28 Aug 2012

பதிவர் சந்திப்பு - எனது முதல் பார்வை


தற்கு மேலும் பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதாமல் இருந்தேன் என்றால் பதிவு எழுதும் நல்லுலகம் என்னை மறந்துவிடும் வாய்ப்பு அதிகம். இப்பதிவு ஒரு முறையான கோர்வையான பதிவாக இருக்காது. இதை எழுதும் பொழுது என் மனத்தில் தோன்றிய சம்பவங்களின் கோர்வையாக மட்டுமே இருக்கும். அதனால் விதை விருட்சமானது பற்றி கூறப் போவது இல்லை.விருட்சம் எவ்வாறு கம்பீரமாக எழுந்து நிற்கிறது என்பதைப் பற்றி மட்டுமே பதியப் போகிறேன்.

எனது அறிமுகம் (மேடையில் நான் பேசியது. பதிவின் நீளம் கருதி சென்சாருடன்)  


பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல பதிவர்களில் நானும் ஒருவன். திடங்கொண்டு போராடு என்னும் தலைப்பில் எழுதி வருகிறேன். 

தேம்பி அழும் குழந்தை நொண்டி - நீ  
திடங்கொண்டு போராடு பாப்பா  

என்று பாரதி சொன்ன வரிகளை தலைப்பாக மாற்றிக் கொண்டேன். பெரிதினும் பெரிது கேள், ரௌத்திரம் பழகு போன்ற பாரதியின் தலைப்பை மற்ற நண்பர்கள் எடுத்துக் கொண்டதால் நான் திடங்கொண்டு போராடுகிறேன். சீரியசான விசயங்களைக்  நான் எழுதினால் சிரிப்பு கலந்த பதிவாகி விடுகிறது என்று கணேஷ் சார் சொல்லிச் சென்றார். சிரிப்பு தரும் விசயங்களை பற்றி நான் எழுதினேன் என்றால், ஏனோ தெரியவில்லை அப்பதிவு கூட  சீரியசான பதிவாக மாறிவிடுகிறது. 

நான் சொல்ல நினைத்து, மறந்த வேண்டாமென்று ஒதுக்கிய விஷயங்கள்

வெற்றிகரமான ஏற்பாட்டிற்க்கான நன்றிகள் பற்றி பலருக்குக் கூற நினைத்தேன், ஆனால் பேச்சின் நேரமும் நீளமும் கருதி கூற வில்லை. மாதம் ஒரு சந்திப்பு அந்தந்த ஊர்களில் நடத்த ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொள்ள நினைத்தேன் மறந்துவிட்டேன், ஆனால் சந்திப்பின் இறுதியில் இது பற்றி கலந்து ஆலோசித்தார்கள். மிக்க மகிழ்ச்சி. பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்த முயற்சி செய்யுங்கள். என்னைப் போன்றவர்களைப் பட்டைத் தீட்ட பயிற்சிப் பட்டறைகள் மிகவும் உதவிகரமாக இருக்கும். பதிவுலகில் மிகச்சிறந்த எழுத்தாளர்கள் எங்கும் பரவிக் கிடக்கிறார்கள். அவர்கள் வழிகாட்டுதல் மிகவும் உதவியாக இருக்கும். பட்டுக்கோட்டைப் பிரபாகர் அவர்கள் கூட பதிவுலகின் ஆளுமை பற்றி தனது பேச்சிலே தெரிவித்தார் அதன் தாக்கத்தை பிறிதோரு சமயம் கூறுகிறேன். "எழுத்து உன் உள்ளே ஊற வேண்டும் யாரும் பட்டை தீட்ட முடியாது" என்று கூறாதீர்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளர் எழுதினாலும் அவற்றைப் பிழை திருத்த, டெஸ்க் வொர்க் செய்ய பத்திரிக்கை அலுவலகங்களில் தனி குழு உண்டென்று கேள்விப்பட்டுளேன். பதிவர்களுக்கு என்று அப்படியெல்லாம் ஒரு குழு கிடையாது. இங்கே எப்போதுமே நமக்கு நாமே திட்டம் தான். அதனால் எனது எண்ணத்தை இங்கே இவ்விடத்தில் தெரியப்படுத்துகிறேன்.   


