4 May 2012

ஆனந்தா...ஆனந்தா...சிரிப்பானந்தா...

லைப்பைப் படித்ததும் நீங்கள் எந்த ஆனந்தாவை நினைத்திருப்பீர்கள் என்பதற்கு உங்கள் உதட்டில் தவழும் புன்னகை ஒன்றே சாட்சி. இந்த அறிய கண்டுபிடிப்பை எந்தக் காமிராவும் பொருத்தாமல் கண்டுபிடித்த பெருமிதத்துடன் விசயத்திற்கு வருகிறேன்.

முகப்புத்தகத்தில் வழக்கமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு மாலை வேளையில் தான் அந்த அறிவிப்பைப் படித்தேன். சிரிப்பரங்கம் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.25 அம்பத்தூர். சி(ரி)றப்பு விருந்தினர் உயர்திரு ரவிபிரகாஷ் முதன்மை ஆசிரியர் விகடன் குழுமம். சிரிப்பரங்கம் என்ற பெயரே வித்தியாசமாக இருந்ததாலும், விகடன் குழுமத்தின் ஆசிரியர் ரவிபிரகாஷ் அவர்கள் கலந்து கொள்வது கூடுதல் சிறப்பு என்பதாலும், நான் வசித்து வரும் ஆவடிக்கு பக்கத்திலேயே அம்பத்தூர் இருப்பதாலும் கண்டிப்பாக அங்கு செல்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

ஞாயிற்றுக் கிழமை மாலையும் வந்தது, எங்கு செல்வதாக இருந்தாலும் நண்பர்களுடனே சென்று பழகி விட்டதால் அவர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒவ்வொருவனும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பித்து(?) விட்டான். அவர்கள் வராவிட்டால் என்ன? தனியொரு ஆளாக செல்வது என்று முடிவெடுத்த பின்னரும் இறுதி முயற்சியாக நண்பன் காளிராஜை  கூப்பிட்டுப்பார்த்தேன். அதிசியம் வருகிறேன் என்று சொல்லிவிட்டான். 

ரங்கத்தினுள் சரியான நேரத்திற்கு நுழைந்தோம், இது அரசியல் கூட்டம் இல்லை என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. ரவி சார் தன் குடும்ப சகிதம் வந்திருந்தார். தாடி வைத்த ஆசாமி ஒருவர் நகைச்சுவை கும்மி என்ற நாட்டுபுறப் பாடலை கடவுள் வாழ்த்தாக பாடி ஆடிக் கொண்டிருந்ததது சற்றே புதுமையாக இருந்தது. அவர் அப்பாடலைப் பாடி ஆடிய விதமும் அந்தப் பாடலின் நடுவே வரும் விதவிதமான சிரிப்பொலிக்கு ஏற்ப அரங்கத்தினரும் சேர்ந்து சிரித்தது வித்தியாசமாகவும் சற்றே பயமாகவும் இருந்தது. இருந்தும் அவரைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. எங்கே நிகழ்ச்சி மொக்கையாக இருக்கப் போகிறதோ என்ற என் சிந்தனை தவிடு பொடியாகப் போகின்றது என்பது அப்போது என் மனதிற்கு தெரியாது.

ந்து நிமிடம் கழிந்திருந்த நிலையில் மீண்டுமொருமுறை அரங்கைப் பார்த்தேன், என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை அனைத்து இருக்கைகளும் நிரம்பி இருந்தது. ஏழை பணக்காரர், படித்தவர் படிக்காதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சரிசமமாக அமர்ந்து இருந்ததும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண்களும் பெண்களும் உற்சாகத்தோடு பங்கு கொண்டதைப் பார்க்கும் பொழுதும் மனம் சொல்லியது சரியான இடத்திற்குத் தான் என்னை அழைத்து வந்திருக்கிறாய் என்று.

மாதம் ஒரு தலைப்பு என்ற வகையில் வருகை தரும் அனைவரும் துணுக்குகள் சொல்ல வேண்டும், உங்களுக்கு துணுக்குகளே தெரியாவிட்டாலும் பரவயில்லை துண்டு சீட்டில் அச்சிட்டுக் கொடுத்து படிக்க வைக்கிறார்கள், இந்த சி(ரி)றப்பு செயல் திட்டத்திற்கு இவர்கள் வைத்துள்ள பெயர் 'பிட்டு பார்த்து துணுக்கு சொல்' என்பது தான். இதில் இன்னொரு சிறப்பம்சம், மேடை ஏறி துணுக்கு சொல்லுபவர்கள் அனைவருக்கும் அந்த இடத்திலேயே சிறப்பு விருந்தினர் கைகளால் பரிசு வழங்குகின்றனர். மேலும் இறுதியில் சிறந்த மூன்று துணுக்குகளை தேர்ந்தெடுத்து சிறப்புப் பரிசும் கொடுக்கின்றார்கள். 

