23 Jun 2012

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்


தைக்குச் செல்லும் முன் கதையைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள்... 

2005 ம் ஆண்டு நூலக வாரவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நூலக ஆணைக்குழு நடத்திய மாவட்ட அளவிலான சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற சிறுகதை.   

க்கதையை எழுதியது சத்தியமாக நான் இல்லை. என்னுடைய அண்ணன் ராம் சங்கர். தன்னுடைய இளநிலை அறிவியல் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது போட்டியில் பங்குகொண்டு எழுதியது.

தைக்கான தலைப்புகள் போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னர் தான் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட தலைப்புகள் 

புத்தகமே சிறந்த நண்பன் 
வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் 

தில் என்னுடைய அண்ணன் தேர்ந்தெடுத்த தலைப்பு வாசிக்க வாசிக்க வானம் வசப்படும். 

அப்போதைய அமைச்சர்களான  திரு.கருப்பசாமி பாண்டியன் மற்றும் திரு.நயினார் நாகேந்திரன் உடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் திரு சுனில் பாலிவால் இவர் கைகளால் பரிசு பெறுவது என்னுடைய அண்ணன்.  

வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்


க்டோபர் 15.2010. காலை மணி ஒன்பது , சென்னையின் இதயத் துடிப்பான தி.நகரின் மையத்தில் அமைந்திருக்கும் அந்த விழா  அரங்கமே ஆரவாரமாக காட்சியளித்தது. விழா மேடையில் இந்தியாவின் முக்கியமான V.I.P. கள் பலரும் புடைசூழ, நடுநாயகமாக அமர்ந்திருந்தான் குமார். இந்தியாவின் மிகச் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதைப் பெறப் போகும் குமாரின் வயது 28!.

விருது கொடுபதற்க்கு வி.ஐ.பி கள் பலர் காத்திருக்க, குமார் தனது கல்லூரி நூலகரின் கையால் விருது வாங்க ஆசைப்பட்டான்! அரங்கத்தில் அனைவருக்கும் ஆச்சரியம்! பலரும் தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர். அனைவரின் கேள்விகளும் குமாருக்கு புரிந்தது. வாழ்க்கை என்னும் புத்தகத்தில் தன் தலையெழுத்து மாற்றப்பட்ட பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான்.  

ட்டு வருடங்களுக்கு முன்னால்........

மாணவர் தேர்தலுக்காக கல்லூரியே அமர்க்களப்பட்டிருந்தது.

தேர்தலன்று மாலை, தான் தோற்றுவிட்டதை அறிந்த குமார் ரகளை செய்ய ஆரம்பித்தான். தேர்தலில் ஊழல் நடந்துவிட்டதாகக் கூறி உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் என்றான். மற்ற மாணவர்களையும் வீட்டுக்குப் போகவிடாமல் விரட்டிக் கொண்டிருந்தான். கடைசியில் சக மாணவர்கள் அவனை சமாதனம் செய்து வீட்டிற்கு அனுப்பினர். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல, பலமுறை குமாரின் அடாவடித்தனங்கள் அத்துமீறி இருக்கின்றன. குமார் வம்பு செய்து தண்டனை பெறாத துறைகளே கிடையாது. ஒவ்வொரு நாளும் துறைவாரியாக 'அப்பாலஜி' எழுதுவான். வகுப்பிற்கும் ஒழுங்காக வரமாட்டான். ஆனாலும் விளையாட்டில் சிறந்து விளங்கியதால் கல்லூரி நிர்வாகம் அவனை விட்டுவைத்திருந்தது. 

தே கல்லூரியில் தான் சூரியன் நூலகராகப் பணிபுரிந்தார். பெயருகேற்றார்போல் எப்பொழுதும் பிரகாசமாய் காட்சியளிப்பவர். எந்த மாணவன் உதவி கேட்டாலும் தாராளமாகச் செய்பவர். பல மாணவர்கள் அவரால் உயர்ந்த நிலையை எட்டியுள்ளனர். 

ரு நாள் குமார் நூலகத்திலும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். நூலக வாசலில் நின்றுகொண்டு உள்ளே செல்லும் மாணவர்களிடம்,

"டேய், எங்கடா போறீங்க?",  

" 'லைப்ரரி'க்கு போறோம் அண்ணா",

"எதுக்குடா லைப்ரரி போறீங்க?" 