டுத்தது வரவேற்புக் குழுவை கவனித்துக் கொண்ட எனது நண்பர்கள். எங்களுக்குள் நன்றி தெரிவித்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. மிக்க நன்றி என்று எப்போதாவது கூறுவது கூட அப்படி ஒரு வார்த்தை இருப்பதை நியாபகப்படுத்திக் கொள்ளத்தான். நான்கு பேரை அழைத்திருந்தேன், உடல்நலக் குறைவு காரணமாக இரண்டுபேரால் வர இயலவில்லை. மொத்த பொறுப்பும் மீதமிருந்த இருவர் மேல் விழுந்தது. இருவரும் அதைக் கண்டு முகம் சுளிக்கவில்லை. அந்நேரத்தில் அவரகளுக்கு நான் அணு அளவு கூட உதவவில்லை. என் நிலை புரிந்து பதிவர்களின் பதிவேட்டை எவ்வித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்.இங்கே வரும் முன் கிண்டலாக அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்று தான் "மத்தியான சாப்பாடு போடுவாங்க தான?".

திய சாப்பாடு மிகவும் திருப்தியான சாப்பாடு. காலை நாங்கள் யாருமே சாப்பிடவில்லை. வரவேற்புக் குழு என்பதால் எங்கும் நகர இயலவில்லை. சரியான பசி.மதியம் அந்தக் குறை தீர்ந்த்தது. வெளுத்துக் கட்டினோம்.


சில சமயங்களில் புலவர் அய்யாவை நினைக்கும் பொழுது தான் வருத்தமாக இருந்தது. பதிவர் சந்திப்பிற்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் அய்யா கூறுவார் " நாலு மணி நேரத்துக்கு மேல உக்கார முடியல, முதுகு வலிக்குது, நீங்க பேசிவிட்டு கிளம்புங்க, நான் போயிடு வாரேன்". ஆனால் பதிவர் சந்திப்பு நாளிலோ முழுமையாக பத்து மணி நேரம் அய்யா இருந்த இடம் விட்டு நகர வில்லை. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் கூறிய அந்த வார்த்தைகள் வந்து சென்றது. பித்தன் அய்யா, கணக்காயர், வல்லிசிம்கன், லெட்சுமி அம்மா, ரேகா ராகவன், சீனா அய்யா இன்னும் பலர் முகம் சுளிக்காமல் இருந்த இடம் விட்டு நகராமல் விழாவுடன் ஒன்றிப் போயிருந்தனர்.       
         
தெரிந்த தெரிந்துகொண்ட நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை. முக்கிய பிரச்னை என்னிடம் கேமரா இல்லை. நண்பர்கள் யாரிடம் இருந்தும் வாங்கி வரவில்லை. சில தருணங்களில் சிலரிடம் "உங்க கூட சேர்த்து என்னையும் போட்டோ எடுங்க" என்று கூட கேட்டுவிட்டேன். யார் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று என் மனத்தில் பட்டதோ அவர்களிடம் மட்டுமே கேட்டேன். என்னுடைய டீம் லீடர் கார்த்திக் அவர் நண்பன் ஜெகதீஷ் இருவரும் சந்திப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்த பொழுது அருகில் யாருமே இல்லை. 