துணுக்குகள் சொல்வதற்கு மட்டுமே சில கட்டுபாடுகள் விதித்துள்ளார்கள்.எந்த ஒரு தனிமனிதனையும் கேலி செய்தோ அல்லது ஆபாசமாகவோ இருக்கக் கூடாது என்பதே அந்தக் கட்டுப்பாடு. நான் சென்றிருந்த பொழுது மருத்துவர் நோயாளி பற்றிய துணுக்குகள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள், அப்போது பின்னால் இருந்து ஒரு கை என் முதுகில் படர்வதை உணர்ந்து திரும்பினேன். முகம் முழுவதையும் தாடிக்குள் புதைத்திருந்த அந்த தாடிக்கார நண்பர் மலர்ந்த முகத்துடன் என்னிடம் கேட்டார் "நீங்க ஏதும் ஜோக் சொல்றீங்களா சார்", "இல்ல சார் பரவாயில்ல, அடுத்த முறை வரும்போது சொல்றேன்" என்றேன் தயங்கியபடியே. தயார் நிலையில் வரவில்லை என்பதை விட எனக்குத் தெரிந்த ஜோக்குகள் அனைத்தும் சொல்லப்பட்டு விட்டன என்பதே காரணம்.

னைவரும் துணுக்குகள் சொல்லி முடித்தனர், அடுத்ததாக ரவி சாரை பேச அழைப்பார்கள் என்று காத்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்தத் தாடிக்கார ஆசாமி தன்னை சிரிப்பானந்தா என்று அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்கினார். சிரிப்பானந்தா இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு எந்த ஆனந்தா நியாபகம் வந்தாரோ அவரே என் நியாபகத்திற்கும் வந்தது ஆச்சரியம் தான்(?)! உலகமே தன்னைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கேவல நிலையில் இருக்கும் அந்த ஆனந்தாவிற்கும், உலகையே சிரிக்க வைக்கும் உன்னத நிலையில் இருக்கும் இந்த ஆனந்தாவிற்கும் வித்தியாசங்கள் பல. 

'ன்று உங்களுக்கு சிரிப்பு யோகா சொல்லித்தரப் போகின்றேன்' என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் செய்யவும் தொடங்கி விட்டார். அதில் ஒரு யோகா எப்படி இருக்கும் என்றால், 'கும்மி அடிப்பது போல் கைகளை இரண்டு பக்கமும் தட்ட  வேண்டும், சும்மா தட்டக் கூடாது இடுப்பை நன்றாக வளைத்துக் கொண்டே தட்ட வேண்டும். வலது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' அதே போல் இடது பக்கம் இடுப்பை வளைத்து கை தட்டி 'வெரி குட்' என்று சொல்லி விட்டு இரண்டு கைகளையும் உங்கள் தலை மேல் உயர பறக்க விட்டு எம்பிக் குதித்து 'வெரி குட்' என்று உச்சஸ்தாயில் கத்த வேண்டும்'. 

தற்குப் பெயர் வெரி குட் யோகா (வெரி குட்?). இப்படி செய்து காட்டிய சிரிப்பானந்தா எங்களையும் செய்யச் சொன்னார், நானும் காளியும் தயங்கியபடியே மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு நின்ற பொழுது, எங்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த கூட்டமும் வெரி குட்டில் ஆழ்ந்து விட்டது. மற்றவர்கள் அப்படி செய்ததது சிரிப்பாக இருந்தது, ஆனால் சில நொடிகளில் எங்களை அறியாமலேயே எம்பிக் குதித்து 'வெரி குட்' சொல்லிக் கொண்டிருந்தோம் (வெரி குட்!). இன்னும் பல சிரிப்பு யோகாக்களை சிறப்பாக கற்றுக் கொடுத்தார். வந்திருந்த ஒட்டுமொத்த கூட்டமும் அரங்கம் அதிர சிரித்துக் கொண்டே சிரிப்பு யோகாக்களை செய்யும் பொழுது சிரித்துக் கொண்டே ஊக்கபடுத்திய சிரிப்பானந்தாவின் கண்கள் பிரகாசமாக மின்னியதை என் கண்கள் பார்க்கத் தவறவில்லை.  

யோகா முடிந்ததும் சாந்தகுமார் அவர்களின் பேசும் பொம்மை நிகழ்ச்சி அரகத்தில் இன்னும் அதிகமான சிரிப்பலைகளை உண்டு பண்ணியது. அதன் பின்பு பேச வந்த ரவி சார் மிக சி(ரி)றப்பாக தன் உரையை ஆற்றினார், அவர் பேசிய உரையை அவரது வலைப்பூவில் அவரே எழுதவிட்ட காரணத்தால் நான் இங்கே குறிப்பிடவில்லை. இங்கு கிளிக் செய்து அவ்வுரையைப் படிக்கவும். சிரிப்பரங்கம் முடிந்ததும் ரவி சார் மற்றும் சாந்த குமார் சாருடன் பேச வாய்ப்பு கிடைத்தது பெரிய மனிதர்கள் என்ற தோரணை இல்லாமல் இச்சிறுவனுடன் (சிறுவன்?) மிக மிக எளிமையாகப் பழகினார்கள். சிரிப்பானந்தாவுடன் தான் அதிக நேரம் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த நாளே முகப்புத்தகத்தின் மூலம் அவரது செல்பேசி என்னை கண்டறிந்து சந்திக்க ஏற்பாடு செய்து சந்த்திதும் விட்டேன். 

வர் சிரிப்பானந்தாவாக மாறியது எப்படி? அவர் மனதை நெகிழச் செய்த மிகவும் நிம்மதி அளித்த  சம்பவங்கள் எவை? அவர் சந்தித்த சோதனைகள் அவற்றை சாதனையாக மாற்றிய உழைப்பு இவை பற்றி அறிய ஆவலாக உள்ளதா காத்திருங்கள் அடுத்த பதிவில் சிரிப்பானந்தாவை சந்திப்போம்.     
கூடுதல் தகவல்கள்

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பரங்கம் அம்பத்தூரில் நடைபெறுகிறது என்பதும், அம்பத்தூர் கிருஷ்ணா பூங்காவில் தினமும் காலை சிரிப்பு யோகா நடைபெறுகிறது என்பதும் கூடுதல் தகவல்கள். நேரம் இருந்தால் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள். நானும் இருப்பேன். 
    

28 comments:

 1. சிரிப்பான பகிர்வுக்கு வெரிகுட்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. முதல் ஆளாக வந்து என்னைத் தட்டி கொடுத்ததற்கு நன்றி அம்மா

   Delete
 2. சிரிப்பானந்தா... சிரித்தாலே ஆனந்தம் தானே.... :)

  ரவி பிரகாஷ் சார் பந்தா இல்லாத நல்ல மனிதர். எனக்கும் அவருடன் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது....

  நல்ல பகிர்வு நண்பரே. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட் சார், நல்ல பகிர்வு என்று பாராட்டியதோடு மட்டுமில்லாமல் அடுத்த பதிவிற்காக காத்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி

   Delete
 3. வித்தியாசமான அனுபவத்தை ரொம்பவே சுவாரிசியமா சொல்லி இருக்கேங்க நண்பரே...
  இந்த பதிவை கூட நீங்க மெல்லிய நகைச்சுவை கலந்து எழுதி உள்ளேர்கள்.. நிறைய வரிகளை ரசித்தேன்... சிரிப்பரங்கம் செய்த மயமா..

  ReplyDelete
  Replies
  1. //நிறைய வரிகளை ரசித்தேன்... // இந்த வரியை நான் மிகவும் ரசித்தேன் ராஜ்... நீங்கள் கொடுக்கும் உற்சாகம் தான் என்னை வழிநடத்தும் ஆசானாக விளங்குகிறது

   Delete
 4. உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்..
  இன்னைக்க பட்ட விவரத்தை காண
  http://seenuguru.blogspot.com/ncr என்று ப்ரௌசெரில் டைப் செய்து பார்க்கவும்...
  உங்க புது டெம்ப்ளேட் அருமை....

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ராஜ், என்னுடைய பதிவை தமிழ் மனதில் எப்படி இணைப்பது என்று தெரியாம முழித்துக் கொண்டுள்ளேன்... காலத்தினால் செய்த உதவியாகவே இதைக் கருதுகிறேன்... நன்றி என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்க விரும்பவில்லை....

   Delete
 5. உங்களுக்கு blogspot.in & blogspot.com பிரச்சினை தெரியும் என்று நினைக்கிறன்...
  அந்த பிரச்சனையை சரி செய்ய எனக்கு தனி மடல் அனுப்புங்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு மெயில் அனுபியுள்ளேன் ராஜ். மிக்க நன்றி

   Delete
 6. வெரி குட்....?நண்பா..

  ReplyDelete
 7. டியர் சீனு... என் நண்பர் எழுத்தாளர் கடுகு அவர்களின் சதாபிஷேக விழாவிலும், சென்ற வாரம் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும் சிரிப்பானந்தாவைக் கண்டு பேசி மகிழ்ந்திருக்கிறேன் நான், அவர் என் முகப்புத்தக நண்பர், அம்பத்தூர் சற்றே தொலைவிலிருப்பதால் என்னால் வர இயலவில்லை. நீங்கள் கொடுத்து வைத்தவர், அருகிலிருந்து கலந்து கொள்ள முடிகிறதே. அந்த அனுபவங்களை அவ்வப்போது பகிரவும், எனக்கும் வர விருப்பம் உண்டு, இயலும்போது வருகிறேன். அவசியம் உங்களை சந்திக்கிறேன்,

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பானந்தா அவர்கள் அந்த விழாவைப் பற்றி என்னிடம் கூறி இருந்தார், நான் தான் தவற விட்டுவிட்டேன், வந்திருந்தால் உங்களையும் சந்தித்திருப்பேன்...

   கண்டிப்பாக அங்கு நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் எழுதுகிறேன் சார். உங்களது உற்சாகமான வார்த்தை ஒன்றை விட வேறு என்ன வேண்டும் என்க்கு...

   Delete
 8. சிரிப்பானந்தவை அறிமுகம் செய்தவிதம் அருமை
  தொடர்ந்து அது குறித்து பதிவுகள் கொடுத்தால் மகிழ்வோம்
  அங்கு பகிர்ந்து கொள்ளப்பட்ட துணுக்குகள் கொடுத்திருக்கலாமே
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த முறை சென்று வரும் பொழுது நான் ரசித்த துணுக்குகளை பதிவிடுகிறேன் அய்யா, வருகைக்கு நன்றி இணைந்திருப்போம், த மா வில் வாக்களித்தர்கும் நன்றி

   Delete
 9. மறக்க முடியாத அனுபவம்!!!!!!!!!!! அனைவருடன் பகிர்ந்து கொண்டதிலும் பகிர்ந்துகொண்ட விதத்திலும் மகிழ்ச்சி நண்பா!!!!!!!!!!!

  ReplyDelete
 10. கலக்கலான ஒரு இடத்திற்குத்தான் சென்று வந்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில் சிரிப்பை பார்த்தாலே தெரியுது.

  ReplyDelete
  Replies
  1. என் முகத்தில் படர்ந்த சிரிப்பை கண்டுபிடித்துவிடீர்களா நன்றி, வருகைக்கு நன்றி விச்சு இணைந்திருப்போம்.

   Delete
 11. ரொம்ப லேட்டா வந்துட்டனா நிரூ? ஆனா மேட்டரைப் படிச்சதும் ஹேப்பியாய்ட்டேன். நல்ல ஒரு இடத்துக்குத் தான் போய் வந்திருக்கீங்க. தொடருங்க, நானும் தொடர்ந்து வர்றேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //நானும் தொடர்ந்து வர்றேன்// சொன்னதற்கு முதல் நன்றி தொடர்ந்து வருவதற்கு அடுத்த நன்றி... :-)அருமையான இடம் அவரைப் பற்றிய அடுத்த பதிவை சீக்கிரமே எதிர்பாருங்கள்

   Delete
 12. //'பிட்டு பார்த்து துணுக்கு சொல்' //

  ஹீ ஹீ .. பிட்டு லாம் பாத்தா சொல்ல மாட்டோம் ..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா பாஸ் பப்ளிக் பப்ளிக்

   Delete
 13. நகைசுவை மட்டும்தான் மனிதனை மனிதனாக வைக்கும் .. நல்ல இடத்துக்கு போய் வந்த்துல்லிர்கள் ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ராஜா, இணைந்திருப்போம்

   Delete
 14. அருமை நண்பா

  ReplyDelete
 15. GOOD POST FRIEND.. UR COVER PAGE ALSO GOOD..

  ReplyDelete