடிச்சு ஆடுறது ரொம்பப் பிடிக்கும்கிரிகெட் ஆடுனா மாதிரியும் ஆச்சு, வீட்ட பெருக்குனா மாதிரியும் ஆச்சு, மனைவி கிட்ட நல்ல பேரு வாங்குனா மாதிரியும் ஆச்சு

நம்ம சாரோட மனைவி எப்ப வீட்ட சுத்த படுத்த சொன்னாலும், உடனே நம்ம  ஸ்ரீராம் சாரு கையில (விளக்கமாத்துமட்டயும், டிவி ரிமோட்டுமா  களத்துல குதிச்சிருவாறு. டிவியில கிரிகெட் ஹைலைட் பார்த்துட்டே குப்பைய பவுண்டரிக்கு வெளியில விரட்டுரதுல நம்ம சாருக்கு ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம்  நித்யானந்தம்

பூஸ்ட்டுக்கு ப்ரீயா பேட் குடுக்காங்கன்னு விளம்பரம் போட்டப்போகட தொரக்கதுக்கு முன்னாடியே போய் வரிசையில நின்னு மொத ஆளா பேட் வாங்னவரு நம்ம ஸ்ரீராம் சாரு தான்

பூஸ்ட் பேட் பிடிச்ச நம்ம சார் கையில இப்ப துடைப்பகட்ட இருக்கதுக்கு ஒரே காரணம் நம்ம சார் வீட்டு வேலைக்காரன் கொமாரு தான்.

வீட்டு வேலைக்கு ஆள் எடுக்கும் போது  கிரிகெட் பத்தி கேள்வி கேட்டப்போ அதபத்தி கொஞ்சமாது தெரிஞ்சி வச்சிருந்தவன் நம்ம கொமாரு தான். வீட்டுல கிரிகெட் போடுறப்போ நம்ம சாரு லைவ் கமென்ட்ரி கொடுக்க அத ரசிச்சு கேட்டுட்டு இருக்குற ஒரே அப்பாவி ஆளு நம்ம கொமாரு மட்டும் தான்

நல்லா வேலை செஞ்சிட்டு இருந்த கொமாருக்கு  திடிர்ன்னு ஒருநா ஏலரைல கெரகம் பிடிச்சதுஅதுல கெரகம் பிடிச்சா "கெரகம் அது யாரத் தான் விட்டது".     

"டேய் கொமாரு, சென்னைல கரிகட்ட நடக்குத்துடா, டப்பு வாங்கியா நாம சென்னைக்கு போயாரலாம்" ன்னு சொன்னான் நம்ம கொமாரு தோஸ்து கோவாலு. அத கேட்டதுல இருந்தே கொமாருக்கு இருப்பு கொள்ளள. வேக வேகமா ஸ்ரீராம் சார பாக்றதுக்கு வீட்டுக்கு வந்தான்

வந்தவன் வீட்டுக்கு முன்னாடி நின்னு "நைனாஆஆஆஆ" ன்னு கத்துனான். அப்போ பரதேசி படமெல்லாம் வந்த்ருக்கல, ஒரு வேள நம்ம கொமாரு பரதேசி படம் பாத்ருந்தாம்னா 

"
நியாயம்மமாஆஆஆறே வெளியில வாங்க நியாயம்மமாறே, சென்னைக்கு கரிக்கெட் பாக்க போறேன், காசு குடுங்க நியாயம்மமாறே" ன்னு கத்தியிருப்பான்.          

அப்போ பாலால்லாம் பால்வாடி படிக்கிற பையன்றதால நம்ம கொமாரு நைனான்னு தான் கூப்ட்டான். நம்ம கொமாருக்கு எல்லாருமே நைனா தான்.

இத கேட்டதும் நம்ம சாரால நம்பவே முடியல, அதிர்ச்சியில அவன்கிட்ட "டேய் கொமாரு உண்மையாவே நேர்ல போய் கிரிகெட் பாக்க போறியா டா"ன்னு கேட்டாரு.   

