19 Jan 2013

சரிதாயணம் @ சிரிதாயணம் - புத்தக விமர்சனம்


முன்குறிப்பு : சரிதாயணம் புத்தகத்தில் இடம் பெற்ற கணேஷ் சாரின் எழுத்துகள் நீல நிறத்தில் 

வாத்தியார் - ஆம் இவரை இப்படிக் கூப்பிடுவது எனக்குப் பிடித்துள்ளதுபால கணேஷ் சார் வலைச்சரம் ஆசிரியராக பணி புரிந்தபொழுது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் பிரசித்திபெற்ற கதாப்பாத்திரங்களைக் கொண்டு பல பதிவர்களை அறிமுகம் செய்துவந்தார். இவர் ஆசிரியரான இரண்டாவது நாள் சுஜாத்தாவின் அச்சுப் பிசகாத எழுத்து நடையில் கணேஷ் - வசந்த் மூலம் பதிவர்களை அறிமுகம் செய்த விதம் அற்புதம். அன்றே அந்த பதிவில் சின்ன வாத்தியார் என்று பின்னூட்டம் அளித்திருந்தேன், அதன் பின் வந்த நாட்களில் பதிவு எழுதுவது குறித்து சில அறிவுரைகளை அசால்ட்டாக அள்ளித் தெளித்ததால் இவரையே எனது வாத்தியாராகவும் ஏற்றுக் கொண்டேன்.

வரை முதல்முறை நான் சந்தித்த பொழுது எழுதிய பதிவு.


பிரபல பதிவருடன் திடீர் சந்திப்பு
னது சிறுகதைத் தொகுப்புகளை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது தான் அவரது நெடுநாளைய விருப்பம் என்று அந்த முதல் சந்திப்பிலேயே கூறி இருந்தார். இந்தப் புத்தகத் திருவிழாவின் மூலம் வாத்தியாரின் நெடுநாளைய ஆசை சரிதாயனமாக நிறைவேறியிருக்கிறது

மின்னல்வரிகள் வலைப்பூவில் அனுபவத் தமிழ் கொண்டு எழுதி வரும் வாத்தியார், அவ்வபோது சரிதா கதைகளைக் கொண்டு வலையுலகை சிரிக்கவைப்பது வழக்கம்சோமசேகர பரதேசியார் என்னும் புகழ் பெற்ற சரித்திர ஆசிரியர் காற்றில் எழுதி  ஆகாயத்தில் வெளியிட்ட புத்தகத்தின் பெயர் 'தமிழக மன்னர்கள் அரசுமுறை'. இந்தப் புத்தகம் மூலம் குறிபெடுத்து இம்சை அரசன் பாணியில் சிரித்திரபுரத்தை ஆண்ட மணிமாற பாண்டியன் என்னும் குறு மன்னனின் குறுகுறு வரலாற்றை அழகாக  எழுதியுள்ளார்சரிதாவின் அடிதடிக் கதைகளும், சோமசேகர பாண்டியனின் அடாவடிக் கதைகளும் இணைந்து முழுவடிவம் பெற்றுள்ளது இந்த சரிதாயணம் @ சிரிதாயணம்.

பட்டுக்கோட்டை பிரபாகரும், காலச்சக்கரம் நரசிம்மாவும் இப்புத்தகத்திற்கு மதிப்புரை வழங்கியுள்ளனர். பட்டுக்கோட்டை பிரபாகர் கணேஷ் சாரின் சிறந்த நண்பர் என்பதால், சரிதாயணம் புத்தகத்தில் எங்கெல்லாம் என்னென்ன குறைகள் செய்துள்ளார், அதை இனி வரும் நாட்களில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்றெல்லாம் தெள்ளத்தெளிவாக எழுதியுள்ளார் அதேநேரத்தில் அழுத்தமாக ஒரு குட்டு வைத்துள்ளார். மோதிரக்கையால் குட்டு வாங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்வார்கள், வாத்தியாரே நீங்கள் கவனிக்க வேண்டிய மதிப்புள்ள மதிப்புரை அது.

காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் கொடுத்துள்ள மதிப்புரை கணேஷ் சாரை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது, முதல் மதிப்புரையில் குட்டு பெற்ற வாத்தியார், இவரிடம் அரவணைக்கப் படுகிறார். கணேஷ் சாரின் எழுத்துகள் மீது மதிப்பும் எதிர்பார்ப்பும் உயருகிறது, இருந்தும் வாத்தியாரே பட்டுக்கோட்டையார் சொன்னவைகளை மறந்துவிடாதீர்கள், காரணம் சரிதாயனத்துடன் நீங்கள் திருப்தி பெற்று விடக்கூடாது என்பது எங்கள் எண்ணம்.      

சரிதாயணம் - ஒரு பார்வை ரிதாயணத்தின் சில கதைகளை நான் மின்னல் வரிகளில் படித்துள்ளேன், பெரும்பாலான கதைகள் புதியதாக இருந்தது, ஒருவேளை நான் தவறவிட்ட கதைகளா என்று தெரியவில்லை. எல்லாக் கதைகளிலும் நகைச்சுவை சரளமாக வருகிறது வாத்தியாருக்கு, காட்சி நகர்வுகள் ஒன்றுக்கொன்று  தொடர்புடையாதாக இருப்பதால் வரிகளை மேற்கோள் காட்டுவதற்கு சற்றே சிரமப் பட வேண்டியுள்ளது.

சிலகாட்சி நகர்வுகளில் வாத்தியார் கொடுக்கும் உவமைகள் அற்புதம். டிவி நிகழ்ச்சியில் சரிதா தன் தோழிகளுடன் பங்குகொள்ள செல்லும் பொழுது அவரின் கணவரான நம் கணேஷ் சார் பார்வையாளராக துணைக்குச் செல்கிறார், தொகுப்பாளினி பெயர் கப்பு ( உங்களுக்கு குஷ்புவின் பெயர் நியாபகம் வந்தால் அதற்க்கு வாத்தியார் பொறுப்பு அல்ல). இனி வாத்தியாரின் சில வரிகளில் என்னைக் கவர்ந்தவை 

"நிகழ்ச்சி ஆரம்பமானது. பலியாடுகள்( அட , கணவர்கள் தான்) பார்வையாளர்கள் காலரியில் அமர்ந்து கொண்டோம். சரிதா பாடுவதில் இப்போது கொஞ்சம் தேறிவிட்டதால் ஒரு பாட்டு பாடினாள்."

ந்த இடத்தில் சரிதா பாடிய பாடலுக்கு நடனமாடத் தொடங்கும் கப்புவின் நடனத்தை வாத்தியார் வர்ணிக்கும் எழுத்துக்கள் அபாரம்.

சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் யானை உடம்பை அசைப்பது போல் உடலை லேசாக அசைத்து சரிதாவின் பாட்டுக்கு ஆடினாள் கப்பு.  

நி கப்புவை இங்கு கற்பனை செய்யும் பொழுது கணேஷ் சாரின் நகைச்சுவைக்கு நாம் பலியாகி இருப்பதை சந்தேகம் இல்லாமல் காட்டிக் கொடுத்துவிடும் நம் முகத்தில் ததும்பு அந்த சிறு புன்னகை. சரிதாவும் ஷாப்பிங்கும் என்ற கதையின் முடிவல் பின் குறிப்பு கொடுத்துள்ளார், சம்மந்தமே இல்லாத அந்தப் பின் குறிப்பை இரண்டு மூன்று முறை படித்ததன் பின் தான் புரிந்து கொண்டேன் அதில் இழையோடிய மெல்லிய ஹாஸ்யத்தை. அந்தப் பின் குறிப்பை இங்கு தருகிறேன், நீங்களே கண்டுகொள்ளுங்கள் அதில் ஒளிந்து இருக்கும் ஹாஸ்யத்தை 

'பின்' குறிப்பு - குத்தினால் வலிக்கும்.