 மக்கள்சந்தை நிர்வாக இயக்குனர் அருண் சற்று தொலைவில் காமெராவுடன் நின்று கொண்டிருந்தார். அவரை கூப்பிடு என்று மனம் சொல்லியது, வேண்டாம் தவறாகக எடுத்துக் கொள்வர் என்று அறிவு தடுத்தது. இறுதியில் மனமே வென்றது. புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு, " கழுத்துல இவ்ளோ பெரிய காமெரா தொங்க விட்டு இருக்கேன். அதுக்கு வேலை வேண்டாமா, தப்பாலாம்  எடுத்துக்க மாட்டேன் சீனு" என்றார். அந்தப் பெருந்தன்மைப் பிடிதிருந்த்து. இருந்தும் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன் சீக்கிரம் ஒரு காமெரா வாங்க வேண்டுமென்று. இதற்காக என்று இல்லை சென்னையின் சாலை வலிகளையாவது படம் பிடிக்க உதவுமே. 

மேடையில் பதிவர் சந்திபிற்காக உழைத்தவர்களை அழைத்தார்கள். கீழ் இருந்து பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஆரம்பித்த பொழுது கேபிள் சங்கர் என்  தோளில்  கை போட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் எதற்கு என்னை அப்படி கிண்டலாக பார்த்தார் என்பது எனக்குத் தெரியும். இருந்தும் "ஏன் சார் என்னைய பாத்துட்டே இருக்கீங்க" என்றேன். " இல்லை நீ போட்டோக்கு எப்படி போஸ் குடுக்றேன்னு பாத்துட்டு இருந்தேன்" என்றார். நல்ல வேலை அதன் பின் மதுமதி பேச அவர் சிந்தனை திசை மாறியது. 


ன்னும் இன்னும் பல விஷயங்கள் எழுத வேண்டும். நிச்சயம் இது ஒரு சாதனைத் திருவிழா தான். மேம்போக்காகப் பார்த்தால் யாரோ நாலு பேர் உழைத்தது போலத் தெரியும், வருகை தந்து விழாவை சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் அதில் பங்கு உண்டு. நல்லதோ கேட்டதோ என்ன நடக்கிறது என்றாவது பார்க்க வந்த தோழமைகளே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. இதுவும் நமக்கு நாமே திட்டம் தான். அண்ணன் ஜெய் அவர்களை நான்கு வரிகளில் பாராட்ட மனமும் பதிவின் நீளமும் இடம் தரவில்லை. பதிவர்   சந்திப்பு பற்றி மேலும் பல சுவையான தகவல்களுடன் அடுத்த பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். அதற்கு முன் ஒரு சிறு வேண்டுகோள்.

மேலும் ஒரு சிறு வேண்டுகோள்

என் வலைப் பூவின் பெயர் திடங்கொண்டு போராடு. பலரும் திடம்கொண்டு போராடு என்று குறிப்பிடுகிறீர்கள். திடம்கொண்டு போராடு என்பதில் இருக்கும் எளிமையை விட திடங்கொண்டு போராடு என்பதில் இருக்கும் வலிமை மிக அழகாக உள்ளது. இதையும் மேடையில் சொல்லலாம் என்று நினைத்தேன். இங்கே கூறுவதே அதிகப்பிரசங்கித் தனம், இதை மேடையில் வேறு கூற வேண்டுமா என்று கூறாமல் விட்டுவிட்டேன். அண்ணன் மெட்ராஸ் பவன் என் வலைப்பூவின் பெயரை திடங்கொண்டு போராடு  என்றே குறிபிடுகிறார். அதனால் அவருக்கு ஒரு ஷொட்டு. 


75 comments:

 1. Replies
  1. வாங்கன்னே தங்களின் சூடான வருகைக்கு நன்றி

   Delete
 2. சரிங்க.. இனிமே ங்.. போட்டு படிக்கிறேங்க...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அறுவை சிகிச்சை நிபுணர் மயிலன் அவர்களே :-)

   Delete
 3. பதிவர் சந்திப்பை வழக்கம் போல தங்கள் எளிமையான நடையில் சொல்லிவிட்டீர்கள். ஒவ்வொருவரின் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை படிக்கும்போதும் "மிஸ் பண்ணிட்டோமே" என்ற வருத்தம் தான் அதிகரிக்கிறது. இறைவன் நாடினால் அடுத்த ஆண்டு சந்திப்பில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

  மேடையில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பா!

  உண்மையில் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. //பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை படிக்கும்போதும் "மிஸ் பண்ணிட்டோமே"//

   Yes yes

   //மேடையில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பா!//

   Yes yes

   //உண்மையில் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது.//

   Yes yes

   Hi hi

   உனோட ஸ்டைல கலக்கல் பதிவு

   Delete
  2. மிக்க நன்றி நண்பா... அடுத்து வரும் பதிவர் சந்திப்பை இப்போதே நாமெல்லாம் ஆவலோடு எதிர் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்... நிச்சயம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம் நண்பா....

   Delete
  3. ஹாரி : நீ எல்லாம் நல்லா வருவடா நல்ல வருவ

   Delete
  4. //உனோட ஸ்டைல கலக்கல் பதிவு //

   Yes yes

   Delete
 4. தொடருங்கள்...

  வாழ்த்துக்கள் சார்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டப் புயல் அவர்களே வருக வருக.. தங்களுக்கு இந்தப் பட்டதை மேடையில் அறிவிக்காமல் போனதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் :-)

   Delete
 5. திடங்கொண்டு போராடு ! ;))))

  பகிர்வுக்கு நன்றிகள்.

  vgk

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா... தங்களை எதிர்பார்த்தோம்... அடுத்த சந்திப்பில் எதிர்பார்க்கிறோம்

   Delete
 6. Replies
  1. உங்க கூட பேச முடியல சார்... விழ முடிஞ்சதும் உங்கள தேடினேன் நீங்க சிக்கல

   Delete
 7. வாழ்த்துக்கள் சார்... நன்றி...


  Ennoda blog ippa open aaguthaa paarunga seenu,

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் அவர்களே தங்கள் தளம் தற்போது திறக்கிறது... வருகைக்கு நன்றி சார்

   Delete
 8. பதிவர் பட்டறை நல்ல யோசனை தான். மூத்த பதிவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைத் துறையைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைக் கொண்டு நடத்தினால் அது புதிகாக எழுத நினைப்பர்களுக்கு உபயோகமாகவே இருக்கும்.
  மாதம் ஒவ்வொரு ஊரிலும் பதிவர் சந்திப்பு நடத்த கூறியது நல்ல யோசனைதான். இது போன்ற பதிவர் சந்திப்புகள் தனிமனித தாக்குதல்களைப் பெருமளவு குறைப்பதில் உதவும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. என் கருத்துடன் தாங்களும் ஒத்துப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்... நீங்கள் கூறியதும் மிகச் சரியே

   Delete

 9. பிரபல பதிவர்களைப் படிக்கும் பிற பல பதிவர்களில் நானும் ஒருவன்.
  /////////////////////////////

  இதிலேயே உங்கள் எளிமை தெரிகிறது நண்பா

  ReplyDelete
 10. இந்தப் பதிவு எனக்கு என்னுடைய மிகவும் விருப்பத்துக் குறிய ஒருவரை ஞாபகப் படுத்துகிறது ...அவரும் இப்படித்தான் ஒரு நிகழ்வினை நடாத்தி விட்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் நன்றி கூறுவார்....

  பொதுவாக இந்த பழக்கம் எம்மில் சிலருக்குத்தான் இருக்கிறது அதில் ஒருத்தராக உங்களைக் காண்பதில் மிக்க சந்தோஷம் நண்பா..

  பதிவுலக சாதனை நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விருபத்திற்குரிய நண்பரைப் போலவே நானும் செயல்படுவது குறித்து மகிழ்ச்சி நண்பா...உற்சாகமான கருத்துரைக்கு நன்றிகள் நண்பா

   Delete
 11. கேமரா வாங்குரியோ இல்லையோ( நம்ம ஆளுக கேமராவக் கூட தேத்திக்கலாம்), ஒரு நல்ல டார்ச் லைட் வாங்கி வண்டி முன்னாடி மாட்டிக்க. இருட்ல ஸ்பீடா வண்டி ஒட்ற ஆளு இருட்டுல போறதுக்கு உதவும் :).