"
க்கான் நைனா, நம்ம பக்கத்துக்கு தெரு கோவாலு இல்ல, அவன் தான் இட்ன்னு போறேன்னு சொல்லிக்கிறான், நைனா பத்து ரூவா கொடேன், போயின்னு வந்தறேன்"

இதக் கேட்டதும் நம்ம சாருக்கோ இருப்பு கொள்ளல, அவனப் பார்த்து மிரட்டுற மாதிரி, " டேய் கொமாரு வீட்ல நிறைய வேல இருக்கு, பாத்ரம் கழுவனும், வீடு துடைக்கணும், துணி துவைக்கணும், நீ போயிட்டாஇதையெல்லாம் யாரு பண்ணுவாங்க"

இதக் கேட்டதும் நம்ம கொமாரு கொஞ்சங் கூட பதட்டப் படாம,யோசிக்காம " அதா நீ இருக்கியே நைனா, வாரவரைக்கும் நீ பாத்துக்கோ "ன்னுட்டான்.  வாயடச்சி போயிட்டாரு நம்ம சாரு. பணத்த கொடுக்கலாம்ன்னு யோசிச்சிட்டு  இருந்தவர , பயபுள்ள பேசியே கால வாரி விட்டுதான்.

இவரோ "போடா படுவா, பணமும் கிடையாது, ஒன்னும் கிடயாது"ன்னு சொல்லிட்டே கோவமா வெட்டு உள்ள போயிட்டாரு.                 

"
நைனாஆஆஆ பத்து ரூவா கொடு நைனா, ப்ளீஸ் நைனா"ன்னு கத்திட்ட்டே  இருந்தான் கொமாரு,

திடிர்ன்னு என்ன நினைச்சானோ தெரியல, கோவத்துல நம்ம ஸ்ரீராம் சாரோட பூஸ்ட் பேட்ட தூக்கிட்டு எங்கையோ சொல்லாம கொள்ளாம போயிட்டான். அன்னிக்கு பரதேசம் போனவன் தான் இன்னும் வீடு வந்து சேரல. அவன் போனாலும் போனான், அவன மாதிரி தீயா வேலை செய்ய எந்த கொமாரும் நம்ம சாருக்கு கிடைக்கல. அன்னில இருந்து அவரே தீயா வேல செய்ய வேண்டியதாப் போச்சு.

கொமாரு போனதுக்கப்புறம்மட்டையும் கையுமா போயிட்டு இருந்த நம்ம சார் வாழ்கையில வந்த திருப்பு முனை தான் IPL போட்டியும், பேஸ்புக் சகவாசமும். இப்பலா நம்ம சார பேஸ்புக்கும் கையுமா தான் பாக்க முடியுது. IPL பத்தி நம்ம சார் போடுற ஸ்டேடஸ் தான் ஆல் வேர்ல்ட் பேமஸ். உலகத்துலையே பேஸ்புக்குல ஸ்டேடஸ் போட்டு வேர்ல்ட் பேமஸ் ஆனதுல டிமிட்டிரி இவ்நோஸ்கிக்கு  அப்பறமா நம்ம ஸ்ரீராம் சார் தான்.  கிரிக்கெட் நடக்கும் போது நாம யாரும் டிவி பாக்க வேணாம், ரேடியோ கேக்க வேணாம், சார் ஸ்டேடஸ் பாத்தாலே போதும் திவ்யமா இருக்கும். உலகத்துல இருக்க அத்தன கிரிக்கெட் ரசிகர்களும் ஓடியோடி வந்து நாம சார் ஸ்டேடஸ்க்கு கமெண்ட் போடா ஆரம்பிச்சாங்க.  

திடிர்ன்னு ஒரு நாள் ஒரு பெரிய பிரபலம் கிட்ட இருந்து பிரண்ட் ரிக்வஸ்ட், யாருன்னு பார்த்தா, அது நம்ம ரவி சாஸ்திரி. அவரு கூட பிரண்ட் ஆனது போன ஜென்மத்து புண்ணியம்ன்னு அடிகடி அவருகிட்ட சொல்வாரு.

