12 Jun 2012

வாழ்க்கைக் கொடுத்தவன்சென்னை வெயிலும் போக்குவரத்து நெரிசலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து காலை எட்டு மணிக்கெல்லாம் உச்சத்தைத் தொட, இது போல் ஒரு ஊரை நாம் வேறெங்கும் காணவே முடியாது. நேர்முகத் தேர்விற்காக நான் அணிந்திருந்த ஆடைகளும், ஷூவும் வெயிலின் தாக்கத்திற்கு ஊட்டச்சத்து கொடுத்துக் கொண்டிருந்தது. புதிதாக சவரம் செய்த முகத்தின் கத்தி பட்ட இடங்களை எல்லாம் ஆதவன் தேடித் தேடி உற்சாகமாக தாக்கிக் கொண்டிருந்தான்

டந்த ஆறுமாத காலமாக நே.மு தேர்விற்கு செல்வதையே வேலையாகக் கொண்டுள்ளதால் இது எத்தனையாவது நே.மு என்ற எண்ணிகையை நான் மறந்தே போய்விட்டேன். இருந்தும் ஏதோ ஒரு உற்சாகம் இன்று வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை அதிகரித்துக் கொண்டிருந்தது. நடப்பதை எல்லாம் உற்சாகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் T51 வருவதற்காக காத்திருந்தத வேளையில் தான் அந்தக் கொடூரமான சம்பவம் நடந்தது.


பாதசாரிகள்  சாலையைக் கடப்பதற்காக வாகனங்கள் வழி கொடுத்து காத்திருந்தத நேரத்தில், கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் தான் புது மாடல் உயர்ரக பைக்கை செலுத்தி, நின்றுகொண்டிருந்த வாகனங்களை எல்லாம் பின்தள்ளி ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவது போல் சடன் பிரேக் பிடித்து தன் பைக்கை அந்த இளைஞன் நிறுத்திய நேரத்தில், தன் அம்மாவின் கை பிடித்து, அவனுக்காகவே தைத்தது போல் இருந்த யுனிபார்ம் அணிந்து, அவன் உயரத்திற்கு சற்று குறைவாக இருந்த புத்தகப் பை சுமந்து மெதுவாக அழகாக சாலையைக் கடக்க ஆரம்பித்தான் அந்தப் பொடியன்

சி குழந்தைகளை பார்த்தால் மட்டுமே பார்த்த மாத்திரத்தில் அள்ளிக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கும். அப்படி துருதுருவென அழகாக இருந்தான் அந்தச் சிறுவன். அவனும் அவன் அம்மாவும் பாதி சாலையைக் கடந்த நிலையில், பேருந்து நிறுத்தத்திற்கும் அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு இடைவெளியை பயன்படுத்தி சென்றுவிடலாம் என்று சீறிய அந்த இளைஞனின் மனக் கணக்கு தப்பான நேரத்தில் தூக்கி வீசப்பட்டான் அந்தப் பச்சிளம் பாலகன். அந்த இளைஞனின் பைக் சிதறி அவனும் நடுரோட்டில் உருள ஆரம்பித்தான்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது. தன் குழந்தையை வாரி அணைக்க ஓடினாள் அந்தத் தாய். கை கால்களில் நல்ல அடி பாலும் தேனும் கொடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையின் இரத்தம் ஆறாய் ஓடிக் கொண்டிருந்தது, நல்ல  வேளை தலையில் லேசான அடிபோல் தான் தோன்றியது. அப்படி ஒரு நிலையில் தன் குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் அவளும் அவனருகிலேயே மயங்கி சரிந்தாள். எங்காவது விபத்து என்றாலே அந்த இடத்தை விட்டு விலகி ஓடுபவன் நான். ஒருவேளை விபத்து நடந்த இடத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஒருவித திகில் நிறைத்த கண்களோடு அந்த இடத்தைப் பார்த்தும் பார்கமலும் நழுவிச் சென்றுவிடுவேன். இன்று என்னால் அப்படி இருக்க முடியவில்லை. வேடிக்கை பார்க்க சேர்ந்த கூட்டம் உதவி செய்ய தயங்கியது. அயர்ன் செய்த ஆடை கசங்கிவிடக் கூடாது என்று நினைப்பதால் கசக்கி எறியப்பட இந்தக் குழந்தையை தூக்கக் கூட ஆள் இல்லை. வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு தங்கள் வேலை தான் முக்கியம் மாற்றான் உயிர் இல்லை

