25 Sep 2012

நைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே


மெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட்ஷிப்ட். 

ரவு பத்து மணியளவில் கம்பெனிக்குள் நுழையும் நேரம், மொத்த கம்பெனியும் தூக்கத்தைத் தேடி வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். பகலில் நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் ப்ரோஜெக்ட்டில் நைட்ஷிப்ட்டில் பத்து பேர் இருந்தால் அதுவே அதிசயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளுக்கொரு கணினியில் முகம் புதைத்து தங்கள் இருப்பை அமெரிக்கர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருப்பர். பதினோரு மணியளவில் ஆங்காங்கு இருக்கும் லவுட் ஸ்பீக்கரில் இருந்து மெல்லிய சங்கீதம் கசியத் தொடங்கும். ஸ்பீக்கரின் மொழயில் இருந்து அமர்ந்திருப்பவனின் தாய்மொழி தெலுங்கா ஹிந்தியா மலையாளமா என்று தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு ஸ்பீக்கரிலிருந்து தெலுங்கு ஹிந்தி தமிழ் என்று பல மொழிப்பாடல்கள் ஒலிபரப்பப் படுகிறதோ, உறுதியாகச் சொல்லலாம் அவன் தமிழன் என்று!

பொதுவாக நைட்ஷிப்ட்களில் வேலை அதிகம் இருக்காது. ஒருவேளை அன்றிரவு நாம் முழித்தவர் முகத்தின் ராசியைப் பொறுத்து ஐந்து பேருக்கான வேலையை தனியொருவன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனும், நைட் ஷிப்டிற்கு செல்லும் சூரனும் எதற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும். பனிரெண்டு மணி வரை ஒன்றுமே தெரியாது, அதற்க்கு மேல் கால தேவனுக்கும் ஓய்வு தேவைப்படும் போல், நகரவே மாட்டான். 

நிமிடங்கள் நகர நகர பசிக்கும் நமக்குமான சண்டை ஆரம்பமாகும். சரவணபவனை தவிர அனைத்து மலிவு விலை பணக்காரக் கடைகளும் தங்கள் கடையை சாத்தியிருப்பார்கள். சரவணபவனில் இட்லி தோசையை எதிர்பார்த்துச் சென்றால் சட்னியாகி வெளியே வரவேண்டியது தான். பானிபூரி, பேல்பூரி மட்டுமே கிடைக்கும். அவற்றைச் சாப்பிடாதே என்று மனசு சொல்லும். "அடேய் எதையாவது தின்னுத் தொலை" என்று வயிறு அடம் பிடிக்கும். வேறுவழியே இல்லாமல் அங்கு கிடைக்கும் மலிவு விலை காபியை வாங்கினால், பதினெட்டு ருபாய் மூன்றே உரிஞ்சல்களில் காலியாகி இருக்கும். காலியான டம்லரையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், சொத்தையே சரவணபவனுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற பிரமை ஏற்பட்டுவிடும். அப்படியோரு நிலைக்கெல்லாம் வந்துவிடக் கூடாது. காரணம் ஐந்து மணிக்கு சொத்தை எழுதிக் கொடுக்க மீண்டும் வந்து தான் ஆகவேண்டும். 

மெதுவாக நடக்க ஆரம்பித்தால், செக்யுரிட்டிகள் தமக்கான இடத்தில உட்கார்ந்துகொண்டு சாமியாடிக் கொண்டிருப்பார்கள். டாஞ்சூர் பொம்மை (தஞ்சாவூர் என்பதை டாஞ்சூர் என்று சொல்லாவிட்டால் நான் தமிழன் இல்லை) இவர்களிடம் தோற்றுவிடும். வலமும் இடமுமாக ஆடும் பொழுது புவிஈர்ப்பு விசை இவர்களை கீழ்நோக்கி இழுத்தாலும், தூக்கத்தில் கூட மீசையில் மண் ஒட்டி விடக்கூடாது என்ற பாதுகாப்பு விசை மேல்நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். இருந்தும் அதிகாலையில் கொட்டும் பனியில் இவர்களைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும். 

காப்பி குடித்துவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தால் பலரும் கண்ணை மூடி வானம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கண்காட்சிப் பொருள் போல் பார்த்துவிட்டு கணினியில் அமர்ந்தோமானால் ஒரு மணியில் இருந்து நான்கு மணி வருவதற்குள் நான்கு யுகங்கள் கடந்து இருக்கும். எவ்வளவு தான் அதிகமான வேலை பார்த்திருந்தாலும், வேலை பார்த்தது போலவே இருக்காது. நைட் ஷிப்டில் இருக்கும் ஒரே ஒரு நன்மை இது தான். எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. நைட் ஷிப்டிற்கு பழகி விட்டோமானால், மூளை வேலையை தவிர வேறு எதையும் யோசிக்காது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எளிதில் பிறக்கும்.