அப்பப்ப ரவி சாஸ்திரியும் நம்ம சாருக்கு போன் பண்ணி பேசுவாரு. IPL நடக்கும் போது சில நேரம் நம்ம சார் ஸ்டேடஸ் போட கொஞ்ச நேரம் ஆனாலும் போதும் உடனே ரவி சாஸ்திரி நம்ம சாருக்கு போன் பண்ணி "என்ன ஆச்சு ஸ்ரீராம், இன்னும் ஸ்டேடஸ் வரல, நா கமென்ட்ரி பண்ண வேணாமா" ன்னு உரிமையோட கோச்சுப்பாறு. இத கேட்டதும் நம்ம சாரும் புல்லரிச்சுப் போயிருவாரு ..

ஒருநாள் நைட், நல்ல தூக்கம், ரவிசாஸ்திரி கிட்ட இருந்து போன், " ஸ்ரீராம், சென்னைக்கு வாங்க, நாம நேர்ல IPL பாக்கலாம், எத்தன நாளைக்கு தான் டிவியிலையே பாப்பீங்க....", சாஸ்திரி பேசிட்டு இருக்கத சந்தோசமா கேட்டுட்டு இருக்கும் போதே போன் கட்டாயிருச்சு,என்னன்னு முழிச்சு பார்த்ததும் தான் அவருக்கு புரிஞ்சது அது கனவுன்னுஇருந்தாலும் திருபுடை மருதூர் எம்பெருமானே கனவுல  சொல்லிட்டான், சென்னைக்கு கிளம்பிற வேண்டியது தான!

இதுல ஒரு முக்கியமான விஷயம் என்னன்னாநம்ம சார் சென்னைய முன்ன பின்ன பார்த்தது கிடையாது, சொல்லப்போனாசென்னை சூப்பர் கிங்க்ஸ்ன்ற பேர தவிர வேற எங்கையுமே அவரு "சென்னை" பார்த்தது கிடையாது. இருந்தாலும் IPL பாக்கணும்ன்ற ஆர்வத்துல அவரோட லேப்டாப்ப தூக்கிட்டு சென்னைக்கு கிளம்பிட்டாரு

இந்த சீன்ல தான் இன்டர்வெல். டீகாபி, முறுக்கு எது சாப்பிடறதா இருந்தாலும் சீக்கிரம் பொய் சாப்ட்டு வாங்க, ஆனா ஒன்னு சமத்தா  வந்தரனும்.              

சென்னையின் மத்தியான எட்டுமணி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. ரயிலில் இருந்து இறங்கியதும் ஒருமுறை லேப்டாப் பேக்கை தொட்டுப் பார்த்து டேட்டா கார்ட் இருப்பதை உறுதி செய்து கொண்டார் ஸ்ரீராம் சார். IPL இன் ஜீவ நாடியே அந்த டேட்டா கார்டில் தான் அடங்கி உள்ளது என்று பெரிதும் நம்புபவர்.

எக்மோர் ரயில்நிலையத்தில் இறங்கி வெளியே வந்தவர்மஞ்சள் வண்ணம் பூசி போருக்கு தயாராகும் வீரர்களைப் போல் நின்று கொண்டிருந்த ஆட்டோக்களைக் கடக்கும் பொழுது,

 "
நைனாஆஆஆ, நம்ம ஆட்டோல ஏறு நைனா, உன்ன இட்டுனு போறேன்" என்று கூறிக் கொண்டே வலுக்கட்டாயமாக அவரை ஆட்டோவில் ஏற்றினான் முன்பின் அறிமுகம் இல்லாமல் அறிமுகமான ஆட்டோக்காரன் ஒருவன்

"
இன்னா நைனா எங்க போவனும்", நைனா கூறியவன் முகத்தில் கொமாரின் அடையாளத்தை தேடினார்,அவன் கொமார் இல்லை ஆனால் நிச்சயமாக  கொமாரின் சொந்தமாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்

"
சொல்லு நைனா எங்க போவனும்"

"
அப்போ எங்க போகணும்ன்னு தெரியாம தான் உக்காரவச்சியா"

"
மொதோ சவாரி நைனா, உன்னப் போயி விட முடியுமா, பாக்க சோல  ரவி சாஸ்திரி யாட்டோ கீற தவ்ளூண்டு விஷயத்துக்கு எதுக்கு தபாய்கீற "           

"
என்ன  ரவி சாஸ்திரியாஇதைக் கேட்டதும் உற்சாகமான நம்ம சாரு " சேப்பாக்கம் போப்பான்னாரு