சரிதாவும் வால்களும் - மல்லாக்க விழுந்து தலையில் அடிபட்ட தாக்கத்தில் அவன் .தி.கு போல விழித்தான் என்று எழுதியுள்ளார், இந்த .தி.கு வின் பொருளை முடிந்தால் புரிந்து கொள் என்னும் தொனியில் எழுதி இருப்பது சுஜாதா போன்ற ஜாம்பவான்கள் செய்யும் வார்த்தை விளையாட்டு. வாத்தியாருக்கு அதுவும் சரளமாக வருகிறது.

கார் ஓட்ட கற்றுக்கொள்ளும் சரிதா, மரத்தின் மேல் காரை மோதி விட அந்தக் கணம் கணேஷ் சாரின் மனநிலை, கல்யாணம் ஆன நாளில் இருந்து முதல் முறையாக அவள் முகத்தில் பயத்தைப் பார்த்ததால் எனக்கு அக்கணமே முத்தமிட்டுக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. அவளை இல்லை காரை!

ப்படி மெல்ல மெல்ல உபத்திரவப்படுத்தி (காரை அல்ல என்னை...) ஒரு வழியாக ஓட்டக் கற்றுக் கொண்டுவிட்டாள், சில பல விபத்துகளை ஏற்படுத்தி, காருக்கும் என் பேங்க் பாலன்சுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தியபின் இப்போது சற்று சுமாராக கார் ஓட்டுகிறாள். முதலில் மெதுவாக ஓட்டி எல்லாருக்கும் வழிவிட்டவள், இப்போது தன சுபாவப்படி "நான் வேகமாகத் தான் போவேன், வேண்டுமென்றால் அவர்கள் வழிவிடட்டும்" என்று விரட்ட ஆரம்பித்துவிட்டாள். ஆகா கார் ஓட்டுவதற்கு அவள் பழகினால் என்பதை விட, எங்கள் வாசிகள் அவள் காருக்கு தகுந்த மாதிரி செல்ல பழகிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்!

ப்படி ஒவ்வொரு வரியாக நான் எழுதிக் கொண்டிருந்தால் புத்தகத்தையே இங்கு எழுதிவிடுவேனோ என்று பயமாக  உள்ளதால் சிரித்திரபுரத்தினுள் நுழைந்து விடலாம்.

ந்தக் கதைகளத்தை முழுக்க முழுக்க சங்க காலத்தில் பஞ்சம் தலைவிரித்து ஆடும் ஒரு கஷ்ட காலத்தில் நடப்பது போல் அமைத்திருப்பார். கதாபாத்திரங்களின் பெயர்களே நம்மிடம் சிரிப்பை வரவழைத்து விடும்

ன்னனின் பெயர் .கொ.சே.செ.வெ..வா.செ.. மணிமாற பாண்டியன். ஷ்ஷ்ஷ்ஷஷஷப்பா புரியவில்லையா  தலைசுற்றுகிறதா, அந்த மன்னனின் பெயர் மதயானை கொன்ற சேநாடு சேர்ந்தமங்களத்து செருக்களம் வென்ற மறத்தமிழ் வாணன் செந்தமிழழகு ஜடாவர்ம மணிமாற பாண்டியன்

சிரித்திரபுரம் கதை முழுவதுமே ஒரு நாடக வடிவில் எழுதப்பட்டிருக்கும், நாட்டை கவனியாமல் வரிப்பணத்தில் சுகம் களிக்கும் ஒரு மன்னன், அவனைச் சுற்றி நம் அரசாங்கம் போலவே பணி செய்யாமல் இருக்கும் அரசு எந்திரங்கள், மன்னனின் ஆசையை நிறைவேற்ற இவர்கள் செய்யும் தந்திரங்கள் என்று கதை விரிகிறது. அரசவைக் காட்சிகள், அரசனுக்கும் மற்றவகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் என்று சிரித்திரபுரம் முழுமையும் நம்மை சிரிக்க வைக்க தயங்கவில்லை.    

