14 Nov 2012

துப்பாக்கி - இது விமர்சனமே அல்ல


நான் கடைசியாக அரங்கில் பார்த்த விஜய் படம் போக்கிரி என்று நினைக்கிறன் ( நண்பன் விதி!விலக்கு ) அதற்குப் பின் திருட்டு பென்டிரைவில் கூட விஜய் படம் பார்த்தது இல்லை. அந்த அளவிற்கு கலை சேவை ஆற்றியவர் தான் நமது இளைய தளபதி. எனக்கு விஜயை பிடிப்பதற்குக் காரணம் அவரது தெனாவெட்டான பார்வையும் கிண்டல் கலந்த பேச்சும், பிடிக்காமல் போனதற்குக் காரணம் டெம்ப்லேட் படங்களும் காஸ்ட்யும் கூட மாற்றாமல் நடிக்கும் விஜயும் அதை ஆதரித்த விஜய் ரசிகர்களும் ( என்னை அஜித் ரசிகன் என்று சொல்வோருக்கு எனது வேண்டுகோள் பில்லா டூ விமர்சனத்தையும் படித்து விடுங்கள்.

ங்கே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் இருக்கும் சிறு வித்தியாசம், அஜித் ரசிகர்கள் பழகிப் போன தோல்வியை காமெடியாக எடுக்கப் பழகிக் கொண்டார்கள் விஜய் ரசிகர்கள் இன்னும் சீரியசாகவே எடுத்துக் கொள்கிறார்கள்).அஜித்தும் விஜயுமே தங்களை நண்பன் என்று சொல்லிக் கொள்கிறார்கள் ரசிகர்கள் தான் அடித்துக் கொண்டு __கிறார்கள் என்பது மட்டுமே இங்கே வேதனையான விஷயம். (அஜித்தா விஜயா என்ற விவாவதம் பொழுதுபோக்காக இருக்கும் வரை தவறு இல்லை , என்ற அளவில் என் பகுத்தறிவு உள்ளது என்பதே உண்மை. ) 


ன்னும் இருபது நாட்களுக்கு திரையரங்கம் பக்கம் திரும்பி கூட பார்க்க முடியாது, துப்பாக்கி பற்றிய ஒருவரி விமர்சனங்கள் உடனே பார்க்கத் தூண்டியது. TICKETNEW.COM BOOKMYSHOW  என்று எத்தனையோ டிக்கெட் வியாபாரிகளின் தளங்களைத் திறந்து பார்த்து விட்டேன் வியாழக் கிழமைக்குக் கூட நான் எதிர்பார்த்த காட்சிக்கு டிக்கெட் கிடைக்க வில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய படம் என்பதால் சென்ற தீபாவளி அன்று வெளியாகிய ஏழாம் அறிவை அதிகாலை மூன்று மணிக்கு எல்லாம் வெறிக்க வெறிக்கப் பார்த்து வெறி கொண்டு "தமிழன்டா தாங்குவண்டா" என்ற பஞ்சுடன் அரங்கில் இருந்த பஞ்சை எல்லாம் பிய்த்து எரிந்து கொண்டு வெளியில் வந்தேன். இருந்தும் விஜய்க்காக இல்லாவிட்டாலும் முருகதாசுக்காக துப்பாக்கி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 


றுதியாக நண்பன் ஆன்டோவிற்கு போன் செய்தேன், அவன் ரூம் மேட் ஹாரிஸின் அசிஸ்டென்ட் என்பதால் அவர் மூலமாக இரவு காட்சிக்கு முயற்சி செய்வதாகக் கூறினார், நானும் எனது இணைய வழித் தேடலை விடவில்லை டிக்கெட்டும் கிடைத்த பாடில்லை, இரவு எட்டு மணிக்கு போன் செய்தார் "உதயம் தியேட்டர்ல டிக்கெட் இருக்கு கிளம்பி வா", சென்னைப் புறநகரில் இருந்து சென்னைக்குள் செல்வது நேற்று சவாலாக ஒன்றும் இல்லை காரணம் சென்னையின் அணைத்து சாலைகளுக்கும் நேற்று விடுமுறை விடப் பட்டிருந்தது, இருந்தும் எனக்கிருந்த ஒரே சவால் எங்கு இருள் நிறைந்த சாலைகள்.

