24 Oct 2012

பீட்சா - இது முறையான விமர்சனம் அல்ல" பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"


இண்டர்வெலில் அரங்கிலிருந்து வெளியேறும் பொழுது கட்டிளங்காளை ஒருவன், இருபத்தி ஐந்து வயது நிரம்பிய "அழகிய" பாப்பாவின் கையில் இருந்த ஐந்து வயது பாப்பாவை பார்த்து கேட்ட கேள்வி " பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"  

"எனக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு, அவன் எந்த பாப்பாவ  பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டான்" சீனு'ஸ் மைன்ட் வாய்ஸ்.

ஒரு ட்விஸ்ட்டுடன் நிறைவடையும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு மணி நேர ட்விஸ்ட். ரஜினி கமல் அஜித் படங்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்தப் படத்திலும் என்னை தொற்றிக் கொண்டது காரணம் பதிவுலகமும் பேஸ்புக் உலகமும். எங்கு காணினும் பீட்சா பீட்சா பீட்சா, பீட்சா. எனக்குப் பிடிக்காத ஒரு வஸ்து பீட்சா, "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். பரவாயில்லை இந்த பீட்சாவை வெகு சிறப்பாக பதப்படுத்தி நம் இதயத்தை காட்சிக்கு காட்சி பதம் பார்த்திருக்கிறார்கள். 


அரங்கின் உள்ளே நுழையும் பொழுது தற்செயலாக ஊழியர் ஒருவரிடம் கேட்டு வைத்திருந்தேன் எப்போ படம் முடியும் என்று "ரெண்டரைக்கு முடியும்" என்று அவர் சொன்னதால் அடிகடி மணிதுளிகளைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் எப்போது இரண்டரை மணி ஆகும் என்று. " எனக்கெல்லாம் ட்விஸ்ட்டு பிடிக்காது என்று நினைபவர்கள் கடைசி பத்தாவது நிமிடம் வந்தால் போதும், மொத்த படத்தையும் மீண்டும் ஒருமுறை ரீவைண்ட் செய்கிறார்கள் அப்போது பார்த்துக் கொள்ளுங்கள்.        

கார்த்திக் சுப்புராஜ் பற்றிய கவர் ஸ்டோரி சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியாகி இருந்தது, அதில் அதில் என்னைக் கவர்ந்த விஷயம், சினிமாவா  இல்லை ஐ டி வேலையா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் துணிந்து தேர்ந்தெடுத்த துறை தான் சினிமாத் துறை. இவர் இயக்கிய முதல் குறும்படத்திற்கு வந்த கமென்ட் " நீயெல்லாம் எதுக்கு படம் எடுக்குற" இவரது சமீபத்திய குறும்படங்கள் லட்சக்கணக்கான பார்வைகளைத் தாண்டி சென்று கொண்டுள்ளது. இவை எல்லாமே பீட்சா மேல் ஈர்ப்பு வரக் காரணமான விஷயங்கள். 


ரம்யா நம்பீசன் அடுத்த ரவுண்டு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதில் ஒரு ரவுண்டை குறைக்க முயல வேண்டும். பின்னணி இசையில் மிரட்டலுடன் இருக்கிறது, வசனம் அருமை. குறைகள் கண்டுபிடிக்க நேரம் தராமல் காட்சி நகர்வுகளில் நேர்த்தி சேர்த்திருப்பது படத்திற்குப் பலம். ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகளை பார்க்கும் (சங்கத்து) பேச்சிலர்கள் பொறமை கொள்ளக் கூடாது.      

"தமிழ் சினிமாவையே தலை கீழ புரட்டி போட போறான் மச்சி" படம் முடிந்து வெளியே செல்லும் பொழுது புரட்சிப் போராட்டம் நடத்த ஆரம்பித்தான் தமிழ் சினிமாவின் டெடிகேட் ரசிகன். "த்தா நீயெல்லாம் படம் பாத்திருந்த நெஞ்சு வெடிச்சு செத்ருப்ப" நவநாகரீக இளைஞன் ஒருவன் சென்னைத் தமிழில் தன் நண்பனை சீண்டிக் கொண்டிருந்தான், அவன் கைகளுக்குள் தான் கையை விட்டு மாற்றான் ஆகியிருந்த நவநாகரீக இளைஞிஅவன் இடுப்பை செல்லமாக சீண்ட "த்தா பேசிட்டு இருக்கேன்ல சும்மா வாடி" என்று தேன்பாயும் சென்னை தமிழில் காதல் புரிய அரம்பித்தான். (மேற்கண்ட வாக்கியங்களில் ஓ என்னும் ஒலி சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்). 