றுதியில் 'ஆண்டி' கிளைமேக்ஸ் ஆக சரிதாவின் தீபாவளி இம்சைகளைக் கூறி நம்மை சிரிக்க வைத்து புத்தகத்தையும் மனதையும் நிறைவு செய்கிறார் புத்தக எழுத்தாளர்  மிஸ்டர் பால கணேஷ் . 

சரிதாவும் தீபாவளியும் 

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள், இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் - கணவர்களை வேலை வாங்குவதில்! என்று தன இயல்பான நகைச்சுவையுடன் இந்தக் கதையை  தொடங்குகிறார்.

தெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இந்தப் பெண்களால் முடிகிறதோ? என்று வாத்தியார் முடிக்கும் இடத்தில் நாம் சிரிக்க ஆரம்பிப்போம் என்று சொல்லவா வேண்டும்.  

தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி என்று சரிதா தன கணவர் கணேசைப் பற்றி  எழுதி இருக்கும் கதை தமிழக தாய்குலங்களுக்கு கிடைத்திருக்கும் ஒரெ ஒரு ஆறுதல் பரிசு. இந்தக் கதை மூலம் மாதர் சங்கங்கள்  தொடுக்க இருந்த வழக்குகளில் இருந்து தப்பித்து விட்டார் வாத்தியார்.

தமிழ் என்பவரின் ஓவியங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பது எங்கள் பிளாக் ஸ்ரீராம் சாரின் ஒற்றை வரிக் கமெண்ட்டாக இருக்கும் என்பது என் எண்ணம். அத்தனை ஓவியங்களும் அருமை. ஓவியங்களில் பாலகணேஷ் சாரின் இளமைப் பருவம் இருக்கிறது என்று நினைக்கிறன். உண்மையா சார் அது
             
சி சின்னச் சின்ன இடங்களில் எழுத்துப்  பிழைகளும், சில இடங்களில் வரத்தைக் கோர்வைகளும் மிஸ் ஆனது போன்று எனக்குத் தோன்றியது. மேலும் பட்டுக்கோட்டை பிரபாகர் சொல்லியவற்றை நிச்சயம் கவனத்தில் கொள்ளுங்கள். சிரித்திரபுரத்தில் மன்னன் மகன் எழுத்துகளை மாற்றிப் பேசும் பொழுது அந்த வசன அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம், மன்னன் மகன் அவ்வாறு பேசும் பொழுது மிகச் சில இடங்களில் கொஞ்சம் சலிப்பு தட்டுவது போல் ஒரு உணர்வு.

ரிதாவும் பொருட்காட்சியும் நான் மிகவும் எதிர்பார்த்த கதை ஆனால் அது இப்புத்தகத்தில் மிஸ்ஸிங், பர்ஸ்ட்  கிளாஸ் கதை அது,  அதையும் சேர்த்து இருக்கலாமே... 

ந்தப்புத்தகத்தில் நான் மீண்டும் மீண்டும் படித்து ரசித்த  கதைகள் 


 1. சரிதாவும் வால்களும் 
 2. சரிதாவும் காரும் 
 3. சரிதாவும் டார்லிங்கும் 
 4. சரிதாவும் செம்மொழியும் 
 5. தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி 
 6. சரிதாவும் தீபாவளியும் 
 7. சிரித்திரபுரம் 

சரிதாயணம் - நல்ல பயணத் தோழன், ரசித்துச் சிரிக்க சிறந்த உத்தரவாதம், முதல் முறை ஒரு எழுத்தாளரின் கையில் இருந்து நான் பெற்ற முதல் புத்தகம்., அதனால் இந்தப் புத்தகம் என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான புத்தகம்.  