தயம் முன் நின்று போன் செய்தேன் " தம்பி எஸ்கேப் ல டிக்கெட் இருக்கு, என் ரூம்க்குவா நாம எஸ்கேப் போயிறலாம்" என்றார், டிக்கெட்டே கிடைகாதவனுக்கு எஸ்கேப்பில் டிக்கெட் என்றால் கேட்கவா வேண்டும். கே கே நகரில் இருந்து பழக்கப்படாத சாலை வழிகள், அண்ணா சாலையை அடைவதற்குள் சென்னை மேப்பை கரைத்துக் குடித்துவிட்டோம்.

இனி எஸ்கேப் :

ஸ்கேப் திரையரங்கமே கோலாகலமாக இருந்தது சென்னையின் அத்தனை செல்வந்தர்களும் தங்கள் செல்வங்களுடன் இங்கே குழுமி இருந்தார்கள், "இந்த கூட்டதுலையே சுமாரா டிரஸ் பண்ணிருக்க ரெண்டு ஜீவன் நாம தான்" என்றேன் நான், "அது கூட பரவா இல்ல டா எவளுமே சுமாரா கூட டிரஸ் பணலையே என்ன பண்றது!" என்றார் ஆண்டோ. தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்தி இருந்த ஆண்களும், கணவன் மட்டும் காணும் அழகை என்ற இலக்கணத்தை மறந்த பெண்களும் ஏராளம் தாராளம். சென்னையின் அல்ட்ரா மாடல் சற்றே அதிகம் தலைவிரித்து ஆடியது. "அது சரி இவங்க எல்லார் வீட்லயும் ஸ்ட்ரிக்ட் ஆகிட்டா சென்னையும் தென்காசி மாதிரி ஆயிரும் டா" என்றார் ஆண்டோ இதற்க்கு நான் சந்தோசப்படுவதா இல்லை வருத்தப்படுவதா. திரைப் படத்திற்கு யு சர்டிபிகேட் திரை அரங்கிற்கு ஏ சர்டிபிகேட் என்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.

இனி துப்பாக்கி :

டைட்டில் கார்டில் வரும் டூ டி வடிவமைப்பு பழைய காலப் படங்களை நினைவு படுத்தியது, இருந்தாலும் புதுமையாக இருந்தது, முதல் பாடலில் ஐந்தாவது நிமிடத்திலேயே லேசாக சலிப்பு ஏற்பட ஆரம்பித்தது இருந்தும் திரைகதையில் தொய்வு இல்லை, கூகிள் பாடலைத் தவிர மற்றவை எல்லாமே வேஸ்ட். அரங்கில்  இருக்க முடியவில்லை, பாய் தலையணை கொண்டு சென்றிருந்தால் தூங்கி இருப்பேன். 

டத்தில் எவ்வளவோ லாஜிக் மிஸ்டேக்குகள் இருந்தாலும் அனைவரும் கேட்பது மிலிட்டரி மேன் ஏன் பிரஞ்ச் பியர்ட் வச்சி இருகாரு என்பது தான்? இதற்கு இரண்டாவது காட்சியிலேயே இயக்குனர் தெளிவாக்கியிருபார்.

விஜய் பாமிலி : என்னப்பா புதுசா தாடி எல்லாம் 
விஜய் : அது ஒன்னும்மில்ல வீட்டுக்கு வரேன்ல அதான் 

( இதை எல்லாம் லாஜிக்மிஸ்டேக் என்று சொல்லாதீர்கள், சிபி அண்ணனுக்கும் சேர்த்து தான்.) 

டிங்க டிங்க டிங்க டிங்கடிங்க டிங்கடிங்க டிங்க டிங்க டி என்ற பாடல் வரிகளில்! வெகு நாளைக்கு பின் விஜய் தனக்கே உரித்தான ஸ்டப் போட்டது போன்ற உணர்வு. அடியாட்கள் மற்றும் வில்லன்களை அடிக்கும் காட்சிகளில் விஜய் காண்பிக்கும் உடல்பாவனை வெகுவாக ரசித்தேன். படம் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம், எஸ்கேப்பில் நான் நேற்று கண்ட கோலத்தைப் பார்த்ததும் காஜல் அவ்வளவு ஒன்றும் கிளமாராக உடை அணியவில்லை என்பதால் நிச்சயம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம். 