ஆட்டோவில ஏறியவுடன் "எங்க உக்காந்தா மேட்ச் நல்ல பாக்க முடியும் , சியர் கேர்ள்ஸ்லா நம்மள தேடி வந்து போட்டோ எடுத்துபாங்களா, ரவி சாஸ்திரி நம்மையும் கமெண்டரி பண்ண சொல்லிட்ட என்ன பண்றது " , என்று சிந்தித்துக் கொண்டே ஆட்டோவில் வந்தவரின் மொத்த சிந்தனையையும் குலைக்க தொடங்னான் நம்ம சென்னை நைனா.

அவருக்குத் தெரியாது சென்னையின் ஆட்டோ டிரைவர்கள் எமக் கிங்கரர்களை விட மோசமானவர்கள் என்று. எங்கெல்லாமோ ஆட்டோ நுழைந்து, சிக்னலில் புகுந்து, திடிரென்று யு அடித்து ஒருவழியாய் சேப்பாக்கம்  வந்து சேர்ந்தது அந்த கிங்கர வாகனம்.   

"
எவ்வளவுப்பா" என்று கேட்டவருக்கு முதல் அதிர்ச்சி 

"
ஒரு முன்னூறு குடு நைனா, வெயிலு பொளக்குது, அடுத்த சவாரி புடிக்கணும்", 

"
என்னது 300, பஸ்ல வந்தா பத்து ரூவா தான், வேணும்னா முப்பது ரூவா தரேன், அதுக்கு மேல ஒரு  பைசா கிடையாது"

"
ஊர்ல இருந்து பொட்டிய தூக்கினு வாரவனோட ஒரே பேஜாருப்பா" வாய்க்குள் முனுமுனுத்தவன், "மாமுலா வாங்கறது தான் நைனா, கொடுத்தா வண்டிய வுட்ருவேன்" (ஆட்டோ டிரைவர் பரதேசி பார்த்துட்டான்).

"
என்னது மாமூலா, அதெல்லாம் தரமுடியாது, முப்பது ரூவா"

கடைசில ஒரு அம்பது வாங்கிட்டு சென்னை செந்தமிழ்ல ஸ்ரீராம் சாருக்கு வாழ்த்துப்பா சொல்லிட்டே அந்த இடத்திலிருந்து வண்டிய விட்டான் அந்த கிங்கரன். ஆட்டோகாரன்கிட்ட பேரம் பேசி எதையோ சாதிச்ச நம்ம சாருக்கு அடுத்த அதிர்ச்சி தயாரா இருந்தது.

"
அடுத்த அஞ்சு மேட்சுக்கு ஹவுஸ் புல்லு, டிக்கெட் இல்ல போயிட்டு வா நைனா" என்றான் டிக்கெட் கவுண்டர் ஆசாமி. இதை கேட்டதும் நம்ம சாருக்கு அழுகை வராத குறை

நேரா ரவி சாஸ்திரிக்கு போன் பண்ணியவர் விஷயத்தை சொன்னார், " சார் சேப்பாக்ல நிக்குறேன், டிக்கெட் இல்லன்னு சொல்றாங்க, கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க சார், நா மேட்ச் பாக்காட்ட எப்டி ஸ்டேடஸ் போடறது, நீங்க எப்டி கமேன்ன்ட் பண்றது." கொஞ்சம் கராராவே கேட்டுட்டார் நம்ம சார். சார்கிட்ட இருந்து இப்டி ஒரு போன் கால சாஸ்திரி கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.