ந்தச் சிறுவனை கொஞ்சி விளையாட ஆசைப்பட்டேனோ அவனை எடுத்து என் மடியில் வைத்தேன். என் நீல நிறச் சட்டை கொஞ்சம் கொஞ்சமாக சிவப்பு நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தது. அவன் சட்டையைக் கழற்றி தலையைச் சுற்றி கட்டினேன். கைக்குட்டையை வைத்து கை கால்களில் இருந்த ரத்தத்தைத் துடைத்தேன். நிற்கவில்லை. அவனிடம் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து அவள் முகத்தில் தெளித்தேன், பலனில்லை மீண்டும் தன் பிள்ளையை பார்த்த மாத்திரத்தில் மயங்கினாள். சுற்றியிருந்த கூடத்தைப் பார்த்தேன், பாதிபேர் தரையை பார்த்தனர், சிலர் அந்த இளைஞனுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அவன் தன் தலையில் அணிந்திருந்த ஹெல்மட்டைக் கழற்றவே இல்லை.

தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. கூட்டத்தில் இருந்த ஏதோ ஒரு நல்லவனுக்கு 108 இன் நம்பர் தெரிந்திருந்தது குறித்து சந்தோசப்பட்டேன். அப்போது தான் நியாபகம் வந்தது இன்று எனக்கு இன்டெர்வியு என்று. அந்த அலுவலகத்திற்கு போன் செய்தேன், எடுத்தவள் சரளமாக தமிழ் பேசினாள். நான் இருக்கும் நிலையில் என்னாலும் தமிழ் மட்டுமே பேச முடியும். என் நிலையைக் கூறினேன், குறித்த நேரத்தில் இன்டெர்வியு நடக்கும் என்று அவள் கூறிக் கொண்டிருந்த நேரத்தில் என்னைப் பதில் கூற விடாமல் புதிதாக ஒரு பெண்ணின் குரல் கேட்டது. 'உங்களிடம் போதிய தொகை இல்லாத காரணத்தால் தொடர்பு துண்டிக்கப் படுகிறது' என்று காரிதுப்ப்பியது அந்தக் குரல்

ம்புலன்ஸ் நெரிசலைக் கடந்து அருகில் வந்துவிட்டது. ஹெல்மட்டை கழற்றி இருந்த அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தேன். பச்சிளங் குழந்தையை இடித்த கோவமா, இண்டர்வியு செல்ல முடியாத ஆத்திரமா, இல்லை ரீசார்ஜ் செய்ய கூட வக்கில்லாத வறுமையா தெரியவில்லை, இருந்த கோவத்தை எல்லாம் அவன் கன்னத்தில் பதித்துவிட்டேன். என்னை திருப்பி அடிக்க திமிறிய அவன் முதிகில் ஓங்கி மற்றுமொரு அறை விழுந்தது. இம்முறை அடித்தது நான் இல்லை, சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்திருந்த போலீஸ் அதிகாரி. கூடியிருந்தவர்கள் போலிசுக்கு சம்பவத்தைக் கூறி முடித்தனர்தாயையும் குழந்தையையும் அம்புலன்சில் ஏற்றிவிட்டு அந்த போலீஸ் அதிகரி என்னிடம் வந்தார்