புத்தகக் கண்காட்சியிலும், டிஸ்கவரி புக் பேலசிலும் இப்புத்தகம் கிடைகிறது.

ஆர்டர் கொடுக்க வேண்டிய  முகவரி 

ழகரம் புத்தகச் சோலை,
8/36, ஜோதி ராமலிங்கம் தெரு,
மேற்கு மாம்பலம், சென்னை -33       

கணேஷ் சார் - இன்னும் பல நல்ல படைப்புக்களை உங்களிடம் இருந்து பார்க்கிறோம். கிரைம் கதைகள் கூட உங்களுக்கு சிறப்பாய் வரும் என்று மின்னல் வரிகள் கூறியது. முயன்று பாருங்கள். உங்கள் முதல் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  இனி வரப் போகும் காலங்களில் உங்களின் ஒவ்வொரு புததகளையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் வாசகனாகிய  மாணவன்.


38 comments:

 1. இன்னைக்கு போறேன்... வாங்கிடறேன்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வாங்குங்க ஸ்கூல் பையன் சார்(!)

   Delete
 2. நிச்சயம் வாங்கிடறேன்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா படியுங்க கேபிள் ஜி

   Delete
 3. பாலகணேஷ் அண்ணன் பல்க் ஆன அமவுண்ட் தந்துருப்பார் போல??? என்னமா எழுதுறப்பா!! :)

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி... நான் நிறையக் கொடுத்திருக்கேன சீனுவுக்கு (நட்பையும் அன்பையும்)ங்கற உண்மைய இப்படி அப்பட்டமா புரிஞ்சுக்கிட்டு கமெண்ட் போட்ருக்கியே... நன்றிய்யா விசா... ஸாரி சிவா...

   Delete
  2. ...............???????????????////??????

   Delete
  3. அண்ணன் மெட்ராசின் வஞ்சப் புகழ்ச்சி கூட என்னைப் பெருமையா அடைய வைக்கிறது என்று எவ்வித வஞ்சமும் இல்லாமல் தெரிவித்துக் கொள்கிறேன்

   Delete
  4. விடுங்க வாத்தியாரே... அண்ணனுக்கு நம்ம பாசம் அதிகம் அதான் கொஞ்சம் பங்கு கேக்ராப்ள.... சிவா வாத்தியார் கிட்ட லம்பா எதிர்பாக்குறேன் வந்ததும் பிரிச்சிக்கலாம்...

   Delete
 4. நல்ல விமரிசனம். புத்தகத்தை உடனே வாங்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிகிறது. புத்தக விலை விவரத்தையும் பதிவில் சேர்த்திருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //புத்தக விலை விவரத்தையும் பதிவில் சேர்த்திருக்கலாம்.// அட ஆமா சார் மறந்தே போயிட்டேன்

   60 ருபாய் சார்... கண்காட்சியில் 50 ருபாய் என்று நினைக்கிறன் ..
   வருகைக்கு மிக்க நன்றி சார்

   Delete
 5. சீனு... நான் பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றி ‘நடை வண்டிகள்’ தொடரில் எழுதியதை ப்ரிண்ட் அவுட் எடுத்து அவரிடம் தந்து படிக்கச் சொன்ன போது, ‘‘என்னங்க... எனக்கே கூச்சம் வர்ற அளவுக்கு பாராட்டியிருக்கீங்க’’ என்றார். அதே உணர்வு இதைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தக் கதைகள் சிரிக்க வைக்கத் தவறவில்லை என்பதை உன் வார்த்தைகளில் அறிந்து மகிழ்வும் கூடவே போனஸ். நான் சற்றும் எதிர்பாராத கௌரவத்தை எனக்களித்தமைக்கு மனம் நிறைய நன்றி.