வ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், நான்கு மணி வந்தே தீரும். சாமி ஆடியே ஆக வேண்டும். சில சமயங்களில் மணியைப் பார்க்காமலே உற்சாகமாக வேலை பார்பதுண்டு, தப்பித்தவறி மணியை பார்த்துத் தொலைத்து, மணியும் நான்கைக் காட்டிவிட்டதென்றால் அவ்வளவு தான், புவி ஈர்ர்ப்பு விசை தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இந்த நேரங்களில் லவுட் ஸ்பீகர்கள் ம்யுட்டிற்கு சென்று இருக்கும். எதாவது ஒரு மூலையில் இருந்து மெல்லிய குறட்டை ஒலி பரவத் தொடங்கும். மணி ஐந்தைத் தொடும் பொழுது சாயா குடிக்கச் சென்று விட வேண்டும். இல்லை என்றால் "சாய்ந்து சாய்ந்து நான் தூங்கும் பொழுது அடடா" தான். அடுத்த நாள் ஷிப்டிற்கு வருபவன் வந்து மூஞ்சியில் தண்ணீர் தெளித்தால் மட்டுமே மயக்கம் கலையும்.

ம் சாரதியின் துணையுடன் வீட்டிற்கு வந்தால் ஒன்பது மணி வரை கட்டாயம் முழித்திருக்க வேண்டும். இல்லை என்றால் காலை மதியம் இரண்டு வேளை சாப்பாட்டையும் மறந்து, இரவு வேளை சாப்பாட்டை மட்டுமே சாப்பிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம். ஒன்பது மணிவரை வீட்டில் இருப்பவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டு, தூக்கத்தில் ஏதாவது உளறிக்கொண்டிருந்தால், வீட்டிலிருப்பவர்களுக்கு நல்ல டைம் பாஸ் ஆகும். வீட்டில் இருந்தால் கெஞ்சி கொஞ்சியாவது சாப்பிட வைத்துவிடுவார்கள்.

ண்பர்களுடன் ரூமில் இருப்பவர்கள் வாழ்விலோ நைட் ஷிப்ட் என்பது சற்றே கொடுமையான விஷயம். எது வேண்டுமானாலும் கடைக்குத் தான் செல்ல வேண்டும். அதற்க்கு வருத்தப்பட்டே உணவைத் தியாகம் செய்யும் பலரும் உண்டு, ஒரு காலத்தில் நான் உட்பட. விடுமுறை தின நைட் ஷிப்ட் இன்னும் கொடுமையானது. மொத்த நண்பர்கள் கூட்டம் ரூமில் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும். அதுவரை கேட்டிராத பிரபல பாடல்கள் அனைத்தையும் அன்றைக்குத் தான் அபூர்வமாகக் கேட்பது போல் ரசித்து சத்தமாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். அலறும் டிவி அடிதடி சண்டை, ஸ்ஸ்ஸப்பா எப்படிக் கண்ணைக் கட்டும்.

ப்படியே ஒருவழியாகத் தூங்கினாலும், நமது தொலைதூர அணைத்து நன்பேண்டாக்களுக்கும் அப்போது தான் நம் நியாபகம் வரும். " மச்சி நைட் ஷிப்ட்டா, பகல் நேரத்துல தூங்குறியே வெக்கமா இல்ல" இப்படியெல்லாம் பேசி, அன்பாக கடுப்பைக் கிளப்புவார்கள். நல்ல தூக்கத்திலிருந்து திடிரென்று முழிப்பு வந்தால், சர்வமும் வெளிச்சமயமாக இருக்கும். இதைத் தடுக்கவே நான்கு கர்சீப் ஐந்து போர்வை தேவைபடும். கரண்ட் கட் புழுக்கம் என்று அரசும் தான் பங்கிற்கு கடுப்பைக் கிளப்பும். இவ்வளவு இன்னலுக்கு மத்தியிலும் தூங்கி எழுந்து மொபைலில் மணி பார்த்தால், மணி ஆறைத் தொட்டிருக்கும்.  அது காலை ஆறு இல்லை, மாலை ஆறு என்று மூளை மனதிடம் சொல்லும் பொழுது மனம் சோகமாக சொல்லும் "எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே,  நம்ம  தாய்குலமே".          

அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.


*************************

விளம்பரம் ஒன்று : 

எனது சகோதரி ஸ்ரீமதி அவளும் தன் பங்கிற்கு வலைபூ ஒன்று ஆரம்பிதுள்ளாள். மேடம் பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்லீஷ் நாட்டில் என்பதால் ஆங்கிலத்தில் தான் வலைபூ எழுதுவார்களாம். நாம் தமிழ் பிரபலங்கள் ஆக நினைத்தால், அவளோ உலக மகா பிரபலம் ஆக நினைக்கிறாள். நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த ஆங்கில வலைப்பூ பற்றிய அறிமுகமும் தகவல்களும், ஆங்கில வலைப்பூவை பிரபலப்படுத்தும் வழிகளும் அவளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சத்தியமா எனக்குத் தெரியாது.   

விளம்பரம் இரண்டு :


விளம்பரம் மூன்று : 

எனது வலைப்பூவில் விளம்பரம் என்பது புதிய பகுதி. இங்கே செலவில்லாமல் விளம்பரம் செய்து தரப்படும். இனி என் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் விளம்பரம் தொடரும். எனக்குப் பிடித்த பதிவு பற்றிய விளம்பரங்கள் இங்கே தவறாது இடம்பெறும்.  
      

நைட்ஷிப்ட் பற்றிய எனது பதிவிற்கான உங்கள் கருத்துக்களை தவறாது சொல்லிச் செல்லுங்கள். 
75 comments:

 1. //எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே //

  அப்ப எங்ககிட்ட சொல்லலையா? சரி வரேன்...