அரங்கில் மயான அமைதி நிலவிய நேரம் " எப்பா பயத்துல யாரும் பக்கதுல இருக்கவங்க கைய தடவாதீங்க" என்று ஒருவன் நேரடி வர்ணனை புரிய அதில் எந்தவிதமான இரட்டை அர்த்தமும் இல்லாததால் வெகுவாக ரசித்தேன். திருவான்மியூர் எஸ் டூ திரையரங்கம் காதலர்களாக வந்த பெண்கள் சுடிதாரிலும், அப்பா அம்மாவோடு வந்த பெண்கள் டைட் டீஷர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ்ஸிலும் வந்தது குறித்து வியப்பின் எல்லை வரை சென்று வந்தேன் "ஒரு வேள டிரண்டு மாறிடிசோ".    

"தயவு செய்து படத்தின் கதையை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள், கிளைமாக்ஸ் என்ன என்பதையும் சொல்லி விடாதீர்கள்" இப்படி தான் அதே கண்கள் படத்தின் டைட்டில் கார்டு ஆரம்பமாகும் என்று எனது சித்தப்பா சொன்னார், நேற்று முகபுத்தாக நண்பர் ஒருவர் கூட அடுத்த அதே கண்கள் என்று தான் சொன்னார், என் கெட்ட நேரம் சிறுவயதில் நான் டியூஷன் முடித்து வரும் பொழுது வீட்டில் அதே கண்கள் கிளைமாக்ஸ் தான் ஒட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ அதில் தவற விட்ட அனுபவத்தை இதில் மீட்டெடுத்து விட்டேன் என்ற ஆனந்தம் உள்ளது.


படம் பார்த்த பின் முகப் புத்தகத்தில் எனது அண்ணன் பதிந்த ஸ்டேடஸ்       

"எல்லோருக்கும் ஒரு மொமென்ட் வரும், அவ நம்பிக்கையநம்பிக்கை யா மாத்துற மொமென்ட்,your moment is waiting".

Ya i got that moment after watching 'PIZZA', A wonderful horror movie of my life time. Just gone to the movie with out any expectation but had very thrilling experience!!!! My best cinema of the year!!


62 comments:

 1. நமக்கு பிடிச்ச எல்லாரையும் தம்பி கிண்டல் பண்ணியே எழுதுதே ! முதல்லே அனுஷ்கா இப்போ ரம்யா. ஏன் தம்பி? ஏன்?

  படத்தை பாக்க சொன்னா, அம்மோவோடு வந்த பெண்களையும் காதலரோடு வந்த பெண்களையும் பாத்துக்கிட்டு உட்காருகிரீர் ! எல்லாம் ப்ளாகில் எழுத விஷயம் கிடைக்குமா என்ற ஆர்வம் தான் !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ராமைய நல்ல இருகாங்க சார்... இருந்தாலும் இந்த படத்துல டூயட் பாரின் சாங் எதுவும் இல்ல அதுனால நமக்கும் எதுவும் தெரியல

   Delete
 2. பார்க்க வேண்டும் (நாளை)...

  படத்தை தவிர மற்ற விமர்சனத்திற்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரம் பாருங்க சார்

   Delete
 3. வணக்கம் சீனு ...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராசா உங்கள தான் எதிர் பார்த்துட்டு இருந்தேன்

   Delete
 4. இருபத்தி ஐந்து வயது நிரம்பிய "அழகிய" பாப்பாவின் கையில் இருந்த ஐந்து வயது பாப்பாவை பார்த்து கேட்ட கேள்வி " பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா" //

  அந்த பாப்பாவுக்கு வயசு எல்லாம் சரியா சொல்லி இருக்கிங்களே, அந்த கட்டிளங்காளை போராடும் திடமான மனிதர்தானோ? சும்மா டவுட்டு

  ReplyDelete
  Replies
  1. யோவ் இதுல ஹின்ட் வேற.. அசிங்கப் படுத்துறதுன்னு முடிவு பண்ணியாச்சு அப்புறம் என்ன திடமான பதிவர் திடமில்லாத பதிவர்ன்னு

   Delete
 5. எனக்குப் பிடிக்காத ஒரு வஸ்து பீட்சா, "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். //

  எனக்கும் புடிக்காத வஸ்து .. அப்புறம் அண்ணன் மெட்ராஸ் எனக்கு மட்டும் சொல்லி கொடுக்க மாட்டேங்குறார் .