  ”திடங்கொண்டு போராடு”

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி இப்போ வேகமா போறது இல்லன்னே... பதிவர் சந்திப்புக்கு கூட நான் எவ்ளோ மெதுவா வந்தேன் தெரியுமா.. வழி மாறி போயட்டேன்னே.. அதுக்கு அப்புறம் தான் புயலெனப் புறப்பட்டேன்... எஞ் சோகக் கதைனே அது...

   Delete
 12. எனக்கு உங்க ப்ளாக் எப்போவுமே "தல ப்ளாக்" தான் :) :)
  உங்க கூட நிறைய பேசணும் என்று நினைச்சு இருந்தேன். ஆனா முடியல.. :(:(

  ReplyDelete
  Replies
  1. தல என்னாலையும் உங்க கோடா பேச முடியல... நீங்க வந்தது ரொம்ப சந்தோசம்.... தமன்னாவ விட நீங்க கலர் ஜாஸ்தின்னு சந்திப்புல பேச்சு அடிபட்டது... உண்மையான்னே

   Delete
 13. ங்ங்ங்ங்! கொண்டு....

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா வாத்தியாரையா...வந்தனமையா

   Delete
 14. இந்த விழா வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் நீங்களும் உங்கள் நண்பர்களும் தான் உங்கள் உழைப்பிற்கு சல்யூட்.எங்கேயும் நகர முடியாது என்று தெரிந்தும் அந்த பொறுப்பை முன் வந்து ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி சீனு..வெற்றிகரமாக பதிவுலகில் வலம் வர வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. விழாவிற்கு முதுகு எழும்பே நீங்க தான்... இந்த தன்னடக்கம் தானே வேணாம்ன்றது

   Delete
 15. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்

   Delete
 16. தம்பி இத்தகைய விழாக்களில் தான் உங்களை போன்ற அற்புத மனிதர்களை அறிய முடிகிறது மிக மகிழ்ச்சி

  உங்கள் டீம் லீடருடன் படம் எடுக்க என்னிடம் கேட்டிருக்க கூடாதா? எத்தனை பேரை போட்டோ எடுத்தேன்? உங்களை எடுப்பதில் என்ன சிரமம்?

  நானும் காமிரா மிக தாமதமாக வாங்கினேன். பல நிகழ்வுகளை ( என் பெண் சிறு குழந்தையா இருந்த போது) தவற விட்டு விட்டேன். நல்ல காமிராவாக வாங்கவும்

  உங்க தலைப்பு பற்றி இறுதியில் சொன்னது அருமை

  ReplyDelete
  Replies
  1. சார் நல்லா யோசிச்சு பாருங்க... நீங்க நான் சிராஜ் எல்லாம் இருக்கது உங்க கிட்ட கேட்டு வாங்கின போட்டோ... காமெரா சீக்கிரம் வாங்கணும் சார்... நீங்கள் எடுத்த படங்கள் தான் மிகவும் உதவுகிறது... அதற்காக சிறப்பான நன்றிகள் சார்...

   Delete
 17. சரளமான எழுத்து நடையில் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டீர்கள் சீனு!

  <
  மதியம் சரியான பசி, வெளுத்து கட்டினோம்
  >

  நிறைய பேறு இலையில் சாப்பாடு கம்மியாக இருந்ததை புகைப்படங்களின் வாயிலாக பார்த்த போதே மைல்டா டவுட்டு ஆனேன் நண்பா ஹி ஹி ஹி!