  :D

  ReplyDelete
  Replies
  1. தலைவா எனக்கு வராதே நாலு கமெண்ட்டு அதையும் வர விடமா பண்ணிருவீங்க போலையே...

   உங்களைப் போன்ற தந்தைக் குலத்திற்காக அடுத்த பதிவை எழுதுகிறேன் :-) #எப்புடி

   Delete
  2. //உங்களைப் போன்ற தந்தைக் குலத்திற்காக அடுத்த பதிவை எழுதுகிறேன் //

   ஓ! அடுத்த பதிவு தந்தை குலத்திற்கா? எங்களுக்கில்லையா? சரி வரேன்...

   :D

   Delete
  3. //Abdul Basith//

   சரியா சொன்னிங்க குழந்தைகள பார்த்து இப்படி சொல்லலாமா சீனு ?

   Delete
  4. //Abdul Basith//

   // ஓ! அடுத்த பதிவு தந்தை குலத்திற்கா? எங்களுக்கில்லையா? // என்னே ஏன் ஏன் இப்படி....!
   மனப்பாடம் செய்ய வேண்டிய கருத்துக்கள் மனபாடம் செய்துகொள்கிறேன்

   Delete
  5. அய்யா பெரியவரே நீங்க குழந்தையா... எனது அவதானிப்பின் படி தங்களுக்கு வயது ஒரு நூற்றி அறுபதைத் தாண்டி இருக்குமா

   Delete
  6. >>>பெரியவரே<<<

   பதிமூன்றே வயது நிரம்பிய பாலகரை இந்த அளவிற்கு நீங்கள் நிந்தை செய்ததை வன்மையாக கண்ணடிக்கிறேன்..ச்சே..கண்டிக்கிறேன்! மரியாதையாக இந்த வார்த்தையை நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளாவிட்டால், உங்களை கண்டித்து நாளை முதல் தினமும் குளிக்கும் அறப்போராட்டத்தை நானும் ஹாரியும் துவக்குவதாக உத்தேசித்துள்ளோம்! நன்றி!

   Delete
  7. @வரலாற்று சுவடுகள்

   அன்பின் வரலாற்று சுவடுகள் அவர்களுக்கு,

   தாங்கள் என் மீது வைத்திருக்கும் அளவிலாத அன்பின் வெளிப்பாடாகவே தங்களின் பதிலை பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி! ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அறப்போராட்டமாக இருந்தாலும் அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அது மறப்போராட்டமாக மாறிவிடும்.

   நீங்கள் தினமும் குளிக்கும் போராட்டத்தை தொடங்கினால், பிறகு தண்ணீர் பஞ்சம் ஏற்படும். பிறகு கனிம நீர் விலையேற்றம் ஆகும்.

   ......................
   .......................
   ......................

   மேலும் எழுதுவதற்கு நேரம் இல்லாததால், மீதத்தை நீங்களே எழுதி, படித்துக் கொல்லுங்கள்!

   நன்றி!

   Delete
 2. "சாய்ந்து சாய்ந்து நான் தூங்கும் பொழுது அடடா" what a rhyming.... good flow..

  ReplyDelete
  Replies
  1. இங்க்லீஷ் ப்ளாக் வச்சிருந்தா இங்கிலீஷ் ல தான் கமெண்ட் போடணுமோ #டவுட்டு

   Delete
 3. பதிவில் சின்ன சின்னதாய் ரசனைகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கிறது. அது தான் சீனு டச்! பதிவை படிக்கும் போது எனக்கும் கொட்டாவி வந்துவிட்டது. ஆபிஸ் வந்தாலே தூக்கமும் சேர்ந்து வந்துவிடுகிறது.

  :) :) :)

  ReplyDelete
  Replies
  1. //பதிவை படிக்கும் போது எனக்கும் கொட்டாவி வந்துவிட்டது.//

   யுவர் ஹானர் எனது கட்சிகாரர் இந்த வார்த்தை மூலம் அவமான படுத்த பட்டு இருக்கிறார் என்பதை பகிரங்கமாக அறிவித்து கொள்கிறேன்

   Delete
  2. // பதிவில் சின்ன சின்னதாய் ரசனைகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கிறது. // அண்ணே நீங்க ரொம்ப நல்லவருன்னே... உங்கள மாதிரி கொயந்த மனசு யாருக்குமே வராதுன்னே :-))))

   Delete
  3. //பதிவை படிக்கும் போது எனக்கும் கொட்டாவி வந்துவிட்டது.// என்னை அவமானப் படுத்தியதற்காக நீங்கள் கூகுள கோர்ட்டில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்... இல்லையேல் வரலாறை விட்டு உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் மனபாடம் செய்யச் சொல்லுவோம்....

   ஹாரி தலைமையில் மனபாடம் செய்யும் போராட்டம் நடைபெறும் என்பதை இங்கேத் தாழ்மையுடன் பகிரங்கமாக அறிவித்துக் கொள்கிறேன் (வசன உதவி - அண்ணன் வரலாறு )

   Delete
  4. >>>வசன உதவி - அண்ணன் வரலாறு<<<

   மச்சி உன் நேர்மை எனக்கு ரொம்ப புட்சிருக்கு!