"
மிஸ்டர் ஸ்ரீராம், நேத்தே எனக்கு கால் பண்ணிருக்க வேண்டியது தான, லாஸ்ட் மினிட் ஸ்ரீ ராம், வாட் ட்டு டூ"

"
உங்களுக்கு கால் பண்ணினேன் சார், நீங்க தான் சந்தோசமா கிளம்பி வர சொன்னீங்க"

"
ரியலி, சோ சாரி  நா மறந்துட்டேன் ஸ்ரீராம், என் மொபைலுக்கு ஒரு மெசேஜ் அனுபியிருக்கக் கூடாதா",          

"
ஐயோ அனுபிச்சேன் ஸார், நீங்க கூட CSK வெல்கம்ஸ் யு ன்னு ரிப்ளை பன்னீங்க"  கம்பீரமான அவர் குரல் உடையத் தொடங்கியது

"OMG,
டெலிகேட் பொசிசன் ஸ்ரீராம்............", இப்டி சாஸ்திரி பேசிட்டே போக, நம்ம சார் கோவமா, வாய்ஸ் டெசிபெல் கூட்டி, மொத்த சென்னைக்கும் கேக்குற மாதிரி " சார் இப்ப முடியுமா முடியாதா, அத மட்டும் சொல்லுங்க போதும்"ன்னு கத்திடாறு.

"
என்னால முடியாது, ஆனா ஒரு வழி இருக்கு, கொஞ்சம் பொருங்கன்னு" சொல்லிட்டு கால கட் பண்ணிட்டாரு சாஸ்திரி.

அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் இன்னொரு கால், "ஹலோ மிஸ்டர் ஸ்ரீராம், நா இந்தியா சிமின்ட்ஸ் ஸ்ரீநிவாசன் பேசுறேன், டிக்கெட் எடுக்க எவ்ளவோ ட்ரை பண்ணினேன் முடியாதுன்னு சொல்லிட்டாங்க, அடுத்த வருஷம் மேட்ச்க்கு வாரீங்களா"

இன்னும் கொஞ்ச நேரத்துல IPL கமிட்டி மெம்பர், அட்வெர்டைசிங் கமிட்டி மெம்பர், ஊர்ல இருக்குற எம்.எல்., எம்.பி மொதக்கொண்டு போன் பண்ணி நம்ம ஸார சமாதனப் படுத்த ட்ரை பண்ணினாங்க... நம்ம சாரு விடாப்புடியா மேட்ச் பார்த்தே ஆகனும்ன்னு அடம் புடிக்க ஆரம்பிச்சாரு

"
சார் எவ்ளோ பணம் செலவானாலும் பரவாயில்ல சார், எப்டியாது கிரிகெட் பாக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு அழாத குறைய ஊர் உலகத்துல இருக்க எல்லா பெரிய மனுசங்க கிட்டயும் கேட்டுட்டார் நம்ம ஸ்ரீராம் சார். அந்தோ பரிதாபம், டிக்கெட் கிடைக்கவே இல்ல!    

இத்தன நாளா வாழ்கையில மதிப்பு வச்சிருந்த அத்தன பெரிய மனுசங்களையும் ஒரு நிமிசத்துல வெறுத்துட்டாறு. காலையில இருந்து கொளுத்துற வெயில்ல நிக்குறவரு, இரண்டு வேளயுமே சாப்பிடல. 'இன்னிக்கு மேட்ச் பாக்காம போனா இந்த பேஸ்புக் சமுதாயம் நம்மள வெறுத்ருமே'ன்னு அவருக்கு பெரிய கவலையா இருந்தது, சென்னை வெயிலோ, சாப்பாடோ இல்ல.   

சாயங்காலம் மணி ஏழு, இன்னும் அரை மணி நேரத்துல மேட்ச் ஸ்டார்ட் ஆயிரும். மனசுல இருந்த பாரம் கையில இருந்த லேப்டாப் பாரத்த விட அதிகமா இருந்தது. ஸ்டேடியத்துக்கு உள்ள போறவங்களையே வெறிச்சு பாக்க ஆரம்பிச்சாரு சாரு.       

அப்போ திடிர்ன்னு ஒரு குரல், அசரீரி மாதிரி,  
          
"நைனாஆஆஆஆ....... எப்புடி கீற நைனாஆஆஆஆ", எங்கையோ கேட்ட குரல். மூளைக்குள்ள இருந்த நியூரான் அவசர அவசரமா தேடுனதுல, அந்த குரல்  நம்ம கொமாரோடதுன்னு கண்டுபிடிச்சிட்டாரு நம்ம சாரு,அவருக்கு பின்னாடி கையில விளக்குமாறோட நின்னுட்டு இருந்தான் நம்ம கொமாரு

"
டேய் கொமாரு, எப்புட்ரா இருக்க"   காணாது கண்டவனை கண்டதும் தனக்கிருந்த அத்தனை துயரத்தையும் மறந்துவிட்டு உற்சாகமாக கேட்டார் நம்ம ஸார்.