ல்லாம் இருந்தும் ஏழாம் அறிவு சூர்யா போன்று இறுதிக் காட்சியில் நீட்டி முழக்கி வசனம் பேசுவது சிரிப்பு தான் வருகிறது, தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றும் பணியில் இருந்து விஜயகாந்த் ஓய்வு பெற்றபின் அதற்க்கு நல்ல மாற்றனாக(!) விஜய் கிடைத்திருப்பது இந்தியா செய்த புண்ணியம். ( காவலன் அதை தொடர்ந்து துப்பாக்கி). நிச்சயம் இது முருகதாஸ் படம் இல்லை இதில் இருக்கும் டிவிஸ்ட்டுகளை எல்லாம் காப்டன் எப்போதோ செய்து காட்டிவிட்டு சென்றுவிட்டார், அதனால் தீவிரவாதிகளை ஒழிக்க இன்னும் சிறப்பான ட்விஸ்ட்களைக் கையாண்டிருக்கலாம். 

டம் பார்த்துவிட்டு வந்து விஜய் ரசிகனான எனது நண்பன் சொன்னது "மாப்ள படம் மங்காத்தா மாதிரி தாறுமாறா இருக்குல". இதை விட அஜித் ரசிகனான எமக்கு வேறு என்ன வேண்டும். 

மங்காத்தாடா ............

பின்குறிப்பு : எந்தவொரு தனிமனிதனையும் ஆபாசமாகத் தாக்கும் பின்னூட்டங்களுக்கு இங்கே எழுத்துச் சுதந்திரம் கிடையாது :-) )

விளம்பரம் :

ஹ்மான் இசையமைப்பில் கடல் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான "நெஞ்சுக்குள்ள" பாடலும் பாடல் வரிகளும் பாடல் விமர்சனங்களும் பதிவாக படிக்க ஆசையா  டி என் முரளிதரன் சார் அவர்களின் எழுத்தில் உங்களுக்காக 
50 comments:

 1. தலைவிரிச்சு போட்டு ஆடுனா அது மாரியாத்தா
  தலையே வந்து ஆடுனா மங்காத்தா

  இது மங்காத்தா தீபாவளி

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அருமையான பஞ்ச்
   முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பா

   Delete
 2. எம்மா நாளைக்குத்தான் லோக்கல் ரவுடிகளை அழிசுசுட்டிருப்பாரு விஜய்... அதான் ப்ரமோஷன் வாங்கி தீவிரவாதிகளை அழிக்க புறப்பட்டுட்டாரு... ஹி... ஹி...

  ReplyDelete
  Replies
  1. அவரு மக்களைக் காக்கப் போற தனித் தலைவன் அடுத்தது அரசியல் தான்

   Delete
 3. தம்பி... எதையும் எழுதும போது கடைசியாகப் பார்த்த படம். கடைசியாகக் கேட்ட பாட்டு என்று எழுதாதே. சமீபமாகப் பார்த்தது கேட்டது என்று எழுது. இரண்டுக்கும உள்ள வித்தியாசத்தை எழுதிவிட்டு படித்துப் பார்த்தால் நீயே உணர்வாய். (இது உனக்கு மட்டும்)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வாத்தியாரே, இது போன்ற வார்த்தைகள் என்னை இன்னும் செழுமைப் படுத்தும் என்பது திண்ணம், கடைசி சமீபம் இரண்டின் வேறுபடும் வார்த்தை அழகும் புரிகிறது, இனி திருத்திக் கொள்கிறேன்.... மிக்க நன்றி வாத்தியாரே

   Delete
 4. விமர்சனத்துல கலக்கறீங்க சீனு! நேர்மையா,சொல்லுதல் கண்ணில் கண்ட காட்சிகளை நகைச்சுவையோடு சொல்லுதல் என்று பாராட்ட ஏகப் பட்ட அம்சங்கள் உங்கள் விமர்சனத்தில்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம் சார் என் எழுத்துக்களைப் உற்சாகப்படுத்தும் உங்களுக்கு சந்தோசமான நன்றிகள் :-)

   Delete
 5. ஹ்ம்ம் படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க ................பதிவர்களுக்கு வடை போச்சேன்னு இருக்கு ............

  ReplyDelete
  Replies
  1. விஜய் போடுற சீன கொஞ்சம் கம்மி அதுனால தைரியமா பார்க்கலாம் சிங்கம் :-)

   Delete
 6. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கலாம் சொன்னதால் மகிழ்ச்சியே.