"Books refer பண்ண போறோம் அண்ணா" 

"நானெல்லாம் கிளாஸ்கே போகமாட்டேன், நீங்க என்னடானா லைப்ரரி போறோம் refer பண்ண போறோம்னும்சொல்றீங்க! போய் வேற வேலை எதும் இருந்தா பாருங்கடா!"  என்று குமார் அவர்களை விரட்டிவிட்டான். சூரியன் இதைப் பார்த்துவிட்டார். இது அவரை வெகுவாகப் பாதித்தது. உடனே குமாரைக் கூப்பிட்டார். ஆனால் குமார் நைசாக நழுவிட்டான்.

ன்று இரவு வீட்டில் வைத்து சூரியன் நெடுநேரம் யோசித்தார். குமாரின் இந்த முறையற்ற போக்கினைத் திருத்தி அவனை நல்ல மாணவனாக, நல்ல மனிதனாக மாற்றுவதற்கு வழிதேடிக் கொண்டிருந்தார். இதற்காக தன்னுடைய நூலகப் புத்தகங்களையே கருவியாக பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. ஆம், அற்புதமான புத்தகங்கள் ஒருவனது வாழ்கையை ஆனந்தமாக மாற்றும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். 

றுநாள் குமாரைக் கூப்பிட்டு அனுப்பினார். அவனும் வேறு வழியின்றி நூலகத்திற்கு வந்தான். 

"தம்பி எந்த கிளாஸ் படிக்கிற?"

"B.A.History - Third year"

"அப்பா என்ன வேலை பார்கிறாங்க?"

"விவசாயம்"

"சரி B.A முடிச்சிட்டு என்ன செய்ய போற ?"

"முதல்ல B.A வை முழுசா முடிச்சிடுறேன் சார்"

"சரி! எனக்காக நீ ஒரு உதவி பண்ணனும்"

"உதவியா?! நான் என்ன சார் உதவி பண்ண போறேன்? ஆள விடுங்க சார்!"   

"எனக்காக ஒரு உதவி மட்டும், நான் இன்று உனக்கு ஒரு புத்தகம் கொடுக்கிறேன். நாளைக்கு வரும்பொழுது நீ அதை மட்டும் வாசிச்சிட்டு வரணும்"   

"சரி சார், கொடுங்க!", என்று தயக்கமான எரிச்சலுடன் புத்தகத்தை வாங்கினான்.

ன்று மாலை வீட்டில் நூலகர் கொடுத்த புத்தகத்தை வேண்டாவெறுப்பாக வசிக்க ஆரம்பித்தான் குமார். ஐந்து ஆறு பக்கங்கள் வாசித்துவிட்டு மூடிவிட வேண்டுமென்று நினைத்தவனால் புத்தகத்தை மூடிவிட முடியவில்லை. அதில் உள்ள வார்த்தைகள் அவனை கட்டிபோட்டன. வாக்கியங்கள் அவனுள் வர்ணஜாலம் புரிந்தன. இரவு முழுவதும் முழித்து அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டான். அந்தப் புத்தகத்தின் பெயர் 'அக்னிச் சிறகுகள்' , ஆம். Dr.அப்துல் கலாம் அவனுள் ஒரு அதிசிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார். தன்னுடைய வாழ்க்கைப் பாதையின் மூலம் குமாரின் வாழ்க்கைக்குப் புதுப்பாதை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். 

ப்பொழுது குமாரின் மனதினுள் ஒரு தெளிவான குழப்பம் நிலவியது. தான் செய்வது நல்லதா? கெட்டதா? தன்னுடைய வாழ்க்கைப் பாதை எங்கு செல்கிறது? என்றொரு தேடல் அவனிடத்தில் இருந்தது.

ல்லூரியை அடைந்தவுடன் நேராக நூலகரிடத்தில் சென்றான் . தன்னுடைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டான். நூலகரின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் இதனை எதிர்பார்த்திருந்தார். அடுத்ததாக பல அறிஞர்கள் எழுதிய உயர்ந்த புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். குமார் அனைத்தையும் படித்தான். இப்பொழுது குமாரின் மனது தெளிவடைந்தது. தன் வாழ்க்கைக்கான விடைகளைத் தேட ஆரம்பித்தான். மேலும் மேலும் பல அற்புதமான புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தான். நூலகர் அப்படியே கல்லூரிப் படிப்பின் மேல் அவனது கவனத்தைத் திசை திருப்பினார். அவரின் உதவியால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று மூன்றாம் ஆண்டை நிறைவு செய்தான்.

ப்பொழுது நூலகர், குமாரை I.A.S தேர்விற்கு தயார் செய்யுமாறு கூறினார். அதற்கான புத்தகங்களையும், பயிற்சியையும், ஊக்கத்தையும் அவரே கொடுத்தார். குமார் படித்தான், படித்தான், படித்துக் கொண்டே இருந்தான். இறுதியாக I.A.S தேர்வில் மாநில அளவில் முதல் தரம் பெற்றான்.

குமார் ஆட்சியர் ஆனவுடன் அவன் படித்த புத்தகங்களும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களும் அவனது ஆட்சிதிறமைக்கு பக்க பலமாக அமைந்தன. இதன் மூலம் தான் ஆட்சியாளராக இருந்த மாவட்டத்தை இந்தியாவிலேயே ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றிக் காண்பித்தான். இதெற்கெல்லாம் மூலகாரணமாக விளங்கும் நூலகர் சூரியனை தன்னுடைய மனம் என்னும் கோவிலில் மனித தெய்வமாக வைத்துப் போற்றினான்.

தனால் தான் இன்று சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை நூலகரின் கையால் பெறப்போகின்றான். 

தோ! நூலகர் சூரியன் விருதைக் கொடுப்பதற்காக மேடைக்கு வந்துவிட்டார். அவரின் கண்களில் பெருமிதம் பொங்கி வழிந்த்தது.

குமாரின் கண்களிலோ இரு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. அந்த இரு கண்ணீர் துளிகள் சொல்லும் 

"வாசிக்க வாசிக்க வானம் வசப்படும்" என்று.  
சென்னையில் பதிவர் சந்திப்பு - சந்திப்போம் 

சென்னையில் வரும் ஆகஸ்ட் பதினைந்து மூத்த பதிவரான சென்னைப் பித்தன், புலவர் ராமானுசம், வாத்தியார் கணேஷ் மற்றும் கவிஞர் மதுமதி ஆகியோரின் முயற்சியாலும் நமது பங்களிபாலும் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. எழுத்துகளால் மனம் கவரும் நண்பர்களே, உங்களை நேரில் சந்திக்கவும் ஆசை. முடிந்தால் என்று சொல்வதை விட முயன்றால் கண்டிப்பாக இச்சந்திப்பில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளுங்கள். இதை பற்றிய அறிவிப்புகள் மற்றும் அழைப்புகள் வரப் போகும் என் ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தவறாது இடம்பெரும் சந்திப்பில் நீங்கள் தவறாது இடம் பெற வேண்டுமென்பதற்காக.

24 comments:

 1. nanpaa!

  kathai natraaka irunthathu!
  athanaale thaane annanukku parisu kidaithullathu!

  en vaazhthai annanidam sollungal!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக நண்பரே ...முதல் நண்பராக வந்து வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி

   Delete
 2. கதையும் வாசிக்க வாசிக்க வசப்பட்டது. எந்த ஒரு மனிதரையும் புத்தகம் நல்வழிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. சிறுகதை அழகாக உள்ளது. பரிசு பெற்றதற்கு உங்கள் சகோதரருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. சிறுகதையிடமும் தாங்கள் வசப்பட்டதற்கு மனம் நிறைந்த நன்றிகள்
   வருகைக்கு நன்று விச்சு

   Delete
 3. Replies
  1. தனபாலன் சார் நீங்கள் கொடுத்த லிங்கில் சென்று படிகின்றேன்...
   எப்படி அந்த தவறு நிகழ்ந்தது என்று தெரியவில்லை இனி சற்றே உஷாராக இருக்கிறேன்...
   உங்கள் வாழ்த்துகளை அண்ணனிடம் பகிர்ந்து கொண்டேன்

   Delete
 4. ரொம்ப பாசிட்டிவ் கதை. இந்தக் காலத்துல புத்தகம் படிக்கற பழக்கமே குறைந்து கொண்டு வருவது வருத்தமான விஷயம். உங்கள் அண்ணனுக்கு எங்கள் பாராட்டுகளைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் காலச் சூழ்நிலையில் புத்தகம் படிப்பது குறைந்து கொண்டே வந்தாலும் வலைபூ ஓரளவிற்கு அதனை நிறைவு செய்கிறது என்றே நான் நினைக்கிறன். வருகைக்கு நன்றிகள் பல

   Delete
 5. நல்ல கதை. புத்தகங்களைப் படிப்பது அரிதாகிக் கொண்டு வருகிறது....