  ReplyDelete
  Replies
  1. வரலாறு அவர்களே உமது வரலாற்றில் பிழை உள்ளது... நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே .. நான் சாப்பிடும் பொழுது ஸ்வீட் தீர்ந்து போனதும் குற்றம் குற்றமே... இதற்கான கண்டனத்தை உங்கள் மீது தெரிவித்துக் கொள்கிறேன்... விழாக் கமிட்டி மேல் எல்லாம் கண்டனம் சுமத்த முடியாது ஹி ஹி ஹி

   Delete
 18. எளிமையான பகிர்வு! அருமை!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
  http://thalirssb.blogspot.in/2012/08/6.html
  மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. நான் திடங்கொண்டு போராடுகிறேன்
   நீர் பேய் கொண்டு போராடுகிறீர்
   வந்து பார்கிறேன்

   Delete
 19. அனுபவங்கள் நன்றாகவே இருக்கு சீனு. தொடர்ந்து போராடுங்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஹாரிவூட் சாரி சாரி ஹாலிவூட் அவர்களே

   Delete
 20. அருமை! சுறுசுறுப்பாக எழுதுகிரீர்கள்! இன்றுதான் வருகிறேன் சார்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்களுக்கும் தங்கள் வருகைக்கும்

   Delete
 21. Abdul Basith sir/// உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! உங்கள் ப்லாக்கில்தான் நான் பதிவர் சந்திப்பின் லைவ் பார்க்க முடிந்தது!

  ReplyDelete
  Replies
  1. ஓ அந்த நன்றிகள் பிளாக்கர் நண்பனுக்கா...ஒரு நிமிடம் குழம்பி விட்டேன்

   Delete
  2. மிக்க மகிழ்ச்சி சகோ.!

   சார் என்று கூப்பிடும் அளவு நான் பெரியவன் இல்லை. பேர் சொல்லியே அழைக்கலாம் சகோ.!

   :D :D :D

   Delete
 22. திடங்கொண்டு போராடு !!!

  பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா

   Delete
 23. வணக்கம் சீனு...
  உங்களின் எளிமைதான் பதிவுக்கு சுவை கூட்டுது ...
  நன்றி ...

  ReplyDelete
  Replies
  1. அண்ணே உங்க வலிமையைப் பத்தி எழுதலாம்ன்னு இருக்கேன்... நீங்க என்ன நினைகறீங்க

   Delete
  2. எந்த வலிமை சீனு ...
   எதுவாக இருந்தாலும் தயங்காம எழுது ... வருவதை நான் பார்த்துக்கொள்கிறேன் ..

   Delete
 24. ஏம்ப்பா.. நான் சரியாதானே பேசுறேன்..?

  சீனு.. சீனு...

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி ஏன் இப்புடி ... நான் சரியாத் தானே பேசுறேன்

   Delete
 25. உன் புகைப்படம் அனுப்ப கொஞ்சம் தாமதம் ஆனதுக்கு இப்படி தம்பட்டம் அடிச்சிட்டியே... இப்பவே அனுப்பறேன்..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா இப்படி எல்லாம் செசா தான் நம்ம படம் நம்ம கைக்கு வருது....

   சார் உங்க குழுவோட புகைப் படம் எடுப்பதற்காக காத்திருந்தேன் வேறு வேறு தருணங்களில் வெவேறு விசயங்களில் பிசியாக இருந்தீர்கள்... நீங்களும் நானும் சந்தித்த பொழுது நம்மை படம் எடுப்பதற்கு ஒருவரும் இல்லை.... மீண்டுமொரு தருணத்தில் சந்திக்காமலா சென்று விடுவோம்......

   சீனிவாசன் அய்யா மற்றும் உங்களோடு எல்லாம் புகைப் படம் எடுத்துக் கொள்ள எவ்வளவோ முயன்றேன் இறுதி வரை சாத்தியப்படாமல் போயிற்று.....