   Delete
 4. இந்தியர்கள் நைட் ஷிப்டில் படும் பாட்டை மிக அழகாக சொல்லிருகிரிர்கள்

  நன்றி,
  மலர்
  http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகமான கருத்திற்கும் நன்றி சார்

   Delete
 5. கொடுமை! இதில் இன்னொரு கொடுமை, உடம்பின் பயோ ரிதமும் கெட்டுப்போவது தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சார் அது என்னவோ உண்மை தான்.. இருந்தும் மாதத்தில் ஐந்து நாள் தான் என்பதால் மனசை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். எனது நண்பர்களுக்கு மாசம் முழுவதும் கூட நைட்ஷிப்ட் உண்டு

   Delete
 6. தம்பி நல்ல கட்டுரை. நைட் ஷிப்ட் பற்றி நம்ம சிவாவிடம் ஒரு பேட்டி எடுத்து நம் ப்ளாகில் போட்டிருந்தேன். படித்தீர்களா என அறியேன்

  உங்களை பொறுத்த வரை நீங்கள் செல்வது பெரும்பாலும் இங்கிலாந்து ஷிப்ட் என நினைக்கிறேன் (இதில் எழுதியதை வைத்தல்ல, நேரில் சொன்னதை வைத்து) இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தால் உடனே படுத்துட்டா காலை எட்டு அல்லது ஒன்பது வரை நன்கு தூங்கி எழலாம். ரெகுலர் ஷிப்ட் ஆளுங்களே பலர் ஒரு மணிக்கு தான் தூங்குறாங்க. வேலை முடிந்து வந்து அந்த நேரம் இணையத்தில் அமர்ந்தால் அம்புட்டு தான் !

  ReplyDelete
  Replies
  1. அந்த பெட்டி நான் அப்போவே படிச்சிட்டேன் சார்.. இப்போ கொஞ்ச நாள் முன்னாடி கூட அந்த லிங்க் ஷேர் பன்னிருந்தீங்க...
   நான் இருப்பது அமெரிக்கன் ப்ராஜெக்ட் தான் சார்...24/7 .

   //ரெகுலர் ஷிப்ட் ஆளுங்களே பலர் ஒரு மணிக்கு தான் தூங்குறாங்க. வேலை முடிந்து வந்து அந்த நேரம் இணையத்தில் அமர்ந்தால் அம்புட்டு தான் !// வேறு வழி இல்லை சார்... நான் எல்லாம் அந்த நேரத்தில் இணையத்தில் அமர்ந்தால் தான் உண்டு....

   அலுவலகத்தில் பணியைப் பற்றி சிந்திக்கத் தான் நேரம் இருக்கும்... கணினியின் முன்பு அமர்ந்து எதாவது சிந்தித்தால் அதுவே பதிவாக மாறும்.....

   Delete
 7. பீலிங்கை தாய்குலத்திட்டதான் காட்டணுமா....எங்ககிட்ட காட்டுனா ஆகாதா? மச்சி உனக்கு நாங்க தான் ஓட்டும் கமெண்ட்ஸ்ம் போட்டுக்கினுகீறோம்.....இதெல்லாம் கொஞ்சமாவது ஞாபகத்துல இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. //இதெல்லாம் கொஞ்சமாவது ஞாபகத்துல இருக்கா?// பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துக்கள் இவை.. இவற்றை நான் மனபாடம் செய்து வைத்துள்ளேன்.... எங்காவது மகளிர் அணி போராட்டம் நடை பெற்றால், அங்கு இந்த ஸ்க்ரீன் சாட் வைக்கப்படும் என்ற எனது கருத்துகளையும் சேர்த்து மனபாடம் செய்து கொள்ளுங்கள் ....

   Delete
 8. >>>புவிஈர்ப்பு விசை இவர்களை கீழ்நோக்கி இழுத்தாலும், தூக்கத்தில் கூட மீசையில் மண் ஒட்டி விடக்கூடாது என்ற பாதுகாப்பு விசை மேல்நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும்<<<

  அருமையான வார்த்தை பிரயோகம்! :)

  ReplyDelete
  Replies
  1. //அருமையான வார்த்தை பிரயோகம்! :)// அண்ணே ஆணுரிமை பற்றி முழுவதும் அறிந்து வைத்துள்ளீர்கள்... உங்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றால், அவர்களுக்கு எதிராக உங்களுடன் சேர்ந்து நான் போர்சட்டம் செய்வேன்...

   ஷ்ஷ்ஷப்பா ... முடியல

   Delete
 9. இரவுநேரப்பணி என்பது என்வரை இல்லாத ஒன்றே! ஆனால் அதில் வரும் துன்பங்கள் பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. //வரும் துன்பங்கள் பற்றி பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன்// ஆமாம் அய்யா..அனால் இப்போது பழகிவிட்டது... இன்னும் சில மாதங்களில் சித்திரமும் கைப்பழக்கம் தான்

   Delete
 10. இம்புட்டு கஷ்டத்துலயும் நீங்க பதிவு எழுதுவது தான் சிறப்பு சீனு ...