"
அன்னிக்கு சென்னை வந்தவன் தான் நைனா, இன்னி வர இதோ இன்னாண்ட தான் குப்ப அல்லின்னு கீறேன்" என்று ஸ்டேடியத்தைக் காட்டியபடி சொன்னான் கொமாரு.

"
இன்னா நைனா இவ்ளோ தொலோ வந்துகீர, கரிகட்ட பாக்க வந்துகீனியா" இன்னும் அவனுக்கு கிரிகெட் என்று சொல்ல தெரியவில்லை, என்பதை எண்ணி வியந்தார்.

"IPL
பாக்கலாம்னு வந்தேன், டிக்கெட் கிடகலடா கொமாரு" அதான் ஊருக்கே போலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்" என்றபடி நடந்த அத்தனை கதையையும் கொமாரிடம் விளக்கினார்.

"
மாஞ்சா இல்லாத பசங்கோ நைனா, ஏசில குந்தின்னு கரிகட்ட பாப்பாங்கோ, நம்மல அண்ட விடமாட்டாங்கோ, என்னாண்ட ஒரு தபா சொன்னா இன்னா நைனா.."

"
குப்ப அள்ளுற கொமாரு தான, இவனால இன்னாடா பண்ணிற முடியும்ன்னு நெனப்பு..... இல்ல நைனா" என்று நா தழுதழுக்க கொமார் சொல்ல 

"
டேய் கொமாரு உண்மையா தான் சொல்றியா, உன்னால என்ன உள்ள  போக முடியுமா" என்று ஆர்வத்தில் உற்சாகமானார் ஸ்ரீராம் சார்

"
மெய்யாலுமே நைனா... நா உன்ன இட்ன்னு போறேன்... நாம சேர் கேர்ல்ஸ் ஆண்ட ஆடினே கரிகட்டைய பாக்கலாம், இன்ன சொல்ற நீயி"

எங்கள் ஸ்ரீராம் சார் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கத் தொடங்கிய பொழுது 

"
நைனா..... ப்ளீஸ்....... நைனா இப்பவாது ஒரு பத்து ரூபா கொடேன்", என்றான்  கொமார் அப்பாவியாய் சிரித்துக் கொண்டே.

பின்குறிப்பு : இக்கதையில் வரும் எங்கள் ஸ்ரீராம் சாருக்கும், எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாருக்கும் துளியும் சமந்தம் இல்லை என்பதை விளக்க சங்கம் கடமைப் பட்டுள்ளது.    

23 comments:

 1. Enna Oru Silent Kalai..
  Unga kitta usara iruka vendum pola, Seenu.

  ReplyDelete
  Replies
  1. தலைவா சைலண்டா நீங்க என்ன கலாயிச்சிரலியெ

   Delete
 2. சங்கத்தின் விளக்கத்தை முழுசாஆஆஆ நம்பிட்டேன்! ‘எங்கள்’ ஸ்ரீராம் இந்த ஸ்ரீராம் கிடையாது. ஹி... ஹி...!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நம்பித் தான ஆகணும்

   Delete
 3. ஸ்ரீராம் சார் இன்னும் வரலையே... அவர் வந்து சொன்னால் தான் நம்ப முடியும்... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. அவரு பாயும் புலி பதுங்கும் நாகம்... புலி பதுங்குறது பாயுரதுக்கு தான

   Delete
 4. ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈளமான கதை... கடைசில எதுக்கு அப்படி ஒரு பின்குறிப்பு?

  ReplyDelete
  Replies
  1. ஆமா கொஞ்சம் நீஈஈஈளமான பதிவு தான்.. மனசு இல்ல...

   Delete
 5. இந்த படத்திலெல்லாம் முகேஷுக்கு வாய் கேன்சர், தம்மடிக்கதீங்கன்னு சொல்லீட்டு, ஹீரோ, வில்லன், ஹீரோயின்னு எல்லோரும் தம்மடிப்பாங்களே.. அந்த மாதிரி தானே உங்க பின்குறிப்பு..