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் மெட்ராஸ் நம்ம எல்லாருக்கும் தான் அவரு பதிவுல சொல்லிக் கொடுத்தாரு, ஒழுங்கா படிக்கணும், அங்கயும் போய் பிட் அடிச்சா சங்கம் என்ன பண்ணும்

   Delete
 6. ரம்யா நம்பீசன் அடுத்த ரவுண்டு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதில் ஒரு ரவுண்டை குறைக்க முயல வேண்டும்.//

  வழு வழு முகத்தில் கொஞ்சம் கொழுப்ப குறைச்சா அம்மணி அம்சம் தான் .. என்ன அந்த காதல் காட்சிகள் சில இடங்களில் பிடிக்கவில்லை ... படத்தில் துண்டா அது மட்டும் தெரியுற மாதிரி ஒரு உணர்வு ,..

  ReplyDelete
  Replies
  1. படத்தில் ஒட்டவில்லை ராசா அவர்களே ஆனால் மனதில் ஒட்டிக் கொண்டதே

   Delete
 7. அவன் கைகளுக்குள் தான் கையை விட்டு மாற்றான் ஆகியிருந்த நவநாகரீக இளைஞிஅவன் இடுப்பை செல்லமாக சீண்ட "த்தா பேசிட்டு இருக்கேன்ல சும்மா வாடி" என்று தேன்பாயும் சென்னை தமிழில் காதல் புரிய அரம்பித்தான்.//

  அரங்கை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் விவரித்த விதம் காட்சிகள் கண்ணுக்குள் நீள்கிறது மிஸ்டர் சீனு ...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்த அண்ணன் ராசா அவர்களுக்கு மிக்க நன்றி

   Delete
 8. (மேற்கண்ட வாக்கியங்களில் ஓ என்னும் ஒலி சென்சார் செய்யப்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்). //

  இப்படி எல்லாம் சொன்னா நல்ல புள்ளை என்று நம்பனுமா ? ஹாரி மச்சி வந்து சொல்லுவார் .

  ReplyDelete
  Replies
  1. யோவ் நா இப்போ நல்ல புள்ளைன்னு சொன்னேனா... என்ன மாதிரி நல்லவன் எங்கயும் இல்லன்னு தான சொன்னேன்

   Delete
 9. திருவான்மியூர் எஸ் டூ திரையரங்கம் காதலர்களாக வந்த பெண்கள் சுடிதாரிலும், அப்பா அம்மாவோடு வந்த பெண்கள் டைட் டீஷர்ட் மற்றும் ஸ்லீவ் லெஸ்ஸிலும் வந்தது குறித்து வியப்பின் எல்லை வரை சென்று வந்தேன் "ஒரு வேள டிரண்டு மாறிடிசோ". //

  நவ நாகரிக கலாசாரம் பரப்பும் கண்மணிகளை குறை கூறுவது தவறு ... அவர்களை மட்டுமல்ல அவர்களை பெற்றவர்களையும் மிதிக்க ஸாரி நல்லா மதிக்கணும் ...

  ReplyDelete
  Replies
  1. நாளா மிதிங்கன்னே ... நீங்க மிதிச்ச நாம உலகமே திருந்திரும்

   Delete
 10. அண்ணனோட ஸ்டேடஸ் நச் ..

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் இத கண்டிப்பா படிச்சிருப்பன்...