  ReplyDelete
  Replies
  1. //இம்புட்டு கஷ்டத்துலயும் நீங்க பதிவு எழுதுவது தான் சிறப்பு // அண்ணனுனுக்கு போரூர் பக்கத்துல்ல ஒரு கட் அவுட் பார்சல்....
   நீங்க தெய்வம்னே ... தெய்வம்

   Delete
  2. கட் அவுட் வைத்து பொது மக்களை இம்சிக்க வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து ..
   அதற்கு பதிலாக எனது வங்கி கணக்கில் நிதியை இணைத்து, பிரபல பதிவர் என்பதை நிருபித்து காட்டுங்கள் ...(நோ நோ பேட் வோர்ட்ஸ்)

   Delete
 11. பீலிங்கை தாய்குலத்திட்டதான் காட்டணுமா....எங்ககிட்ட காட்டுனா ஆகாதா? மச்சி உனக்கு நாங்க தான் ஓட்டும் கமெண்ட்ஸ்ம் போட்டுக்கினுகீறோம்.....இதெல்லாம் கொஞ்சமாவது ஞாபகத்துல இருக்கா?//

  நானும் வரலாற்று சுவடும் ஒரே இனம் போல ..
  சீயர்ஸ் மச்சி ...

  ReplyDelete
  Replies
  1. சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

   (அய்யய்யோ இதை யாரும் ஸ்க்ரீன் சாட் எடுத்துராம...இது அந்த சியர்ஸ் இல்லை..) :D :D

   Delete
  2. //சீயர்ஸ் மச்சி ...// அய்யகோ தைகுலதிர்க்கு எதிராக இவ்வளவு போராட்டமா... நெஞ்சு பொறுக்கவில்லையே... போராளிகள் யாருமே இங்கு இல்லையா.. இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க ஆள் இல்லையா

   //சியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...//

   உங்கள் பாடாவதி யர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சை மனபாடம் செய்து கொண்டேன்

   Delete
  3. தாய் குலங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாளை நடைபெற இருந்த ரயில் மறியல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க படுகிறது ... ( வசு மச்சி நம்ம டீ குடித்தாலும் சியர்ஸ் சொல்லிக்கொள்வோம் என்பதை மறந்து விட்டிர்கள் அதை இங்கு பதிந்து விடை பெறுகிறேன் .)

   Delete
 12. நைட் ஷிப்ட் பார்த்துட்டு வந்த அலுபுல நான் இப்போ தூங்க போறேன்... உங்க அலும்பு எல்லாத்துக்கும் வந்து கவனிச்சு

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ தப்பு நடந்து போச்சு மகா ராசனுங்களா :-) போட மறந்துட்டேன் ஹி ஹி ஹி

   Delete
  2. உங்கள் கம்மென்ட்கு நீங்களே பதில் அளித்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!

   Delete
 13. >>>
  சீனு said

  அய்யய்யோ தப்பு நடந்து போச்சு மகா ராசனுங்களா :-) போட மறந்துட்டேன் ஹி ஹி ஹி
  <<<

  ஆகச்சிறந்த கருத்துரை.. மனப்பாடம் செய்துகொண்டேன்! நன்றி! :D

  ReplyDelete
  Replies
  1. //ஆகச்சிறந்த கருத்துரை.. மனப்பாடம் செய்துகொண்டேன்! நன்றி! :// உங்கள் பல கருத்துக்களை மனபாடம் செய்து உள்ளேன்... வரலாறுக்கு ஒரு காலம் வந்தால் கணினிக்கு ஒரு காலம் வரும் :-)

   Delete
 14. நைட் ஷிப்ட் - மூன்று வருடம் அனுபவப்பட்டுள்ளேன்... "எல்லாம்" பழக்கமாகி விடும்...

  நண்பர்களின் இணைப்புகளுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. //நண்பர்களின் இணைப்புகளுக்கு நன்றி...// அவர்களையும் தொடர்வதற்கு ரொம்ப நன்றி சார்

   Delete
 15. இரவுப் பணியில் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் போல!! சீக்கிரம் பகல் பணிக்கு வர வாழ்த்துகள். இரவுக் கண் விழித்தல் நம் உடலின் பசி நேரங்களையே மாற்றி விடும்! மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.// உற்சாகம் அளிக்கும் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி சார்....

   //பகல் பணிக்கு வர வாழ்த்துகள்.// ஹா ஹா ஹா பழகிவிடும் சார்

   Delete
 16. அட... நகைச்சுவை எழுத வரலைன்னு சொல்லிட்டே மெல்லிய நகைச்சுவை இழையோட எழுதி அசத்திட்டியே சீனு... நைட் ஷிப்ட் அனுபவங்கள் உன் வயதில் நானும அனுபவித்ததுண்டு என்பதால் வரிக்கு வரி ஆமோதிக்கிறேன். அருமை.

  ReplyDelete
  Replies
  1. //நகைச்சுவை எழுத வரலைன்னு சொல்லிட்டே மெல்லிய நகைச்சுவை இழையோட எழுதி அசத்திட்டியே சீனு... // வாத்தியாரே எல்லாம் உங்கள் பதிவுகளை வாசிப்பதன் பலன் தான்... ஏதோ கொஞ்சம் முயற்சி செய்துள்ளேன்...

