12 Aug 2012

பதிவர் சந்திப்பு...விதை விருட்சமாகிறது...விருட்சம் லட்சமாகிறது...


திர்பாராத நேரத்தில் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதில் ஆச்சரியமில்லை, நடக்கும் நல்ல விஷயங்கள் அனைத்தும் ஒருங்கே, ஒரே இடத்தில நடைபெற இருப்பதை நினைத்தால் அதில் ஆச்சரியத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

பதிவர் சந்திப்பிற்கான விதை

பாலகணேஷ் சார், கவிஞர் மதுமதி, புலவர் ராமானுசம், சென்னைப் பித்தன் மற்றும் சகோதரி சசிகலா ஆகியோர் சந்தித்த மினி சந்திப்பின் தொடர்ச்சியாக, பல பதிவர்கள் "எங்களை விடுத்து ஒரு சந்திப்பா?" என்ற கேள்வியை இந்த ஐவர் கூட்டணியை நோக்கிக் கேட்கத் தவறவில்லை. விடை தேடி பயணம் தொடங்கியது. தற்செயலாக நடைபெற்ற இந்த ஐவர் சந்திப்பில்  இத்தனை பிரம்மாண்டமாய் நடைபெற இருக்கும் பதிவர் சந்திப்பிற்கான விதை பதியப்பட்டிருக்கும் என்பதை இவர்களே அறிந்திருக்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு. 

விதை விருட்சமாகிறது 

ளிமையான ஆனால் மறக்கமுடியாத சந்திப்பாக நடத்த திட்டமிட்டு களத்தில் இறங்கினார்கள். நாள் குறித்து, நடைபெறும் இடம் குறித்து, சிறப்பு விருந்தினரையும் அறிவித்த பின், இறுதிகட்ட பணிகளை ஆரம்பித்திருந்த நேரத்தில் தான் கவனித்தார்கள், விதை அவர்கள் அறியாமலேயே விருட்சமாக மாறியிருந்ததை. ஆம் பதிவர்கள் அனைவரும் உற்சாகமாய் களமிறங்க ஆரம்பித்தனர். சென்னை பதிவர் சந்திப்பு, தமிழக பதிவர் சந்திப்பாக மாறி பின் தமிழ்ப் பதிவர்கள் சந்திப்பாக மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் மாற்றிக்காட்ட தயாரானார்கள் தமிழ்ப் பதிவர்கள். 

சென்னையை மையமாக கொண்டு நடைபெற இருப்பதால், ஒவ்வொரு வார ஞாயிற்றுக் கிழமையும் இதற்கென்ன ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி ஆலோசிக்கத் தொடங்கினார்கள். தாங்கள் ஆலோசித்ததை உடனடியாக பதிவேற்றி சக பதிவர்களின் கருத்துக்களையும் கேட்கத் தொடங்கினர். ஏமாற்றம் அளிக்கவில்லை, அனைவரும் தொடர்ந்து தங்கள் கருத்துகளையும் (மாற்றுக் கருத்துக்கள் உட்பட) ஆலோசனைகளையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்திக் கொண்டே வந்தனர். தலைவர்களாய் புலவரும் பித்தனும்,  அமைச்சர்களாய்  கணேஷ் சாரும் மதுமதியும், சேனாதிபதிகளாய் மோகன்குமார், சவுந்தர், செந்தில் அரசன் இவர்களுடன் சகோதரி சசிகலாவும் இன்னும் பல பதிவுலக நண்பர்களும் இணைந்து அடுத்த கட்டங்களை நோக்கி பயணித்து வருகின்றனர். களப்பணி ஆற்ற முடியாதவர்கள், பதிவர் சந்திப்பு பற்றிய தமது எண்ணங்களை பதிவேற்றி கலைப் பணி புரிந்து வருகிறார்கள்.  