   Delete
 11. அலுவலகம் சென்று வந்து பதில் கூறுகிறேன் திரு ராசா அவர்களே

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எங்கு சென்று வந்தாலும் பதில் கூற மாட்டிர்கள்.. தாங்கள் தான் பிரபல பதிவர் ஆயிற்றே

   Delete
  2. என் அறிவுக் கண்ணா தொறந்து, நா பிரபலம் இல்ல எல்லாருக்கும் பதில் எழுதும் ஒரு அப்பாவி பதிவான்னு நிரூபிக்க வச்ச நண்பன் ஹாரிக்கு சங்கம் சார்பில் நான் தலை வணங்குகிறேன்

   Delete
 12. அந்தப் பையன் யாருங்கிறது தான் எனக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு #ஹாலிவுட்மைன்ட்வாய்ஸ் :)

  ReplyDelete
  Replies
  1. யோவ் இப்ப இங்க அது முக்கியமா.. சத்தியமா நான் இல்ல நம்புங்கா ஹாலி

   Delete
 13. //My best cinema of the year!!//
  இந்த லைன் அவசியமா? ஏன் தியேட்டரில் படம் பார்க்க வழியில்லாத நம் போன்ற அப்பாவிகளின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ற மச்சி??

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஹாய் ஜாலி ஜாலி

   Delete
 14. பார்க்கலாம்னு சொல்றீங்க... ஆனா இங்க தில்லியில் எந்த தியேட்டர்லயும் வெளியிடவில்லை! திருட்டு டிவிடி பார்க்கதில் எனக்கு இஷ்டமில்லை!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்க சார்... அப்படி பார்க்க வழி இலாட்ட வீட்டில நல்ல சவுண்ட கூட்டி விட்டு பாருங்க

   Delete
 15. Pitza--- thambi neenga padatha pathatha vida pakathula ullavangala pathathathu than athigam pola.......... nice comment........ from two genius.....awaiting to watch...........

  ReplyDelete
  Replies
  1. எண்ணப் போயி ஜீனியஸ் ன்னு சொல்ற பார்த்து நாளைக்கி உலகம் அழிஞ்சாலும் அதுக்கு நா பொறுப்பு இல்ல

   Delete
 16. ரம்யா நம்பீசன் ரவுண்டு கமெண்ட் ரசிக்க வைத்தது! படம் நன்றாக இருப்பதாகத்தான் 'நானும் 'ஆங்காங்கே'
  கேள்விப்பட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார் நீங்க கண்டிப்பா பாருங்க

   Delete
 17. " "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். "

  " வேகப்பம் "என்று கூறுகின்றனர்

  ஒரு தொலைகாட்சியில்

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா எத எத தமிழ் படுதனும்ன்னு விவச்த இல்லாம போச்சு சார்

   Delete
 18. ரம்யா நம்பீசன் அடுத்த ரவுண்டு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதில் ஒரு ரவுண்டை குறைக்க முயல வேண்டும்.

  ha...ha

  ReplyDelete
 19. திரை விமர்சனம் என்று நினைத்தேன். "திரை"யுடன் கூடிய விமர்சனம் அருமை தொடருங்கள் நண்பா!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமான கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

   Delete
 20. ஆமா பாஸ் ....
  எல்லா இடமுமே பீட்சா கடையாப் போச்சு பார்த்திட வேண்டியதுதான்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக பாருங்க நண்பா

   Delete
 21. இருபத்தி ஐந்து வயது நிரம்பிய "அழகிய" பாப்பாவின் கையில் இருந்த ஐந்து வயது பாப்பாவை பார்த்து கேட்ட கேள்வி " பாப்பா நீ படத்த பாத்து பயப்படலியா பாப்பா"
  /////////////////////////////////

  இவடத்தில் மீண்டும் மீண்டும் சிந்தித்தேன்..........

  ReplyDelete
  Replies
  1. அந்த அளவுக்கு புரியாத மாதிரியா எழுதி இருக்கேன்

   Delete
 22. // "எனக்கு இன்னும் டவுட்டாவே இருக்கு, அவன் எந்த பாப்பாவ பார்த்து இந்தக் கேள்வியக் கேட்டான்" சீனு'ஸ் மைன்ட் வாய்ஸ். //

  அஞ்சு வயசு கொழந்தயை பெத்த ஆண்ட்டியை சைட் அடிச்சிட்டு லவுட்ட பாரு...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா சும்மா ல்லுல்லுவாயிக்கு

   Delete
 23. // "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். //

  தாங்கள் மெட்ராஸ் பவனாருடைய தொண்டனார் என்பதால் இவ்வளவு விசுவாசம் ஆகாது...