   மாணவனை தட்டிக் கொடுக்கும் வாத்தியாருக்கு நன்றிகள் பல

   Delete
 17. எனக்கும் என்னோட முதல் வேலையில நைட் ஷிப்ட் பார்த்த அனுபவம் இருக்கு சீனு. எங்க வேலையே எல்லோரும் துங்கின அப்புறம்
  தான் ஆரம்பிக்கும். ரிலையன்ஸ்க்கு வொர்க் பண்ணும் போது நைட் 12 மணியில இருந்தது காலையில 6 மணி வரைக்கும் தான் வேலையே. அப்ப தான் BTS/BSC ( செல் போன் டவர்)-ல கை வைக்க விடுவாங்க..ஏதாவது பிரச்னைனா அந்த ஆறு மணி நேரத்துல solve பண்ண வேணும். செம வேலை..உங்க பதிவு என்னோட பழைய ஞாபகங்களை மீட்டி விட்டுருச்சு..
  ரொம்ப நல்ல பதிவு... :)

  ReplyDelete
 18. நண்பா சில இடங்களில் நீ உபயோகித்த உவமானங்கள், உவமேயங்கள் நிஜமாகவே கலக்கல்.. உண்மையிலே அலுப்படிக்காத எழுத்து நடையாக உன்னுடையது பதிவு மாறி வருகிறது.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. //நீ உபயோகித்த உவமானங்கள், உவமேயங்கள் நிஜமாகவே கலக்கல்.// அடேயப்பா நீர் மிகப் பெரிய புலவரைய்யா.... சங்க காலத்தில் இருந்திருக்க வேண்டிய ஆள்.....

   //நடையாக உன்னுடையது பதிவு மாறி வருகிறது.. வாழ்த்துக்கள்..// ஹா ஹா ஹா நன்றி தலைவா

   Delete
 19. Replies
  1. வருக்கைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்

   Delete
 20. கணினித்துறை என்றால் தூக்கத்தை இழக்க பக்குவபடுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை. அமெரிக்காவில், உள்ளூர் நேரத்திலும் வேலை செய்து கொண்டு, இந்தியாவில் உள்ள குசும்பன்களுடன் (உங்களை இல்லை) அவர்களுடைய வேலை நேரத்தில் தொடர்பில் இருக்க இரவும் விழித்து இருந்து ஓய்வே இல்லாமல் வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் வீட்டிற்கு கிளம்பும் முன்னால் ஏதாவது நொண்டி சாக்கு சொல்லி இன்றைக்கு வேலை முடியவில்லை என்பார்கள்.

  அறுவை சிகிச்சை பிரிவில் பணி செய்யும் மருத்துவர்களை நினைத்து நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். பலமுறை சாப்பாடு தண்ணி இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் போராடி உயிரை காப்பாற்றும் வேலையோடு ஒப்பிட்டால் நம் வேலை ஒன்றும் கடினமில்லை.

  ReplyDelete
  Replies
  1. //16 மணி நேரம் போராடி உயிரை காப்பாற்றும் வேலையோடு ஒப்பிட்டால் நம் வேலை ஒன்றும் கடினமில்லை.// மிகச் சரியாக சொன்னீர்கள் சார்.... உயிரைப் பணயம் வைத்து வேலை பார்ப்பவர்களுடன் ஓப்பிட்டால்; நம் வேலை சாதாரணமானது தான்

   Delete
 21. இங்க வேலையே இல்ல ... நமக்கு நைட் ஷிப்ட் தான் கேடு ... ஆனாலும் ரொம்பக் கொடுமை தான் மச்சி ... நமக்கெல்லாம் நைட்டு 12-1 மணிக்கு பிறகு “சொன்னாலும் கேட்பதில்லை ... கண் இமையது” தான். அப்புறம் காலை 7 மணிக்குப் பிறகு தான் உலகம் இருக்கா அழிஞ்சிட்டுதான்னே தெரியவரும். :)

  அழகான காமெடி அங்கங்கே ... எக்ஸலன்ட் ரைட்டிங் நண்பா. ;)

  ReplyDelete
  Replies
  1. // காலை 7 மணிக்குப் பிறகு தான் உலகம் இருக்கா அழிஞ்சிட்டுதான்னே தெரியவரும். :)// ஹா ஹா ஹா நல்ல டைமிங் நண்பா ...வெகுவாக ரசித்தேன், இதை மனப்பாடம் செய்து கொள்கிறேன்

   Delete
 22. ஏன். பயறிசி மருத்தவரா, Resident Intern- ஆ Casualty, மற்றும் புள்ளை பெறுகிற ஆஸ்பத்திரி இங்கெல்லாம் நாங்க நூறாண்டுகளாக "இரவு 12 மணி நேர shift-இல் வேலை பார்த்த டாக்டர்கள்; இன்றும் பெண் நர்சுகள் குடும்பத்தை விட்டு விட்டு இதே மாதிரி இரவு 12 மணி நேர shift-இல் வேலை செய்கிறார்கள்.

  எப்பவாது இவர்களை மாதிரி கூவுனமா?

  அல்ப காசுக்குக்கு வேலை பார்த்த நாங்க எங்க?
  ஆயிரக்கணக்கான காசுக்கு வேலை பார்க்கும் இவர்கள் எங்கே?

  ReplyDelete
  Replies
  1. சத்தியமா சொல்றேன் உங்க மைன்ட் வாய்ஸ என்னால் கேட்ச் பண்ண முடியல... ஒருவேளை நீங்க குறிபிட்டது ஐ டி துறையினரைப் பற்றி என்றால், கீழ் கண்ட வரிகள் தான் அதற்க்கு விளக்கம்

   // எப்பவாது இவர்களை மாதிரி கூவுனமா?// கரைட்டு சார்.. ஆயிரக்கணக்கா சம்பளம் வாங்கும் ஐ டி துறையினர் எதையுமே பேசக்கூடாது. பேசினா கூவுற மாதிரி தான் இருக்கும்...