  ReplyDelete
  Replies
  1. குடும்பத்துடன் பார்த்துவிட்டு வந்து என்னை திட்டினால் சங்கம் பொறுப்பு ஏற்காது

   Delete
 7. //எஸ்கேப்பில் நான் நேற்று கண்ட கோலத்தைப் பார்த்ததும் காஜல் அவ்வளவு ஒன்றும் கிளமாராக உடை அணியவில்லை //

  :))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி மோகன் சார்

   Delete
 8. ரொம்பவே கலக்கல் விமர்சனம். அதை விட நீ அனுபவ நாயகன் போல அனுபவங்கள் மிக நகைச்சுவை இலையோடு சாரி இழையோடு பகிர்ந்தது சூப்பர்.

  ஆனா பயபுள்ள படத்துக்கு போனா படாத விட கூட பொண்ணுங்கள தான் பார்க்கிற போல?.. மொத்தத்தில் சூப்பர்..

  //அஜித் ரசிகர்கள் பழகிப் போன தோல்வியை காமெடியாக எடுக்கப் பழகிக் கொண்டார்கள் விஜய் ரசிகர்கள் இன்னும் சீரியசாகவே எடுத்துக் கொள்கிறார்கள்//

  இதுவும் பெரும்பான்மை விடயத்திலே தங்கி இருக்கிறது என்று நினைக்கிறேன். அஜித் ரசிகர்கள் படத்தில் வரும் அஜித்தை விட அவரை குறித்த பொசிடிவ் செய்திகளால் கவரப்பட்டவர்கள் அநேகர். ஆனால் அதை போல விஜய் என்டேர்டைனராக (டான்ஸ் + காமெடி) கவரப்பட்டவர்கள் இவருக்கு அநேகர். இதான் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நான் என்ன பண்றது மச்சி நம்மள கடுப்பு எத்ரதுக்குன்னே ஒரு கூட்டம் பெரும் படையுடன் கிளம்பி வருது

   //என்டேர்டைனராக (டான்ஸ் + காமெடி) கவரப்பட்டவர்கள்// நிச்சயம் அது தான் காரணமாக இருக்கும் மச்சி

   Delete
 9. செம ஹிட்...

  விஜய் - அடுத்த விஜயகாந்த்...?

  ரசனையான விமர்சனத்திற்கு நன்றி...
  tm4

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்

   Delete
 10. ம்ம்..விமரிசனம் அருமை..!

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் வசுவின் அருமையான பின்னோட்டங்கள் நெஞ்சை உவகை கொல்ல வைக்கின்றன

   Delete
 11. அருமையான விமரிசனம்..தங்கள் விமரிசனம் படம் பார்க்கும் என்னத்தை தூண்டுகிறது!

  ReplyDelete
  Replies
  1. படம் பார்த்து தங்களுக்கு எதுவும் ஆனது என்றால் சங்கம் பருப்பு சாரி பொறுப்பு ஏற்காது

   Delete
 12. Replies
  1. வருகைக்கு நன்றி மனசாட்சி அண்ணே

   Delete
 13. தியேட்டர் விவரிப்புகள் அருமை! விஜய்க்கு இது ஒரு வெற்றிப்படம்னு சொல்றாங்க! உங்க விமர்சனம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சுரேஷ் அண்ணா

   Delete
 14. அனுபவங்கள் நகைச்சுவையோடு சொல்றீங்க சீனு சூப்பரா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சரவணன் சார்

   Delete
 15. தியேட்டர்ல நடந்த கூத்துல முதல் 10 நிமிஷம் படத்தையே பார்க்க முடியல. அந்த ப்ரெஞ்ச் தாடி சீன் எல்லாம் மிஸ் பண்ணியாச்சு. ஆனாலும் ரொம்ப பொறுமையை சோதித்துப் பார்த்திருக்கிறார் முருகதாஸ்... 2 முக்கால் மணி நேரம்!! (அடுத்த படத்திற்கு ரசிகர்கள் எவ்வளவு தாங்குவாங்க என்று சோதனையோ?)

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவு ஆர்பாட்டதொட படம் பார்த்து இருக்கீங்க... இங்கே அந்த ஆர்ப்பாட்டம் ஆடம் பாட்டம் கொஞ்சம் மிஸ், பார்த்தது பணக்காரர்கள் பார்த்த காட்சி என்பதால் படத்தை கைகொட்டமல் பார்த்தனர் :-)

   Delete
 16. சகோ உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை, நீங்களும் திருநெல்வேலி என்பதில் மகிழ்ச்சி.என் தள முகவரி : kavithai7.blogspot.in
  உங்கள் பேஸ் புக் தொடரின் ரசிகன். நான் கல்லூரி மாணவன். தங்களைப் பற்றி அறியலாமா ? நன்றி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி செழியன் ... என் முகநூல் முகவரி வலைப்பூவில் உள்ளது என்னைப் பற்றி அங்கே முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்