தென்றலின் கனவு என்னும் புத்தக வெளியீட்டு விழா அரங்கேற இருப்பது கூடுதல் சிறப்பு. ஆலோசனை செய்ய இடமளித்து உதவி வரும் டிஸ்கவரி புக் பேலஸ் அங்கே சிறியதொரு புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டிருப்பது தனிச்சிறப்பு. பதிவர்கள் முத்திரைப் பதிக்க இருக்கும் திருவிழாவிற்கான அழைப்பிதழில், தமிழ்ப் பதிவர்களுக்கென முத்திரை ஒன்றை வடித்து அழைப்பிதழை மெருகேற்றியிருக்கும் கணேஷ் சாரின் சிந்தனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  

விருட்சம் லட்சமாகிறது

மேற்கூறியவை பலவும் எதிர்பாராத ஒன்று. இந்த எதிர்பாராத ஒன்றுடன் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றும் நிகழ இருக்கிறது. திறமையை மேம்படுத்த எழுதும் பதிவர்களால் பல நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறதென்றால், அதை ஒருகிணைந்த  சிந்ததனையாக்கி இன்னும் மெருகேற்றித் தாருங்கள், உங்கள் சிந்தனைகளை  பல தளங்களில் கொண்டு சேர்க்கின்றோம், பதிவின் மூலம் பகுதி நேர வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறோம், பதிவர் சந்திப்பிற்கு வாருங்கள் முழுத் தகவல்களையும் தருகிறோம் என்று கூறி நம் வியப்பை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள் தொழிற்களம் மின் இதழைச்  நிர்வாகிகள்.

மக்கள் சந்தை மின்ஊடகம் மூலம் வர்த்தகம் செய்து வரும் இவர்கள், தங்களது தொழிற்களம் தளத்தில் ,பகுதிநேரமாகவோ,  முழுநேரமாகவோ நம்மை பதிவெழுத அழைக்கிறார்கள். தகுந்த சன்மானமும் தரத் தயாராக உள்ளார்கள். மேலும் பதிவர்களுக்காக இவர்கள் ஆரம்பித்திருக்கும் திரட்டியின் பெயர் தமிழ்ப் பதிவர்கள்GOOGLE Ad Sense சேவையை ஆங்கிலப் பதிவர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும் சம்பாதிக்கவும் முடியும். இந்த வருமானம் ஈட்டும் சேவையை தமிழ்ப் பதிவர்களும் பயன்படுத்தும் வகையில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள். 

வலைப்பூவில் உங்களுக்கு வரும் ஒவ்வொரு ஹிட்ஸ்களையும் வருமானமாக மாற்றும் வல்லமை உடைய தொழிநுட்பம் தான் இந்த Ad SenseAd Sense சேவை மூலம் வருமானம் ஈட்டும் வழிகளைப் பற்றிய உரையை மக்கள் சந்தை, தொழிற்களம், தமிழ்ப் பதிவர்கள் இணைய சேவையின் இயக்குனர் திரு சீனிவாசன் அவர்கள் நிகழ்த்த இருக்கிறார்கள். அனைத்து பதிவர்களுக்கும் மிக பயனுள்ள உரையாக சீனிவாசன் அவர்களின் உரை இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.     

உங்களில் யார் லட்சாதிபதி 

பதிவுலகம் நம்மை ஒருங்கிணைத்தாலும், நம்மில் பலரும் தனித்திறமை உடையவர்களாக மாறுபட்ட சிந்தனை உடையவர்களாகத் தான் வலம் வந்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு வரலாறு பிடிக்கும், சிலருக்கு அரசியல், இன்னும் சிலருக்கோ சினிமா, கவி பாடலாம், கதை எழுதலாம், சிரிக்க சிரிக்க நகைசுவைக்கலாம், அறிவியல் பாடம் எடுக்கலாம், இன்னும் இன்னும் என்று நம் தனித்துவம் விரிந்து கொண்டுதான் உள்ளது. இவை அனைத்திலும் எல்லாராலும் சிறந்து விளங்க முடியாது, எல்லாவற்றிலும் சிறந்தவன் ஒருவன் இல்லை என்றும் சொல்வதற்கில்லை. நம்மில் இருக்கும் நம் திறமைகளை, எழுத்தின் ஈர்ப்பை, பட்டை தீட்டிக் கொள்ள வாய்ப்பாக மக்கள்சந்தை.காம் நடத்த இருக்கும் போட்டி தான் நான் பதிவன், இதில் வெல்லும் பதிவர் நீங்களாக இருந்தால் சந்தேகமே இல்லை நீங்கள் தான் அந்த லட்சாதிபதி.

என்ன போட்டி?, அதன் விதிமுறைகள் என்ன? பரிசு ஒருவருக்கா பலருக்கா? இன்னும் இன்னும் நம்முள் கேள்விகள் ஓராயிரம் எழலாம், மக்கள்சந்தை நிறுவனர் சீனிவாசன் அவர்கள் முறைப்படி அறிவிக்கும் வரை நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும். அதருக்கு நீங்கள் பதிவர் சந்திபிற்க்கு கட்டாயம் வந்து தான் ஆக வேண்டும்.          


எட்டுத்திக்கும் தமிழ் பரவச் செய்வோம் என்றான் பாரதி
நண்பர்களே அதைத் தானே நாம் செய்து வருகிறோம் 

பதிவர் சந்திப்பு என்னும் விதை விருட்சமாகி, விருட்சம் லட்சங்களைத் தரப் போகிறது என்றால் அதில் நம் பங்களிப்பு இல்லாமல் நிறைவேற சாத்தியம் இல்லை. வாருங்கள் நமக்காக ஒருவிழா. பதிவர் சந்திப்புத் திருவிழா. 
42 comments:

 1. தம்பி எங்கே இருந்து இந்த லட்ச ரூபாய் போட்டியை கண்டு பிடித்தாய்?கூடவே இருந்து ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மாதிரி இருக்கு அவ்வளவு டிட்டேய்லா எழுதிருக்கே....உன்னோட கூடுதல் திறமையே அதுதான் அனுபவங்களை அப்படியே எழுதுவது..அன்பவிக்காததையும் அனுபவித்த மாதிரி எழுதுவது.வாழ்த்துக்கள்.பத்தோடு பதினொன்றாக இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா சூடான முதல் வருகைக்கும் சுவையான உங்கள் கருத்துக்கும்

   Delete
 2. //''நீங்கள் தான் அந்த லட்சாதிபதி.''//

  எங்கள விட்டுட்டு பயபுள்ளைங்க லட்சாதிபதி ஆகபோதுங்க

  ReplyDelete
  Replies
  1. ஹாரி உன் திறமைக்கு ஒரு சவால்... ம் கலக்குங்கள்

   Delete
 3. இதை பற்றிய நான் படிக்கும் இரண்டாம் பதிவு இது என்பதால் என்னை போன்ற புதுசுங்களுக்கு ஆர்வமட்டூம் பதிவு இது என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு ஆர்வமளித்தது குறித்து மகிழ்கிறேன் அண்ணா...இன்னும் பல தகவல்கள் கிடைத்ததும் பகிர்கிறேன்

   Delete
 4. The way you write very nice...keep it up

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ரொம்ப நன்றி.. உங்கள் உற்சாகம் அளிக்கும் கருத்துக்களால் மகிழ்ந்தேன்

   Delete
 5. சுவாரசியமான கட்டுரை - விழா சிறக்க வாழ்த்துக்கள்.
  சேனாதிபதிக்கும் தளபதிக்கும் என்ன வித்தியாசம்?

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை சார் சிறுவன் இழைத்த தவறை திருத்திக் கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றிகள்... அமைச்சர் என்று இருந்திருக்க வேண்டும்....

   தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

   Delete
 6. என்னை போல் அயல் மண்ணில் வசிப்பவர்கள் பங்கு பெற முடியாவிட்டாலும் கூட எங்கள் மனது உங்களுடனும் உங்கள் சந்திப்புடனும் தான் சுத்திக்கொண்டிருக்கிறது! எங்களை மறந்துவிட வேண்டாம் :)

  ReplyDelete
  Replies
  1. பதிவர் சந்திப்பில் வேண்டுஅனல் பங்கு கொள்ளாமல் இருபதற்கு நீங்கள் காரணம் சொல்லலாம் நண்பா... பதிவுப் போட்டியில் கலந்து கொள்ள தவறாதீர்கள்

   Delete
 7. உங்க அழைப்பே வர தூண்டுகிறது....

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருதுரையால் மகிழ்ந்தேன்.. முதல் வருகைக்கு மனம் நிறை நன்றி

   Delete
 8. nalla pakirvu!

  thalaivaa!

  naanum thozhirkaalathil ezhuthida virumpukiren....

  ReplyDelete
  Replies
  1. மிகச் சிறப்பு நண்பா... அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்... நிச்சயம் வாய்ப்பு வழங்க காத்திருகிறார்கள்

   Delete
 9. பதிவர் திருவிழா இப்பொழுதே களை கட்டத் தொடங்கிவிட்டது.இனிய அதிர்ச்சிகள் ஆரம்பமாகி விட்டது. பங்கு பெறுவோம்.அசத்துவோம்

  ReplyDelete
  Replies
  1. இனிய அதிர்சிகள் ஆகா அருமை... மிக்க நன்றி முரளி சார்

   Delete
 10. பிரம்மாண்டமான ஏற்பாடுகள். மினி புத்தகக் கண்காட்சி, புதிய இலச்சினை, இதோடு லட்ச ரூபாய் வேறா! ஆஹா...!

  ReplyDelete
  Replies
  1. தலைவா உங்களை எதிர்பார்த்து... நீர் வரப்போவது இல்லை என்பது போன்ற வதந்தி நிலவுகிறதே... அது வெறும் வதந்தியாக மட்டுமே இருக்கட்டும்...

   Delete
 11. அழைப்பு மிகவும் சிறப்பு...

  இன்னும் நிறைய இருக்கு நண்பா...

  வாழ்த்துக்கள்... நன்றி...(TM 1)

  ReplyDelete
  Replies
  1. ஆகா இன்னும் நிறையா இருக்கா.... அனைத்தையும் அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறோம் தனபாலன் சார்

   Delete
 12. தலைப்பும் அருமையான விளக்கப் பதிவும்
  ஆர்வத்தை அதிகரித்துப்போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமான தங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்...

   Delete
 13. தலைப்பும் அருமையான விளக்கப் பதிவும்
  ஆர்வத்தை அதிகரித்துப்போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே .

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நண்பரே... தங்களுக்கும் தங்கள் முதல் வருகைக்கும் நன்றி

   Delete
 15. அழகா சொல்லிடேங்க...கண்டிப்பா வர முயற்சி செய்கிறேன் நண்பா...

  ReplyDelete
 16. அழகான நடையில் பதிவர் சந்திப்பு பற்றிய தகவல். கலந்துக் கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது.

  ReplyDelete
 17. பதிவர் சந்திப்பு...விதை விருட்சமாகிறது...விருட்சம் லட்சமாகிறது...

  வாழ்த்துகள் !

  ReplyDelete
 18. அருமையாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் சீனு,,

  நன்றி!!

  திறமைசாளிகளுக்கு என்றும் அங்கீகாரம் அளிக்க காத்திருக்கிறோம்

  // எட்டுதிக்கும் தமிழ் பரவும் //

  ReplyDelete
 19. Adivanga poreenga oru naal....

  ReplyDelete
 20. சிறப்பான தகவல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. சிறப்பு சீனு..

  ReplyDelete
 22. வித்தியாசமான அதேநேரத்தில் ஆக்கப்பூர்வமான முயற்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. தங்களின் ஆர்வம் தங்கள் வரிகளில் மின்னுகிறது சிறப்பு சகோ.

  ReplyDelete
 24. மிகச் சிறப்பான பகிர்வு.உங்களைப் போன்ற சக பதிவர்களைச் சந்தித்துப் பேசும் அந்த நன்னாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 25. மிக அற்புதமாக இக்கட்டுரை எழுதி உள்ளீர்கள் சீனு வாழ்த்துகள்

  ReplyDelete
 26. பதிவு மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. சுவையான பல விடயங்களை உள்வாங்குகிறீர்கள் போல......
  பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 28. என்னைபோன்ற L.K.G.கே புரியும்படி அமைந்தவிதம் அருமை.

  ReplyDelete
 29. வணக்கம்
  என்னால் வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் வாங்களேன்

  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  ReplyDelete