   Delete
 26. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே,
  அடுத்த பதிவர் கூட்டத்தில் சந்திக்கலாம்...
  http://dohatalkies.blogspot.com/2012/08/one-flew-over-cuckoos-nest.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பா

   அங்கும் வருகிறேன்

   Delete
 27. சீக்கிரம் கேமிரா பிராப்தியஸ்து!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாக்கு பலித்தால் உங்களைத் தேடி வருகிறேன் படம் எடுப்பதற்கு

   Delete
 28. திடங்கொண்டு போராடும் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்!.//பிரபல பதிவர்..பிற பல பதிவர்// அருமை அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜயன் விழா இறுதியில் தங்களைத் தேடினேன்... மின்னல் வேகத்தில் பறந்து விட்டீர் போலும்

   Delete
 29. நல்ல பகிர்வு. திடங்கொண்டு போராடுன்னே போட்டுடறோம் சீனு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா நன்றி சார் ....

   Delete
 30. முன்னமே பதிவிட்டிருக்க வேண்டும்...இல்லை நான் பின்னதாக பதிவிட்டிருக்க வேண்டும்.என்னோட பதிவர் சந்திப்பு பதிவுகளில் சிறந்த பதிவுகளில் இந்த பதிவுக்கு சிறப்பிடம் தந்திருப்பேன்.புலவரை பற்றிய கவலை உனது மனிதாபிமானத்தையும்,உன் நண்பர்கள் உனக்கு உதவியது உன் நட்பையும்,அவர்களை இங்கு குறிப்பிட்டது உன் நல் நன்றி மாறா குணத்தையும் எதிரொலித்தது.சிறப்பான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா அந்தப் பதிவைப் படித்துவிட்டேன்.... அதை நீங்கள் முடித்த விதம் அருமை... சீரியஸ் பதிவுகளுக்கு நடுவில் அவ்வப்போது இப்படியும் இறங்கி விட்டீர் போலும்

   Delete
 31. என் வலைப்பூவில்:
  சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்)
  http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளம் திறக்க வில்லை... வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் இதே பிரச்னை தான் இருந்தது.. சரி செய்து விட்டார்... எப்படி என்று கேட்டு சொல்கிறேன்

   Delete
  2. காலை தமிழ்மணம் தளத்தில் பிரச்சனை இருந்தது. அதனால் தமிழ்மண ஓட்டுபட்டை உள்ள தளங்கள், அதிலும் குறிப்பாக பதிவின் மேலே வைத்திருக்கும் தள ங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்தது. ஒரு வேளை அது காரணமாக இருக்கலாம்.

   Delete
 32. அண்ணா என் கணினி யில் திறக்கிறதே.என்ன பிரச்சனை??

  மீண்டும் முயற்சி செய்து பாருங்கள் :சாதனை பதிவர்கள் (பதிவுலக சாதனையாளர்களின் அறிமுகம்)
  http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

  ReplyDelete
 33. இந்த பதிவர் சந்திப்பு பதிவுகளை படிக்கும் போதே எவ்வளவு சந்தோசமாய் இருக்கு அங்கு வந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் வர முடியாமல் போனது என்னுடைய துரதிஷ்ட நேரம்....சீனு எப்படி இருக்கீங்க கோபம் ஒன்றும் இல்லையே

  ReplyDelete
 34. சிறப்பான பகிர்வு சீனு. சென்ற வாரம் சென்னையில் இருந்தேன். நண்பர் கணேஷை மட்டுமே சந்திக்க முடிந்தது. வாய்ப்பினை தவறவிட்ட வலி இன்னும் இருக்கிறது நெஞ்சில்.

  அடுத்த வருகையின் போது டிஸ்கவரி பேலஸில் சந்திக்கலாம்னு நினைக்கிறேன்..

  உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சீனு.

  ReplyDelete
 35. //பித்தன் அய்யா, கணக்காயர், வல்லிசிம்கன், லெட்சுமி அம்மா, ரேகா ராகவன், சீனா அய்யா இன்னும் பலர் //

  இந்த லிஸ்டில் என் பெயர் வராமல் போச்சே ... i missed the boat!

  ReplyDelete
 36. திடங்கொண்டு போராடு சீனுக்கு வாழ்த்துக்கள்
  உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி

  ReplyDelete