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் மெட்ராஸ் வாழ்க

   Delete
 24. // தற்செயலாக ஊழியர் ஒருவரிடம் கேட்டு வைத்திருந்தேன் எப்போ படம் முடியும் என்று //

  அவ்வளவு சிரமமெல்லாம் படவேண்டியது இல்லை... திரையரங்க வாயிலில் சென்சார் சர்டிபிகேட் ஒட்டியிருப்பார்கள்... அதிலேயே படத்துடைய நீளம் நிமிடங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும்... அடுத்த முறையில் இருந்து முயற்சிக்கவும்...

  ReplyDelete
 25. இன்னைக்கும் சனாதிபதி பந்து வீச்சா?

  சீனு தம்பி படத்துக்குப் போனா படத்த பாக்காம பாப்பாவை பாத்தும்,சென்னை தமிழை மொழி பெயர்த்தும் கடுப்படிக்காத....

  இந்த பாப்பா மேட்டரெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க..இல்லைனா எதாவது பாப்பாத்தா(லைக் ஜின்னாத்தா)கேஸ் போட வாய்ப்புள்ளது....சங்கம் இதற்க்கு எந்த விதத்திலும் உதவி செய்ய இயலாது.

  அப்புறமா, ஐடி துறையா பதிவுலகமா என்று சீனு முடிவெடுக்க முடியாத நிலையில் சிறைச்சாலை அரவணைத்து கொண்டது என்று வரலாறு தனது பதிவில் பதியக்கூடும்....

  ReplyDelete
  Replies
  1. என்னே கடுபாவா இருக்கு...

   பார்துன்னே உங்களையும் சேர்த்து புடிச்சி போற்றப் போறாங்கா :-)

   Delete

 26. //Philosophy Prabhakaran24 October 2012 21:39
  // "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். //

  தாங்கள் மெட்ராஸ் பவனாருடைய தொண்டனார் என்பதால் இவ்வளவு விசுவாசம் ஆகாது...//


  அண்ணன் தம்பி ஒண்ணா இருந்தா பிடிக்காதே!! படுவா..!

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் மெட்ராஸ் மீண்டும் மீண்டும் வாழ்க

   Delete

 27. //Philosophy Prabhakaran24 October 2012 21:39
  // "வெண்ணை ரொட்டி" என்பது தான் முறையாகப் பதப் படுத்தப்படாத அந்த ரொட்டியின் தமிழ் பதம் என்று அண்ணன் மெட்ராஸ் அவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். //

  தாங்கள் மெட்ராஸ் பவனாருடைய தொண்டனார் என்பதால் இவ்வளவு விசுவாசம் ஆகாது...//  அண்ணன் தம்பி ஒண்ணா இருந்தா பிடிக்காதே!! படுவா..!

  ReplyDelete
 28. சரளமான எழுத்து. பார்க்கிற விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ற கலையில நீ தேர்ச்சியடைஞ்சிட்டே வர்றேங்கறதுக்கு இப்பதிவும் ஒரு உதாரணம். பீட்சா நான் இன்னும் சாப்பிடலை (பாக்கலை) தம்பி. சீக்கிரம் சாப்ட்டுடறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மிக்க நன்றி வாத்தியாரே... தேர்வில் பாஸ் ஆனது போல் ஒரு உணர்வு

   Delete
 29. // அண்ணன் தம்பி ஒண்ணா இருந்தா பிடிக்காதே!! படுவா..! //

  சிவகுமார் சார், நீங்களும் சீனுவும் என்ன சூர்யாவும் ஜோதிகாவுமா ?

  ReplyDelete
  Replies
  1. அண்ணே அது சூர்யாவும் கார்த்தியும் உங்களுக்கு மாத்ஸ் கொஞ்சம் வீக்ன்னு நினைக்கிறன் :-)

   Delete
 30. இனிய நற்வணக்கங்களுடன் சிவஹரி,

  தங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய: http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_26.html

  ReplyDelete
  Replies
  1. என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க மிக்க நன்றி சார்

   Delete
 31. மிக்க நன்றி சார் ... தெரிந்து மகிழ்ந்தேன்

  ReplyDelete
 32. yes, nalla padam. bayam kalantha viruviruppu, ana namba vechitangayya pei pei nu..

  ReplyDelete