'வ்வளவு தூரம் ஹெல்ப் செஞ்சிருகீங்க, ஆஸ்பத்திரி வரைக்கும்  போனா அந்த அம்மாக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்' அவர் இப்படி கூறுவதற்கு முன்பே நானும் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஆம்புலன்சிற்கு வழி  கொடுப்பதில் சென்னைவாசிகளின் மனித நேயத்திற்கு அளவே கிடையாது. அனைவருமே விலகி வழி கொடுத்தனர்மருத்துவமனை நோக்கி விரைய ஆரம்பித்தோம். சிரிபென்றால் என்னவென்றே அறியாத ஒரு நர்சு அம்புலன்சில் அந்த சிறுவனுக்கு முதலுதவி செய்து கொண்டுவந்தாள். அவனின் அம்மா கொஞ்சம் தெளிந்திருந்தாள்.

ன்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள். என் நிலைமையை அவளிடம் கூற ஆரம்பித்தேன், எதுவுமே பேசவில்லை, ஒருவேளை அவள் என்னிடம் ஆறுதலான வார்த்தைகள் எதிர்பார்த்திருப்பாள் போல, நான் தான் என்னென்னவோ புலம்பி விட்டேன். அவன் அப்பாவுக்கு எப்படி தெரிந்திருந்தது என்று தெரியவில்லை எங்களுக்கு முன்பே மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தார். அவரை பார்த்ததுமே கதறி அழ ஆரம்பித்துவிட்டாள். சிறுவனுக்கு மயக்கம் தெளியவே இல்லை. ICU விற்கு கூடிச் சென்றனர். இருபது நிமிடம் கழித்து மருத்துவர் வந்தார், உயிருக்கு ஆபத்தில்லை. எலும்பு முறிவு எதுவும் இல்லை. இரத்த இழப்பு அதிகம் என்பதால் குறித்த நேரத்திற்குள் ரத்தம் செலுத்த வேண்டும் இல்லை என்றால் எங்களால் எதவும் செய்ய முடியாது AB நெகடிவ் நான்கு யூனிட் உடனே வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.

வன் அப்பவோ செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தார். அந்த அலுவகத்திற்கு மீண்டும் ஒருமுறை போன் செய்ய வேண்டும் போல் இருந்தது. ஆனால் பாலன்ஸ் இல்லையேஅவர் குடும்பத்தைப் பார்க்கவும் பரிதாபமாக இருந்தது விட்டுச் செல்லவும் மனமில்லை. ஒரே ஒரு குழந்தை என்பது அவர்  பேசியதிலிருந்தே  தெரிந்தது. எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அவரிடம் சென்று போன் கேட்டேன் கொடுத்தார்.

"ஹலோ நிவேதிதா ப்ளட் பேங்க்கா"

"........................................."

"நான் உங்க ப்ளட் பேங்க் மெம்பர் ஹரி பேசறேன்"    

"........................................."

"ஐஞ்சு வயசு பையனுக்கு ஆக்சிடென்ட், நாலு யூனிட் AB  நெகடிவ் உடனே தேவைபடுது",

"........................................."

" AB  நெகடிவ்  டோணர்ஸ்ஸ என்னோட நம்பர்க்கு உடனே போன் பண்ண சொல்லுங்க"

 "........................................."

"ரொம்ப தேங்க்ஸ் சார்"

தேவையான  தகவல்களை அவர்களிடம் சொல்லிவிட்டு போனை அவன் அப்பாவிடம் திருப்பிக் கொடுக்கும் பொழுது "ரொம்ப தேங்க்ஸ் பா வரவங்களுக்கு நாம எவ்ளோ பணம் வேணும்னாலும் கொடுத்ரலாம், என் பையன் பொழச்சா அதுவே எனக்குப் போதும்" என்றார் தன் தழுதழுக்கும் குரலில்

"ப்ப எடுத்துகாதீங்க சார், நாங்க யாரும் பணம் வாங்கிட்டு ரத்தம் டோனேட் பண்றது இல்ல, உங்க பையனுக்கு எதுவும் ஆகாது தைரியமா இருங்க சார்". என்ன நினைத்தாரோஎன்னைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டார். என்னால் வேறு என்ன சொல்ல முடியும், நம்மால் சொல்ல முடிந்த ஆறுதலான வார்த்தைகள் 'தைரியமா இருங்க சார்'. 