   ஐ டி துறையினர் வேலை வெட்டி பாக்காம ஆயிரக்க் கணக்குல சம்பளம் வாங்குறாங்க... இவங்களுக்கு சம்பளம் குடுக்றவன் ஏமாந்தவன், அதன் வேலை பாக்காம இருக்ரதுக்கு சம்பளம் குடுக்றான்....

   //ஏன். பயறிசி மருத்தவரா, Resident Intern- ஆ Casualty, மற்றும் புள்ளை பெறுகிற ஆஸ்பத்திரி இங்கெல்லாம் நாங்க நூறாண்டுகளாக "இரவு 12 மணி நேர shift-இல் வேலை பார்த்த டாக்டர்கள்; இன்றும் பெண் நர்சுகள் குடும்பத்தை விட்டு விட்டு இதே மாதிரி இரவு 12 மணி நேர shift-இல் வேலை செய்கிறார்கள்.//

   நீங்க மேல சொன்ன இவங்க தான் டாப்பு ஐ.டி எல்லாம் வேஸ்டு ... நாங்கல்லாம் பேசவே கூடாது, இல்ல இல்ல உங்க பாசைல கூவவே கூடாது.... :-)


   ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் :-)   Delete
 23. இரவுப் பணியின் கஷ்டங்களை நகைச்சுவையாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

  நான் இரவுக்காட்ச்சி பார்ப்பதற்குக் கூட கண் விழிப்பது கிடையாது!10 டு 5 தூக்கம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஒரு காலத்துல நான் கூட அப்படி தான் சார் இருந்தேன்.... வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி சார்

   Delete
 24. சீனு அண்ணா அனுபவ பதிவு ....night shift.... உங்கள் பதிவில் தூ(து)க்கம் தெரிகிறது.....

  உங்கள் பார்வைக்கு:
  http://tk.makkalsanthai.com/2012/09/internethistory424.html

  ReplyDelete
 25. என் வலைப்பூவில் தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா..சரி செய்து விடுகிறேன்

  ReplyDelete
 26. சரவண பவன் வெண் பொங்கல்ல மொத்தம் நாலு பருக்கைதான் இருக்கு. வாட் கொடுமை சரவணன்!!

  ReplyDelete
 27. //எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், நான்கு மணி வந்தே தீரும். சாமி ஆடியே ஆக வேண்டும்.//

  நானெல்லாம் ரெண்டு வருஷமா நைட் ஷிப்ட்ல தூங்காமயே வேலை செஞ்சிருக்கேன் சீனு. ரஸ்க் சாப்டுட்டே ரிஸ்க்கை சமாளிச்சோம்ல!!

  ReplyDelete
 28. யோவ்...அது என்ன....உன் சோகக்கதைய தாய்க்குலம் மட்டும்தான் கேக்கணுமா? படுவா!!

  ReplyDelete
 29. சீனு உங்கள் எழுத்து நடை டாப் கிளாஸ்...ரெண்டு தடவை படிச்சி ரசிச்சேன். ம்ம்ம்...நீங்களும் பிரபலப் பதிவராக ஆயிடீங்க....
  நைட் வீட்ல தூங்கிரதவிட நைட் ஷிப்ட் ல ஆபிஸ்ல தூங்கிற சுகம் இருக்கே...அப்பப்பா .. அனுபவிச்சி எழுதியிருக்கீங்க...

  ReplyDelete
 30. இவ்வ்வ்வ்ளோ எழுதுவியா சீனு..?

  அருமை,,

  ReplyDelete
 31. சாமக்கோடாங்கியும் நைட்ல வேலை பாக்கிற மாதிரி வேலையா பிபிஓ நைட் ஷிப்ட் வேலை.....ஓகே.ஓகே... :-)))

  ReplyDelete
 32. தங்களது எதார்த்தமான எழுத்து நடை ரசிக்க வைக்கிறது அண்ணா! ஆனால் சொன்ன விஷயம் வருத்தப்பட வைக்கிறது! இந்த மாதிரி நைட் ஷிஃப்ட் வேலை பண்றவங்களை பார்த்திருக்கேன் அண்ணா!! அதிக நாட்கள் இப்படியான வேலை இருந்தால் வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தொலைக்கப்படுமே என்பது எனது கருத்து!! ரொம்ப கஷ்டம்!

