20 Dec 2012

ஹிட்லிஸ்ட் - மலையாளப்படம் - வி.தி.வ.லி.ய.து...கோலிவுட்டின் தமிழ் படங்களையும் ஹாலிவுட்டின் தமிழ் படங்களையும் தவிர வேறு எந்த வுட்டின் தமிழ் படங்களையும் பார்ப்பது இல்லை, பார்பதற்கும் பிடிக்காது. டப்பிங் படங்களை உலகத் தொலைகாட்சியில் எத்தனையாவது முறை ஒளிபரப்பினாலும் பார்க்ககூடாது என்று சபதம் எடுத்தவனின் சபதத்தை உடைத்த பெருமை தமிழக மின்வெட்டுத் துறையையே சாரும்

சென்னை தவிர்த்து வேறு எங்கும் மின்சாரம் இல்லை, மின்சாரம் இல்லா தென்காசியில் பொழுது போக்குவதற்கு திரையரங்குகளை விட்டால் வேறு வழியும் இல்லை, கடந்த வரம் முழுவதும் தென்காசியில் இருந்ததால் மின்வெட்டை சமாளிக்க தினமும் ஒரு படத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அதற்கான பிள்ளையார் சுழி சிவாஜி 3டி யில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும், அந்தோ பரிதாபம், 3டி ப்ரோஜெக்ட்டர் வராத காரணத்தால்.... வரப் போகும் வரிகளில் இருக்கிறது உலக அழிவிற்கான ஆரம்பம்.

தென்காசி நகர சுவர்களில் ஸ்டைலாக துப்பாக்கியை தூக்கிக் கொண்டு டாக்டர் விஜய்  நின்ற போஸ்டர்களுக்கு மத்தியில், சிவனே என்று துப்பாக்கியை தூக்கிக் கொண்டு நின்றார் சமுத்திரக்கனி. சமீபகாலமாக நடைபெறும் என்கவுண்டர்களுக்கு எல்லாம் மனித உரிமைக் கழகங்கள் கவுண்டர் குடுத்துக் கொண்டிருக்க, என்கவுண்டரை மையமாய் வைத்து வெளிவந்த படமாக இருக்கும் என்று நான் நினைக்கத் தொடங்கிய மிகச் சரியான நேரத்தில் 

" ஏல ஏதோ என்கௌண்டர் படம் போல, சமுத்ரகனி இருகாரு, வாரியா இன்னிக்கு சாயங்காலம் போவோம்" என்றான் தம்பி கௌத்தம்.

" ஆனா இத பார்த்த தமிழ் படம் மாதிரி தெரியலையே, அவர் எப்போ இப்டி ஒரு படம் நடிச்சாரு, அது கூட ஓகே, தமிழ் நாட்டுல இங்கலீஷ் படமே எடுத்தாலும் தமிழ் தான் பேரு வைப்பானுங்க, அதெப்படி ஹிட்லிஸ்ட்?"   இப்படி ஒரு ஆகச் சிறந்த கேள்வி கேட்டது நானாகிய நானே தான்.

கேள்விபடதா படம் என்பதால் ஹிட்லிஸ்ட் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை, தம்பியோ மாமாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டாதால், வி...தி...வ...லி...ய...து...

குற்றாலம் செல்லும் சாலையில் இருக்கும் தாய்பாலா திரையரங்கம், ஒரு காலத்தில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. திருட்டு டிவிடி யின் பாதிப்பாலும், மின்வெட்டின் தாக்கத்தாலும் தற்போது அரங்கம் நிறைந்த கொசுக்களுடன் ஓடி கொண்டுள்ளது. அரங்கில் ஆங்காங்கே கைதட்டும் சத்தம் கேட்டால் அங்கே கொசுவதை வெகு அமோகமாக  நடந்து கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

முத்திரக்கனி ஹீரோவாக நடித்து, மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற படம், சமுத்திரக்கனி துப்பாக்கியை கொண்டு என்கவுன்ட்டர் செய்யும் காட்சிகள் அனைத்தும் பெரிய எத்ரிபார்பையும், திருப்பத்தையும் ஏற்படுத்தியது, சமுதிரக்கனியா இப்படி எல்லாம் வீர சாகசம் செய்வது என்றெல்லாம் வாயைப் பிளக்க வைத்த படம் என்றெல்லாம் எதிர்பார்த்து சென்றவர்கள் வாயில் நாற்பது ரூபாய்க்கு (டிக்கெட் விலை) அல்வாவை வைத்து அனுப்பினார்கள். 

"A FILM BY BALA" இந்த விஷயம் தமிழ்நாட்டு பாலாவுக்கு தெரிந்திருந்தால் " ஐயோ பாவம் மனசொடிஞ்சு போயிருப்பார்". பின்னணி இசை, வரும் காலங்களில் இவருக்கு மலையாள சினிமாவிற்கான ஆஸ்கர் கிடைத்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஹீரோ இன்ட்ரோ,வில்லன் இன்ட்ரோ, இன்டர்வெல், கிளைமாக்ஸ் முதலிய காட்சிகளில் போட்டிருக்க வேண்டிய இசையை தலைவர் காட்சிக்கு காட்சி, நொடிக்கு நொடி போட்டு எதிரிகளையும் நம்மையும் கொல்கிறார். யார் பேசினாலும் வசனங்களுக்கு பதிலாக அதிரடி இசையே கேட்கிறது. சொல்லப் போனால் வசன உழைப்பில் இசையமைப்பாளர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார், அவர் ஆற்றிய ஆற்றில் படத்தின் சூட்டையும் சேர்த்து தனித்திருகிறார் என்பதை நான் குறிப்பிட மறந்தேன் என்றால் என்னை விட ஒரு மாபெரும் தேசத் துரோகி மல்லுவுட்டில் இருக்க முடியாது.