  பொங்கலில் நெருடும் சிறு கற்கள் போல சின்னச் சின்ன எழுத்துப் பிழைகள் ஒன்றிரண்டு இருப்பதை நானும் கவனித்தேன். அவசரமாக அச்சுக்கு அனுப்பியதால் வந்த தவறு. இனி நிகழாதுப்பா. என்னை எழுத வைத்த பி.கே.பி. ஸார் சொன்ன அறிவுரைகளை நான் மறப்பேனா? நீ சொன்னதுபோல இத்துடன் திருப்தியடைந்து விடாமல் இன்னும் எழுதி குவிக்கும் ஆவல் இப்போது உன் போன்றவர்களால் அதிகமாகி உள்ளது.

  இவ்வாண்டு நகைச்சுவை, க்ரைம் இரண்டு ட்ராக்குகளிலும் நடைபோட்டு இரண்டு புத்ததங்களை வரும் ஆண்டில் தர எண்ணம் கொண்டுள்ளேன். பல்சுவை மிக்ஸர் சேர்ந்தால் மூன்றாகவும் மாறலாம்....!

  பொருட்காட்சி கதை சேர்க்காததன் (நியாயமான) கா£ணத்தை நேரில் சொல்கிறேன். ஒவ்வொரு அம்சமாக நுணுகி ரசித்து விமர்சித்ததற்கும், என் பெரும் உழைப்பில் வந்த வலைச்சர வாரத்தை நினைவுகூர்ந்தமைக்கும் மீண்டும் என் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் அண்ணன் எனக்கு இன்னும் "டீ" வரலை....!

   Delete
  2. // நான் சற்றும் எதிர்பாராத கௌரவத்தை எனக்களித்தமைக்கு மனம் நிறைய நன்றி.// மிக்க நன்றி வாத்தியரே

   //இவ்வாண்டு நகைச்சுவை, க்ரைம் இரண்டு ட்ராக்குகளிலும் நடைபோட்டு இரண்டு புத்ததங்களை வரும் ஆண்டில் தர எண்ணம் கொண்டுள்ளேன். பல்சுவை மிக்ஸர் சேர்ந்தால் மூன்றாகவும் மாறலாம்....!//

   சார் ஒரு சிறு வேண்டுகோள் வலையில் எழுதி பிரசுரிக்காமல் நேரடியாக புத்தகத்தில் எழுதினால் வரவேற்ப்பு இன்னும் கொஞ்சம் அதிகமாய் இருக்கும்....

   // என் பெரும் உழைப்பில் வந்த வலைச்சர வாரத்தை நினைவுகூர்ந்தமைக்கும் மீண்டும் என் நன்றி.// மிக அருமையான வாரம் வாத்தியரே அது

   Delete
  3. சீக்கிரம் சுரேஸ் அண்ணனுக்கு டீ பார்சல் அனுப்பி விடவும்

   Delete
 6. சீனு..நல்ல விமர்சனம், கணேஷ் சாரின் புத்தகம் வெற்றியடைய வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வீடு அண்ணே... டாலரை சீக்கிரம் என் கைக்குக் கிடைக்க செய்தால் பெரு உவகை கொள்வேன்

   Delete
 7. சரிதாயணம் - நல்ல பயணத் தோழன்...பாராட்டுக்கள்..

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம் சீனு..... நானும் அவரது கையால் புத்தகத்தைப் பெற்று ரசித்துப் படித்தேன்....

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் படித்துவிட்டீர்களா சூப்பர் சார்

   Delete
 9. விமர்சனம் நன்றாக இருந்தது சீனு இன்னைக்கு புத்தக காட்சி செல்கிறேன்
  வாங்கிடுவேன்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வரவையும் எதிர்பார்த்து உள்ளேன் சார்

   Delete
 10. மிக அருமையான விமர்சனம்

  பாலகணேஷ்: நான் உங்க புத்தகத்துக்கு விமர்சனம் எழுதாட்டி சீனு தான் காரணம் ! இதுக்கு மேலே என்ன எழுதுறதுன்னு தெரியலை !!!