  கொமார் கேரக்டர் கலக்கல்.. ரசிச்சு ரசிச்சு எழிதியிருக்கறமாதிரி தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. //அந்த மாதிரி தானே உங்க பின்குறிப்பு..// கரிட்டு கரிட்டு கரிட்டு

   // எழிதியிருக்கறமாதிரி தெரியுது// ஹா ஹா ஹா

   Delete
 6. இது எங்கள் ஸ்ரீராம் ஆ இருக்க முடியாது. அவரே எல்லாருக்கும் டிக்கட் வாங்கிக் கொடுத்ததை நான் கண்ணால பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. // அவரே எல்லாருக்கும் டிக்கட் வாங்கிக் கொடுத்ததை நான் கண்ணால பார்த்தேன்.// அப்போ எனக்குத் தான் வாங்கித் தர மாட்டேன்ட்றாரா

   Delete
 7. //இந்த சீன்ல தான் இன்டர்வெல். டீ, காபி, முறுக்கு எது சாப்பிடறதா இருந்தாலும்சீக்கிரம் பொய் சாப்ட்டு வாங்க, ஆனா ஒன்னு சமத்தா வந்தரனும். //

  அதையெல்லாம் சாப்புட்டுகிட்டேதான் படிக்கிறோம்..சமத்தா வரனுமா... நான் சமந்தான்னு படிச்சி புட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. சொல்லிடீங்கள்ள.. அடுத்த பதிவு சமந்தா அம்மணியோட போட்டோவ சமத்தா போட்ருவோம் ...

   Delete
 8. என்னவோய் ... கதைய படிச்சு பாத்தா, நீயே மேட்ச்சு பாக்க போயி ஏமாந்து வந்தத வேறொருத்தரு பேர்ல பீலா விடுற மாதிரி தெரியுது .

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நமக்கும் ipl க்கும் ரொம்ப தூரம் அய்யா

   Delete
 9. அதுதான் நான் இல்லையே.... அதனால நான் படிக்கவில்லை. என்ன எழுதியிருக்காரு சீனு என்று மற்றவர்கள்தான் சொல்லணும்! :))))

  எனக்கும் கிரிக்கெட் பிடிக்காது.

  நிசம்மா...

  ReplyDelete
 10. :))) இது எங்கள் ஸ்ரீராம் இல்லே! உங்கள் ஸ்ரீராம்.

  ReplyDelete
 11. சுவையான கற்பனை! பதிவுலகில் முதல் முதலாக இண்டர்வெல் விட்ட பதிவர் நீங்கதான்னு நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. //டிவியில கிரிகெட் ஹைலைட் பார்த்துட்டே குப்பைய பவுண்டரிக்கு வெளியில விரட்டுரதுல நம்ம சாருக்கு ஆனந்தம் பேரானந்தம் பரமானந்தம் நித்யானந்தம். // மிகவும் ரசித்த வரி.

  இந்தியா சிமின்ட்ஸ் ஸ்ரீநிவாசனுக்கே அடுத்த வருடம் தான் டிக்கெட் கிடைக்குமா.ஹா.... ஹா.... ஹா..... நல்ல கற்பனை சீனு உங்களுக்கு.

  ReplyDelete
 13. புரிஞ்ச மாதிரியும் இருக்குது :)

  ReplyDelete
 14. மிக நல்ல கற்பனை நண்பா..
  //சென்னையின் மத்தியான எட்டுமணி வெயில்//
  //கொடுத்தா வண்டிய வுட்ருவேன்" (ஆட்டோ டிரைவர் பரதேசி பார்த்துட்டான்).// மிக ரசித்த வரிகள்..
  வர வர நீங்களும் ரொம்ப லெங்க்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்த்தா எழுத ஆரம்பிச்சிட்டீங்க.. இது நோயின் ஆரம்ப நிலை தான் :-P
  நல்லா பொழுது போகும் கதை.. வெறும் இண்டர்வல் மட்டும் தானா? குத்துப்பாட்டு, ஃபைட் எல்லாம் இருந்திருந்தா இன்னும் கலக்கலா இருந்திருக்கும்..

  ReplyDelete