  ReplyDelete
 33. அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. விரல் தேர்ந்த சிறப்பான பதிவு சீனு,ரொம்ப நாளைக்கு அப்புறம் அனுபவிச்சு எழுதுன உன்னோட பதிவுகளில் சிறப்பான பதிவு.பழைய மாதிரி வார்த்தைகள் தூக்கத்திலேயும் துள்ளுது.மெட்ராஸ் பவன் பதிவு படித்தேன்.ஆட்டோ கட்டணம் மற்றும் சில இடங்களில் பணத்தை வாரி இறைக்கும் இடங்களில் உருவாகும் வித்தியாசம் என்னவோ உன்மைதான்.போராடும் குணத்தை பணம் குறைக்கிறது என்ற எண்ணத்தை குறைத்துள்ளது என்பது உண்மைதானே..உன் கஷ்டத்த நீ சொல்லிட்டே ராசா ...உன்னோட முக்கிய பிரச்சனையில் உன் கல்யாண கனவுகளும் அடங்கியுள்ளதாய் நினைக்கிறேன்.ஒரு வாய் காபிப் தண்ணியும் நண்பர்கள் இல்லா உறக்கங்களும் அமையலாம் இல்லையா?வீட்ல பேசணும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 35. சற்றே காலதாமதமாயினும் இந்த பதிவுடன் இரு பின் குறிப்புகளை சேர்க்க விரும்புகிறேன் .
  பின் குறிப்புகள் என்பதை விட பின் விளைவுகள் என்பதே பொருத்தமானது .
  1) தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நைட் ஷிபிட் முடிதவனுக்கு , ஆறாவது நாள் இரவு பகலாகிவிடும் . என்ன செய்தாலும் தூக்கம் வராது .

  2) 23 வயதில் பல தொந்தி கணபதிகள் உருவாக காரணமாக இருப்பதும் நைட் ஷிபிட் தான் .'தொப்பை ' என பலரும் வாடும் இந்த உருவமற்றதின் பிறப்புக்கு முக்கிய காரணம் .

  நண்பர்களே இந்த வலையில் சிக்காதீர் !
  சுகந்திரம் பெற்றும் அந்நியர்களிடம் சம்பளத்துக்காக கை கட்டி வாழ்வதை விட , தமிழன் என்ற திமிருடன் இந்தியனாக என்றும் வாழ்வதே சிறப்பு.

  ReplyDelete
 36. சற்றே காலதாமதமாயினும் இந்த பதிவுடன் இரு பின் குறிப்புகளை சேர்க்க விரும்புகிறேன் .
  பின் குறிப்புகள் என்பதை விட பின் விளைவுகள் என்பதே பொருத்தமானது .
  1) தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நைட் ஷிபிட் முடிதவனுக்கு , ஆறாவது நாள் இரவு பகலாகிவிடும் . என்ன செய்தாலும் தூக்கம் வராது .

  2) 23 வயதில் பல தொந்தி கணபதிகள் உருவாக காரணமாக இருப்பதும் நைட் ஷிபிட் தான் .'தொப்பை ' என பலரும் வாடும் இந்த உருவமற்றதின் பிறப்புக்கு முக்கிய காரணம் .

  நண்பர்களே இந்த வலையில் சிக்காதீர் !
  சுகந்திரம் பெற்றும் அந்நியர்களிடம் சம்பளத்துக்காக கை கட்டி வாழ்வதை விட , தமிழன் என்ற திமிருடன் இந்தியனாக என்றும் வாழ்வதே சிறப்பு.

  ReplyDelete
 37. வணக்கம்
  சீனு(அண்ணா)

  அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக் குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ சரியன கருத்து அண்ணா
  அருமையான கதை உண்மையில் திடங்கொண்டுதான் எழுதியுள்ளீர்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 38. நீங்களாவது நைட் ஷிப்ட் அழகா கம்ப்யூட்டர் முன்னாடி தூங்குவீங்க... நாங்கெல்லாம் கெமிகல் பிளான்ட். எஞ்சினியர் முன்னாடி தூங்க கூடாது. ஆனால் அவர் தூங்கலாம். நாங்க அவர் கண்ணுல படாம, தூரமா எங்கோ மோட்டார் பக்கத்துல இருக்கற படிகட்டுலதான் தூங்கனும்...!

  "சாய்ந்து சாய்ந்து நான் தூங்கும் பொழுது அடடா"...!!!

  ReplyDelete
 39. //நண்பர்களுடன் ரூமில் இருப்பவர்கள் வாழ்விலோ நைட் ஷிப்ட் என்பது சற்றே கொடுமையான விஷயம். எது வேண்டுமானாலும் கடைக்குத் தான் செல்ல வேண்டும். அதற்க்கு வருத்தப்பட்டே உணவைத் தியாகம் செய்யும் பலரும் உண்டு//
  factu factu factu.இந்த கோஷ்டில நானும் ஒருத்தனா இருந்தேன்

  //எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், நான்கு மணி வந்தே தீரும். சாமி ஆடியே ஆக வேண்டும். சில சமயங்களில் மணியைப் பார்க்காமலே உற்சாகமாக வேலை பார்பதுண்டு, தப்பித்தவறி மணியை பார்த்துத் தொலைத்து, மணியும் நான்கைக் காட்டிவிட்டதென்றால் அவ்வளவு தான், புவி ஈர்ர்ப்பு விசை தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.//
  அது ஒரு அலாரம்ணா!! 3 மணிக்கே ஸ்டார்ட் ஆகிடும்.4 மணிக்கு வேலைய காட்டிடும்.

  ReplyDelete
 40. தம்பி, நைட்ஷிப்ட்டை விட சோகமயமானது , கல்யாணமானவனின் நிலைமை. உங்களுக்குத் தான் கல்யாணமாகிவிட்டதே, இனியும் சின்னச்சின்ன சோகங்களைப் பற்றியே எழுதினால் 'அவங்க' என்ன நெனப்பாங்க ? பாத்து நடந்துக்குங்க.

  ReplyDelete