   Delete
 17. //திரைப் படத்திற்கு யு சர்டிபிகேட் திரை அரங்கிற்கு ஏ சர்டிபிகேட் என்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.//

  சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 18. "கணவன் மட்டும் காணும் அழகை என்ற இலக்கணத்தை மறந்த பெண்களும் ஏராளம் தாராளம்"
  இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான் !
  தமிழ் வாழ்க !!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா முதல் வருகைக்கு நன்றி ரூபக்

   Delete
 19. தமிழ் வாழ்க !!!

  " கணவன் மட்டும் காணும் அழகை என்ற இலக்கணத்தை மறந்த பெண்களும் ஏராளம் தாராளம்"
  இந்த 'city' பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான் !

  ReplyDelete
 20. வித்தியாசமான விமர்சனம்.
  அட! என் பதிவுக்கு விளம்பரம் தந்ததற்கு நன்றி சீனு.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி முரளி சார்

   Delete
 21. ரசிகர்கள் தான் அடித்துக் கொண்டு __கிறார்கள் என்பது மட்டுமே இங்கே வேதனையான விஷயம்///இதை நான் ஏற்று கொள்ளமாட்டேன் ஒரு சிலர் தான் அப்படி உள்ளனர்...
  டிக்கெட் கிடைக்கலைன்னு சொன்னிங்க இங்க திருச்சியில் ரொம்ப ஈஸியா கிடைத்து விட்டது நல்லவேளை நான் மட்டும் தான் போனேன் எந்த நண்பனும் வரலை...வந்து இருந்தா என் நிலைமை அவ்வளவு தான்....

  ReplyDelete
 22. hmm boss enadhu idhu nalla dhana poitu iruku

  ReplyDelete
 23. நன்றி சகோ
  என் தளத்தில் தமிழ் மண் எடுப்போம் தமிழ் ஈழத்தில்
  இணைப்பு :
  http://kavithai7.blogspot.in/2012/11/srilanka.html
  மேலும் தொழிற் களத்தில்
  1952-ம், தொழிற் களமும்
  இணைப்பு :
  http://tk.makkalsanthai.com/2012/11/facts.html

  ReplyDelete
 24. வணக்கம் மிஸ்டர் சீனு ..

  ReplyDelete
 25. கணவன் மட்டும் காணும் அழகை என்ற இலக்கணத்தை மறந்த பெண்களும் ஏராளம் தாராளம். //

  வருத்தமா இருக்கு எனக்கு ....

  ReplyDelete
 26. யு சர்டிபிகேட் திரை அரங்கிற்கு ஏ சர்டிபிகேட் என்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.//

  அருமையான பஞ்ச் ...

  ReplyDelete
 27. நாளுக்கு நாள் எழுத்தின் வீரியம் கூடுகிறது மிஸ்டர் சீனு ,...

  ReplyDelete
 28. //விஜய் பாமிலி : என்னப்பா புதுசா தாடி எல்லாம்
  விஜய் : அது ஒன்னும்மில்ல வீட்டுக்கு வரேன்ல அதான் //
  ரயில் நிலையத்தின் இரைச்சலான சப்தத்திற்கிடையே இரண்டு வினாடிகளில் வந்து போகும் வசனம் இது.இதை சிபி அண்ணன் எப்படி கோட்டை விட்டாருன்னு தெரியில..ஆனால் நீங்க படு ஷார்ப்பா இருக்கீங்க ...!!!

  ReplyDelete
 29. வணக்கம்!
  தங்களது பதிவு ஒன்றினை நான் வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன். தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வருகை தரவும்!
  http://blogintamil.blogspot.in/2012/11/3.html

  ReplyDelete
 30. நீங்களும் சினிமா ரசிகரோன்னு நினைச்சேன், இல்ல... சந்தோசம்...

  ReplyDelete
 31. ரொம்ப லேட்டா வந்தாலும் துப்பாக்கி படம் பார்த்த பிறகு படிக்கிற விமர்சனம் இதுங்க..ரொம்ப நடு நிலையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.துப்பாக்கி என்ன சொல்ல..விஜய் மசாலா படம் நடிச்சாலும் அட்லீஸ் இந்த மாதிரி திரைக்கதையிலாவது நடிக்கனும்..அவ்வளவுதாங்க

  ReplyDelete