டுத்தது எடிட்டிங் மற்றும் ஸ்க்ரீன் ப்ளே, இந்த இருவருமே விடலை பருவத்தில் இருந்து மலையாள சினிமாக்களாக பார்த்து தள்ளி இருப்பார்கள் என்று நினைக்கிறன் இருவரிடமும் மலையாள சினிமாவின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. படத்தில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையில் சிறு தொடர்பும் இல்லை. மொத்த படத்தையும் பிட்டு பிட்டாக எடுத்து முழுநீள( 'ள' வில் எழுத்துப் பிழை இல்லை என்பதை கவனிக்க)  படமாக்கி அதில் நம்மை பலிகடாவாக்கி அழகு பார்திருக்கிறார்கள்.

மிழகமெங்கும் போஸ்டரில் இருக்கும் சமுத்திரக்கனி வருவதோ படத்தின் முதல் காட்சியில் மட்டுமே. நரேன் , சந்தியா, தலைவாசல் விஜய் ஆகியோரையும் ஆங்காங்கே காண முடிகிறது...

மொத்தத்தில் ஹிட்லிஸ்ட் ஹிட் அடித்துக் கொல்ல வேண்டிய லிஸ்டில் முதலிடம் பெறுகிறது 

ருந்தும் ஆகசிசிறந்த இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல விரும்புவது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படம் நல்ல இருக்கு கண்டிப்பா பாருங்க, வயிறு குலுங்க சிரிங்க சிரிங்க சிரிசிட்டே இருங்க...      

பின் குறிப்பு : இந்தப் பதிவில் படங்கள் இணைகாததற்குக் காரணம் போஸ்டரில் கூட இந்தப் படத்தை பார்க்க வேண்டாமே என்று தான், படம் பார்த்து விட்டு வந்து இதை டைபிக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை ஹீரோவின் பெயரை யாம் அறியோம் பராபரமே    

12 comments:

 1. அட ரொம்ப ஹாஸ்யமா பதிவு எழுதி இருக்கலே.. இலங்கைல இருக்கிற படியா இந்த மல்லு தொல்லைல்லாம் குறைவு.. (குறைவுன்னு சொல்ல காரணம் கொஞ்சமா இருக்குலே)

  ReplyDelete
 2. // டப்பிங் படங்களை உலகத் தொலைகாட்சியில் எத்தனையாவது முறை ஒளிபரப்பினாலும்/

  //வரப் போகும் வரிகளில் இருக்கிறது உலக அழிவிற்கான ஆரம்பம்.//

  //தற்போது அரங்கம் நிறைந்த கொசுக்களுடன்/

  //ஆற்றிய ஆற்றில் படத்தின் சூட்டையும் சேர்த்து/

  //ஹிட் அடித்துக் கொல்ல வேண்டிய/

  கல கல கிளிக்ஸ்

  ReplyDelete
 3. //அரங்கம் நிறைந்த கொசுக்களுடன்//

  :))))

  இப்படி :)))) போடத் தொடங்கினால் அப்புறம் நிறைய வரிகளுக்கு, சொல்லப் போனால் வரிக்கு வரி :)))) போட வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது! எப்படியோ ஒரு பதிவு தெரியாதே... அதற்காவது நன்றி சொல்ல வேண்டாமா?

  ReplyDelete
 4. // அரங்கம் நிறைந்த கொசுக்களுடன் ஓடி கொண்டுள்ளது.\\ ஹா..ஹா.. வர.. வர.. எழுத்தினூடே இழைந்தோடும் உங்களின் நகைச்சுவையுணர்வு மிக அருமை.

  ReplyDelete
 5. ஒரு மோசமான படத்தைப் பார்த்துவிட்டு எப்படி இவ்வளவு நகைச்சுவையாக விமர்சனம் எழுத முடிகிறது? வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. அரங்கில் ஆங்காங்கே கைதட்டும் சத்தம் கேட்டால் அங்கே கொசுவதை வெகு அமோகமாக நடந்து கொண்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  /////////////////////////////////
  செம செம.....டயலாக் பாஸ்

  ReplyDelete
 7. படத்து பேரே ஹிட்லிஸ்டா...?
  அதாம் போய் மாட்டி விட்டிரூ போல.....

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அடடா! நான் தப்பிச்சேன்! ஹிட் லிஸ்ட்னு போட்டிருந்துச்சு தூரத்துல இருந்து பார்த்து ஆங்கிலபடம்னு கும்கிக்கு போயிட்டேன்! சுவாரஸ்யமான பதிவு!

  ReplyDelete
 10. யோவ் இன்னைக்கு தான் ஒழுங்கா ஒரு விமர்சனம் எழுதி இருக்கீக...(இதுவே சென்னையா இருந்தா தியேட்டர் போனேன் பொண்ணு வந்தது இறுக்கமா உடையணிந்து கிறக்கத்த கூட்டுச்சி..இப்படி அப்படி பெருசா நீண்டிருக்கும் ..) ஊர்ல மலையாள நமிய தேடியதா தீவிர வாதி சொன்னார் ,,, மெய்யாலுமா அண்ணாத்தே ???

  ReplyDelete
 11. பாஸ்...செமையா கலாய்ச்சு இருக்கீங்க. படிக்க சுவாரிசியமா இருந்தது. :):):)

  ReplyDelete