  பரிசு பெற்ற உங்கள் அண்ணனுக்கு எங்களது வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வெங்கட் சார். அண்ணனிடம் பகிர்ந்து கொண்டேன் உங்கள் வாழ்த்துகளை

   Delete
 6. நல்ல கதை அண்ணனுக்கு வாழ்த்து கூறியதாக சொல்லவும் . கணினி புத்தகம் படிக்கும் நேரத்தை குடித்து விடுகிறது .

  ReplyDelete
  Replies
  1. கணினி நேரத்தைக் குடிகிறது மிகச் சரியாக சொன்னீர்கள்.

   Delete
 7. நல்லதொரு கவிதை பாஸ்..... அட சீ.....:( கதை பாஸ்....

  உங்கள் அண்ணாவுக்கு பிந்திய என்னுடைய வாழ்த்துக்கள் அண்னாவிடம் சொல்லிவிடுங்கள்

  ReplyDelete
 8. த‌ங்க‌ளுக்கும் ச‌கோத‌ர‌ருக்கும் இனிய‌ வாழ்த்துக‌ள்! வாசிப்பை நேசிக்க‌த் துவ‌ங்கி விட்டால் வாழ்வின் ப‌ல‌ப‌க்க‌ங்க‌ள் வெளிச்ச‌ம‌டைந்து விடுகின்ற‌ன‌! செய்யும் வேலையை இய‌ந்திர‌த் த‌ன‌மாயில்லாம‌ல் இத‌ய‌ப்பூர்வ‌மாய் செய்யும் நூல‌க‌ர் போன்றோரும் போற்றுத‌லுக்குரிய‌வ‌ர்க‌ளே.

  ReplyDelete
 9. அருமையான கதை.உங்கள் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நூல்களின் பயன் குறித்து மிக அருமையாக
  விளக்கிப் போகும் கதை
  அதனைப் பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 11. சகோதரர் விச்சுவின் கருத்துப் பகுதியிலிருற்து சொடுக்கி இங்கு வந்து விழுந்தேன். மிக்க நன்றி. முதலில் இந்த வலைத் தலைப்பு '' திடங்கொண்டு போராடு!'' சுப்பர் சகோதரா. மிகவும் பிடித்தது. இதற்கு நல்வாழ்த்து.
  இனிகதை ....மிக அருமையான கதை தங்கள் சகோதரருக்கும் , தங்களிற்கும் நல்வாழ்த்து. அதற்குத் தானே பரிசு கிடைத்துள்ளது.
  நூல்கள், சிந்தனை மொழிகள் பலர் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது என் அனுபவமும் தான். நன்றி என்னை இற்கு வரவழைத்த வானம் வசப்படுமிற்கு, தங்கள் விரல்களிற்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 12. வசப்படத்தான் செய்கிறது...அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.இதை பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்...!சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 13. வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் எனக்கு கடுப்பு தான் வரும் நான் சொல்லறது ஸ்கூல் படிக்கும் காலத்தில் சொல்லறேன் அப்பவெல்லாம் படிக்கணும் என்றாலே எவ்வளவு கடுப்பு வரும்....கதை உண்மையில் அருமை நீங்க எழுதியதை போலவே இருந்தது உங்க family புல்லா கதை அருமையாய் எழுதுவீங்க போல....புத்தகம் என்பதே இல்லை எல்லாம் டெக்னாலஜி செய்யும் வேலை.....

  ReplyDelete
 14. கலாமின் அந்தப் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன்.அற்புதமான படைப்பு அது...கதையும் அருமையாக இருக்கிறது.ஒரே வீட்டில் இரு கதாசிரியர்கள்...கலக்குங்க...

  ReplyDelete
 15. நல்லதொரு சிறுகதையை எழுதிய உஙகள் அண்ணனுக்கு என் பாராட்டுக்களும வாழ்த்துக்களும். பதிவர் சந்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு என் இதயம் நிறை நன்றி சீனு.

  ReplyDelete
 16. நல்ல உரைநடையில் எழுதப்பட்ட சிறுகதைக்குப் பாராட்டுக்களும்
  வாழ்த்துக்களும் சகோதரா .தங்கள் அண்ணனைப் போல் தாங்களும்
  மிகச் சிறந்த கதைகளை எழுதிப் பாராட்டுக்களைப் பெற வேண்டும் .
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete