26 Jul 2012

காமராஜரும் கதர்க்கடை ராமசாமியும்


வ்வாறு காமராஜருடன் நட்பாய் இருந்த அந்த கதர்கடை ராமசாமி என்பவர் யார் தெரியுமா! அவர் தான் என் தாத்தா, என்று தான் இந்தப் பதிவை முடிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் அவ்வாறு முடிப்பதில் இருக்கும் சுவாரசியத்தை விட இவ்வாறு தொடங்குவது சுவாரசியத்தை சற்றே அதிகமாக்கும் என்று கருதியதால் தொடர்கிறேன்.


ன் தாத்தா கதர்க்கடை வைத்திருந்த அதே இடத்தில் தான் எனது மாமாவும் மளிகைக் கடை வைத்திருந்தார். சிறுவயது முதல் எனது பெரும்பாலான நேரங்கள் அந்தக் கடையில் வியாபாரம் செய்வதில் தான் கழியும். வழக்கமாய் கடைக்கு வரும் ஒரு பெரியவர் சொல்லிய தகவலில் இருந்து தான் 'கதர்கடை ராமசாமி' பற்றிய என் தேடல் தொடங்கியது. அந்த மாலையில் நானும் எனது மாமாவும் கடையில் அமர்ந்திருந்த வேளையில் அந்தப் பெரியவர் வந்தார். 

ல்லாப் பெட்டியில் அமர்ந்து இருந்த மாமாவைப் பார்த்துக் கூறினார் " இந்த இடத்துல உக்காந்து இருக்கதுக்கு நீயெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார் " இது யார் உக்காந்திருந்த எடம் தெரியுமா டே? கதகடை ராமசாமி உக்காந்திருந்த எடம்". சொல்லிவிட்டு என்னை பார்த்தார், நான் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்துவிட்டு என்னிடமும் அதையே கூறினார், "இந்த இடத்துல உக்காந்து இருக்கதுக்கு நீயெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும் "

ப்போது அவரை நான் பேசவிடவில்லை, நான் கேட்டேன் "மாமா உக்காந்திருக்கது தாத்தா உக்காந்திருந்த இடம், நான் உக்காதிருந்த இடத்துலையும் ராமசாமி உக்காந்திருந்தாரா என்ன?" என் துடுக்கான பேச்சு அவரைக் கோபம் கொள்ளச் செய்ததது.

"ஏல ராமசாமின்னு சொல்லாதல, கதர்க்கடை ராமசாமின்னு சொல்லு" என்னை திட்டிவிட்டு என் வயதைக் கேட்டார் கூறினேன்.

"ன் வயசுல  காமராசர்  தேர்தல் பிரசாரம் பண்ணவும், நாட்டுக்காக உழைக்கவும் வந்துட்டாரு தெரியுமாடே" என்றார். 

"தெல்லாம் தெரியாது இப்போ நீங்க சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்" என்றேன் பிடிவாதமாய்.

ப்போது தெளிவாக கூற ஆரம்பித்தார். "காமராஜர் உன்ன மாதிரி இருக்கும் போதே அரசியலுக்கு வந்துட்டாரு, அப்போ இந்த ஊர் காங்கிரஸ்ல உங்க தாத்தா தான் பெரிய ஆளு, அதனால காமராஜர் தென்காசிப் பக்கம் வந்தா நேர இந்தக் கடைக்கு தான் வருவாரு" கதை கேட்பதில் ஆர்வமானேன்.

"ங்க மாமன் உக்காந்த்ருக்கான் பாரு அங்க கதர்கடை ராமசாமியும் நீ உக்காந்ருக்க இடத்துல காமராசரும் உக்காந்த்ருப்பாறு, பெரும்பாலும் கட்சி கூட்டம் பத்தின பேச்சு இங்க தான் நடக்கும்" என்று கூறிவிட்டு என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், "காமராசர் இந்த வழியாப் போறார்னா உங்க கடைக்கு வராமப் போமாட்டாரு அது ஏன்னு தெரியுமாடே" அதற்கு என் மாமாவிடம் இருந்து பதில் இருந்து வந்தது. 

"காமராஜர் மொத தடவை நம்ம கடைக்கு வந்திருந்தப்போ அழுக்கு வேஷ்டியும் சட்டையும் போட்டிருந்தாரு, அப்ப அவரு கட்சியில ரொம்ப சின்ன பதவியில இருந்தாரு, தாத்தா கூட பேசி முடிச்சு கிளம்பும் போது உங்க தாத்தா கடையில இருந்த கதர் துணி கொடுத்து அழுக்கு வேஷ்டியோட போனா மதிக்க மாட்டாங்க புது துணி உடுதிட்டுப் போன்னு கொடுத்தாரு, அதினால உங்க தாத்தாவ காமராஜருக்கு ரொம்ப பிடிக்கும். எப்ப இந்த வழியாப் போனாலும் வண்டிய நிறுத்தி பேசிட்டு தான் போவாரு, அவரு முதலமைச்சரானதுக்கு அப்புறம் கூட கதர்கடை ராமசாமி மேல ரொம்ப மரியாத வச்சிருந்தாரு" என் மாமா முடித்துவிட்டு அந்தப் பெரியவரை பார்த்து " என்ன அய்யா நா சொன்னது சரிதான" என்று கேட்டார்.

"முளுக்க முளுக்க சரிதாம் டே இப்ப தெரியுதா நா ஏன் சொன்னேன்னு" என்று முடித்துவிட்டு வேற பேச்சில் திசை மாறினார்  ஆனால் அன்று தான் எனக்குத் தெரிய வந்தது எனது தாத்தாவும் கர்மவீரர் காமராஜரும் நண்பர்கள் என்று. அன்றைய நாளில் காமராஜர் என்பவர் முதல் மந்திரியாக இருந்தவர் என்றும் சுதத்ந்திரப் போராட்ட வீரர் என்ற அளவிலும் அறிந்திருந்த நான் காமராஜரைப் பற்றிய விசயங்களை அதிக அளவில் படிக்க ஆரம்பித்தேன். எனது தாத்தாவைப் பற்றிய தேடலும் தொடங்கியது. கதர்கடை ராமசாமி பற்றிய தேடல் தொடங்கியதும் நம்பமுடியாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சென்று அனைத்தையும் கேட்டேன். நான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் தென்காசியில் இருந்து  சுதந்த்திரதிற்காகப் பாடுபட்ட வீரர்களின் பெயர் இருப்பதாகவும் அதில் கதர்கடை ராமசாமியின் பெயரும் உள்ளது என்றும் கூறினார்கள்.  

ன்றைக்கும் ஏதாவது ஒரு  குடும்ப விழாவில் பங்கெடுக்கும் பொழுது எனது தாத்தாவைப் பற்றி அறிந்தவர்கள் அவரைப் பற்றிய புதிய தகவலை சொல்லுவார்கள், அதில் காமராஜரின் பெயரும் சேர்ந்தே வரும் என்பது தான் ஆச்சரியமான விஷயம். 


17 comments:

 1. சிறப்பான நினைவுகள்! சிறந்த அனுபவங்கள்! தொடருங்கள்!

  ReplyDelete
 2. ஆரம்பத்தில் தொடங்கிய சுவாரஸ்யத்தை முடிவு வரை அருமையாக கொண்டு சென்றது சிறப்பு...

  நன்றி நண்பரே ... (த.ம. 3)

  ReplyDelete
 3. மேலும் தொடரவும். நாடோடிகள் படத்தில் தன் குடும்பவரலாறு எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று கேட்கும் வசனம் ஞாபகம் வருகிறது.

  ReplyDelete
 4. உங்கள் தேடல் தொடரட்டும்..மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்..நீங்கள் கதராடை அணியும் பழக்கம் உண்டா..

  ReplyDelete
 5. வேர்களைப்பற்றி விழுதுகளின் பெருமையான ஆராய்ச்சி .. வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. இனிய ஆச்சர்யம்.
  சுவாரஸ்யம்.
  பாராட்டுகள்.
  தொடருங்கள்.

  ReplyDelete
 7. கொடுத்து வைத்தவர் நீங்கள். அழகான தேடல் உங்களுக்கு கிடைத்துள்ளது.

  ReplyDelete
 8. சீனு நீங்க உண்மையில் குடுத்துவைதவங்க எத்தனை பேருக்கு இதை போல் கிடைக்கும்....

  ReplyDelete
 9. கருணைக்கடல் காமராசர் பற்றிய நினைவுகள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 10. நல்ல அனுபவம்....பகிர்ந்தற்கு நன்றி....சீனு..

  ReplyDelete
 11. நல்ல அனுபவம். உங்கள் தேடல் பற்றியும் அனுபவங்கள் பற்றியும் தொடர்ந்து சொல்லுங்கள்....

  ReplyDelete
 12. சுவாரஷ்யமா இருக்கு நண்பா தொடருங்கள் படித்து முடித்திடுவோம்

  ReplyDelete
 13. koodiya seekkiram thodarungal...

  ReplyDelete
 14. உங்கள் வாழ்க்கை அனுபவத்தை நீங்கள் சொல்லி சென்றவிதமும் நடையும் மிக நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 15. மிக சுவாரசியமாக இருக்கிறது நண்பரே. இந்த கால அரசியல்வாதிகளை பார்த்த நமக்கு காமராஜரை பற்றி படிக்கும்போது நம்பவே முடியாததாக உள்ளது. நன்றி நண்பரே

  ReplyDelete
 16. அனுபவத் தொடர் அருமைங்க.
  தொடருங்கள்... நானும் தொடர்கிறேன்.

  ReplyDelete
 17. அதியமான ‘மனிதரான’ காமராஜருடன் நெருங்கிப் பழகிய, காமராஜரால் மதிக்கப்படும் ஒருவர் உங்கள் தாத்தா என்பதை அறிநததில் மிக்க மகிழ்ச்சி சீனு.

  ReplyDelete