  ReplyDelete
  Replies
  1. //இதுக்கு மேலே என்ன எழுதுறதுன்னு தெரியலை !!!// அப்படியெல்லாம் உங்கள விட்டுற முடியாது சார்... நீங்களும் எழுதியே ஆகணும்

   Delete
 11. ம்ம் ஓகே தலைவருக்கு அவரோட தளபதியின் பதிவு.. கலக்கல் சீனு..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா மிக்க நன்றி தலைவா ....

   Delete
 12. புத்தகத்தையும், மனதையும் நிறைவு செய்கிறார்... ஆஹா! நல்லா எழுதியிருக்கீங்க சீனு. ரொம்ப ஃபாஸ்ட் நீங்க. உடனே புத்தகப் பகிர்வு கொண்டு வந்துட்டீங்க. ஒற்றை வரிக் கமெண்ட் எங்கே வரும்? இந்தப் பதிவிலா?

  கணேஷ்... மேலும் மேலும் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. //ஒற்றை வரிக் கமெண்ட் எங்கே வரும்? //

   நீங்க ஓவியங்களின் ரசிகர்.. சமீபத்தில் ஓவியம் சம்மந்தமாக ஒரு பதிவு கூட எழுதி இருந்தீங்க.. சோ சரிதானம் புத்தகத்தில் இருக்கும் ஓவியங்களைப் பார்க்கும் பொழுது உங்க மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கும் என்பதைத் தான்

   //தமிழ் என்பவரின் ஓவியங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதுஎங்கள் பிளாக் ஸ்ரீராம் சாரின் ஒற்றை வரிக் கமெண்ட்டாக இருக்கும் என்பதுஎன் எண்ணம். //

   இப்படிக் குறிப்பிட்டு இருந்தேன்

   Delete
 13. சக பதிவர்களின் படைப்புகளை இன்று வாங்கிவிட்டேன். நல்ல விமர்சனம் சகோ.

  ReplyDelete
 14. விமர்சனத்தில கலக்கிட்டீங்க! சீனு. கணேஷ் சார் இன்னொரு பாக்கியம் ராமசாமியாக வாழ்த்துக்கள். விகடனின் பார்வை பட்டால் இன்னும் உயரச் செல்வார்.வலைசரத்தில் அவரது அறிமுகங்களை நான் படித்ததில்லை இபோது படித்து விடுகிறேன்.அவருக்கு நண்பராக இருப்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. அருமையான புத்தகத்தை மிக அருமையாக
  விமர்சனம் செய்துள்ளீர்கள்
  ரசித்துப் படித்து மகிழ எழும் ஆசையை
  அடக்கமுடியவில்லை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 16. அருமையான விமர்சனம் ..
  இவ்வளவு டீடைல்டா போட்டுடீங்க . கொஞ்ச எங்களுக்காகவும் விட்டு வைத்திருக்க கூடாதா ..

  ReplyDelete
 17. நல்ல விமர்சனம். "சிரிதாயணம்" வாழ்த்துகள்.

  ReplyDelete
 18. விரிவான விமர்ச்சனம்! நூலின் ஆய்வுரை என்றே சொல்லலாம்!

  ReplyDelete
 19. ஒரு நாள் புலவர் அய்யா வீட்டில் டேரா போட்டு உங்க எல்லா புக்ஸையும் படிக்கனும் :-)))))

  ReplyDelete
 20. முதல் தடவை கவிதை கட்டுரையை விட்டு விட்டு s @s கணேஷ் சாரின்
  நூலுக்கு விமர்சனம் எழுதி உள்ளேன்
  உங்கள் பாதிப்பில் .....நேரம் கிடைக்கும் போது வருகை தந்து
  கருத்து சொல்லவும். நன்றி.

  ReplyDelete
 21. அருமையான விமர்சனம்..

  ReplyDelete