ரியான நேரத்திற்கு ரத்தம் ஏற்றப்பட்டதால் அன்று மாலையே அந்த சிறுவன் நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டான். இருந்தும் மயக்கம் மட்டும் தெளியவில்லை. மணி மாலை ஆறைத் தண்டிக் கொண்டிருந்தது. அவரிடம் சொல்லிவிட்டு கிளமபலம் என்று அவர் அருகில் சென்றேன், புரிந்து கொண்டார். தன் பர்சைத் திறந்து தன் விசிடிங் கார்டை எடுத்து குடுத்தார். வாங்காமல் அவரையே பார்த்தேன்.

"ன்னோட இண்டர்வியு எங்களால கெட்டுப்போச்சுனு என் மனைவி சொன்னா, உன்னோட வேலையைவிட உயிர் தான் பெரிசுனு நீ செஞ்ச உதவிக்கு என்னால எந்த கைமாறும் பண்ணமுடியாது. ஆனா ஒன்னு பண்ண முடியும், நீ விருப்பப் பட்டா  நான் வேலை செய்யும் கம்பனியிலையே உனக்கு ஒரு வேலை வாங்கித்தரேன், இதை நீ மறுக்க மாட்டேன்னு நினைக்கிறன்"  தொடர்ந்து பேசி முடித்தார்.

னக்கு பேச வார்த்தைகளே இல்லை. கலங்கிய கண்களுடன் சரி என்று தலை ஆட்டினேன். என்னுடைய கைகளை இருக்கப் பிடித்தார்.

"ங்களோட வாழ்க்கை குடும்பம் எல்லாமே அவன் தான்" என்று கூறி அழ ஆரம்பித்தார்நன்றி சொல்வதற்காக வாயைத் திறந்தேன். 

"எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவன் நீ" என்று நான் சொல்ல நினைத்ததையும் அவரே சொல்லிவிட்டார்

46 comments:

 1. ya super story to read..
  but one thing i want to know whether it is really happened or u just imagine and wrote it?
  anyhow well done by don seenu... gr8 da

  here the line
  "எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவன் நீ" என்று நான் சொல்ல நினைத்ததையும் அவரே சொல்லிவிட்டார்.
  super co-incidence.. always expecting this type of kind ppls in this world

  ReplyDelete
  Replies
  1. கற்பனைக் கதை தான் நண்பா, மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பொழுது தாறுமாறாக வண்டி ஓட்டிய ஒருவனை பார்த்த பொழுது வந்த சிந்தனை இது. உனது வருகையால் மகிழ்ந்தேன் நண்பா

   Delete
 2. அந்த இளைஞனை மாதிரி தாறுமாறா பைக் ஓட்டிட்டு வர்றவனைப் பாத்தா கொல்லணும்னே வெறி வருது எனக்கு. கதையில நீங்க நாலு உதை கொடுத்ததுல சந்தோஷம். நெகிழ்வான சிறுகதை. சாலையில் யாரேனும் அடிபட்டால் நின்று உதவ வேண்டும் என்கிற மனிதாபிமான உணர்வு குறைஞ்சுட்டு வர்ற காலத்துல இதுமாதிரி சிறுகதைகள் ஆறுதல். தொடர்ந்து (முடிறயப்பல்லாம்) எழுதுங்க.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அப்படி ஒரு கோவம் வரும் நிரஞ்சனா. நிகழப் போவதை எண்ணாமல் ஓட்டும் இவர்களை எல்லாம் தண்டிக்க மாட்டார்கள். எவனாவது கேனையன் கிடைத்தால் பைன் போட்டு தீட்டிவிடுவர்கள். முடியும் பொழுது எல்லாம் எழுதுகிறேன். உனது ஆதரவிற்கும் பாராட்டிற்கும் நன்றி நிரு

   Delete
 3. அந்த மோட்டார்காரனை எண்ணும்போது-
  கோபம் தலைக்கேறியது!

  செய்த மனிதாபிமானி என்னிடும்போது-
  கண்கள் கலங்குது!

  உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கவிதையாக வந்த உங்கள் வாழ்த்துகளை மனமார ஏற்றுக் கொள்கிறேன் சீனி

   Delete
 4. /"எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவன் நீ" என்று நான் சொல்ல நினைத்ததையும் அவரே சொல்லிவிட்டார். //
  //பச்சிளங் குழந்தையை இடித்த கோவமா, இண்டர்வியு செல்ல முடியாத ஆத்திரமா, இல்லை ரீசார்ஜ் செய்ய கூட வக்கில்லாத வறுமையா தெரியவில்லை//
  சூப்பர் வரிகள்....சராசரி மனிதரின் மனநிலையை மிக அழகாய் படம் பிடித்து காட்டி விட்டீர்கள்..
  ரொம்பவே நெகிழ்ச்சியான கதை.. முடிவு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது....

  ReplyDelete
  Replies
  1. சராசரி மனிதர்கள் தானே நாம், நாம் நினைப்பதை வார்த்தைகளாக மாற்றினால் நம் கண்முன் நாம் தானே நிற்போம் நண்பா. தவறாது என்னைப் பின் தொடரும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா

   Delete
 5. சீனு... மனிதாபிமானத்தின் பாற்பட்டு உதவி செய்தாலும் இயலாத நிலையில் தவறவிட்ட இண்டர்வியூவும், போயிருந்தால் வேலை கிடைத்திருக்குமோ என்ற எண்ணமும் போராடுவதுதான் மனித மனத்தின் இயல்பு. அதை அழகாய் கதையில் (அந்தக் குழந்தையின் அம்மாவிடம் புலம்புவதும், ரீசார்ஜ் செய்யாததால் போன் செய்ய முடியாததும்) தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள். நன்று. கதையின் மையக் கருவாய் மனிதாபிமானம் அமைந்ததும் சிறப்பு. மிக ரசித்தேன். மனதைத் தொட்ட கதையின் பாஸிட்டிவான முடிவும் எனக்குப் பிடித்திருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய உயரம் தொடுவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. என் கதையையும் கதைக் கருவையும் ரசித்துப் படித்து பாராட்டியதும், அதை மனத்தில் பட்ட கதை என்று கூறியது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியான நிமிடங்கள் வாத்தியாரே, நீங்கள் கூறுவது போல் உங்கள் அனைவரின் உள்ளங்களிலும் உயர்ந்தால் அந்த ஒன்றே போதுமானது

   Delete
 6. சீனு தயவுசெய்து செய்து கதை எழுதும் முன் தலைப்பின் அருகில் கதை என கொடுக்கவும் இரண்டு முறை உண்மையில் உங்கள் வாழ்கை கதை என நினைத்து விட்டேன் உண்மையில் கதை அருமை கதையில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையிலும் இதே நிலை தான் தான் தெரியாமல் இடித்து விட்டால் தன்னால் அடிப்பட்டவரை எவனும் காப்பாற்ற நினைப்பது இல்லை அந்த இடத்தில் இருந்து தப்பிக்கத்தான் நினைகின்ற்றனர்....இதை படிக்கும் பொது உணர்ச்சி வசம் ஏற்பட்டது...ஆமாம் நண்பா உங்கள் கண் முன் இவ்வாறு நடக்கும் போது நீங்கள் என்ன செய்வீர்கள் நான் மனசு போ எங்கும் ஆனால் ஏதோ ஓன்று செல்ல விடாது அந்த நிகழ்வு முடிந்த பின்னர் உதவி செய்து இருக்கலாமே என்று அழுவேன்...

  தமிழ் திரட்டி ஒட்டு பட்டை இணைத்தால் ஒட்டு போட வசதியாய் இருக்கும் அல்லவா இதில் சென்று எப்படி அணைத்து ஒட்டுபட்டை இணைப்பது என பார்க்கவும் அது மட்டும் இல்லாமல் பிளாக்கர் தேவையான பல விஷயம் இந்த தளத்தில் இருக்கும்... http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

  இப்போ பிளாக்கர் .in செயல்படுது அதை .com மாற்றும் வழிமுறை http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

  பிளாக்கர் favicon எடுத்துவிட்டு அழகான எதையாவது favicon வையுங்கள்...
  http://thalapolvaruma.blogspot.com/2012/04/website-icon.html

  ReplyDelete
  Replies
  1. அதை உண்மைக் கதை என்று படித்த உங்கள் நிலைமையை நானும் அறிவேன், திடிரென்று தோன்றிய கற்பனையின் ஓட்டத்துடன் ஓடிப் பார்த்தேன்,

   //எங்காவதுவிபத்து என்றாலே அந்த இடத்தை விட்டு விலகி ஓடுபவன் நான். ஒருவேளைவிபத்து நடந்த இடத்தைப் பார்க்க நேரிட்டாலும் ஒருவித திகில் நிறைத்தகண்களோடு அந்த இடத்தைப் பார்த்தும் பார்கமலும் நழுவிச்சென்றுவிடுவேன். //

   இந்த வரிகளை என்னை மனத்தில் வைத்து தான் எழுதினேன், ஆனால் இப்போதோ வளர்ந்து விட்டோம் பொறுப்புகள் வந்து விட்டது, அதனால் கண்டிப்பாக நின்று உதவி செய்து விட்டு தான் செல்வேன் நண்பா.


   நீங்கள் என் மீது காடும் அக்கறைக்கு நான் தலை வணகுகிறேன் நண்பா, கண்டிப்பாக அவற்றைப் படித்து சரி செய்கிறேன்

   Delete
 7. உண்மையான நிகழ்வு என்றே மனதில் பதட்டத்தோடுதான் படித்துக் கொண்டு வந்தேன். அடிபட்ட குழந்தை நலம் என்று தெரிந்ததோடு, சிறுகதை என்று படித்தபோது தான் கொஞ்சம் நிம்மதி.

  இது போல உதவி செய்யும் இளைஞர்கள் இன்னும் நிறைய பேர் தேவை.... வேகமாகச் சென்ற பைக் இளைஞன் அல்ல....

  ReplyDelete
  Replies
  1. நம் நாதர்க்கு விவேகமான இளைஞர்கள் தான் தேவை சார், உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்

   Delete
 8. சீனு பழைய காலம் காலமாக நீதி கதைகள் தரும் முடிவுதான்.ஆனால் மொத்த கதையையும் கொண்டு போன விதம் சிறப்பாக இருந்தது,மிக சிறப்பான நடை.இந்த நடை என்னிடம் இருந்திருந்தால் என்னிடம் உள்ள இதே போன்று உள்ள ஒரு கதையை வெளியிட்டிருப்பேன்.உன் சிறப்பான கதை சொல்லும் கொண்டு போகும் திறமைதான் இந்த கதைக்கு பலமே.வாழ்த்துக்கள்.இணைந்திருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணா நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக என்னை விட நன்றாகவே எழுதுவீர்கள், தவறு இருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டுவார்கள் திருத்தி கொள்ளலாம், கண்டிப்பாக முயலுங்கள் அண்ணா

   Delete
 9. கற்பனைக் கதை என்றாலும், மிக அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் நண்பரே ! வாழ்த்துக்கள் ! தொடருங்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அய்யா.

   Delete
 10. Email Subscription Widget-யையும் சேர்க்கவும் ! நன்றி !

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சேர்த்துவிடுகிறேன், நீங்கள் கொடுக்கும் அறிவுரைகள் ஓவொன்றும் எனக்கு முக்கியமானவையே

   Delete
 11. My God! I thought it is real one! I am relieved to know its a short story! Nice writing. Congrats
  Balaraman R
  orbekv.blogspot.in)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உற்சாகமான வாழ்த்துகளுக்கு மனம் நிறை நன்றிகள் சார்

   Delete
 12. வணக்கம் சொந்தமே,இது என் முதல் வருகை.தத்ருபமான கற்கனை கூடவே மேம்பட்ட மனித நேயத்தின் சாயல்.எழுகதுங்கள் சொந்தமே..,தொடர்ந்தும் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள், தொடர்ந்து வாருங்கள், பதிவுலகில் இணைந்திருப்போம்

   Delete
 13. வணக்கம் சொந்தமே
  தங்களின் தளத்திற்கு என் முதல் வருகை இது பதிவு முழுவதும் அருமை தொடர்ந்தும் பதிவுலகில் சந்திப்போம் சொந்தமே..!

  ReplyDelete
 14. இது சிறுகதை என்று படிக்கும் வரை நிஜமென்றே நினைத்தேன் அண்ணா! அருமையாக சொல்லியுள்ளீர்கள்! குழந்தைகளையும் வயதானவர்களையும் பெரிதும் பாதிக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்தேரிக்கொண்டே தான் இருக்கிறது. ஒருமுறை நான் சென்று கொண்டிருந்த பேருந்தை கடந்து வேகமாய் சென்ற ஒரு இரு சக்கர வண்டி ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு முதியவரை தூக்கி எறிந்தது இன்றும் கண் முன்னே அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் உணர்வுப் பூர்வமான கருத்துகளுக்கு மிக்க நன்றி. பாதிகப்படுபவர்கள் நிலைமையை தருமாரக வண்டி ஓட்டுபவர்கள் கருதினால் விபத்துகள் வெகுவாக குறையும் சகோ

   Delete
 15. "எனக்கு வாழ்க்கைக் கொடுத்தவன் நீ" என்று நான் சொல்ல நினைத்ததையும் அவரே சொல்லிவிட்டார்.

  துளிர்விட்டது நிம்மதி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அம்மா

   Delete
 16. கதை என்று கடைசியில் தெரிந்து கொண்டேன். நிஜ சம்பவம் போல இயல்பாய் இருந்தது. மோட்டார் பைக் ரேஸ் விடும் இளைஞர்கள் பற்றி வேறு சமீபத்தில்தான் புத்தகங்களில் படித்திருந்தேனா... எனக்கும் கோபம் வந்தது. நீங்கள் அறைந்த அறையில் நானே அறைந்த திருப்தி!

  ReplyDelete
  Replies
  1. அனந்த விகடன் புத்தகத்தில் அந்த கட்டுரை படித்த பொழுது எனக்கும் கோவம் வந்தது, இவர்கள் என்று திருந்துவார்களோ தெரியவில்லை. வருகைக்கு நன்றி இணைந்திருப்போம்

   Delete
 17. அருமையான சிறுகதை
  சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவு உங்கள் மனம் கவர்ந்த பதிவாக இருந்தது குறித்து மகிழ்கிறேன் அய்யா. நன்றி

   Delete
 18. கதையின் ஆரம்பத்தை படிக்கும்போது ஏற்ப்பட்ட பரபரப்பு, முடிக்கும்போது நெஞ்சை கனக்கவைத்தது. கதையில் உணர்வுப்பூர்வமான வரிகள் கதையை, "கதையல்ல நிஜம்" என்று சொல்லவைக்கிறது. கைபேசியை வாங்கி, இரத்த வங்கியை தொடர்புகொள்ளும் நிகழ்வை படிக்கும்போது கண்கள் கலங்கின. மிக மிக அருமையான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் சிறுகதை.
  > சாலை விபத்து,
  > இரத்த வங்கி மற்றும் இரத்ததானம்,
  > ஆபத்தில் உதவுதல், போன்றவற்றைப்பற்றிய விழிப்புணர்வுகளை இந்தமாதிரியான கதைகளின் மூலம் சொல்லும்போது, அது மக்களின் அடிமனதில் ஆழமாக பதியும்.
  பெரிய அளவில் பாராட்டப்படவும், பெரிய அளவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய கதையிது. மிக அருமை. தொடரட்டும்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டே எனக்கு முகுந்த உற்சாத்தைக் கொடுத்தது,

   // அது மக்களின் அடிமனதில் ஆழமாக பதியும்.
   பெரிய அளவில் பாராட்டப்படவும், பெரிய அளவில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டிய கதையிது. மிக அருமை. // இந்த வரிகளுக்கு மமர்ந்த நன்றிகள்.

   தொடர்ந்து வாருங்கள் இணைந்திருப்போம்

   Delete
 19. superb..thought was a real story only....fantastic... no words to desribe..... all the best to seen u soon as next sujatha...

  ReplyDelete
 20. நிஜமா..? கதையா...? என வியக்கவைத்த விறு விறுப்பான கதை. நிஜத்திலே இது போன்று நடக்கிறது பகுதிக்கு மேல் கதை என உறுதிபடுத்திக் கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து வாழ்த்தியதற்கு மனம் நிறை நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்

   Delete
 21. சுயநலத்தை வென்ற மனிதரைப் பார்ப்பதே அரிது . வறுமையின் பிடியில் இருந்து கொண்டு இவ்வளவு தூரம் உதவியதன் பலன் கையோடு கிடைத்தது கண்டு மகிழ்ச்சி . எனினும் அக்குழந்தை கண் விழித்து பார்த்த பிறகு நீங்கள் வீடு சென்றிருந்தால் மனது நிம்மதி ஆகியிருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. கதையைப் படிப்பவர்களுக்கு அதுவரை பொறுமை வேண்டுமே சகோதரி, இருந்தும் கதையில் கூட கண் விழிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்கிற உங்கள் பாசம் மகழ்ச்சி கொள்ளச் செய்கிறது.

   Delete
 22. லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.நல்ல ஒரு உயிர் துடிப்புள்ள கதை.உண்மை போல இருக்கு பாஸ்.ஒரே மூச்சா படிச்சு முடிச்சேன்.இது ஏதோ மனச பண்ணுது.அது கதையின் கன்டென்ட் டா இல்ல உங்க எழுத்து நடையானு தெரியில...எக்ஸ்சலன்ட்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பாராட்டிய விதம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக உள்ளது. வருகைக்கு நன்றி நண்பரே

   Delete
 23. பெயல் சொல்லாமல் சென்ற நட்புக்கு நன்றிகள்

  ReplyDelete
 24. அருமையாக இருந்தது நன்றி நண்பா

  ReplyDelete
 25. உங்கள் சொந்த அனுபவமோ என்று எண்ணுமளவிற்கு அருமையாய் அமைந்திருந்தது உங்களது கற்பனை!
  விபத்து ஏற்பட்டால் உதவ முன்வருபவர்கள் நம்மூரில் மிகக் குறைவு. இண்டர்வியூ இருந்தும் கூட சிறுவனுக்கு உதவ முன்வரும் இக்கதாநாயகனின் மனித நேயம் பாராட்டப்படக்கூடியது. நல்ல கதை. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 26. வணக்கம
  சீனு

  அழகான மொழிநடையில் வாசகர்களை கவரக்கூடிய கற்பணை வளம் கொண்ட சிறுகதை பார்த்தாள் ஒரு உண்மைச்சம்பவம் போல இருக்குது
  21-11-2012இன்று உங்களின் பதிவு வலைச்சரம் வலைப்பூவில் பதியப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் தொடருங்கள் பயணத்தை,

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete